LV 5(2)

எங்கேடா என்று அதிர்ந்து விழிகளை சுழற்றினால் பூக்கடை பார்வதி ஆன்ட்டி அந்த மாலைகளை அவசரமாய் வாங்கி தம்பதிகளுக்கு கொடுக்க “மாத்திக்கோங்க மாத்திக்கோங்க” என்று சுற்றிலும் குரல்கள் ஒலிக்க  ஆரம்பிக்க சதாசிவம் சாரும் புன்னகையோடு நிற்க இடித்துத்தள்ளிக்கொண்டே முன்னே வர முற்பட்ட கும்பலை திடீர் பவுன்சர்களாய் மாறி நவீன் அண்ட் கோ தடுத்து நிறுத்த  சாகிக்கு தன் கண்முன்னே நடப்பதை நம்பவே முடியவில்லை.

தம்பதிகளும் அவசரமாய்  மாலை மாற்றிக்கொள்ள யாரோ   யாரோவென்ன சந்தேகமேயின்றி அது வர்ணி தான். மாங்கல்யம் தந்துனானே லாலாலா லாலாலா என்று சத்தமாய் முணுமுணுக்கும் சத்தம் கேட்டது.

என்ன தான் சத்தம் போட்டும் புது பவுன்சர்களை  தாண்டி முன்னே வர முடியாமல் வந்த கும்பல் தங்கள் கண்முன்னேயே தம்பதிகள் மாலை மாற்றிக் கொண்டதில் அவர்களுக்கு சாபங்களை அள்ளித்தெளித்து விட்டு கோபமாய் வெளிநடப்பு செய்து விட அதற்கும் எவனோ குசும்பு பிடித்தவன் கையை தட்ட ஆரம்பிக்க குபீர் சிரிப்பொலி மால் முழுதும் பரவிற்று.

கண்களை இறுக மூடி திறந்து தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முயன்றான் சாஹி. நான் சாப்பிடத்தானேடா வந்தேன்!

இப்போது எல்லாரும் தம்பதிகளை வாழ்த்தி விட்டு அவர்களை சேர்த்து வைத்ததற்காக சாஹியையும் வேறு வாழ்த்தி விட்டு போக எல்லாரையும் முடிந்தளவு முறைத்து தள்ளியவன் அம்மாவும் தம்பதிகளுக்கு அருகில் நின்று குதூகலமாய் பார்த்துக்கொண்டிருப்பதைகண்டதும் அங்கிருந்து போகவும் முடியாமல் கொஞ்சம் தள்ளி போய் நின்று கொண்டிருந்தான். எல்லாத்துக்கும் காரணம் அந்த குமார் தான். அவன்  மட்டும் கையில் சிக்கட்டும் அவன் தோலை உரித்து தொங்க விடுகிறேன் என்று மனம் கறுவிக்கொண்டது.

அவசரப்படாதே நீ பார்க்க வேண்டியது இன்னும் இருக்கு என்று விதி நகைத்ததோ என்னமோ

“சதாசிவம்  அண்ணா மாலை மாத்துனா கல்யாணம்னு யாரும்  ஏத்துக்க மாட்டாங்க.. நம்ம பூஜாவுக்கு என்ன பாதுகாப்பு? கழுத்துல தாலி இருந்தா தானே அதுக்கு ஒரு அர்த்தம் வரும்?” என்று சொன்ன டெயிலர் அக்காவை இப்போது வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான் சாஹி. அதிரும் கட்டத்தை எல்லாம் அவன் தாண்டி வெகு நேரமாகிறதே..

“அதுக்கென்ன முருகன் கோவில் பக்கத்தில் தானே இருக்கு. அங்கே கூட்டிட்டு போனா இப்போவே தாலியை கட்டிரலாம் ஐயர் நம்பர் இருக்கு என் கிட்ட” என்று சதாசிவம் சார்  போனோடு போக “நீங்களுமா சார்” என்று நொந்து போய்விட்டான் சாஹி

நவீன் கள்ளத்தனமாய் அவனை எட்டிப்பார்த்து சமாதானமாய் சிறிது விட்டு  “ அக்கா ஏதாவது வாங்கணுமா? பழம் பால்? “ என்று கேட்டுக்கொண்டே நழுவி வெளியில் ஓட அவனோடு சேர்த்து திடீர் பவுன்சர்கள் மூன்று பேரும் மறைந்தனர்.

“ஜிம்முக்கு வருவீங்கல்லடா?  உங்களை அங்கே வச்சு எலும்பை எண்ணுறேன் என்று பொருமிக்கொண்டிருந்தான் அவன். இது தான் அவர்கள் பேசிக்கொண்டிருந்த ரகசியம் என்று தெரிந்திருந்தால் அவன் ஏன் இந்தப்பக்கம் எட்டிப்பார்க்க போகிறான்!

கும்பல் இப்போது தம்பதிகளோடு மாலை விட்டு ஆர்ப்பாட்டமாய் வெளியேறியது.

“நித்தி அக்கா மேக்கப் பண்ணிட்டிருக்காம சீக்கிரம் கோவிலுக்கு வாங்க” என்று கத்திக்கொண்டே வர்ணி அவனை தாண்டி ஓட இப்போதானேடா இவ பான்ட் ஷர்ட்டோட மந்திரம் சொல்லிட்டிருந்தா அதுக்குள்ளே எப்படி சுடிதாருக்கு மாறினா என்று தலையை பிய்த்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளானான் சாஹி

இது மொத்தமும் ப்ரீ பிளான்ட்..எல்லாமே தயாராய் வைத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். ஆபத்பாந்தவனாய் அப்பாவி சாஹி உள்ளே போனதும் அந்த சந்தர்ப்பத்தை பக்கென்று பிடித்துக்கொண்டு செயலாற்றி விட்டார்கள் என்ற புரிதலில் அவன் பல்லை கடித்து நிற்க

“சாஹித்யா நீ வரலையாப்பா?.. கல்யாணத்தை நடத்தி வச்சவனே நீதானே நீ தான் முன்னே நிக்கணும் வா வா” என்று சொல்லிக்கொண்டு ஒரு வயதானவர் கடந்து போக கடுப்பாகி போனவன் தூணில் சாய்ந்து விட்டான்

மீண்டும் யாரோ அவனை சுரண்டினார்கள்

இவன் எவனா இருந்தாலும் சட்னி தான் என்று கொலைவெறியாய் திரும்பி பார்க்க குமாரே தான்!

அப்பாவித்தனமாய் முகத்தை வைத்துக்கொண்டு “அண்ணா கோவிலுக்கு வரலையா?” என்று கேட்டுகொண்டிருந்தான். அவனும் பட்டு வேஷ்டிக்கு மாறியிருக்க இவனுங்க எல்லாம் முழு ப்ளான்ல இருக்க நம்ம தான் வாலண்டியரா வந்து தலையை கொடுத்திருக்கோம் என்று நன்றாகவே உறுதியாகி விட்டது அவனுக்கு.

“நீ பண்ணதெல்லாம் போதும் மரியாதையா போய்டு” என்று அவன் பல்லை கடிக்க

ஜாக்கிரதையாக ஒரு எட்டு முன்னாள் தள்ளி நின்று கொண்டவன் “ அண்ணா அது வந்து.. மானேஜர்..அம்ம்ம்.. வர்ணி உங்கம்மாவை கூட்டிட்டு  ராக்கியை எடுத்துட்டு போயிருக்கா..?” என்று சொல்ல

பட்டென்று ஐம்புலனும் விழித்தது சாஹிக்குள்.” ராக்கி? எவன்டா அது புதுசா?” 

வர்ணியோட ஸ்கூட்டர்ணா..ஹி ஹி பழக்க தோஷத்தில் சொல்லிட்டேன் என்று அவன் அசடுவழிய

தலையை சுவரோடு மோதும் நிலைக்கு  ஆளாகிவிட்டான் சாஹி.ஐந்தாறு கறள் பிடித்த இரும்புகளை என்றாய் ஒட்டி அந்த வர்ணி உருட்டிக்கொண்டு திரியும் வண்டியா?அதில் அம்மாவா?

எட்டி குமாரின் ஷர்டை கொத்தாய் கைப்பற்றியவன் கிட்டத்தட்ட அந்த கும்பலை விரட்டிக்கொண்டு ஓடினான். அவனது கையில் மாட்டி கூடவே  இழுபட்ட குமாரின் முகத்திலோ அவ்வளவு சந்தோஷம்.

ஆனாலும் நீங்க செம்மண்ணா! ஒரு அறை  விட்டீங்க பாருங்க மாஸ்ணா”

“நீ மட்டும் இப்போ வாய மூடல அந்த அறை உனக்கு விழும்/

“ஹி ஹி ஹி சீக்கிரம் ஷூவை கழட்டிட்டு உள்ளே வாங்க/ டைம் ஆகுது..உங்களை கூட்டிட்டு வர்றதா ப்ராமிஸ் பண்ணிருந்தேன்.கோபம் உடல் நலத்துக்கு கேடு!”



Scroll to Top