SC Epi 2(2)

பேசி வைத்த நொடி, போன் சத்தமிட்டது. அழைப்பை ஏற்றவள்,

“சொல்லுங்க” என்றாள்.

“தீதீ! இன்னிக்கு டான்ஸ் ஆட வர நேஹாவுக்கு கால் சுளுக்கிருச்சாம். போன் பண்ணா” எனச் சொன்னாள் எண்டெர்டெயிண்ட்மெண்ட் டீமை கவனிக்கும் பெண்.

“சரி! என் டேபிள்ல, பேக்கப் டான்சர்ஸ் லிஸ்ட் அண்ட் நம்பர்ஸ் இருக்கும்! போன் போட்டு யாரால இன்னைக்கு வர முடியும்னு பாரு! லாஸ்ட் மினிட்ல சொல்றதுனால, பேமெண்ட் கொஞ்சம் கூட்டித் தரேன்னு சொல்லு” எனச் சொல்லி அழைப்பைத் துண்டித்தாள் ஊர்மிளா.

ரிப்ளேஸ்மெண்ட் வரை அந்தப் பெண்ணே பார்த்து விடுவாள். ஆனால் எக்ஸ்ட்ரா போட்டுக் கொடுப்பதெல்லாம் ஊர்மிளாவின் முடிவுதான். அதனால்தான் இவளை அழைத்திருந்தாள் அந்தப் பெண்.

அதன் பிறகு காத்திருந்த மற்ற வேலைகளைப் பார்த்தவள், கரையில் இருந்து படகு வரப் போகிறது எனும் அழைப்பில், வேகமாய் மேக்கப்பை கொஞ்சம் திருத்தி அவசரமாய் படகு வந்து இறங்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தாள். அங்கு காத்திருந்த பணியாளர்கள் ஏற்பாடுகளைச் சரியாக செய்திருக்கிறார்களா எனச் சரிப் பார்த்தவள், பின் திருப்தியுடன் தலை அசைத்தாள். அட்டென்ஷனில் நின்றிருந்த சிப்பந்திகள் இவள் தலை அசைப்பில் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்தார்கள்.

படகு வந்து நின்றதும், அந்த வி.ஐ.பியும் அவரது மனைவியும் புன்னகை முகமாக இறங்கினார்கள். உடனே காத்திருந்த ஊழியர்கள், பாரம்பரிய இசைக் கருவிகளைக் கொண்டு இசை மீட்டி வரவேற்றார்கள். மாலை வைத்திருந்த தட்டை ஏந்தியபடி ஒரு பெண் வர, அதை எடுத்து வி.ஐ.பியின் மனைவிக்கு அணிவித்தாள் ஊர்மிளா.

இருவரையும் பார்த்துப் புன்னகைத்து இந்தியில் வரவேற்றாள் இவள். அவர்களுக்கு வழி காட்டியபடி கூடவே நடந்து போய் அறையைத் திறந்து விட்டாள். என்னென்ன எங்கிருக்கிறது என விளக்கியவள், அவர்களுக்கு சில்லென கொண்டு வரப்பட்ட பழச்சாறையும் வழங்கினாள். அவர்களுக்கு மட்டுமே சேவை செய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த பட்லரை அழைத்து அறிமுகம் செய்வித்து,

“பெல் அழுத்தினா, உடனே வந்திடுவாரு இவர்! ரூமுக்கே சாப்பாடு வேணும்னாலும், அல்லது வெளிய ப்ரைவட் டைனிங் வேணும்னாலும் எல்லாமே அரேஞ் பண்ணித் தருவாரு! நம்ம ஹோட்டல்லயே ஸ்பா வசதி, பார் வசதி எல்லாமே இருக்கு! உங்க ஸ்டே இங்க கம்பர்டபளா மட்டும் இல்லாம, சந்தோஷமாகவும் அமைய வீ வில் டூ அவர் பெஸ்ட்! எஞ்சாய் தி ஸ்டே” எனச் சொல்லி விடைப் பெற்றுக் கொண்டாள் ஊர்மிளா.

வெளியே வந்தவள் கைக்கடிகாரத்தில் மணி பார்த்தாள். மாலை மணி நான்கு எனக் காட்டியது அது. அவ்வளவு நேரம் வேலை பிசியில் இருந்தவளுக்குப் பசி தெரியவில்லை. இப்பொழுது வயிறு கடமுடாவெனச் சத்தம் எழுப்பியது. இவர்களுக்கான டைனிங் அறைக்குப் போனவள், மதியம் சமைக்கப்பட்டு ஆறிப் போயிருந்த உணவு வகைகளை ஒரு பெருமூச்சுடன் பார்வையிட்டாள். காபி மட்டும் அருந்தி விட்டுப் போகலாம் என நினைத்தவள் முன்னே வந்து நின்றார் குக்.

“என்னம்மா! இன்னிக்கும் லேட்டா? ஓடி ஓடி வேலைப் பார்க்கறதே அந்த வயித்துக்குத்தான்! அதையும் காயப் போட்டா எப்படி?” என இந்தியில் கடிந்து கொண்டவர்,

“இரு! ரெண்டே நிமிஷத்துல உங்க ஊர் ஸ்டைல் தோசை ஊத்தித் தரேன்!” என கிச்சனுக்குள் நுழைந்தார்.

வேண்டாம் என்றாலும் கேட்க மாட்டார். அங்கே பல காலம் வேலைப் பார்க்கும் சீனியர் குக் அவர். வேலைப் பார்க்கும் எல்லோர் மேலும் அன்பும், கரிசனமும் கொண்டவர்.

‘இரத்த சொந்தங்கள் மேலேயே பலருக்கு அக்கறையையோ, அன்பயையோ காட்ட முடியல! ஆனா இவர பாரேன், ஜாதி, மதம், இனம்னு எதையும் பார்க்காம அன்பு செய்யறாரு! இவர போல ஆட்களாலத்தான் இன்னும் கலியுகம் ஒரு முடிவுக்கு வராம இருக்குப் போலிருக்கு’ என எண்ணிக் கொண்டவள், காபி மிசினில் தனக்காக காபியை எடுத்துக் கொண்டாள்.

அவள் மேசையில் அமர்ந்ததும், சுடச் சுட மூன்று தோசைகளைக் கொண்டு வந்து வைத்தார் குக்.

“மூனா?” என ஆட்சேபக் குரல் எழுப்பினாள் இவள்.

“சின்ன சைஸ்தான். சாப்பிடு! இங்க வேலைக்கு வந்தப்ப இருந்தத விட, ரொம்ப மெலிஞ்சு போய் தெரியற” எனச் சொன்னவர், அவரது வேலையைப் பார்க்கப் போய் விட்டார்.

அக்கறையானச் சின்ன செயல்தான். ஆனால் இவளுக்குத் தொண்டையை அடைத்தது. தோசையோடுச் சேர்த்து அழுகையையும் விழுங்கினாள் ஊர்மிளா.

அன்றிரவு படுக்கும் போது எப்பொழுதும் போல போனில் ஸ்பாடிஃபை ஆப்பில் பாட்காஸ்ட் பை பரதேசியைக் கேட்டுச் சிரித்தாள். ஆடியோ மட்டுமே, அதுவும் பல ரீல்களில் மிருகங்களுக்குக் குரல் கொடுக்கும் வாய்ஸ் ஓவரை வைத்து பாட்காஸ்ட் செய்யும் அந்தப் பரதேசியின் சிந்தனைகளும், சிரிக்க வைக்கும் பாங்கும் இவளுக்கு ஒரு மிகப் பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டர். அதன் பிறகு பாடல்களை ஒலிக்க விட்டாள் இவள். அலைப்பேசியில் டைம் செட் செய்திருந்தாள். ஒரு மணி நேரம் பாடல்கள் ஓடி முடித்தப் பின் அதுவாகவே நின்று விடும். பல சமயங்களில் அந்த ஒரு மணி நேரத்திற்குள் தூங்கி இருப்பாள். சில சமயங்களில் விட்டத்தை வெறித்தபடி புரண்டுக் கொண்டருப்பாள். அதெல்லாம் அவளது மனநிலையைப் பொறுத்தது.

அவள் அலைப்பேசியில் இருந்து,

“வண்ணப் பூங்காவைப் போல்

எங்கள் வீடல்லவா” எனும் பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.

‘எப்போ எனக்குன்னு ஒரு வீடு வரும்? ஆசிரமம், ஹாஸ்டல், ஹோட்டல்னு இப்படியே என் வாழ்க்கைப் போய்டுமா? குட்டியா ஒரு வீடு! அதுல கொஞ்சமா பூச்செடி! நாலே நாலு பண்டப் பாத்திரம். ஒத்தை ரிக்ளைனிங் சோபா! குட்டியா ரவுண்ட் சாப்பாட்டு மேசை! ஒத்தைக் கட்டில்! வீட்டு வாசல்ல மணிகள் கோர்த்த ட்ரீம் கேட்ச்சர்! வீட்டுப் பின்னாடி துணி காயப் போட சின்ன இடம்! கறிவேப்பிலை, புதினான்னு ரெண்டே செடி! வீட்டுக்குள்ளயே குட்டியா ஒரு பாத்ரூம் ரெட் பக்கெட்டோட! அவ்ளோதான் என் ஆசை! நடக்குமா?’ என எண்ணியபடியே தூங்கிப் போனாள் ஊர்மிளா.

அவள் கற்பனையில் கூட அந்தக் குட்டி வீட்டில் ஒரு கணவன், அழகான குழந்தை என்பதெல்லாம் தோன்றி இருக்கவில்லை! அவளுக்கு வேண்டாம்! புருஷன், புள்ளைக் குட்டி எல்லாம் அவளுக்கு வேண்டவே வேண்டாம்! வாழ்க்கையின் கடைசி நொடி வரை தனியாளாய் இருந்து, இறந்து போய் விட வேண்டும்! அதுதான் அவள் தினம் ஆஞ்சனேயரிடம் வேண்டிக் கொள்ளும் விஷயம். கேட்டதெல்லாம் கொடுப்பார் என இவள் நம்பும் அந்த ஆஞ்சநேயர் இந்த ஆசையை நிறைவேற்றிக் கொடுப்பாரா???

(சேர்ந்தாடுவாளா???)

Scroll to Top