முதல் குழுவில் இருந்து வந்து ப்ரசெண்ட் செய்தார்கள்.
“இப்ப கேள்வி ஏதும் இருந்தா கேக்கலாம்” என்றான் விஷ்ணு.
“கேள்விலாம் எதுவும் இல்லை” என்றார்கள் மற்றவர்கள்.
“கேள்வி கேக்கற குழுவுக்கு அரை மார்க் எக்ஸ்ட்ரா தருவேன்” என இவன் புன்னகையுடன் சொல்ல, நான் நீ எனக் கேள்விக் கேட்டு அடுக்கி விட்டார்கள் மற்றவர்கள்.
மற்ற குழுக்களுக்கும் இதே நிலைதான். கேள்வி, பதில் என தூள் கிளப்பியது அந்த ப்ரசெண்டேஷன். கடைசியாக வந்தது ஊர்மிளாவின் குழு. இவள்தான் தலைவியாக ப்ரசெண்ட் செய்தாள்.
“நம்ம ஹோட்டலுக்கு வரவங்கள எங்கயோ தங்க வந்திருக்கோம்ங்கற ஃபீல் குடுக்காம, நம்ம சொந்த பண்ணை வீட்டுக்கு வந்திருக்கோம், நம்ம சொந்த ரிசார்ட்டுக்கு வந்திருக்கோம்ங்கற மாதிரி உணர வைக்கனும். ஒரு டீம் அமைச்சு, செக் இன் செய்ய போறவங்க என்ன பர்ப்பஸ்க்கு வந்திருக்காங்கன்னு தெரிஞ்சுக்கனும். லெட்ஸ் சே ஹனிமூன்னா, சின்னதா எஞ்சாய் யுவர் ஹனிமூன்னு எழுதி அழகான கேக் வைக்கலாம் அவங்க ரூம்ல. ரூம் டெக்கோல இன்னும் கொஞ்சம் கவனம் வச்சி ரொமெண்டிக்கா செய்யலாம். பேர்த்டேன்னா ஹேப்பி பேர்த்டேன்னு எழுதி கேக் வைக்கலாம். குழந்தைங்க கூட வந்தா, அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி கார்ட்டூன் கேரெக்டர்ல குக்கீஸ் இப்படி வைக்கலாம் ரூம்ல! பலூன்ஸ் நிறைச்சு வைக்கலாம். கெஸ்ட் சாப்ட வராம இருக்காங்கன்னு தெரிஞ்சா, ரூமுக்கு போன் போட்டு சாப்பாட்டை ரூமுக்கே கொண்டு தரவான்னு கேக்கலாம். அவங்க கிளம்பிப் போகறப்ப, போட்டோ எடுத்து நம்ம ஹோட்டல் லோகோ வச்ச ப்ரேம்ல போட்டுக் குடுக்கலாம்! அவங்களோட நாம கனேக்ட் ஆகறோம்னு தெரிஞ்சாலே, கஸ்டமர்ஸ் மீண்டும் நம்மள தேடி வருவாங்க! அவங்களே ரிவ்யூவும் போடுவாங்க சோசியல் மீடியால! இப்ப ஹோட்டல் அண்ட் டூரிசம்ல நிறைய கம்படீஷன் இருக்கு! சோ நாம பெர்சனலா அப்ரோச் பண்ணா மட்டுமே இந்த ஃபீல்டுல நிலைச்சு நிக்க முடியும்” என நிறுத்தி நிதானமாக ஆங்கிலத்தில் பேசினாள் ஊர்மிளா.
இவன் முகத்தில் மெல்லியப் புன்னகை.
“நாட் பேட்” என முணுமுணுத்துக் கொண்டான் விஷ்ணு.
அதன் பிறகு மற்றவர்கள் கேள்விகள் கேட்க, இவனுமே நுணுக்கி நுணுக்கிப் பல கேள்விகள் கேட்டு அவளையும் அவள் குழுவையும் திணறடித்தான்.
ஒரு கட்டத்தில் அவள் தள்ளாட்டமாய் மேசை நுணியை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள,
“ஓகே கைய்ஸ்! இன்னிக்கு ஏர்லி லஞ்ச் போகலாம் நீங்களாம்! அதை முடிச்சிட்டு, ரூம்ல கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு இரண்டரை மணிக்கு எல்லாரும் லாபிக்கு வந்திருங்க! அவுட்டிங் போறோம் நாமலாம்!” என இவன் சொல்லி முடிக்க ஒரே ஆனந்தக் கூச்சல்.
சிரிப்புடன் வெளியேறி தனதறைக்குப் போனான் விஷ்ணு.
அறைக்குள் நுழைந்தவன் போனை எடுத்து ஓர் எண்ணுக்கு அழைத்தான்.
“ஹலோ ஊர்வசி”
“வாடா என் மச்சி! வாழைக்காய் பஜ்ஜீ! இன்னா நைனா ரொம்ப நாளா போனை காணோம்! நாங்கூட திருந்தி கிருந்தி தொலைச்சிட்டியோன்னு நென்சிக்கினேன்”
“இந்த நாதஸ் திருந்த மாட்டான் மாமூ! என் போன் இல்லாம குஜிலிமஸ்தா இருக்க போலிருக்கு! விட மாட்டேனே! நெனைச்சப்ப போன் போட்டு உன்னைக் காண்டாக்காம விட மாட்டேனே!”
“அடிங்க! கஸ்மாலம் பேதில போவ!”
“என்னை பேக்காக்கிட்டு, உன் கூட கோர்த்து விட்டுட்டு அவ அப்பீட்டு ஆய்ட்டா மாமூ! மன்சு வய்க்கிது! நான் அம்மாம் பெர்ய பொறுக்கியா! என் மூஞ்ச பாக்க சொல்ல, பச்சா கொய்ந்தை மாதிரி இர்க்கும் தெர்யுமா! எனக்கு போய் எப்டி மாமூ சூப் குடுக்க முடிஞ்சது” என எப்பொழுதும் போல அவன் ஆரம்பிக்க,
“இந்த பொண்ணுங்களே இப்டித்தான் மச்சி! நம்ம மன்ச டர்ர்ர்ர்ர்ர்ர்னு கிழ்ச்சிடுவாளுங்க! நீ ஊர்வசிய உட்ரு! நான் வேணும்னா எம்பக்கத்தூட்டு மேனகைய ஒன்க்கு கோத்து விடறேன்! என்ன, அதுக்கு வயசு மட்டும் எம்பது ஆச்சு! கொஞ்ச அட்ஜஸ்ட் பண்ணிக்க” என அவன் சொல்ல, இந்தப் பக்கம் விஷ்ணுவுக்கு அப்படி ஒரு சிரிப்பு.
இவன் சிரிப்புச் சத்ததில் அந்தப் பக்கம் அழைப்பு நிறுத்தப்பட்டது. முகம் பார்த்துக் கொள்ளா நட்பு இவர்களுடையது. இருவருக்கும் மற்றவரின் பெயர் கூட என்னவென்று தெரியாது. கேட்டுக் கொண்டதும் இல்லை. ஊர்மிளா கொடுத்த ராங் நம்பர் இங்கே ஒரு அதிசய நட்பை விதைத்து விட்டிருந்தது. முதல் முறை போன் போட்ட போது சண்டையில் முடிந்திருந்தது. அடுத்த முறை சில மாதங்கள் சென்று ஊர்வசி என்ற ஊர்மிளா இவன் கனவில் வந்திருக்க, அடித்துப் பிடித்து எழுந்தவன் மறுபடி அந்த நம்பருக்குப் போன் போட்டான்! திரும்பவும் ஒரு சண்டை! இவனை அப்படியெல்லாம் யாரும் இறங்கித் திட்டியதில்லை. அது கூட சுவாரசியமாக இருக்க, ஊர்வசி என்பவளை போடி, போடி என டீலில் விட்டிருந்தாலும் இந்த நம்பருக்கு நினைத்தப் பொழுது போன் போடுவதை விட்டதில்லை. அந்த நம்பருக்கு உரியவனும் இவனை ப்ளாக் செய்தது இல்லை!
சிரித்த முகமாக போனைத் தூக்கிக் கட்டிலில் போட்டவன், அப்படியே கட்டிலில் மல்லாக்க விழுந்தான். அழகன் எனப் பெயர் வாங்கி இருந்தவன்! நல்ல அறிவாளியும் கூட! அதோடு பேச்சுத் திறமையும் இயற்கையாகவே வாய்த்திருந்தது. இவனோடு பழக பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கூடப் போட்டிப் போடுவார்கள்! அப்படிப்பட்டவனை இவள் ஏமாற்றி விட்டுப் போயிருக்க, இவன் ஈகோ நிறையவே அடி வாங்கி இருந்தது.
இத்தனைக்கும் அந்த நேரம் அவளை ரொம்பவே பிடித்திருந்தது விஷ்ணுவுக்கு. வேலைப் பளுவில் கொஞ்சம் ரிலேக்ஸ் செய்வதற்காக அறையின் பால்கனியில் வந்து நின்றிருந்தான் அன்று. அப்பொழுதுதான் கொய் ஃபிஸ் குளத்தின் அருகே அவளைப் பார்த்தான். அழகாய்த்தான் இருந்தாள். ஆனாலும் அந்த அழகை விட, இவள் நின்று அந்த மீன்களை ரசித்திருந்த விதம் விஷ்ணுவைக் கவர்ந்தது. மற்றவர்கள் அதை ஒரு பொருட்டாகவே கருதாமல் கடந்து போக, இவள் மட்டும் அதை பார்த்திருந்தது இவனுக்கு வித்தியாசமாக இருந்தது. அதோடு கூட்டத்தில் தொலைந்து போன சிறு குழந்தையின் பாவம் காட்டியது அவள் வதனம். அதன் பிறகு அவள் உள்ளே நுழைவதற்கு நடக்க, இவனும் வேகமாய் அறையை விட்டு வெளியேறினான். படி முடியும் இடத்தில் நின்று வாசலைப் பார்க்க, அவள் வைன் கிளாஸை வாங்கிக் கொள்வது தெரிந்தது. அதை குடித்து விட்டு முகம் சுளித்த விதமும், கள்ளத்தனமாக அதை பூச்சாடியில் அவள் ஊற்றியதையும் பார்த்தவனுக்குச் சிரிப்பு வந்து விட்டது. அங்கிருந்தே அவளைக் கவனித்தபடி நின்றிருந்தான்.
சாண்டிலியர் விளக்கில் இருந்து, திரைச்சீலை வரை அவள் ரசித்துப் பார்த்ததில் இவள் அவர்கள் செட் இல்லை எனப் புரிந்தது விஷ்ணுவுக்கு. அவளோடு பழகிப் பார்க்க ஆர்வம் வர, வேகமாய் படியிறங்கி பஃபே வரிசையில் அவள் பின்னால் வந்து நின்றான். அவள் முணுமுணுத்துக் கொண்டதை கேட்டவன், அதையே சாக்காய் வைத்துப் அவளிடம் பேச்சுக் கொடுத்தான்.
அவளிடம் பேசியதும் சுவாரசியமாகத்தான் இருந்தது. இவன் அருகே அமர்ந்திருப்பது அவளுக்கு அசௌகரியமாக இருப்பது புரிந்தாலும், நகரவே முடியவில்லை விஷ்ணுவால். இவன் கொடுத்த பானத்தை மறுத்தது, அவள் தட்டில் வைத்திருந்த உணவு வகைகள் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தாலும், இவனுக்கு எடுத்துக் கொள்ளச் சொல்லிக் கொடுத்தது, ரஹ்மானுக்காக இவனோடு சண்டையிட்டது என எல்லாமே இவனைக் கவர்ந்திழுத்தது.
ஆடிக் கொண்டிருந்தவர்களை இவள் ரசித்துப் பார்க்க, சட்டென அவளோடு ஆட வேண்டும் எனும் ஆசை இவனுக்குள் கிளர்ந்தெழுந்தது. அந்தக் குட்டி இடையை லேசாய் தொட்டபடி, அவளது வாசத்தை உள் வாங்கி ஆடும் போது எப்படி இருக்கும் என மனம் கற்பனையில் மிதக்க ஆரம்பித்தது. அதற்குள் வேலை வந்து விட, மனமே இல்லாமல் அவளை விட்டு விலகிப் போக வேண்டியக் கட்டாயம். வேலையை முடித்ததும் அவ்விடத்தையே புரட்டிப் போட்டு அவளைத் தேடினான். அதன் பிறகே அவள் கொடுத்த எண்ணுக்கு அழைப்பெடுத்து பல்ப் வாங்கினான்.
என்னவோ கோபம் தாறுமாறாய் வந்தது.
“போடி போ! இந்த விஷ்ணுவோட கடைக் கண் பார்வைப் படவே குடுத்து வச்சிருக்கனும்! உனக்கு அந்தக் குடுப்பிணை இல்லை” என சத்தம் போட்டே சொல்லிக் கொண்டவன், அவள் நினைவுகளை முயன்று அடி மனதில் அழுத்தி மூடி வைத்தான். சில, பல சமயங்களில் அவள் ஞாபகம் வந்தாலும், அதை கடந்து போக பழகி இருந்தான்.
இப்பொழுது அவளை நேரில் பார்க்கவும் கோபம் வந்து விட்டிருந்தது. அதனால்தான் அவளைப் போட்டு இந்தச் சில நாட்களாக வாட்டி விட்டிருந்தான். இன்று ஊர்மிளா தள்ளாடி நின்றது இவன் மனதை என்னவோ செய்து விட்டது.
“யூ ஆர் நாட் அ க்ரூவல் பெர்சன்! போதும் இதெல்லாம்! நிப்பாட்டிடு விஷ்ணு! யூ ஆர் அடல்ட் நவ்! அவ சொன்ன மாதிரி சின்னப்புள்ளைத்தனமா நடந்துக்காதே! எல்லாருக்கும் உன்னைப் பிடிக்கனும்னு கட்டாயம் இல்லையே! அவளுக்குப் பிடிக்கல! சுத்தல்ல விட்டுட்டா! உன் கோபம் தீர, வச்சி செஞ்சிட்டில்ல! இனி அவள டீம் மெம்பரா மட்டும் பாரு! எதிரியா நடத்தாதே!” எனத் தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன், கண் மூடிப் படுத்து விட்டான்.
அன்று இவர்கள் எல்லோரும் அவுட்டிங் சென்ற போது, இவன் தோளில் கிள்ளையாய் தொற்றியபடித்தான் வந்தாள் ஊர்மிளா!!!!
(சேர்ந்தாடுவாளா???)
