KKP Epi 8(2)

மனதில் பெரிய பாரம் நீங்கியதைப் போல இருந்தது மல்லிக்கு. அவன் வயிற்றை இறுக்கமாகக் கட்டிக் கொண்டவள்,

“உன்னைத் தப்பா புரிஞ்சுகிட்டு சொல்ல கூடாத வார்த்தை சொல்லிட்டேன் மாமா! என்னை மன்னிச்சிரு! நீ என்னைத் திரும்பி பார்க்கலைன்னதும் ரொம்ப மனசு வலிக்க ஆரம்பிச்சிருச்சு. இந்த அனாதைய அதுவும் சுத்தம் செய்யறவள நிமிர்ந்து பார்க்கக் கூட தகுதியில்லாதவளா நெனைச்சிட்டியோன்னு துடிச்சுப் போயிட்டேன்” என்றாள்.

“அனாதை பனாதைன்னுலாம் சொன்னின்னா, கொன்னுடுவேன்டி. நானும் நைனாவும் இருக்கற வரை நீ அனாதை இல்ல” என ஆத்திரமாகப் படபடத்தான் இவன்.

அவன் காட்டிய கோப முகத்தில் இவளுக்கு பயம் வரவில்லை. ஆறுதலே வந்தது.

“அந்த இன்சு இருக்கானே, அவன் என் மேல தப்பா கைய வச்சதில்லைனாலும், அவன் பார்வையே சரியில்ல மாமா. எல்லா வேலையையும் நான் பார்த்தாலும் அந்தாளுக்கு பரிமாறதுலாம் எங்கம்மாத்தான் செய்வாங்க. அவன் என் கிட்ட நெருங்காத மாதிரி கண் கொத்திப் பாம்பா என்னை கவனிச்சிக்கிட்டாங்க. என் மேல பாசத்துனால இப்படி செஞ்சாங்கன்னு நெனைச்சிடாதே மாமா. எங்க அந்தாளு என்னைப் புடிச்சிக்கிட்டு அவங்கள டீல்ல விட்டிருவானோன்னு பயமா வேணும்னா இருக்கலாம். ஒரு அப்பா ஸ்தானத்துல இருந்த ஆம்பளைல இருந்து, என்னைச் சுத்தி வந்த ஆம்பளை வரைக்கும் இந்த மாதிரி கேவலமான பிறவிகளத்தான் நான் பார்த்துருக்கேன். இவனுங்க என் கிட்ட எதிர்ப்பார்த்தத உனக்குக் குடுத்துட்டா, என்னை காப்பாத்தி விட்ருவேனு தப்பா நெனச்சுட்டேன் மாமா. கட்டிக்கத்தானே தகுதி தராதாரம்லாம் வேணும். வச்சிக்க அதெல்லாம் தேவைப்படாதேனு நெனைச்சு கிறுக்குத்தனமா பேசிட்டேன். தப்புதான்! தப்புதான்” எனக் கண்ணீரோடு கன்னத்தில் போட்டுக் கொண்டவளின் கரங்களைப் பிடித்துக் கொண்டான் சங்கர்.  

“தோ பாரு தேவா! அழாதே. இந்தக் கதை அப்பவே தெரிஞ்சிருந்தா அந்த இன்ஸ இன்னும் பலமா டேமேஜ் பண்ணிருப்பேன்” எனக் கொதித்தவனை அடக்கும் பொருட்டு,

“என்னை ஏன் மாமா அடிக்கடி தேவான்னு கூப்புடற?” எனக் கேட்டாள் இவள்.

“தேவதைய சுர்க்கி தேவான்னு கூப்புடறேன்டி”

இன்னும் கண்ணீர் உற்பத்தியானது இவளுக்கு.

“என்னைத் தேவதையா நெனைச்சு வச்சிருக்க நீ! உன்ட்ட போய் வச்சிக்க சொல்லிக் கேட்டுருக்கேனே! அடி மாமா! அப்படிக் கேட்ட இந்த வாய அடி மாமா” எனப் புலம்பியவளின் வாயை அடிக்கத்தான் செய்தான் ஜெய்சங்கர்.

“அடிக்க சொன்னா, எச்சிப் பண்ணி வைக்கற மாமா நீ!”

“எனக்கு பொம்பளைய அப்படித்தான்டி தேவா அடிக்க வரும்”

“என்னைத் தவிர எத்தனைப் பேர அப்படி அடிச்சிருக்க?” எனக் கோபமாய் இவள் கேள்வி எழுப்ப,

“அடியே! நான் கன்னன் கழிஞ்சது உன் கிட்ட மட்டும்தான்டி!” எனப் பதறினான் இவன்.

“கப்ஸாவுடாத மாமா” என மங்கை இவன் பாஷை பேச, சங்கருக்குச் சிரிப்பு வந்து தொலைத்தது.

“நீதான்டி என் மொதலும் முடிவும்! அதைப்பத்தி நீ கவலையேப் பட வேணா!” என்றவன், சிறிய அமைதிக்குப் பின்,

“என் மேலத்தான் ராங்கு மல்லி! ஒரு பொண்ணு இப்படி பேசறாளே, இன்னா மேட்டருன்னு விசாரிக்காம சட்டுன்னு எகிறிட்டேன். நைனா சொல்ற மாதிரி கோபம்தான் எனக்கு மொதோ எதிரி. அப்படியே வளந்துட்டேன். என்னை மன்னிச்சுருடி. என் முட்டாள்தனத்துனாலே எப்படியோ போயிருக்க வேண்டிய இத்தனை நாள, முறைச்சிக்கிட்டே வேஸ்ட்டுப் பண்ணிட்டேன்!” என்றான்.

இருவரும் மன்னிப்புக் கேட்கும் படலம் முடித்து ஒருத்தருக்கு ஒருத்தர் சமாதானமாகி, மாவு வேலையையும் முடித்தனர். அதன் பிறகு மறுபடியும் பக்கெட்டில் மோப் முங்கியதை நான் சொல்லத்தான் வேண்டுமா! அல்லது சால்னாவில் பரோட்டா மூழ்கியதை விளக்கத்தான் வேண்டுமா!

மனதளவில் புரிதல் கொஞ்சமாய் வசப்பட்டிருந்தாலும், உடலளவில் நன்றாகவே புரிதல் வந்திருந்தது இருவருக்கும். அடிக்கடி தோஸ்த்து வீட்டுக்கு சென்ற கோபாலை,

“அப்பா, இங்கயே படுங்கப்பா! அடுத்தவங்க வீட்டுக்கு அடிக்கடி போனாலும் தொல்லையாத்தான் நெனைப்பாங்க!” எனத் தடுத்து விட்டாள் இவள்.

“நீங்க சின்னஞ் சிறுசுங்க!” எனத் தடுமாறியவரை,

“கூட்டுக் குடும்பத்துலயும்தான் கல்யாணம் நடக்குது. அங்கெல்லாம் பெரியவங்கள வெளிய தொரத்திடறாங்களா என்ன? ஏன், இந்த ஹவுசிங் போர்ட்ல மாமியாரு, மாமனாரு, மகன் ரெண்டு பேரு, மருமகளுங்கன்னு ஒரே கும்பலா குடும்பமா ஒத்த வீட்டுல வாழறது இல்லையா! நீங்க இங்கயே இருங்கப்பா” எனக் கறாராகச் சொல்லிவிட்டாள் மல்லி.  

கோபால் மேல் காலைத் தூக்கி போட்டுக் கொண்டு வரவேற்பறையில் தூங்கிய பெரிய குழந்தை இப்பொழுதெல்லாம் மல்லியின் மேல் கையைப் போட்டுக் கொண்டு ரூமில் தூங்கப் பழகியிருந்தான்.  

காலையில் எழுந்து பரோட்டாவையே நாஸ்தாவாக சாப்பிட்டுக் கொள்வார்கள். அதன் பிறகு சங்கரோடு சேர்ந்து வியாபாரத்துக்கான சமையலில் உதவி செய்வாள் மல்லி. பின், மூவருக்குமான மதிய சமையலைப் பார்ப்பாள். வியாபாரத்துக்கு இருவரும் கிளம்பியதும், வீட்டைச் சுத்தம் செய்து விட்டு காந்திமதியுடன் சற்று நேரம் அரட்டையடிப்பாள். மாலையில் சுவற்றில் இவள் ஒட்டி வைத்திருந்த காலேண்டர் விநாயகரை கை கூப்பி வணங்கி விட்டு இரவுக்காக எதாவது சிம்பிளாக சமைப்பாள். ஆண்கள் இருவரும் வீடு வந்ததும், பேச்சு சிரிப்பு, மாவு வேலை, கணவனின் அணைப்பு என நேரம் ஓடிவிடும்.

ஆனாலும் இவளுக்கு என்னவோ குறையாக இருந்தது. நாள் முழுதும் வேலை வேலை என ஓடியவளுக்கு, தேவைக்கும் மேலாகவே கிடைத்த ஓய்வு பிடிக்கவில்லை. மூன்று நாட்கள் இனித்த பொழுதுகள், சீக்கிரமாகவே அலுத்துப் போனது. அதனால்தான் வியாபாரத்துக்கு வருகிறேன் என அடம் பிடித்தாள் பெண்.

பழைய வேலையைத் தூக்கிக் கடாசியிருந்தாள் மல்லி. கந்தமாறனுக்கு தெரிந்தவனின் கீழே வேலை செய்யப் பிடிக்கவில்லை இவளுக்கு. சம்பளம் தனக்கு வருமா வராதா எனத் தெரியாத நிலையில் அங்கே போய் உழைக்க இவளுக்கென்ன பைத்தியமா!

“ப்ளிஸ் மாமா! ஒரு வேலையும் இல்லாம இங்க உக்காந்துருக்கறது கடுப்பா இருக்கு. நான் அடுப்பு கிட்ட வரமாட்டேன். வேணும்னா ப்ளேட்டுலாம் தேய்ச்சுத் தரேன்!”

“டீவிப் பொட்டி பாரு! இல்லாங்காட்டி கொஞ்ச நேரம் தூங்கு! அங்கெல்லாம் நீ வர வேணா” எனச் சத்தம் போட்டான் இவன்.

“வரட்டுமேடா மவனே!”

“நீ சும்மா கெட நைனா! எல்லாம் கண்ணு, பொண்ணுன்னு நீ குடுக்கற செல்லம்தான்! அதான் சொன்ன பேச்சுக் கேக்க மாட்டீங்கறா” என அவருக்கும் டோஸ் விழுந்தது.

யோசனையாக அவனைப் பார்த்தவள்,

“அப்போ சரி, நான் வரல! காந்தி அக்கா படத்துக்கு வரியான்னு கூப்டுச்சு! டிக்கெட்டுக்கு, பாப்கார்ன்னுக்கு எல்லாம் சேர்த்து ஒரு ஐந்நூறு ரூபா குடுத்துட்டுப் போ மாமா” என அடமாய் நின்றாள் மல்லி.

“அங்க வந்து ப்ளேட்டு மட்டும்தான் தேய்க்கனும்! அப்பப்ப உக்காந்து ரெஸ்ட்டு எடுத்துக்கனும்! அதுக்கு ஓகேன்னா, கெளம்பி வா” எனச் சட்டெனக் கீழிறங்கி வந்தான் ஜெய்சங்கர்.

கோபால் நமுட்டு சிரிப்பு சிரிக்க, இவள் வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள். ஆனாலும் உள்ளுக்குள் லேசாய் வலிக்கத்தான் செய்தது. பாசத்தைக் கொட்டினாலும், பணத்தைக் கொட்ட மாட்டான் கணவன் எனப் பல தடவைப் புரிய வைத்திருந்தான் இவன். பெருமூச்சுடன் கிளம்பி வியாபாரத்துக்குப் போனாள் மல்லி.

பவளமல்லி வரவும், அன்று ஆண்கள் இருவருக்கும் வேலை கொஞ்சம் குறைந்தது. டீ ஊற்றிக் கொடுப்பது, பாத்திரம் தேய்ப்பது போன்ற வேலைகளை இவள் பார்க்க, மற்ற வேலைகளை கோபாலும் சங்கரும் பார்த்தார்கள். வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிய சங்கர், அதற்கென வைத்திருக்கும் டப்பாவில் போடுவதை யோசனையாகப் பார்த்தபடியே வேலைப் பார்த்தாள் மல்லி.

அன்றிரவு கூடல் முடிந்து ஆசுவாசமாக அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவள் கேட்ட கேள்வியில் திகைத்து விழித்தான் ஜெய்சங்கர்.

Scroll to Top