SC Epi 6(2)

‘ஒருத்தன இரசனையாய் பார்த்தது அவ்வளவு பெரிய குற்றமா? ஏன் சட்டுன்னு அவளையே திட்டிக்கற மாதிரி, முகம் மாறிப் போச்சு’ என யோசித்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

காலில் இருந்த காயங்களைக் கழுவித் துடைத்து அதற்கும் ப்ளாஸ்ட்டர் போட்டு விட்டார் டாக்டர். மூன்று நாட்கள் கழித்து மறுபடியும் வரச் சொல்லி, அனுப்பி வைத்தார் இவர்களை.

விஷ்ணுவே பணம் செலுத்தி மருந்துகளைப் பெற்று வர,

“எவ்ளோ ஆச்சு ட்ரெய்னர்?” எனக் கேட்டாள் ஊர்மி.

“நாளைக்குக் கணக்குப் பார்த்துக்கலாமா ஊர்மி? இப்போ கிளம்பலாம்! யூ நீட் ரெஸ்ட்” என்றான்.

அவன் கைப்பிடியிலேயே கிளினிக்கை விட்டு வெளியே வந்தாள் ஊர்மிளா. பக்கத்தில் ரெஸ்ட்டாரண்ட் ஒன்று இருக்க,

“இங்க நூடுல்ஸ் நல்லா இருக்கும் ஊர்மி! சாப்பிட்டுட்டு, மருந்து போட்டுக்க! ரூமுக்குப் போனதும் ஸ்ட்ரேய்ட்டா தூங்கிடலாம்” என்றான் இவன்.

ஆர்கியூ செய்ய தெம்பில்லாமல், சரியெனத் தலையசைத்தாள் ஊர்மிளா. ரெஸ்ட்டாரண்டின் உள்ளே அழைத்துப் போய் அவளை வசதியாக அமர வைத்தான் விஷ்ணு.

“போ வேணுமா?”

“உள்ள கூட்டி வந்து உக்கார வச்சிட்டு போ வேணுமான்னு கேக்கறீங்க! வெளிய இருந்தபடியே கிளம்பிருக்கலாம்ல” என முறைத்தாள் இவள்.

இவனுக்கு மெல்லியச் சிரிப்பு.

“போன்னா(pho) வியாட்னாம்ல ஒரு வகை நூடுல்ஸ்! மாட்டிறைச்சி அல்லது கோழி போட்டு, ஸ்பைசஸ், நூடுல்ஸ்லாம் சேர்த்து செஞ்சுக் குடுப்பாங்க! வயித்துக்கு இதமா இருக்கும். நான் ரெண்டு சிக்கன் போ ஆர்டர் செய்யறேன்! உனக்கு ஓகேவா? இல்ல மெனு கொண்டு வர சொல்லவா?”

“எனக்கு சீக்கிரம் போனும்! சோ போவே ஓகேத்தான்” எனச் சொன்னவளுக்கும் மெலிதாய் புன்னகை வந்தது.

வலியிலும் ஜோக் அடித்தவளை வாஞ்சையாக நோக்கினான் இவன். அவள் சோர்வதைக் கண்டவன், வேகமாய் இருவருக்கும் நூடுல்ஸை ஆர்டர் செய்தான். உணவு வந்ததும், அவளுக்கு வசதியாய் நகர்த்தி வைத்து முள் கரண்டியைக் கொடுத்தான்.

“சாப்பிட முடியுமா? இல்ல நான் ஊட்டி விடவா?” எனக் கேட்டவனை நிமிர்ந்து பார்த்தாள் ஊர்மி.

அவன் முகத்தில் கிண்டலோ, நக்கலோ இல்லை. சின்சியராகத்தான் கேட்டிருந்தான்.

வேண்டாமெனத் தலையாட்டியவள், ஒரு கையால் கரண்டிப் பிடித்துச் சாப்பிட ஆரம்பித்தாள். அவள் பாதியில் போதும் என விட்டு விட, இவனும் வைத்து விட்டான். மேசை மேல் வைத்திருந்த மருந்துகளைப் பிரித்து அவளுக்கு நீட்டியவன், கிளாசையும் அருகே நகர்த்தி வைத்தான். அவள் மருந்தை உட் கொண்டதும், இவன் பணம் செலுத்தி வந்தான். அதன் பிறகு அமைதியாய் எந்த விதப் பேச்சும் இல்லாமல் ரிசார்ட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.

லாபி அருகே அவளை இறக்கி விட்ட விஷ்ணு,

“இங்கயே நில்லு ஊர்மி! நான் பார்க் செஞ்சுட்டு ஓடி வந்திடறேன்!” என்றான்.

“இல்ல ட்ரெய்னர்! நான் ரூமுக்குப் போய்டுவேன்! தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்! இதை நான் என்னைக்கும் மறக்கவே மாட்டேன்” என்றாள் பெண்.

“நாம இனி ப்ரெண்ட்ஸ்னு சொன்னேனே மறந்துட்டியா! விஷ்ணுன்னே கூப்பிடு ஊர்மி!” என அவன் சொல்ல, தலையை மட்டும் ஆட்டிக் கொண்டாள் இவள்.

அவன் பார்க் செய்து வருவதற்குள் மெல்ல நொண்டியபடியே ரிஷப்சனுக்கு வந்தவள், தேஜா எந்த அறையில் இருக்கிறான் என விசாரித்தாள். இவர்கள் வருவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்புதான் அவன் கிளம்பி ஏர்ப்போர்ட் போனதாகத் தெரிவித்தாள் அந்தப் பெண்.

அதன் பின் அறைக்கு வந்தவள், அப்படியே கட்டிலில் சரிந்து விட்டாள்.

கதவு தட்டப்பட்டு,

“ஊர்மி! எல்லாம் ஓகேவா? ஹெல்ப்புக்கு லேடி ஹவுஸ் கீப்பர் யாரையாச்சும் வர சொல்லி ஏற்பாடு செய்யவா?” என விஷ்ணுவின் குரல் கேட்க,

“பரவால்ல ட்ரெய்னர்! ஆல் ஓகே! நான் தூங்கப் போறேன்” எனச் சொல்லி அனுப்பி வைத்து விட்டாள்.

இப்பொழுது ஸ்பேர் கீ போட்டுக் கதவைத் திறந்து வந்து நிற்பவனை எப்படி கிளப்புவது என யோசித்தபடியே கண்ணாடி முன் சற்று நேரம் நின்றிருந்தாள். பேர்த்டே பார்ட்டி சமயத்தில், அவன் கண்களில் தெரிந்த ஆர்வத்தில்தான், வகை வகையாய் இருந்த உணவுகளைக் கூட சுவைக்காமல் அடித்துப் பிடித்துக் கிளம்பி விட்டிருந்தாள். அதன் பிறகு வாழ்க்கை ஓட்டத்தில் அவனை மறந்தும் கூட போயிருந்தாள்.

இந்த ரிசார்ட்டுக்கு வந்து விஷ்ணுவைப் பார்த்தவளுக்கு முதலில் இவன்தான் அவன் என்பது பிடிபடவே சில நிமிடங்கள் ஆனது! அதன் பிறகு அவன் கோப முகம் காட்ட, அது கூட ஒரு வகை நிம்மதியைத் தந்தது. கேட் கேட் வில்லேஜீல் நட்புக் கரம் நீட்டியதில் கூட கல்மிஷமாய் ஏதும் தோன்றாததால் இவளால் ரிலேக்‌ஷாக இருக்க முடிந்தது! ஆனால், விபத்து ஏற்பட்ட நேரத்தில் இவளை நோக்கி ஓடி வந்தவனின் முகத்தில் தெரிந்த பதட்டம், பரிவு, துடிதுடிப்பு எல்லாம் இவளை என்னவோ செய்தது! இது நல்லதிற்கில்லை என அந்த நேரத்தில் கூட மூளைப் பிராண்டியது!

“ஆஞ்சனேயரப்பா! உன் பக்தை உன் வழியில போய்க்கிட்டு இருக்கேன்! என் பிரம்மச்சரிய தவத்தைக் களைக்க முயலும் இந்த விஷ்ணுவ உன் வாலால சுழட்டி என் பக்கம் வராத மாதிரி கண் காணாத இடத்துக்கு ட்ரெய்னிங்குக்கு அனுப்பிடு! அங்க ஒரு அஜால்குஜால் ஃபிகர அவனுக்கு செட் பண்ணி விட்டு, என் வாழ்க்கையைக் காப்பாத்திக் குடு!” என வேண்டிக் கொண்டவள்,

“அடச்சீ! எப்படிப்பட்ட மகான, மாமா வேலைப் பார்க்க சொல்றீயே, நல்லா இருப்பியாடி நீ” எனத் தன்னைத்தானே திட்டிக் கொண்டுக் கதவைத் திறந்தாள்.

குட்டி மேசை மேல் உணவு பறிமாறி வைக்கப்பட்டிருந்தது! அதன் அருகே இருந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டு ராஜாவைப் போல் அமர்ந்திருந்தான் விஷ்ணு.

கதவை நோக்கிக் கை காட்டிய ஊர்மிளா,

“நான் சாப்பிட்டுப்பேன் ட்ரேய்னர்! நீங்க கிளம்புங்க” என்றாள்.

“வி..ஷ்..ணு! விஷ்ணு! எங்க சொல்லு பார்ப்போம்” எனச் சின்னக் குழந்தைக்குச் சொல்வதைப் போலச் சொன்னவனைப் பார்த்து முறைத்தாள் இவள்.

“சரி! சரி! முறைக்காத! முதல்ல சாப்பிடு ஊர்மி! மருந்து எடுத்துக் குடுத்துட்டு நான் போய்டுவேன்! என்னோட பொறுப்புல இருக்கீங்க நீங்க எல்லாம்! டீம்ல ஒருத்தருக்குப் பிரச்சனைன்னா நான்தான் பார்க்கனும்! அந்த அக்கறைதான் எனக்கு!”

அதற்கு மேல் அவனிடம் மல்லுக் கட்டாமல் அமைதியாய் கரண்டி வைத்துச் சாப்பிட்டாள் இவள். பாதிக்கு மேல் சாப்பிட முடியவில்லை. அப்படியே வைத்து விட்டாள். கவலையாய் அவளை நோக்கியவன்,

“என்ன செய்யுது? ஏன் சரியா சாப்பிடல? மறுபடி கிளினிக் போகலாமா?” எனக் கேட்டான்.

“ட்ரெய்னர்”

“விஷ்ணு!!!!!”

“சரி! சரி! விஷ்ணு!! நான் கொஞ்சம் ஓப்பனா பேசவா?”

“பேசு!”

“நீங்க எப்படி ட்ரை பண்ணாலும் எனக்கு உங்க கூட பெட் ஷேர் பண்ணிக்க விருப்பமில்லை! சோ இந்த போலி அக்கறையெல்லாம் மூட்டைக் கட்டி வச்சிட்டு, கிளம்பிப் போய்ட்டே இருங்க ப்ளீஸ்”

அவளது பேச்சில் விஷ்ணுவின் சிவந்த முகம் மேலும் சிவந்து போய் விட்டது. சற்று நேரம் ஒன்றும் பேசாமல் இருந்தவன்,

“உன்னோட ஓப்பன் டால்க் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு ஊர்மிளா! யூ சீ, இப்படிலாம் அக்கறையா பேசி, அனுதாபம் காட்டி நடிச்சித்தான் பெட்டுக்கு ஆள் பிடிக்கனுங்கற அவசியம் எனக்கு இல்ல! கேர்ள்ஸ் கோ க்ரேஸி ஓவர் மீ! அதுக்கான அவசியம் எனக்கு என்னைக்கும் வந்தது இல்ல! உன் மேல நான் காட்டறது, ட்ரெய்னருக்கு டீம் மெம்பர் மேல இருக்கற அக்கறை மட்டும்தான்!” என்றபடியே மருந்தை எடுத்துப் பிரித்து மேசை மேல் வைத்தான்.

“மருந்து போட்டுட்டுப் படு! குட் நைட்!” என்றவன் அறையை விட்டு வெளியேறி இருந்தான்.

அவன் போவதையே பார்த்திருந்தவள், பின் தன்னையே உலுக்கிக் கொண்டாள்.

இவர்கள் கிளம்பிப் போகும் நாளுக்கு முதல் நாள் டிக்கேட் கான்சலாகி விட்டாதாய் மின்னஞ்சல் வர, தனக்கு மேல் அதிகாரியைத் தொடர்பு கொண்டாள் இவள். அவர் மூலம்தான் இவளுக்கு மெடிக்கல் லீவும், வேறொரு நாளுக்கு டிக்கேட்டும் போடப்பட்டிருப்பதை அறிந்து கொண்டாள் ஊர்மிளா. யார் அப்படி செய்தது என விசாரித்ததில் ட்ரெய்னர் பெயர் வரவும், கடுப்பாகிப் போனாள் இவள். ஊர்மி பேசிய பேச்சில் வாலைச் சுருட்டிக் கொண்டுப் போனவன், அதன் பின் இவள் பக்கமே வரவில்லை! இப்பொழுது அவன் வேலையைக் காட்டி இருக்க, கோபமாய் விஷ்ணுவைத் தேடிப் போனாள் ஊர்மிளா.

இவளைப் பார்த்துச் சிரிப்புடன் அவன் பாடவும், இன்னும் கோபம் அதிகரித்தது பெண்ணுக்கு.

“இதென்ன விளையாட்டு விஷ்ணு! ஐ நீட் டூ கோ பேக்!”

“இது விளையாட்டு இல்ல ஊர்மிளா! இன்னும் கை சரியாகி கட்டைப் பிரிக்கல! அதுக்குள்ள நீ கிளம்பிப் போய், ப்ளைட்டுலயோ இல்ல ஏர்ப்போர்ட்டுலயோ அடிப்பட்டுக்கிட்டா, அன்ஃபிட் எம்ப்ளாயிய வேலைக்கு வர வச்சதா கம்பேனி மேலத்தான் கேஸாகும்!”

அவள் இன்னும் கடுப்பில் நிற்க,

“என்ன கஷ்டம் ஊர்மிளா உனக்கு? பேய்ட் மெடிக்கல் லீவ்! சாப்பாடு, ரூம்லாம் ஃப்ரீ! இயற்கை சுற்றுச் சூழல்! டேக் ரெஸ்ட், ஹீல் அண்ட் கோ பேக்!” என நல்லபடியாகச் சொன்னான் விஷ்ணு.

அவன் சொல்வதும் சரிதானே! அங்கே போய் இந்தக் கையை வைத்துக் கொண்டு என்ன வேலைப் பார்ப்பாள்? மெடிக்கல் லீவ் எடுத்துக் கொண்டாலும், அந்தக் குட்டி அறையில் நாளேல்லாம் அடைந்து கிடப்பது இவளுக்குக் சாத்தியப்படாது! அதோடு இவளைத் தேடி இவள் கீழே வேலைப் பார்ப்பவர்கள் வந்து கொண்டேதான் இருப்பார்கள். சற்று நேரம் யோசித்தவள், பெருமூச்சுடன் அவன் முகத்தை ஏறிட்டாள்.

“யூ ஆர் கரேக்ட்! தேங்க்ஸ் விஷ்ணு!” எனச் சொல்லி அவள் அறையை நோக்கிச் செல்ல அடி எடுத்து வைத்தாள்.

“ஊர்மி!”

அவனைத் திரும்பிப் பார்த்து,

“யெஸ்” என்றாள் ஊர்மிளா.

“இன்னைக்கு டின்னருக்கு போலாமா டவுனுக்கு?”

இவள் அவன் கண்களை ஆழ்ந்து பார்க்க,

“பெட்(bed) பார்ட்னராக்கிக்க கூப்பிடல! ஃபூட்(food) பார்ட்னராக்கிக்கத்தான் கூப்பிடறேன்!” எனப் புன்னகையுடன் அழைத்தான்.

அவளை அறியாமலேயே தலை சரியென ஆடிவிட்டது!!!

(சேர்ந்தாடுவாளா???)    

Scroll to Top