அத்தியாயம் 7
“டாடிஸ் லிட்டில் பிரின்சஸ்னு கேள்விப்பட்டிருக்கற நாம, மம்மீஸ் லிட்டில் பிரின்ஸ்னு ஒன்ன கேள்விப்பட்டிருக்கோமா? இருக்காது! ஏன்னா அது அந்தக் காலத்துல இருந்தே நார்மலைஸ் ஆக்கப்பட்ட ஒரு விஷயம். ‘டேய்! நீ ஏன்டா அடுப்படிக்கு வந்த! தங்கச்சி தண்ணி எடுத்துத் தருவா போ!’, ‘தட்ட அப்படியே வச்சிட்டுப் போ! அக்கா கழுவி போடுவா!’, ‘ஆம்பளப் பையன் களைச்சு வந்திருக்கான், அவனுக்கு டீ போட்டுக் குடு போ’ இப்படின்னு ஆயிரத்தெட்டு அலம்பல். ஆம்பளைப் பசங்க என்னமோ ஆகாசத்துல இருந்து குதிச்ச மாதிரியும், பொம்பளப் புள்ளைங்க பொறந்ததே வேஸ்ட்டுங்கற மாதிரியும் அலட்டறது எல்லாம் நம்ம தாய்க்கிழவிங்கத்தான்! டாடிஸ் லிட்டில் பிரின்சஸ்க்கு சமைக்கத் தெரியாதத கிண்டலடிக்கற நாம, எப்போ மம்மிஸ் லிட்டில் பிரின்ஸ்கு சமைக்கத் தெரியலைங்கறத கிண்டலடிக்கறமோ அப்பத்தான் இந்தியா வல்லரசாகும்! இது எப்படி இருக்கு???(ரஜினி ஸ்டைலில் படிக்கவும்)
(பாட்காஸ்ட் பை பரதேசி!!!)
“இதெல்லாம் பார்பிகியூ ஐட்டங்கள்! எது பிடிக்குதோ அதை சூஸ் பண்ணி அந்தத் தட்டுல வச்சிக் குடுத்தம்னா, ஃப்ரை பண்ணியோ இல்ல அவிச்சோ குடுப்பாங்க! அதை சாஸ்ல தொட்டுச் சாப்பிடனும்”
கலர் கலராய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இறைச்சி ஐட்டங்களை ஊர்மிளா அவதானிப்பதைப் பார்த்து விளக்கம் சொன்னான் விஷ்ணு.
“கோழி மாதிரி தெரியலையே!”
“கோழியும் இருக்கு! ஆனா மோஸ்ட்லி பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, சீஃபூட்தான் விக்கறாங்க இவங்க! ட்ரை செய்யறியா? அதை பாரேன்! அது பன்னியோட குடலு! இது பன்னியோட லிவரு” என அவன் காட்ட, முகத்தைச் சுளிக்காமல் அப்படியா என்பது போலப் பார்த்தாள் இவள்.
“அருவருப்பா இல்ல?”
“எதுக்கு அருவருப்பு? பிடிச்சவங்க வாங்கிச் சாப்பிடறாங்க! பிடிக்காதவங்க ஒதுங்கிப் போக வேண்டியதுதான்! தட்டுல எதப் போட்டாலும் சாப்பிட்டு வளந்த எனக்கு, எந்த உணவையும் அருவருப்பா பார்க்க வராது ட்ரெய்னர்!” என்றவள், அதிகம் பேசி விட்டது போல உதட்டைக் கடித்துப் பேச்சை நிறுத்தி வேறு பக்கம் நடக்க ஆரம்பித்து விட்டாள்.
சாப்பா டவுனுக்கு வந்திருந்தார்கள் இருவரும். இரவில் தூங்கா நகரமாய் வண்ண விளக்குகள் கட்டிடமெங்கும் ஒளிர அற்புதமாய் காட்சியளித்தது அவ்விடம். அங்கே இரவுச் சந்தையும் போடப் பட்டிருக்க, இவள்தான் போய் பார்க்கலாம் என விஷ்ணுவை அழைத்தாள். அந்தச் சந்தையில் கைவினைப் பொருட்கள், உணவு வகைகள், உடைகள் எனப் பலதரப்பட்டப் பொருட்கள் விற்கப்பட்டன. அதை ஒரு சுற்றுச் சுற்றி விட்டுப் பிறகு சாப்பிடப் போகலாம் என முடிவெடுத்தவர்கள், உள்ளே நுழைந்திருந்தார்கள்.
அவள் சட்டென விலகி வேகமாய் நடந்து விட, போனவளையே பார்த்தபடி நின்றிருந்தான் விஷ்ணு. அவன் முகம் மென்மையைத் தத்தெடுத்திருந்தது.
சில பல நிமிடங்களில் அவள் பின்னால் காலடி ஓசையும்,
“கீங்கீங்கீங்” எனும் சத்தமும் கேட்க, திரும்பிப் பார்த்தாள் ஊர்மி.
அங்கே தலையில் தேனீ போல ஆண்டேனா வைத்த ஹெட்பேண்ட் ஒன்றை அணிந்திருந்த விஷ்ணு நின்றிருந்தான். அவனை அப்படிப் பார்க்கவும் சிரிப்பு வந்து விட்டது இவளுக்கு.
கையில் வைத்திருந்த இன்னொரு மஞ்சள் நிற ஹேட் பேண்ட்டை நீட்டியவன்,
“போட்டுக்கோ! டூரிஸ்ட் போல இந்த இடத்த எஞ்சாய் பண்ணலாம் வா ஊர்மி! என்னமோ கடமைக்கு நான் அழைச்ச மாதிரியும், கடனேன்னு நீ வந்த மாதிரியும் போகுது நம்ம அவுட்டிங்” என்றான் விஷ்ணு.
புன்னகை முகத்துடன் வாங்கி அணிந்து கொண்டாள் ஊர்மி. சற்று முன் அவள் உணவைப் பற்றிப் பேசியதை பற்றி எதையும் காட்டிக் கொள்ளாமல் சலசலத்தபடி வந்தான் விஷ்ணு. அவனுக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருந்தது அந்த ஊரைப் பற்றியும் அந்த நாட்டு மக்களைப் பற்றியும்.
அங்கு விற்றுக் கொண்டிருந்த அவித்த சோளத்தை வாங்கி அவளிடம் கொடுத்து, தனக்கும் ஒன்று எடுத்துக் கொண்டவன்,
“வெளியூர்ல போய் சாப்பிடறப்ப, ரொம்பக் கவனமா இருக்கனும் ஊர்மி! சில சாப்பாட்டு ஐட்டங்கள் சுகாதார முறையோட செஞ்சிருக்க மாட்டாங்க! சுத்தி பார்க்கப் போய்ட்டு, அப்புறம் டாய்லட்ட மட்டும் சுத்திப் பார்த்துட்டு வர மாதிரி ஆகிடும்! முடிஞ்ச அளவுக்கு சூடான உணவ எடுத்துக்கனும்! பழங்கள நாமளே வாங்கி வெட்டிச் சாப்பிட்டுக்கனும்! சீஃபூட்லாம் சாப்பிடறப்ப ரொம்ப பார்த்துத்தான் சாப்பிடனும்! ஆட்கள் நிறைய போய் சாப்பிடற கடைகளா பார்த்துத் தேர்ந்தெடுக்கனும்! இப்படி நிறைய இருக்கு! எப்படித்தான் கவனமா இருந்தாலும், சில சமயம் வச்சி செஞ்சி விட்டிரும்!” என்றவனை ஆர்வமாகப் பார்த்தாள் இவள்.
“ஏன் ட்ரேய்னர்! நிறைய நாடுகளுக்குப் போயிருக்கீங்களா?”
“விஷ்ணு!!!!”
“சரி! சரி! விஷ்ணு!” எனச் சொல்லியபடியே அவனை நோக்கியவள், வாயைப் பிளந்தாள்.
சோளத்தை அப்படியே அங்கொன்றும் இங்கொன்றும் கடித்து வைக்காமல், வரிசையாய் ஒரு சீராய் சாப்பிடுபவனை ஏலியனைப் போல் பார்த்தவள், கொதறி வைத்திருந்த தன் சோளத்தையும் பார்த்தாள்.
“என்ன கேட்ட?” என்றவனின் குரலில் தலையை உலுக்கி நடப்புக்கு வந்த ஊர்மி,
“விஷ்ணு! ட்ரெய்னர் வேலைன்னா நிறைய ஊர்களுக்குப் போகலாமா?” எனக் கேட்டாள்.
“சேனா க்ரூப் ஹோட்டல்ஸ் வெளிநாட்டுல எங்கெல்லாம் இருக்கோ அங்கெல்லாம் போய்ருக்கேன் ஊர்மி! லோக்கல்ல சொல்லிக் குடுக்க இன்னொரு ட்ரெய்னர் இருக்காங்க! நான் வெளிநாடு மட்டும்தான்”
“பெரிய அப்பாடக்கருதான்! கம்பேனி செலவுல ஒரே ஜாலிதான்”
“ஜாலி!! நீ பார்த்த!!! யம்மா ஊர்மி! பல சமயம் சாப்பிடக் கூட டைம் இருக்காதும்மா! ஓடிட்டே இருக்கனும்! ப்ளைட்ல, கார்ல, இப்படி கிடைக்கற இடத்துல, கிடைக்கற நேரத்துல தூங்கிக்கனும்!” என்றவனைப் பரிதாபமாய் பார்த்தாள் இவள்.
“நாமளாம் பணம் சம்பாதிக்க எவ்ளோலாம் கஷ்டப்பட வேண்டி இருக்குல்ல! உழைக்கறதே பசிச்ச வயித்துக்காகத்தான்! என்னை மாதிரி இல்லாம கரேக்ட் டைமுக்கு சாப்பிடு விஷ்ணு! நாள பின்ன குடும்பம் குட்டின்னு ஆகிட்டா, அவங்கள தூக்கி சுமக்க உடம்புல தெம்பு வேணும்ல”
“வேணும்தான்! என் ஆளோட மல்லுக்கட்டவே எனக்கு டபுள் எனர்ஜீ வேணும்! இனி கண்டிப்பா நல்லா சாப்பிட்டு, உடம்ப தேத்திக்கறேன்”
“ஏய் விஷ்ணு! ஆள் இருக்கா? சொல்லிருக்கலாம்ல! நான் வேற உன்னைப் போட்டு கண்டபடி பேசிட்டேன்! சாரி விஷ்ணு! ரியலி சாரி!” என வருத்தப்பட்டவளை,
“எவ்ளோ அடிச்சாலும் தாங்குவான்! அதாம்லே வர்கீசு” என அவன் மீசையை முறுக்குவது போல செய்ய, பொங்கிச் சிரித்தாள் ஊர்மிளா.
சிரிப்பவளையே வாஞ்சையாய் பார்த்திருந்தவன்,
“சாப்பிடப் போகலாமா?” எனக் கேட்டான்.
சரியெனத் தலையாட்டினாள் இவள்.
நைட் மார்க்கேட்டில் இருந்து வெளியேறி வண்ணமயமாய் காட்சியளித்த தெருக்கள் ஊடே நடந்து போஉ, ஒரு ரெஸ்டாரண்டின் முன்னே நின்றான் விஷ்ணு. பார்க்கவே பிரமாண்டமாய் இருந்தது அவ்விடம்.
“செம்ம லுக்கா இருக்கு! கழுத்துல கத்தி வச்சிடுவான் போல” என விலையை எண்ணிச் சொன்னாள் இவள்.
“சாப்பாட்டுக்கு வொர்த்தான விலைதான்” என்றவன், அவளை உள்ளே அழைத்துப் போனான்.
இண்டீரியர் பழங்காலத்து ஆண்ட்டிக் ஸ்டைலில் இருந்தது. உட்காரும் நாற்காலி கூட வேலைபாட்டோடு அழகாய் வடிவமைக்கப்பட்டிருந்தது. அவர்கள் தலைக்கு மேலே மயில் வடிவத்தில் விளக்கு அழகாய் ஒளி கொடுத்தது. அமர்ந்தவுடன் வெயிட்டர் மெனுவுடன் வந்தாள். இவர்களைப் பார்த்து,
“ச்சாவ் முங்(welcome)” எனப் புன்னகையுடன் சொன்னாள்.
கிளாசில் ஆரஞ்சு ஜூசை ஊற்றி வைத்தவள், இருவருக்கும் மெனு கார்ட் கொடுத்து விட்டு அருகிலேயே நின்றாள். இவர்கள் மெனுவை ஆராய. ஆங்கிலத்தில் கடையின் ஸ்பெஷம் உணவு மற்றும் பானங்களைப் பற்றி விளக்கினாள் அவள். இருவரும் ஆர்டர் செய்து விட்டு, நன்றாகச் சாய்ந்து அமர்ந்தார்கள்.
