KKP Epi 7(2)

“கொழந்தைய சொமக்க முடியலை! நீயெல்லாம் எப்படித்தான் புருஷனைத் தூக்கி சொமக்கப் போறியோ! இந்த லட்சணத்துல ஒத்த நைட்டுல மல்லி மல்லின்னு இவ பின்னால சுத்தனுமாம்” எனசொல்லி குபீரென சிரித்தார்.

“போக்கா!” என்றவளுக்கும் வெட்கத்துடன் சிரிப்பு வந்து தொலைத்தது.

அன்று இவளை உட்கார வைத்துப் பாடம் எடுத்திருந்தார் காந்திமதி.

“ஆம்பள சென்மமும் பொம்பள சென்மமும் ஒத்துமையா கொஞ்சி கொலாவிக்கிட்டு ஈயும் பீயுமா ஒட்டிக்கினு கிடக்கறதெல்லாம் சுத்த பம்மாத்து. அப்படிலாம் ஆருமே இர்க்க முடியாது. அவன் ஒரு நாய் சென்மம், இவ ஒரு பேய் சென்மம். ரெண்டும் ஒட்டிக்கிட்டே கிடக்கறதெல்லாம் ஆகற மேட்டரு இல்ல! அவனே மயங்கினாத்தான் உண்டு! அதுவும் எதைப் பார்த்து மயங்குவான்னு கண்டுப்புடிக்கறதுக்குள்ள நமக்கு கெழவி வயசு ஆகிடும். ஒவ்வொருத்தி சொல்லுவா, அதையும் இதையும் காட்டி புருஷன மயக்கிடலாம்னு. அப்படி செஞ்சா வதவதன்னு என்னை மாதிரி பெத்துத் தள்ள முடியுமேத் தவிர வேற ஒரு மண்ணும் வேலைக்கு ஆகாது. படுத்து எழுந்ததும் அப்படியே நம்மள டீல்ல விட்டுட்டு, அவன் சோலியப் பார்க்கப் போய்டுவான்! புருஷன் மனச தொட அவன் வயித்து வழியாப் பாதை இருக்குன்னு கேணை கிறுக்கிங்க சொல்லி வச்சிருக்குங்க! அதெல்லாம் எம்மாம் பெரிய பொய் தெரியுமா! தின்னு ஏப்பம் விட்டதும் உன்னை டீல்ல விட்டுட்டுப் போயிடுவான். அப்புறம் எப்படி அவன மடக்கறது?”

“சொல்லுக்கா, எப்படி?”

“அடி போடி போக்கத்தவளே! அது தெரிஞ்சா நான் பொஸ்த்தகம் போட்டு துட்ட அள்ளிருக்க மாட்டேன்! புருஷன மடக்கறேன், மயக்கறேன்னு திரியாம வாழ்க்கைய அதன் போக்குல வாழுடி! வாழ்ந்துப் பார்த்தாத்தான் அதன் சூட்சுமம் தெரியும். தடிக் கொண்டு அடிக்காம, தானா கனிய விடு. அங்கயும் இங்கயும் சுத்தித் திரிஞ்சு, பொண்டாட்டித்தான் தெய்வம்னு ஒரு நாள் காலுல வந்து விழுவான். அந்த நேரம் நீ உசுரோட இருந்தா, அப்போ முந்தானையில முடிஞ்சுக்கோ” என அசால்ட்டாக வாழ்க்கையின் தத்துவத்தை சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டார் காந்திமதி.

அவர் சொன்னது போல வாழ்ந்து பார்த்துவிடுவது என முடிவெடுத்திருந்தாள் நம் பவளமல்லி.     

“அடியே, என்னடி கனா கண்டுட்டு இருக்க?”

“அன்னைக்கு நீ சொன்னத நெனைச்சிட்டு இருக்கேன்கா!”

“அது சரி! நைட்டுல ஒன் கிட்ட மொரட்டுத்தனம் இல்லாம நடந்துக்கறானா சங்கரு?”

இவள் பேய் முழி முழிக்க,

“என்னடி முழிக்கற? ஒன்னும் நடக்கலியா இன்னும்?” எனக் கேட்டார் அவர்.

இல்லையெனத் தலையாட்டினார் இவள்.

“ஓஹோ!! சரி வா, வாங்க வேண்டியதப் பார்க்கலாம்”

தி.நகரில் மாட மாளிகை கடைகள் பல இருந்தாலும், இவர்களைப் போல எண்ணி எண்ணி செலவு செய்பவர்களுக்கென பிளாட்பார கடைகளும் இருந்தன. உள்ளாடைகள் குவித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில், வேண்டியதைப் பொறுக்கி எடுத்தாள் மல்லி.

“நாலு, நூறு ரூபாம்மா!” எனக் கடைக்காரன் சொல்ல, பணத்தை எடுக்கப் போனவள் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டார் காந்திமதி.

“ஆறு, நூறு ரூபாவுக்கு குடுப்பா”

“கட்டாதும்மா”

“அப்போ விடு! வாடி வேற கடைக்குப் போலாம்”

“ம்மா, ம்மா! வா, வா! மொத போனியே வாங்காம போனா எப்படி! சரி சரி, எடு! ஆறு, நூறு ரூபாவுக்குத் தரேன்” என இறங்கி வந்தான்.

ஆச்சரியமாகக் காந்திமதியைப் பார்த்தாள் பவளமல்லி. மெல்லிய புன்னகையுடன் அவளைப் பார்த்துக் கண்ணடித்தார் காந்திமதி. மெல்லச் சிறகை விரிக்க ஆரம்பித்திருந்த இந்தக் குருவி, கொஞ்சம் கொஞ்சமாய் வெளி உலகத்தைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தது.

ஆயிரம் ரூபாய் நமக்கெல்லாம் சர்வ சாதாரணமாக இருக்கலாம். ஆனால் கையில் சம்பளத்தை வாங்கி தனக்காகச் செலவு செய்திராத மல்லிக்கு அது பெரிய தொகையாகவே தெரிந்தது. உள்ளாடைகள், சேனிடரி நாப்கின், காந்திமதியின் பிள்ளைகளுக்கு கொஞ்சமாய் மிக்ஸர், அழகழகாய் தோடுகள், ஒரே ஒரு விலை குறைந்த செருப்பு, கணவனுக்கும் அவன் அப்பாவுக்கும் துணி குவியலில் இருந்து வாங்கிய இரண்டு லுங்கி, இரண்டு நைட்டி என வாங்கினாள். கணவன் கொடுத்த மொத்த காசுக்கும் வேட்டு வைக்காமல், இருநூறு ரூபாயை மிச்சம் வேறு பிடித்து ஜெய்சங்கரின் மனைவி எனச் சொல்லிக் கொள்ள மொத்த தகுதியும் இருக்கிறது என நிரூபித்தாள் மல்லி.

அன்று வியாபாரம் முடித்து வீட்டுக்கு வந்த கோபாலிடம்,

“நைனா!” என வந்து நின்றார் காந்திமதி.

குசு குசுவென இருவரும் பேசி முடித்ததும் வீட்டுக்கு வந்தார் கோபால். வந்தவரிடம் லுங்கியை எடுத்து நீட்டினாள் பவளமல்லி. அவருக்கு கண்கள் இரண்டும் கலங்கிப் போனது. சங்கரும் அவள் தனக்குக் கொடுத்திருந்த லுங்கியைச் சந்தோசத்துடன் திருப்பி திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“எது வேணும்னாலும் நாங்களேத்தான் வாங்கிக்கனும், நாங்களேத்தான் செஞ்சுக்கணும். எங்களுக்கு எடுத்துப் பிடிக்க இன்னி வரைக்கும் யாருமே இருந்தது இல்ல. இப்போ நீ வாங்கிக் குடுக்க சொல்ல மன்சே நெறைஞ்சுப் போச்சு கண்ணு”  

இவளுக்கும் அழுகை வரும் போல இருந்தது.

“சரி சரி, செண்டிமெண்ட புழியாம துன்ன வா நைனா” என அவள் முகம் அழுகைக்குப் போக முனைவதைப் பார்த்து பேச்சைத் திசை திருப்பினான் சங்கர்.

இருவரும் அமர, இவள் வாங்கி வந்திருந்த ரோட்டுக்கடை பிரியாணியையும், அவர்கள் வாங்கி வந்திருந்த இட்லி தோசையையும் பரிமாறினாள் மல்லி.

“நீயும் வந்து குந்து” எனக் கைப்பிடித்து மல்லியையும் அமர வைத்தான் சங்கர்.

அன்றுதான் முதன் முதலாக மூவரும் ஒன்றாய் குடும்பமாய் அமர்ந்து உணவு உண்டார்கள். சாப்பிட்டு முடித்ததும்,

“டேய் மவனே!” என அழைத்தார் கோபால்.

“இன்னா நைனா?”

“இன்னிக்கு நைட்டு என் தோஸ்த்து வீட்டுக்குப் போறேன்டா!”

“யோ கோவாலு! மாவு பெசைய உடம்பு வணங்காம எஸ்கேப் ஆகற பாத்தியா?” என இவன் கத்த, அவர் திரும்பிப் பார்க்காமல் கிளம்பி விட்டார்.   

முனகிக் கொண்டே இவன் போய் குளித்து விட்டு வந்தான். அதன் பிறகு எப்பொழுதும் போலப் பரோட்டாவுக்கு மாவு பிசைய ஆரம்பித்தான் சங்கர். அவன் பிசைவதைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் இவள். மௌனமாக நேரம் கடக்க,

“மாமா!” என அழைத்தாள் மல்லி.

“ஹ்ம்ம்!”

“எனக்கும் மாவு பிசையச் சொல்லித் தரியா?”

நிமிர்ந்து பார்த்தான் தன்னவளை. அவள் முகத்தில் கெஞ்சலைப் பார்த்து,

“கையக் கழுவிட்டு வா” எனச் சொன்னான்.

ஓடிப் போய் கையைக் கழுவி விட்டு வந்து அவன் முன்னே அமர்ந்தாள் அவள்.

“மாவுல இப்படி எண்ணெயை விட்டு, இப்படி பிசையனும்” என அவன் செய்து காட்ட அவளும் முயன்றாள்.

“அப்படி இல்லைடி!” என்றவன் எழுந்து வந்து அவள் பின்னே முட்டிப் போட்டு அமர்ந்து கொண்டு அவள் கைப்பிடித்துச் சொல்லிக் கொடுத்தான்.

இவளும் ஆர்வமாய் கற்றுக் கொண்டாள்.

“இப்படித்தான் கொஞ்சக் கொஞ்சமா எண்ணெய் விட்டு மாவ சேர்த்து பெசையனும்” எனப் பேசிக் கொண்டே சொல்லிக் கொண்டிருந்தவனின் சத்தம் மெல்ல குறைந்திருந்தது.

அவள் முதுகில் ஒட்டி, கழுத்தில் முகத்தை வைத்து, கையைப் பிடித்துச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தவனின் மூச்சுக் காற்று அனலாய் காதோரம் மோத, இவளுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது.

“என்ன மாமா?” எனக் கேட்டவளின் குரல் கிணற்றில் இருந்து வருவது போல மெலிதாக ஒலித்தது.

அவள் மேல் வந்த சுகந்தமான மணம் சங்கரைக் கிறுக்காக்கியது. தலையில் அவள் சூடி இருந்த மல்லி, கையில்லாத பனியன் போட்டிருந்தவனின் முடியடர்ந்த நெஞ்சில் உராய்ந்து அவனைப் பித்தாக்கியது.

“மல்லிம்மா”

“ஹ்ம்ம்ம்”

அவள் முதுகில் இன்னும் ஒட்டியவன், கழுத்தில் தனது முதல் முத்திரையைப் பதித்தான்.

மேனி சிலிர்த்து அடங்கியது பெண்ணுக்கு. அவள் சிலிர்ப்பு இவனைப் பைத்தியமாக்கியது.

“தேவா!” என்றவன் அடுத்த முத்தத்தை அவள் கன்னத்தில் பதித்தான்.

அப்படியே அவன் நெஞ்சோடு சாய்ந்து கொண்டாள் பவளமல்லி. மாவு கையோடு அவள் கன்னத்தைப் பற்றி தன் புறம் திருப்பி,

“தம்மாத்துண்டு இருந்துட்டு மனுஷன் உசுர பரோட்டாவ பிக்கிற மாதிரி பிச்சிப் பிச்சிப் போடறடி!” எனப் புலம்பியவன், அவள் உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டான்.

மாவும் எண்ணெய்யும் ஒட்டி இருந்த கரத்தை அவன் முடியில் விட்டு இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் இவள். சத்தமான முத்தம் இருவரையும் பித்தமாக்க, யார் கொடுத்தது யார் எடுத்தது எனத் தெரியாமல் நீண்ட நேரம் நீண்டது இதழணைப்பு. அப்படியே அவன் பின்னால் சரிய, அவன் நெஞ்சில் பஞ்சென விழுந்தாள் இவள். காமன் கணைத் தொடுக்க, பரோட்டாவுடன் அழகாய் இணைந்தது அவன் சால்னா. பக்கேட் தண்ணீரில் இன்பமாய் முங்கிப் போனது அவள் மாப்.

‘வாய் விட்டு நானொன்று

கேட்கிறேன் தாவென்று

பாய் விரித்தேனடி மானே

அங்கங்கள் பசும் தங்கங்கள்

அள்ளும் நேரம் வா….

மல்லியே சின்ன முல்லையே

எந்தன் மரிக்கொழுந்தே’

Scroll to Top