தன்னைத் தேற்றிக் கொண்டவன்,
“இப்போ ஒரு டாக்டரா பேசறேன் மிஸ் சம்பூர்ணா! உங்க தம்பி வைப் மேல நீங்க பொறாமைப் படல! அது உங்க மனதின் ஏக்கத்தோட பிரதிபலிப்பு. நமக்கு ஏன் இப்படிலாம் நடக்கலன்ற ஏக்கம்தான் பொறாமையாத் தோணுது உங்களுக்கு. அவங்க கஸ்டப்படனும்னு நீங்க நெனைக்கல, உங்க தம்பிய தூண்டி விட்டு அவங்களுக்குள்ள சிண்டு முடிஞ்சி விடனும்னு நெனைக்கல! சொல்லப் போனா, நெறைய பேருக்கு வர ஃபீலிங்தான் உங்களுக்கும் வந்திருக்கு! அதை நெனைச்சு வெக்கப்பட்டு, வேதனைப்பட்டு மனசு புழுங்கிப் போகறதே உங்களோட நல்ல மனசைக் காட்டுது! சோ இதெல்லாம் நார்மல் பொறாமைத்தான்னு நெனைச்சிக்கிட்டு ஃபிரீயா விடுங்க! ரிலாக்ஸா இருங்க! இல்ல எங்க அப்பா எனக்கு பண்ண மாதிரி, நீங்க ஃபீல் குட் ஆக அணைச்சுப் புடுச்சு ஒரு கிஸ் குடுக்கவா? ஃபாதர்லி கிஸ்?” என இவன் கேட்க இவளுக்கு சிரிப்பு வரப் பார்த்தது.
“ஃபாதர்லி கிஸ் குடுக்கற வாய்க்கு ஒரு பாயாசத்தப் போட்டுட வேண்டியதுதான்” எனச் சொன்னவள், எழுந்து நின்று அவன் முதுகில் சாத்து சாத்தேன்று சாத்தினாள்.
எருமை மாட்டில் மழை பெய்தது போல அலட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தான் இவன். அடித்து ஓய்ந்தவள்,
“இன்பூ! நீ குடுத்த வாய்ஸ் தெரப்பிய விட, இந்த அடி வெளுத்த தெரப்பி நல்லா வொர்க் அவுட் ஆகியிருக்குன்னு நெனைக்கறேன்! என்னோட ஸ்ட்ரெஸ்லாம் ஓடிப் போய்ட்டது போல இருக்கு! இப்போ பெட்டரா ஃபீல் ஆகறேன்! தேங்க்ஸ் டூ யூ” எனச் சொல்லிப் புன்னகைத்தாள்.
“எப்போ ஸ்ட்ரெஸ் ஆனாலும் கூப்டு அனுப்பு சம்பூ! வந்து அடி வாங்கிட்டுப் போறேன்!” என இவனும் சம்மதிக்க,
“நீ என்ன வடிவேலுவா, கூப்டு வச்சி கும்மி எடுக்க! வா, வா வேலைக்குப் போகலாம்” என எழுந்துக் கொண்டாள்.
அவனுடன் நடந்துக் கொண்டே,
“இன்பூ! நான் நல்லவதானே? பொறாமை பீஸ் இல்லல?” என மறுபடியும் கேட்டாள்.
“ஆமா! நீ ரொம்ப…………….. நல்லவ! பொறாமையே பொறாமைப் படற அளவுக்கு நல்லவ”
“அப்போ சரி! ரொம்ப தேங்க்ஸ் உனக்கு! உன் கூட பேசறப்போ ஸ்ட்ரேஸ் ஓடியேப் போய்டுது! உன்ன வம்பிழுத்து சண்டைப் போடும் போது மனசு சந்தோஷமாகிடுது! நீ கூட இருக்கறதே ஒரு வகையான அமைதியக் குடுக்குது இன்பூ! இந்த மாதிரிலாம் நான் யார் கிட்டயும் உணர்ந்தது இல்ல! ரொம்ப நன்றி இன்பூ எனக்கு வொர்க்கிங் பார்ட்னரா வந்ததுக்கு” என நெகிழ்ந்துப் போய் சொன்னாள் சம்பூர்ணா.
‘வோர்க்கிங் பார்ட்னரா மட்டும் இல்ல உன் இன்ப துன்பத்த பகிர்ந்துக்கற லைஃப் பார்ட்னராவும் வர ஆசைப்படறேன்!’ எனும் வார்த்தைகள் தொண்டை வரை வந்து நிற்க, சிரமப்பட்டு விழுங்கிக் கொண்டான் இன்பன்.
“அப்போ சரி! மரினா பீச்ல எனக்கு ஒரு சிலை வச்சிடு! சிலையையாச்சும் வெள்ளை கலர்ல வை”
“வெள்ளை கலர்ல சிலை வச்சா காக்கா ஆய்ப்போனா அப்படியே அப்பட்டமா தெரியும்டா! கருப்புலயே வச்சிடறேன்!” என இவள் சிரியாமல் சொல்ல,
“அம்மா தாயே! ஆணிய புடுங்க வேணா” என இவன் கையெடுத்துக் கும்பிட்டான்.
இவள் ஸ்கூட்டியில் அமர, அவளைத் தாண்டி தனது பைக் எடுக்கப் போனவனை,
“இன்பூ” என அழைத்து நிறுத்தினாள் இவள்.
என்னவென அவன் பார்க்க,
“ஆம்பளைக்கு கலர் முக்கியமில்ல! கருணையும், காரூண்யமும், கடமையுணர்ச்சியும், கண்ணியமும்தான் முக்கியம். அது உன் கிட்ட கொட்டிக் கிடக்குது! அதனாலயே என் கண்ணுக்கு நீ ரொம்ப அழகாத் தெரியற! உங்கப்பா சொன்ன மாதிரி நீ அழகு ராஜாதான்” எனச் சொன்னவள் கிளம்பிப் போய் விட்டாள்.
இவனோ மகிழ்ச்சியில் முகம் மத்தாப்பாய் மலர, நடுத்தெருவில் ஈயென இளித்தப்படி நின்றிருந்தான்.
