SC Epi 7(2)

“மருந்து பேக்ல இருக்கா ஊர்மி? முகம் ஒரு மாதிரி இருக்கே! வலிக்க ஆரம்பிச்சிருச்சா கை?” எனக் கேட்டான் விஷ்ணு.

ஆள் இருக்கிறது என அவன் சொல்லி இருந்ததால், அவனது அக்கறை இப்பொழுது கடுப்பைக் கிளப்பவில்லை ஊர்மிக்கு.

“லேசா வலிக்க ஆரம்பிச்சிருச்சு விஷ்ணு! மருந்து வச்சிருக்கேன்! சாப்பிட்டத்தும் போட்டுக்கறேன்”

“சாரி ஊர்மி! ரெஸ்ட் எடுக்க விடாம வெளிய கூட்டிட்டு வந்துட்டேன்” என நிஜமான வருத்தத்துடன் சொன்னான் இவன்.

“ரூம்ல இருந்தாலும் வலிக்கத்தான் செய்யும் விஷ்ணு! அங்க நாலு சுவத்த பார்த்தபடி இருக்கறப்ப, வலி இன்னும் அதிகமா இருக்கற மாதிரி மைண்ட் சீன போடும்! இப்போ உன் கூட வெளிய வந்து நாலு தெருவ பார்க்கறப்ப, பெருசா வலி தெரியல! விடு!” என்றவள் ஆரஞ்சு ஜூசை மெல்ல பருகினாள்.

கேர்ள்ப்ரெண்ட் இருக்கிறாள் என இவன் சொல்லியும், யார், என்ன பெயர், என்ன செய்கிறாள் என எதையும் கேட்காமல் இருப்பவளை அதிசயமாகத்தான் பார்த்தான் இவன்.

“ஊர்மி”

“என்ன?”

“என் கேர்ள்ப்ரேண்ட் பத்தி ஒன்னும் கேக்கலியே நீ? இப்படிலாம் யாராச்சும் ஒரு விஷயத்த ஷேர் பண்ணா, கிரியோசிட்டில யாரு எவருன்னு கேள்வி கேப்பாங்க! இல்லைனாலும், கேர்ட்டசிக்காகவாச்சும் அவங்கள பத்தி சொல்லுங்கன்னு கேப்பாங்க! நீ கண்டுக்காத மாதிரி இருக்கியே!”

மெலிதாய் புன்னகைத்தவள்,

“வியாட்நாமோட நம்ம நட்பு முடியப் போகுது! இதையெல்லாம் நான் தெரிஞ்சு வச்சு என்ன செய்ய போறேன் விஷ்ணு! எனிவே உன் பார்ட்னரோட சந்தோஷமா லைஃப லீட் பண்ண என்னோட வாழ்த்துகள்” என்றவளின் குரலில் நிஜமாய் அவன் சந்தோஷமாய் வாழ வேண்டும் எனும் பரிவு இருந்தது.

“அப்போ இங்கிருந்து கிளம்பிட்டா, என்னை நட்பு நீக்கம் பண்ணிடுவியா?”

“டெபினட்லி! இதுல என்ன சந்தேகம் உனக்கு?” எனச் சிரித்தாள் ஊர்மி.

அவன் அவளையே ஆழ்ந்து பார்த்திருக்க, பெருமூச்சுடன் பேச ஆரம்பித்தாள் இவள்.

“உன்னை எனக்குக் கொஞ்சமா பிடிச்சிருக்கு விஷ்ணு! ஈர்ப்பு, காதல்ங்கற கேட்டகரி பிடித்தம் இல்ல இது! இவன் கூட ப்ரெண்ட்ஷிப் வச்சிக்கிட்டா நாம நாமா இருக்கலாம் அப்படிங்கற பிடித்தம். ப்ரா கயிறு தெரியுதோ, டாப்ஸ் கொஞ்சம் கீழ இறங்கிருக்கோ, சட்டை உடம்ப பிடிச்சாப்பல இருக்கோன்னு மனச அலைபாய விடாம, நிம்மதியா பேசிப் பழகலாம்ங்கற பிடித்தம் இது! எந்த வகைப் பிடித்தமா இருந்தாலும், சில சமயம் ஃபீலிங்ஸ் நம்ம கைய மீறிப் போய்டறது உண்டு! எதுக்கு ரிஸ்க் எடுக்கனும் விஷ்ணு! இப்படியே நல்லபடி பாய் சொல்லிட்டு போய்டலாமே! அதான் உனக்கும் நல்லது, உன் கேர்ள்ப்ரேண்டுக்கும் நல்லது, எனக்கும் நல்லது” எனச் சொன்னவள், மெலிதாய் புன்னகைத்தாள்.

‘அவ ஃப்ரீயா பேசிப் பழகனும்னு, ஆள் இருக்குன்னு சொல்லி ஆப்பை வச்சிக்கிட்டியேடா ஆம்லேட் வாயா! இப்ப இல்லைன்னு சொன்னா, இல்லா நட்பு செய்ய நினைக்கறவ உன்னையே இல்லாம பண்ணிடுவா’ என எண்ணியவன், சிரமப்பட்டுப் புன்னகைத்தான்.

அவர்கள் உணவும் வந்திருக்க, இருவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள். பெரிதாய் இருந்த மீன் துண்டுகளை இவனே சின்னதாய் வெட்டி ஒற்றைக் கையால் அவள் சாப்பிடுவதற்கு ஏதுவாய் வழி செய்து கொடுத்தான். அன்றைய தினம் லைட் மியூசிக் கச்சேரி வேறு அங்கிருந்த குட்டி மேடையில் நடக்க, அதை கேட்டபடியே சாப்பிட்டார்கள் இருவரும்.

“நம்ம ஹோட்டல்ல இது போல டின்னர் டைம்ல மியூசிக் கச்சேரிலாம் ஏற்பாடு செய்வோம் விஷ்ணு! அப்போலாம் கெஸ்ட் கம்பர்டபிளா இருக்காங்களா, உணவு தட்டுப்பாடு இல்லாம இருக்கா, லிக்கர் சரியா கையாளப்படுதான்னுதான் மைண்ட்டும் உடம்பும் வேலைப் பார்க்கும். இப்ப இங்க உக்காந்து ரசிக்கற மாதிரிலாம் சாப்பிட்டப்படியே இசையை ரசிக்கற கொடுப்பிணை இருந்தது இல்ல! தேங்க்ஸ் விஷ்ணு!” என்றவளின் பார்வை கிட்டார் வாசித்தபடியே பாடும் பெண் மீது இருந்தது.

இவனது பார்வையோ கனிந்து கிடந்த ஊர்மிளாவின் முகத்தில்தான் நிலைப் பெற்று நின்றிருந்தது. அவளைப் பார்க்கப் பார்க்க, மனதின் உள்ளே என்னென்னவோ செய்தது! இத்தனை வருட சிங்கிள் ஸ்டேட்டசை கம்மிட்டடாக மாற்ற இவள் என் வாழ்க்கையில் வேண்டும் என இதயம் போர் முழக்கம் இட்டது! ஆளில்லாத இவன் கட்டிலின் இடப் பக்கத்தை உயிர்ப்பிக்க இவள் வேண்டும் என உடல் அடம் பிடித்தது! சட்டென எழுந்த இந்த உணர்வுகளால் திக்குமுக்காடிப் போனான் விஷ்ணு!

‘நோ விஷ்ணு! மத்தவங்கள பெரும்பாடு பட்டு நீ சரிக்கட்டுனாலும், உன் ஆசைக்கு முதல் எதிரியே உன் முன்னாடி உக்காந்து இருக்கற நீ ஆசைப்படறவத்தான்! இட் வில் நாட் ஹேப்பன்! விட்டிரு’ என மனதை அடக்க முயற்சித்தவன், ஆரஞ்சு ஜூசை ஒரே மடக்கில் உள்ளே இறக்கினான்.

அதன் பிறகு அமைதியாய் போனது அவர்கள் உணவு நேரம். அவள் இசையில் கவனமாய் இருக்க, இவனோ மனதை எப்படி கட்டுப்பாட்டில் வைப்பது எனும் கேள்வியில் தொலைந்து போய் அமைதியாய் இருந்தான்,

வெய்ட்டர் பில் கொண்டு வர, பட்டெனப் பிடுங்கிக் கொண்டாள் இவள்.

“நான்தான் கட்டுவேன் விஷ்ணு! நீயே செலவு பண்ணிட்டு இருக்க! மெடிக்கல் பில் கூட வாங்கிக்கல! ரெண்டு பேருமே சாதாரண எம்ப்ளாயி! நீ மட்டுமே செலவு பண்ணா, மாச கடைசில என்ன பண்ணுவ!”

“அதெல்லாம் சமாளிப்பேன் ஊர்மி நான்”

“நோ! எனக்குத்தான் யாரும் இல்ல! உனக்கு பேமிலி, கேர்ள்ப்ரேண்ட்னு சொந்தங்கள் இருக்காங்க! செலவுகளும் இருக்கும்! இது போல ப்ரெண்ட்ஸ், புடலங்காய்னு கைல உள்ளத கரைச்சிடாதே! சேர்த்து வை! புரியுதா?” என வகுப்பெடுத்தவள், அவளேத்தான் பில் செட்டில் செய்தாள்.

இவனும் மல்லுக் கட்டாமல் விட்டு விட்டான்.

“மாத்திரை போடு ஊர்மி” என்றவன், அவள் பேக்கில் இருந்து கவரை எடுக்க, வாங்கிப் பிரித்துக் கொடுத்தான். அவள் மருந்தை உட் கொண்ட பிறகே ரெஸ்டாரண்டை விட்டு வெளியேறினார்கள்.

அவள் சலசலத்தபடி வர, இப்பொழுது இவன் அமைதியாக வந்தான்.

ஒரு தெருக்குள் இவர்கள் நடந்து போக, ஓடிப் பிடித்து விளையாடியபடி வந்த டீனேஜ் பையன்களில் ஒருவன், தடுமாறி இவளை இடிப்பது போல வர, சட்டென இழுந்த்து அவள் கை அடிபடாதவாறு அணைத்துக் கொண்டான் விஷ்ணு.

அந்தப் பையன்கள் பல சாரிகள் சொல்லிக் கிளம்பி விட்டாலும், இவளை விடாமல் அவனது நெஞ்சுக்குள்ளேயே புதைத்து வைத்திருந்தான் விஷ்ணு. அவள் கூந்தலில் இருந்து வந்த ஸ்ட்ராபெரி வாசம், இவன் சித்தத்தைச் சிதைத்துப் போட்டது! விடச் சொல்லி மூளை வகுப்பெடுத்தாலும், மனம் மசிவேனா என வம்பு செய்தது.

“விஷ்ணு!”

“ஹ்ம்ம்!”

“விடு!”

“ஹ்ம்ம்!”

“விஷ்ணு!!!!!” என ஊர்மியின் பொறுமை இழந்த குரலில் சட்டென விலகினான் இவன்.

“எங்க மறுபடி கைல அடிப்பட்டுடுமோன்னு கொஞ்சம் டென்ஸ்ட் ஆகிட்டேன் ஊர்மி! திரும்பவும் உனக்கு ஏதாச்சும் ஆகியிருந்தா மேனேஜ்மேண்ட் கிட்ட நான்தானே பதில் சொல்லனும்! அதான் பயத்துல விடாம புடிச்சிட்டு இருந்துட்டேன்! சாரி”

“பரவால்ல விஷ்ணு! கிளம்பலாம்” என்றவளின் குரலில் ஒதுக்கம் வந்திருந்தது.

சில நாட்கள் கழித்து ஏர்ப்போட்டில் வைத்து,

“ஐ திங்க், ஐம் இன் லவ் வித் யூ ஊர்மிளா!” என்றிருந்தான் விஷ்ணு!

(சேர்ந்தாடுவாளா???)

Scroll to Top