SC Epi 9(2)

இவள் துக்கம் அவனைத் தாக்குகிறது எனப் புரிந்து கொண்டவள், பெரிய மூச்சை இழுத்து விட்டுத் தன்னைச் சமன் செய்ய முயன்றாள்.

“இங்க பாரு ஊர்மி! என் கண்ணைப் பாரு”

கலங்கியக் கண்களை மீண்டும் துடைத்தவள், போன் திரையில் தெரிந்தவனை ஏறிட்டு நோக்கினாள்.

“எதையும் காம்ப்ளிகேட் பண்ணிக்க வேணாம்! சரியா? எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு! உனக்கு என்னைப் பிடிச்சிருக்கு! இது போதும். இப்ப இருந்து எல்லாத்தையும் புதுசா தொடங்கலாம்! எனக்கு உன்னோட ஒரு ப்யூச்சர்தான் வேணும் ஊர்மி! பாஸ்ட் பத்தி எனக்கு எந்த விதக் கவலையும் இல்ல! அண்ட் சாரி ஊர்மி! இனி உன்னை லவ் சொல்லச் சொல்லி வற்புறுத்த மாட்டேன்! டைம் எடுத்துக்கோ! என் கூட பழகிப் பாரு! உனக்கே இது லவ்தான் போலன்னு கன்பியூசன் போய், இது லவ்தான்னு ஸ்திரமா தோணும் போது ஐ லவ் யூ விஷ்ணுன்னு சொல்லு! அந்த நாளுக்காக நான் வெய்ட் பண்ணிட்டே இருப்பேன்! அது வரை லெட்ஸ் ரோஸ்ட் பீனாட் ஊர்மி”

“ரோஸ்ட் பீனாட்டா?”

“ஆமா! கடலை வறுப்போம் வா கண்ணே” என இவன் நமுட்டுச் சிரிப்புடன் சொல்ல, அப்படி ஒரு சிரிப்புப் பெண்ணுக்கு!

கலங்கிக் கிடந்த முகம் மீண்டும் புன்னகையில் ஒளிர, அப்பொழுதுதான் இவனுக்கு நிம்மதியே வந்தது.

“ஊர்மி!”

“ஹ்ம்ம் விஷ்ணு!”

“உன் ரூம சுத்தி ஒரு டூர் குடு பார்க்கலாம்”

“எதுக்கு?”

“வேலை செம்ம டைட் ஊர்மி! அந்த டைம்ல அடிக்கடி என்னை ரிலாக்ஸ் பண்ணிக்க உன்னோட நினைவுகள் வேணும் இல்லையா! என் ஊர்மி இந்த இடத்துல நின்னு தலை சீவிட்டு இருப்பா, இந்தக் கட்டில்ல படுத்து தூங்கிட்டு இருப்பான்னு கற்பனையா நெனைச்சிக்காம, நெஜத்த நெனைச்சிப்பேன்ல! அதுக்குத்தான்!” எனப் பேசி அவள் மனநிலையை மாற்ற முயன்றான்.

“நாம வியாட்னாம்ல நெறய மெமரி சேர்த்து வச்சிருக்கோம்! அதை நெனைச்சிப் பார்த்துக்கோ போதும்”

“என்ன மெமரி? என்னை முறைமாமனா நெனைச்சு மொறைச்சிட்டே சுத்தனதா இல்ல அத்தைப் பையனா நெனைச்சு அடிக்கவா வெளுக்கவான்னு திரிஞ்சதா? எது சூப்பர் மெமரி?” என வம்பிழுத்தான் விஷ்ணு.

“போதும் போதும்! என்னமோ நல்லவன் மாதிரி ஆக்டிங் விடாதே! என்னை ஓட விட்டு எஞ்சாய் பண்ண சாடிஸ்ட்தானே நீ! உன்னையும் ஒரு நாள் அப்படி ஓட விடல, என் பேரு ஊர்மிளா இல்ல”

“தனியாலாம் ஓட விடாதே தாயே! நீயும் கூட வா, சேர்ந்தே ஓடிப் போலாம்”

இருவரும் அதையும் இதையும் பேசிக் கொண்டே, தூங்கும் எண்ணமே இல்லாமல் நேரத்தைக் கடத்தினார்கள். அவள் தூங்கி வழிவதைப் பார்த்தவன் புன்னகையுடன்,

“போய் தூங்கு ஊர்மி! நாளைக்குப் பேசலாம்” என்றான்.

“குட் நைட் விஷ்ணு!”

“குட் நைட் ஊர்மி! ஐ லவ் யூ”

“ஐ..” எனச் சொல்ல வந்தவளைப் பார்த்து மெலிதாக வேண்டாமெனத் தலை அசைத்தான் இவன்.

“டேக் யுவர் டைம்! நான் வேய்ட் செய்றேன்”

புன்னகையுடன் தலை ஆட்டியவள், அழைப்பை நிறுத்தி விட்டுத் தூங்கப் போனாள்.

வாழ்க்கை வண்ணமயமாகப் போக ஆரம்பித்தது ஊர்மிளாவுக்கு. பகலில் இருவருமே தத்தம் கடமைகளில் மூழ்கி இருப்பார்கள். அவ்வப்பொழுது சாப்பிட்டாயா, என்ன செய்கிறாய் என்பது போல மேசேஜ்கள் பரிமாறிக் கொள்வார்கள்.

இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் மூன்றரை மணி நேர வித்தியாசம் இருக்க, இவளுக்கு இரவு எட்டு மணி போல அவனே அழைப்பெடுப்பான். அப்பொழுது ஜப்பானில் இரவு பதினொன்று முப்பது ஆகியிருக்கும். சில நேரங்களில் அறையில் இருந்தபடி பேசுவாள் ஊர்மி. சில நேரங்களில் அவர்கள் ஹோட்டல் லானில் எங்காவது ஒரு மூலையில் அமர்ந்தபடி பேசுவாள். இருவருக்கும் பேசிக் கொள்ளப் பல விஷயங்கள் இருந்தன. ஜப்பானின் மீசோ சூப்பில் இருந்து உதய்ப்பூரின் ப்யாஸ் கச்சோரி(பலகாரம்) வரை, ஹேரி பாட்டரின் புத்தகத்தில் இருந்து ஆறிப் போன ஆமை வடை வரை சலிக்காமல் பேசினார்கள். இருவரும் விரும்பிப் பேசும் விஷயம் பாடல்களைப் பற்றியதாய்தான் இருக்கும். பாடல்களின் இசையை இவன் சிலாகித்துப் பேச, அதன் வரிகளை இவள் பாராட்டிப் பேசுவாள். இவள் இரசனையை அவனும், அவன் இரசனையை இவளும் உள் வாங்கிக் கொண்டார்கள்.  

சில சமயங்களில் பேச்சு எக்குத்தப்பாய் போவதும் உண்டு.

“ஊர்மி!”

“சொல்லு விஷ்ணு!”

“நிலாவ பார்க்கறப்ப உனக்கு என்ன தோணும்?”

“அந்தக் காலத்துல இருந்து இந்தக் காலம் வரை நிலால உக்காந்து ஆயா வடை சுட்டுப் போட்டுட்டே இருக்காங்களே, அவங்களுக்கு டயர்ட் ஆகாதான்னு தோணும் விஷ்ணு!”

“வெளங்கிடும்!” என அவன் முணுமுணுப்பாய் சொல்ல, இவள் வெடித்துச் சிரித்தாள்.

“நீதான் சொல்லேன்! நிலாவ பார்க்கறப்ப உனக்கு என்ன தோணும்?” எனச் சிரிப்பினூடே கேட்டாள் இவள்.

“மொட்டை மாடில நின்னு, நிலா வெளிச்சத்துல என் தேவதையோட செவ்வாய்ல இருந்து எப்போ தேனெடுக்கறதுன்னு தோணும்”

“விஷ்ணு!!!!”

“அச்சோ சிணுங்காதடி!! உடனே ப்ளைட் எடுத்து அங்க வந்திருவேன்”

“போனை வை நீ!”

“சரி! சரி! வழியறத கண்ட்ரோல் பண்ணிக்கறேன்! நீ போனை வச்சிடாதே!”

இருவரின் இரவுகளும் ஸ்வீட் நத்திங்ஸ்சில் சிலுசிலுப்பாய் கடந்தன. இப்படியே இரு வாரங்கள் ஓடி இருந்தன. இரண்டாவது வாரத்தில் இருந்து ஊர்மிளாவுக்கு அதிக வேலை இருந்ததால் அவளால் இவனிடம் சரியாகப் பேச முடியாமல் போனது. இவன் கால் செய்தால் கூட ‘பிசி விஷ்ணு’ என மேசேஜ் வந்தது. இவனுக்கும் தலைக்கு மேல் வேலை இருக்க, அவள் நிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது. திடீரென ஒரு நாள் அவள் போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பயந்துதான் போனான் இவன். சில பல இடங்களுக்கு அழைத்துப் பேசியவன், கடைசியாய் ஒரு போன் செய்தான்.

அழைப்பு ஏற்கப்பட்டதும்,

“ஹலோ விஷ்வா!” என்றான் இவன்.

“யோ ப்ரோ! வாட்ஸ் அப்?”

“ஐ நீட் யுவர் ஹெல்ப்”

“என் அண்ணாவுக்கு இல்லாத ஹெல்ப்பா!! கமான் டெல் மீ!!!”

(சேர்ந்தாடுவாளா???)

Scroll to Top