அத்தியாயம் 11
“சில நாட்களா ஓவரா கருத்து சொல்லி உங்கள எல்லாம் காண்டாக்கிட்டேன் போல! பொல பொலன்னு ஃபோலோவர் ரேட்டிங் பொசுக்குன்னு இறங்கிடுச்சு! சோ சேட்! இன்னிக்கு கருத்து சொல்லாம நீங்க குஜாலாகற மாதிரி கலகலன்னு சொல்லவா? ரெடியா மக்களே!!! ஓன், டூ, த்ரீ!!!ஸ்டார்ட்! கலகல, கலகல, கலகல, கலகல! இவ்ளோ கலகல போதுமா, இல்ல இன்னும் கொஞ்சம் கலகல வேணுமா? ஹாஹாஹா!! ஓடிடுடா கைப்புள்ள!!!!”
(பாட்காஸ்ட் பை பரதேசி!!!)
“அண்ணா! பீ கால்ம்! ஒன்னும் ஆகியிருக்காது அண்ணிக்கு! ஷீ உட் பி சேஃப்” எனச் சமாதானமாகச் சொன்னான் விஷ்வா.
ஊர்மிளா வேலைக்காக நேபாளம் சென்றிருக்கிறாள் என இவர்கள் நியமித்திருந்த துப்பறிவாளர்கள் சொன்னதிலிருந்து விஷ்ணு ஒரு நிலையில் இல்லை.
“என்னைப் பத்தி, என்னோட பின்புலம் பத்தி தெரிஞ்சுத்தான் போய்ட்டா போல! பணக்காரன் ஒருத்தன் ஃபன்னுக்காக அவ கூட விளையாடி பார்க்கிறான்னு நெனைச்சிட்டா போலடா! நான் சொல்லிருக்கனும்! என் காதல காப்பாத்தனும்னு நெனைச்சேனே தவிர, அவ மனசு என்ன பாடுபடும்னு நெனைச்சிப் பார்க்கல! எவ்ளோ பெரிய சுயநலக்காரன்டா நானு! என்னை வேணாம்னு சொல்லி பிரிஞ்சுட்டா கூட எனக்கு ஓகேதான்டா விஷ்வா! அவ உசுரோட எங்கயாச்சும் நிம்மதியா இருந்தா போதும்டா! காதல்னு சொல்லி அவளுக்கு எமனா மாறிட்டேனே! அவ பாட்டுக்கு அவ உண்டு அவ வேலை உண்டுன்னு இருந்திருப்பா! என் பாசம் அவளுக்கு பாசக்கயிறா மாறிடுச்சே!” எனக் கண் கலங்க சொன்னவனைக் கட்டிக் கொண்டான் விஷ்வா.
அண்ணன் இப்படி கலங்கிப் பார்த்ததில்லை இவன். எந்த விஷயமாக இருந்தாலும் ஜஸ்ட் லைக் தட் எடுத்துக் கொள்பவன், அலட்டிக் கொள்ளாமல் காரியங்களை முடித்து விடுவான். அவன்தான் இவனுக்கு முன்னோடி! சிறு வயதில் இருந்தே, அவனைப் பார்த்துத்தான் இவன் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டான். அப்படிப்பட்டன் கலங்கி நின்றதை தாங்க முடியவில்லை விஷ்வாவால்!
‘டேம்ன் திஸ் லவ்!!’ என உள்ளுக்குள் காதலைச் சாடியவன், அண்ணனுக்குத் தோள் கொடுக்கத் தயங்கவில்லை.
ஜப்பானுக்குப் போக வேண்டியவன், இப்பொழுது விஷ்ணுவோடு நேபாளத்தை நோக்கிப் போய் கொண்டிருந்தான். ப்ளைட்டில் இருந்து இறங்கியவர்கள், ஏற்கனவே இவர்கள் அமர்த்தி இருந்த காரில் கடைசியாக ஊர்மிளா இருப்பதாக அறியப்பட்ட நுவாக்கோட் எனும் இடத்துக்குப் பயணித்தார்கள். அங்குதான் வெள்ளம் தனது கோரத்தாண்டவத்தை ஆடி முடித்திருந்தது. இப்பொழுது வெள்ளம் வற்றி விட்டிருக்க, காணாமல் பேயிருந்தவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டிருந்தது.
நேபாள அரசு வெளிநாடுகளின் உதவியை ஏற்காமல் இருக்க, மீட்புப் பணி மெதுவாகவே நடந்தது. இறந்திருந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்க, விஷ்வாவுக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை ஊர்மிளா பிழைத்திருப்பாள் என. அவனது அவநம்பிக்கையைச் சொல்லி அண்ணன்காரனை இன்னும் துக்கப்படுத்த வேண்டாமே எனப் பொய்யாய் நம்பிக்கைகள் கொடுத்து வந்தான். காப்பாற்றப்பட்டவர்களின் லிஸ்டில் ஊர்மிளாவின் பெயர் இருக்கவில்லை.
பாதி வழியிலேயே காரை நிறுத்தி விட்டார் ட்ரைவர்.
“சார்! இதுக்கு மேல கார் போக முடியாது! ரோடு சேறும் சகதியுமா இருக்கு! இனி நடந்துதான் அந்த ஊருக்குப் போகனும்”(இதற்கு மேல் நடக்கும் சம்பவங்கள் கற்பனை கலந்துதான் வருகின்றன. நிஜத்தில் இப்படித்தான் இருந்திருக்குமா எனும் எனது சிந்தனைதான் இனி கற்பனையாய் இங்கு விரிகிறது!)
அண்ணன், தம்பி இருவரும் தங்களது பேக்கை முதுகில் மாட்டிக் கொண்டுக் காரில் இருந்து இறங்கினார்கள். விஷ்ணுவுக்கு நெஞ்சம் டொம்டொமென மத்தளம் கொட்டியது! உடல் நடுங்கியது! தன்னைச் சுற்றிலும் தரையைப் போர்த்தி இருக்கும் சகதியைப் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் உதறியது. தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பதற்கேற்ப விஷ்வாவின் கையை இறுக்கப் பற்றிக் கொண்டான். ஊர்மியின் முகம் மனக்கண் முன் வர, பெரிய மூச்சை எடுத்து வெளியே விட்டவன்,
“லெட்ஸ் கோ விஷ்வா” என்றான்.
இருவரும் கால்கள் புதைய, ஒருத்தரின் கை பலத்தில் மற்றொருவர் திடம் கண்டு நடக்க ஆரம்பித்தார்கள். ஊரின் எல்லையை அடையும் நேரம் கூச்சலும், கூப்பாடும் இவர்கள் காதை வந்தடைந்தது. காற்றில் கூடப் பிணவாடை வீசுவது போலிருந்தது. நியூஸ் சேனல் காட்டிய வீடியோக்களில் இப்படித்தான் இருக்கும் அவ்விடம் என ஏற்கனவே ஓர் அனுமானம் இருந்தது இருவருக்கும். ஆனாலும் நேரில் காணும் போது, கண்கள் குளம் கட்டிக் கொண்டன!
“ஐயோ விஷ்வா!” என மடங்கி அமர்ந்து விட்டான் விஷ்ணு!
அண்ணனை வயிற்றோடு சேர்த்துக் கட்டிக் கொண்டான் விஷ்வா. அவனுக்குமே கண்கள் நீரைப் பொழிந்தன. சேறும் சகதியுமாம் உடைந்து பாதியாய் இருந்த கட்டிடங்கள், ஓடி ஆடி இடிபாடுகளுக்குள் மீட்புப் பணியை மேற்கொண்டிருந்த இராணுவ வீரர்கள், அவர்களுக்கு உதவிக் கொண்டிருந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஒரு பக்கமாய் குமித்து வைக்கப்பட்டிருந்த மனித உடல்கள், அடிப்பட்டு இரத்தம் கசிய அங்கங்கு அமர்ந்திருந்த இடிபாடுகளுக்குள் சிக்கி மீட்கப்பட்ட மக்கள், அவர்களுக்கு சிகிச்சைப் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவக் குழுக்கள் என ஒரே அமளிதுமளியாய் இருந்தது அவ்விடம்.
விஷ்ணு வெலவெலத்துப் போய் அமர்ந்திருந்தது சில விநாடிகள்தான்! அதன்பின் சட்டென எழுந்து குமித்து வைக்கப்பட்டிருந்த பிணங்களை நோக்கி ஓடினான். சகதி வழுக்கி விட, கீழே மேலே விழுந்து எழுந்து மீண்டும் ஓடினான். அண்ணம் பின்னாடியே தலைத் தெறிக்க ஓடி வந்தான் விஷ்வா!
வாழும் போதுதான் ஜாதி, மதம், பணக்காரன், ஏழை என்பதெல்லாம். இது போல பேரிடர்களில் கூட்டமாய் இறக்கும் போது எல்லோருமே வெறும் பிணங்கள்தான்! எல்லோரையும் ஒன்றாய்தான் குமித்துப் போட்டிருப்பார்கள். இவன் மலேசியன், இவன் இந்தியன், இவன் நேபாளி என்பது எல்லாம் போய், இது பிணம் என்றாகி விடும்! அப்படித்தான் மனித உடல்கள் எல்லாம் அங்கே குமித்து வைக்கப்பட்டிருந்தன! சில உடல் பாகங்கள் காணாமல் போயிருக்க, சில முகங்கள் சேதமடைந்திருக்க, சேற்றில் முங்கிக் குளித்திருந்தன உடல்கள் எல்லாம். ஓடிப் போய் ஒவ்வொரு உடலின் முகத்தில் இருந்த சேற்றையும் கை கொண்டு துடைத்து விட்டு,
“ஊர்மி! ஊர்மி!” எனக் கதறிக் கொண்டே அடுத்தடுத்த உடல்களை சோதித்துக் கொண்டிருந்த விஷ்ணுவைப் போலிஸ்காரர்கள் பிடித்துத் துரமாய் தள்ளி அடி வெளுத்து விட்டார்கள்.
அவர்களைத் தடுத்தபடி, ஆங்கிலத்தில் தங்கள் நிலையை விஷ்வா விளக்கிக் கொண்டிருக்க, அது அவர்கள் காதில் விழுந்த மாதிரியே இல்லை. விஷ்ணுவும், விஷ்வாவும் யாரோ அந்நியர்கள்தானே அங்கே!
அந்த நேரம்,
“விடுங்க அவங்கள!” எனும் நேபாள மொழியில் ஒலித்த கடுங்குரலில் அடிப்பதை நிறுத்தினார்கள் போலீஸ்காரர்கள்.
அவர்களிடம் பேசி விட்டு வந்த அந்த மனிதர் இவர்களை நெருங்கி,
“உங்க அப்பா அனுப்பி விட்டாரு என்னை! என்னோடு சேர்ந்து அவர் அனுப்பிய பெரிய குரூப்பே வந்திருக்கு மீட்புப் பணிக்கு! ஒரு ஓரமா உக்காருங்க ரெண்டு பேரும்” என்றார் வாட்டசாட்டமாக இருந்த அந்த மனிதர்.
போலீஸ் அடித்த அடியில் கன்னத்திலும், கைகளிலும் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது விஷ்ணுவுக்கு! அதோடே எழுந்து நின்று கொண்டான் அவன். உடல்கள் கிடந்த இடத்தை நிராசையாக நோக்கியவன், அவன் முன் நின்றிருந்தவரைப் பார்த்து,
“நானும் ஹெல்ப்புக்கு வரேன்” என்றான்.
“யூ ஆர் ப்ளீடிங்! அவங்க பாத்துப்பாங்கண்ணா” என்றான் விஷ்வா.
மனிதக் குவியலை நோக்கிக் கை காட்டியவன்,
“அதுகுள்ள உன் அண்ணி இருக்கலாம்! இல்லாமலும் போகலாம்! மனசு அங்க போய் நின்னு தேடுன்னு சொல்லுது! அறிவு, இன்னும் பலர் உசுரோட கட்டிடத்துக்குள்ள புதைஞ்சு கிடக்காங்க! அவங்க வாழ வழி செய்னு சொல்லுது! எத்தனையோ காதலனோட காதலிகள், அம்மாவோட பிள்ளைகள், மனைவியோட கணவன்கள் அங்க உயிருக்குப் போராடிட்டு இருக்காங்க! அவங்களுக்கு பண்ற ஹெல்ப் ஒன்னு உன் அண்ணிய உயிரோட வச்சிருக்கும்! இல்லையா அவ ஆத்மாவ நல்லபடி வழி அனுப்பி வைக்கும்! கம் விஷ்வா!” என்றவன் மீட்புப் படையுடன் இணைந்து கொண்டான்.
வாழ்நாளில் இது போன்ற கோரத்தைப் பார்த்ததில்லை விஷ்ணு! அவனறிந்த கஷ்டம் என்பது விழித்திருந்து பரிட்சைக்கு படித்தது மட்டும்தான். கட்டிடங்களுக்கு கீழே இருந்து வந்த அவலக் குரல்கள், அங்கிங்கு சிக்கிக் கிடந்த நாய், பூனைப் போன்ற உயிரினங்கள் என பார்க்கும் விஷயம் எல்லாம் அவனது மனதை குத்திக் கிழித்தன. ஒரு பக்கம் ஊர்மிளாவின் எண்ணங்கள் வேறு!
“ப்ளீஸ் ஊர்மி! ப்ளீஸ் பீ சேஃப்! எங்கயாச்சும் பிழைச்சுக் கிட! நீ எப்படி கிடைச்சாலும், தங்கமா உன்னைத் தாங்கிப்பேன்! எனக்காக உசுரோட மட்டும் இரு! ப்ளீஸ்! ப்ளீஸ்!” என இறைஞ்சிக் கொண்டே, தேடல் பணிகளில் தோள் கொடுத்தான்.
காயம் பட்டக் கைகளில் சேறு பட்டு எரிந்தது! கன்னம் விண் விண்ணென வலித்தது! எந்த உடல் கஷ்டங்களும் அவனது பணியைத் தடுக்கவில்லை! காப்பற்றப் பட்ட ஜீவன்களுக்கு உயிர் இருந்தால் மகிழ்ந்து, உயிர் போயிருந்தால் கண்ணீர் விட்டு, உடலோடு மனதும் ஓய்ந்து போனது இவனுக்கு. இரவாகி இருக்க, தேடல் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன! லேசாய் மழை வேறு தூரல் போட ஆரம்பித்திருந்தது! மறுபடி வெள்ளம் வந்து விடுமோ எனும் பயம் அங்கிருந்தவர்களின் மனதில் வியாபித்து நின்றது!
“கிடைச்ச உடம்பெல்லாம் சேத்துல ஊறி சிதிலமடைஞ்சிருச்சாம்! டி.என்.ஏக்கு சாம்பிள் எடுத்துட்டு, எல்லாரையும் ஒரே குழில போட்டு புதைக்கப் போறாங்களாம் நேபாள அரசு! பேசிக்கறாங்க!” என்றான் விஷ்வா.
தலையைக் கீழே குனிந்து கொண்ட விஷ்ணுவின் கண்களில் இருந்து கண்ணீர் விடாமல் வழிந்தது!
“மனுஷ வாழ்க்கை அவ்ளோதான் இல்லடா! இதுக்கா போட்டி, பொறாமை, குடும்பத்தக் கூட பார்க்க முடியாம கடும் உழைப்புன்னு நாம சுத்திட்டு இருக்கோம்! தாங்க முடியலடா! பாதிக்கும் பாதி பேர் கடவுள தரிசிக்க வந்தவங்கடா! என்னடா பாவம் பண்ணாங்க அவங்களாம்? அவங்க பார்க்க வந்த கடவுள் ஏன்டா அவங்கள காப்பாத்தல? ஏன்? ஏன்? ஏன்?” எனக் கேட்டுக் கதறிய அண்ணனின் தோளை இறுக்கிக் கொண்டான் விஷ்வா!
“காதல் உயிர் குடுக்கும்னு சொல்வாங்களே! என் காதல் மட்டும் ஏன்டா எனக்கு மரணப் பயத்தக் காட்டுது? ஊர்மி வேணும் விஷ்வா! வேணும்! என்னைக் குற்ற உணர்ச்சில தவிக்க விட்டு எங்கடா போனா? ஒரு தடவை போன்ல, என்னைத் தேடி உன்னை ஓட விடுவேன்னு சொன்னாடா! சொன்னதை அப்படியே செஞ்சி காட்டிட்டாடா! முதல் தடவை அவள தொலைச்சப்ப, பெருசா ஒன்னும் தெரிஞ்சுக்கலடா! இப்போ இருக்காளா, இல்லையான்னு தெரியாம தொலைச்சிட்டு நிக்கற இந்த நிமிடம், நரக வேதனையா இருக்குடா! ஓ காட்!!!!”
அந்த நேரம் விஷ்ணுவின் அலைப்பேசி ஒலி எழுப்பியது! அதை கூட எடுத்துப் பேசத் திராணி இல்லாமல் அமர்ந்திருந்தான் அவன். அண்ணனின் போனை எடுத்துப் பார்த்து, புதிதாய் ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வருவதை கண்டு, அட்டேண்ட் செய்தான் விஷ்வா!
“ஹலோ!! இஸ் திஸ் மிஸ்டர் விஷ்ணு?”
(சேர்ந்தாடுவாளா???)
(அதுக்கு மேல எழுத முடியல என்னால! மறுபடி ப்ரூப் பார்க்கக் கூட படிக்க முடியல! தொண்டை அடைச்சிக்கிது! மலேசியாவில இருந்து அங்க டூர் போனவங்க பலரோட உடம்பு இன்னும் கூட கிடைக்கல! இந்தியால இருந்து போனவங்களும் கூட அந்த லிஸ்ட்ல இருக்கலாம்! நமக்கெல்லாம் இது வெறும் நியூஸ்! ஆனா பாதிக்கப்பட்டவங்களுக்கு எப்படி இருக்கும்!!! இருக்காங்களா இல்லையான்னு அந்த சொந்தங்கள் படும் அவஸ்த்தை எழுத்தில் வடிக்க முடியாதது! இந்த எபிய நேபாள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டக் குடும்பத்தினருக்கு சமர்ப்பிக்கிறேன்)
