அத்தியாயம் 8
“ரீல்ஸ் போடுங்க! எவ்ளோ வேணும்னா எடுத்துப் போடுங்க! உங்க கேமரா, உங்க நெட்டு, உங்க டைமு, உங்க இஷ்டம்! அதுக்குன்னு ஒரு லிமிட் இல்லையாங்க? பார்க்கற நாங்க பாவம் இல்லையாங்க? சைட்டடிச்சு, பொண்ணுப் பார்க்கப் போய், கல்யாணம் கட்டி, மொத ராத்திரிக்கு ரூமுக்குள்ள பால் சொம்ப எடுத்துட்டு போய், ப்ரேண்ட்ஸ் என் வைஃப்பூ கன்சீவ் ஆகிட்டா ப்ரேண்ட்ஸ்! தேங்கஸ் டூ யூ ஆல்னு (நாங்க என்னடா பண்ணோம்????) அலப்பறையக் கூட்டி, வளைக்காப்பு பண்ணி, புள்ளைய பெத்து, அதுக்குப் பேர வச்சி, ஒரு வயசு கொண்டாடி, ஸ்கூலுக்கு அனுப்பின்னு எங்கள மூச்சு முட்ட வைக்கறீங்களேடா! அப்பாடி பாப்பா ஸ்கூலுக்கு போய்டுச்சுடான்னு நாங்க நிம்மதி பெருமூச்சு விட்ட அடுத்த நொடி, கைஸ், என் வைஃப் ரெண்டாவது பேபிக்கு ப்ரெக்னெண்ட்டா இருக்கான்னு மீண்டும் அடுத்த ரவுண்ட ஆரம்பிக்கறீங்க!!!! இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு???”
(பாட்காஸ்ட் பை பரதேசி!!!)
கிளினிக்கில் இருந்து வெளியே வந்து நின்றாள் ஊர்மிளா. கையில் போட்டிருந்த ஊஞ்சல் கட்டைப் பிரித்திருந்தார்கள். ஓரளவுக்குக் கையையும் விரல்களையும் இவளால் அசைக்க முடிந்தது. வலி இருக்கத்தான் செய்தது! ஆனாலும் கை செயல்படுகிறது என்பதே வலியை மறக்கடிக்கக் கூடியதாக இருந்தது.
“இனிமே நார்மலா நீங்க செய்யற வேலைகள பார்க்கலாம்! ஆனாலும் கைக்கு ரொம்ப அழுத்தம் குடுக்கக் கூடாது! நான் சொல்லிக் குடுக்கற பயிற்சிகள தினமும் செய்ங்க! இந்தியாக்கு போனதும், இன்னொரு டாக்டர்ட்ட ஃபோலோ அப் செஞ்சுக்கோங்க! எஞ்சாய் ரெஸ்ட் ஆஃப் த ட்ரீப்” எனச் சொல்லி புன்னகையுடன் இவளை அனுப்பி வைத்திருந்தார் டாக்டர்.
பணத்தைச் செலுத்தி விட்டு வெளியே வந்து மற்றக் கட்டிடங்களைப் பார்த்தபடி இருந்தவளின் நினைவில் வந்து நின்றான் விஷ்ணு. டாக்டரைப் பார்க்க இவளுடன் வருவதாகச் சொல்லி இருந்தான் அவன். கான்பரன்ஸ் ஹாலில் அவன் லாப்டாப்பில் ஏதோ ஆன்லைன் மீட்டிங்கில் இருந்த போது தனியாகவே கேப் எடுத்து வந்து விட்டிருந்தாள் ஊர்மி. வேலையில் இருப்பவனைத் தொல்லைச் செய்யப் பிடிக்கவில்லை. அதோடு தனிமைத் தேவைப்பட்டது பெண்ணுக்கு! அவன் முகம் பார்க்காமல் சிந்திக்க வேண்டியிருந்தது.
கிளினிக்கைத் தள்ளி இருந்த ஒரு கஃபே கண்ணைக் கவர, அங்கே போய் அமர்ந்தாள் ஊர்மிளா. ப்ளூபெரி சீஸ் கேக் ஒன்றும், மாட்ச்சா லாட்டே(Matcha Latte) ஒன்றும் ஆர்டர் செய்தவள், இவள் அமர்ந்திருந்த சீட்டின் பக்கமாய் இருந்த கண்ணாடி ஜன்னல் வழி மக்கள் கடந்து போவதை அவதானித்தாள். சிலர் குடும்பமாக வந்திருந்தாலும், பலர் கணவன் மனைவியாய், காதல் ஜோடிகளாய்த்தான் இருந்தார்கள். மலை, குளிர், பனி எல்லாம் காதலர்களின் பூலோக சொர்க்கம் அல்லவா! கை கோர்த்தபடி ஒருத்தர் சூட்டை இன்னொருத்தர் அனுபவித்தபடி கவலைகளின்றி சுற்றித் திரிந்தார்கள்.
சட்டென ஒரு கோட் இவள் மனதில் வந்து போனது! குவீன் எலிசபெத் சொன்னது அது!
“Grief is the price we pay for love!”(துக்கம்/துயரம்தான் நாம் காதலுக்கு/அன்புக்கு கொடுக்கும் விலை!) என மென்மையாய் முணுமுணுத்தாள்.
இப்பொழுது ஜோடி போட்டு குதூகலமாய் சுற்றும் இவர்கள், இன்னும் சில வருடங்களில் அதே மனநிலையோடு இருப்பார்களா? இதே காதல் அப்பொழுதும் இருவருக்குள்ளும் இருக்குமா? இதே அந்நியோன்யம் நிலைத்திருக்குமா? இருக்கவே இருக்காது என இவளாகவே பதில் சொல்லிக் கொண்டாள்.
‘போட்டுக்கற துணி பழசாகற மாதிரி, காலுல போடற செருப்பு தேஞ்சுப் போகிற மாதிரி, இந்தக் காதலும் கூட பழசாகி தேஞ்சிப் போய்டும்! ப்ளைட்ல வரப்ப பார்த்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்துல கூட அந்தப்பா என்ன சொன்னாரு? உங்கம்மா மேல இருந்த காதல் குறைஞ்சு போய்டுச்சு! அது இன்னொருத்தி மேல வந்திடுச்சுன்னு சொன்னாருல்ல! அப்போ இந்தக் காதல்ங்கற விஷயம் நிலையானது இல்ல! மனிதனோட சூழ்நிலைக்கும், சுயநலத்துக்கும் தக்க மாறக் கூடியது! எனக்கு அது வேண்டாம்!’
சில நாட்களுக்கு முன்பு இவளை அந்தப் பையன்கள் இடித்து விடாமல் இருக்க, விஷ்ணு அணைத்து நின்ற போது, உள்ளுக்குள் படபடத்து விட்டது ஊர்மிளாவுக்கு. அவளை யாருமே அணைத்தது இல்லை எனச் சொல்ல மாட்டாள். நட்பாய் ஆண், பெண் என இவளுடன் படித்தவர்கள், வேலைப் பார்த்தவர்கள் அணைத்தது உண்டு. வேலையிடத்தில் சில கஸ்டமர்கள் தப்பாய் இவளை நெருங்கக் கட்டாயமாக அணைத்தது உண்டு! நண்பர்களிடம் புன்னகையுடன் சில வினாடிகளில் விலகி நின்றிருக்கிறாள். தப்பாய் அணைத்தவர்களிடம் திமிறி விலகி வந்திருக்கிறாள்.
அது எதுவுமே மனதளவில் இவளை நடுங்க வைத்தது இல்லை. விஷ்ணுவின் இறுகிய அணைப்பில் இது வரை உணர்ந்திராத பாதுகாப்பை உணர்ந்தாள் ஊர்மி! நான் இருக்கிறேன் உனக்கு என அணைப்பால் சொல்ல முடியுமா? அந்த ஒற்றை அணைப்பு அதைத்தானே உணர்த்தியது இவளுக்கு! அதை எண்ணும் போது இப்பொழுது கூட மேனி சிலிர்த்தடங்கியது ஊர்மிளாவுக்கு. எங்கே அந்த உணர்வு தன்னையும் மீறி காதலில் கொண்டு போய் விட்டு விடுமோ எனும் பயம் வந்தது! கண்களில் துருத்தி நின்றக் கண்ணீரைச் சுண்டி விட்டவள், ஆழ்ந்த மூச்சொன்றை இழுத்து விட்டாள்.
‘ஊர்மி! விட்டில் பூச்சிக்கு நெருப்பு சுடும்னு தெரியாது! ஏன்னா அதுக்கு அறிவென்றது இல்ல! அதனால நெருப்போட ஒளில ஈர்க்கப்பட்டு அதுல விழுந்து அழிஞ்சு போகுது! உனக்கு என்னடி கேடு வந்திச்சு? அறிவு இருக்குத்தானே? குடும்பம்ங்கற அமைப்பே ஒரு நெருப்பு மாதிரி! அதுல போய் விழுந்தா காஞ்சிக் கருகிப் போய்டுவோம்னு தெரியும்தானே! பிறகேன் இந்த ஃபீலீங்? ஆள் இருக்குன்னு அவனே சொன்னான்! பிறகெங்க நான் இருக்கேன் உனக்குன்னு ஹக் பண்ணிருப்பான்! மறுபடி அடிப்பட்டுக்கிட்டா மேனேஜ்மென்ட் அவன வச்சி செஞ்சிடுவாங்கன்ற பயத்துல கட்டிப் பிடிச்சிருப்பான்! ஓவரா கற்பனைக் குதிரைய ஓட்டாம, புத்தம் சரணம் கச்சாமின்னு ஆன்மீக பக்கம் வழி பாரு!’ என எண்ணியவளுக்கு சாப்பாவுக்குப் பக்கமாய் இருக்கும் ஃபான்சிப்பான் மலையில்(Fansipan) வீற்றிருக்கும் புத்தர் சிலையைப் போய் பார்த்தால் என்ன எனத் தோன்றியது!
அவளது கேக்கும் பானமும் வர, மன சஞ்சலங்களை எல்லாம் கிடப்பில் போட்டு விட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.
“எங்க பார்த்தாலும் மாட்ச்சா ப்ளேவர் கேக், பானம்னு ஒரே ஃபேமஸா இருக்கேன்னு ஆர்டர் பண்ணிட்டேன்! க்ரீன் டீல கொஞ்சம் பால கலந்து விட்டது போல இருக்கே டேஸ்ட்! பரவால்ல! வித்தியாசமா நல்லாத்தான் இருக்கு” என முணுமுணுத்தபடியே மாட்ச்சா லாட்டேவை அருந்தினாள்.
அதன் பிறகு போனை எடுத்து ஃபான்சிப்பான் மலைக்கு எப்படி போவது என சேட்ஜீ.பி.டியை ஒரு வழி செய்தாள். அந்த நேரம் இவளுக்கு அழைப்பு வந்தது. ட்ரெய்னர் என பெயர் ஒளிர, எடுக்கலாமா வேண்டாமா எனப் பட்டிமன்றம் நடத்தியபடி போனையே வெறித்திருந்தாள் ஊர்மி.
அழைப்பு நின்று மேசேஜ்கள் வரிசையாய் வர ஆரம்பித்தன!
“ஊர்மி! எங்கிருக்க?”
“ஆர் யூ ஓகே?”
“டாக்டர் என்ன சொன்னாரு?”
“கை ஓகேவா?”
“எங்கிருக்க ஊர்மி?”
“அன்ஸ்சர் த டேம்ன் போன்”
‘அடேய்! இருடா! இருடா!’ என வரிசையாய் வந்து விழுந்த மேசேஜ்களை பார்த்து மூச்சு வாங்கியவளுக்கு மறுபடியும் அழைப்பெடுத்தான் அவன்.
இந்த முறை அழைப்பை ஏற்றாள் ஊர்மி.
“ஊர்மி! எங்கிருக்க நீ? கிளினிக்ல, வந்துட்டு போய்ட்டன்னு சொன்னாங்க! ரிசார்ட்டுக்கு போன் போட்டா நீ இன்னும் வரலன்னு சொல்றாங்க!” எனப் படபடத்தான் விஷ்ணு.
கஃபேவின் பெயரைச் சொல்லி அங்கிருப்பதாக சொன்னாள் இவள். அடுத்த ஐந்தாவது நிமிடம் இவள் முன்னே வந்து அமர்ந்திருந்தான் விஷ்ணு.
“நான் கிளினிக் கூப்ட்டு போறேன்னு சொல்லிருந்தேன்தானே! என்ன அவசரம் உனக்கு! கிளினிக்ல இருந்து அழைச்சிட்டு போகலாம்னு வந்தா ஆள காணோம்! போனையும் எடுக்கல! பயமா இருக்காதா ஊர்மி? வெளிநாட்டுல வந்து காணாம போய்ட்டா நான் எங்கன்னு போய் உன்னைத் தேடுவேன்?” என விடாமல் பேசியவன், முன்னே இருந்த அவளது பானத்தை எடுத்து மடக் மடக்கென குடித்து முடித்து விட்டான்.
“ட்ரேய்னிங்தான் முடிஞ்சதுல! நீ ஏன் இன்னும் இங்கயே இருக்க விஷ்ணு?” என அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் பதில் கேள்வி கேட்டாள் இவள்.
அவளை ஆழ்ந்து பார்த்தவன்,
“எனக்கு வெய்ட் பண்ணாம ஏன் கிளம்பி வந்த?” என அவன் கேள்வியிலேயே நின்றான்.
“எதுக்கு வெய்ட் பண்ணனும்? என் கை, என் வலி! அத நான்தானே பாத்துக்கனும்?” எனக் கேட்டவளை ஆயாசமாகப் பார்த்தவன்,
“எனக்கு நெக்ஸ்ட் ப்ராஜேக்ட் ஓசாக்கா, ஜப்பான்ல! அங்க போனதும் வேலை மூச்சுக் கூட விட முடியாத அளவுக்கு வச்சி செஞ்சிடும்! ஒரு ரெண்டு மூனு மாசம் அங்கிங்க நகர முடியாது! அதான் என்னைப் புத்துணர்வா வச்சிக்க இப்போ லீவ்ல இருக்கேன்!” என்றான்.
“ஓஹோ!!”
“டாக்டர் என்ன சொன்னாரு?”
“ஆல் ஓகே”
“எங்க கைய காட்டுப் பார்க்கலாம்”
அவள் நீட்டியக் கரத்தைத் தொடாமல் ஆராய்ச்சியாய் பார்த்தான் இவன்.
“என்ன விஷ்ணு சார்! கண்ணுல எக்ஸ்ரே மிசின் இருக்கா என்ன? ஸ்கேன் பண்ணற மாதிரி பார்க்கறீங்க!” எனக் கிண்டலாய் கேட்டவள், எழுந்து கொண்டாள்.
இவனும் அவளோடு எழுந்து கொண்டான்.
தயக்கமாய்,
“நெக்ஸ்ட் என்ன ப்ளான் ஊர்மீ?” எனக் கேட்டான் விஷ்ணு.
“ஃபான்சிப்பான் மலைக்குப் போகலாம்னு நெனைக்கறேன்! பாய் விஷ்ணு”
“நானும் வரேன் ஊர்மி!” என்றவனை முறைத்தாள் இவள்.
“என்னாச்சு உனக்கு? நானும் பார்க்கறேன், ரெண்டு நாளா ரூம விட்டு வெளிய வரவே இல்ல! சாப்பாடும் உள்ளயே வர வச்சி சாப்பிட்டுக்கற! உடம்பு முடியல, ரெஸ்ட் எடுக்கட்டும்னு நானும் ஒன்னும் கேட்டுக்கல! இப்போ என்னான்னா தள்ளி வச்சுப் பேசற! உன்னைப் புரிஞ்சுக்கவே முடியல ஊர்மி! எவ்ளவோ பேர அசால்ட்டா டீல் பண்ணிருக்கேன் நான்! ஒத்தை மனுஷி நீ என் மண்டையக் காய விடற!” எனச் சலிப்பாகப் பேசியவனைப் பார்த்துச் சிரிப்பு வந்து விட்டது இவளுக்கு.
தப்பைத் தன் மேல் வைத்துக் கொண்டு நட்பாய் பழகும் இவனை வாட்டி எடுப்பது முறையல்ல என நினைத்தவள்,
“கைடா வரதுன்னா வா விஷ்ணு! ஆனா காசு எதுவும் குடுக்க மாட்டேன்” என்றாள்.
முகத்தில் நகை துலங்க,
“கைடுக்கு காசுத்தான் குடுக்க மாட்ட, கண்ணுல காப்பித் தண்ணியவாவது காட்டுவியா?” எனக் கேட்டான்.
“அதான் நான் வாங்கி வச்சிருந்தத சொட்டு விடாம குடிச்சிட்டியே, உனக்கு காபியும் கிடையாது, ஒன்னும் கிடையாது” என வழக்காடியபடியே இவள் பணத்தைக் கட்டி விட்டு, இவனுக்கு ஒரு ஐஸ் லாட்டே வாங்கி வந்து கொடுத்தாள்.
“தேங்க்ஸ்! உன்னோடத நான் குடிச்சிட்டேனே! பதிலுக்கு நீ இதை குடிச்சிட்டு குடு” என்றான் கள்ளன்.
“ஐம் ஃபுல்” என மறுத்தாள் கள்ளி.
தோளைக் குலுக்கியவன்,
“அதோ தெரியுது பார் பெரிய கடிகாரம் வச்ச சன் ப்ளாசா பில்டிங், அங்க போய்த்தான் நாம ட்ரேய்ன் எடுக்கனும்!” என ஒரு கட்டிடத்தைக் காட்டினான் விஷ்ணு.
ஐரோப்பா கட்டிடக் கலையில், பில்டிங் மேலே மூன்று அழகிய கடிகாரங்கள் வைத்து அழகாகக் கட்டப்பட்டிருந்த கட்டிடத்தை ஆசையாய் பார்த்தாள் இவள்.
“போட்டோ புடிச்சு தரவா மேடம்? கைடு வேலைல இதுவும் ஒன்னாச்சே” எனக் கேட்டான் விஷ்ணு!
“யெஸ் ப்ளீஸ்” என்றவள் அந்தக் கட்டிடத்தின் முன்னே நிற்க, கடிகாரம் தெரிவது போல இவளைப் படம் எடுத்துக் கொடுத்தான் விஷ்ணு.
“ஒரு செல்ஃபி?” என இவன் கேட்க, தயங்கினாலும் சரியெனத் தலையாட்டி போஸ் கொடுத்தாள் ஊர்மி.
“அந்த பில்டிங் உள்ளத்தான் ட்ரேய்ன் ஸ்டேஷன் இருக்கு! அது டாய் ட்ரேய்ன் மாதிரி இருக்கும் ஊர்மி! ரொம்ப அழகா, சுத்திலும் கண்ணாடி வச்சு” எனச் சொல்லியபடியே அவளை அழைத்துப் போய் டிக்கேட் வாங்கினான்.
“டிக்கேட் நான் வாங்கறேனே விஷ்ணு!” என இவள் கேட்க,
“மேல போனதும் ரொம்பக் குளிரும்! சூடா எதாச்சும் வாங்கிக் குடு! இதுக்கு நான் பே பண்ணிடறேன்” என்று விட்டான் இவன்.
கூட்டம் அதிகமாய்த்தான் இருந்தது! கையை மற்றவர்கள் இடித்து விடாமல், கவனமாகவே கியூவில் நின்றாள் ஊர்மி. ஒரு வழியாய் சிவப்பு வர்ணத்தில் இருந்த அந்த ட்ரேய்னில் ஏறி அமர்ந்தார்கள் இருவரும். இவர்கள் முன்னே ஒரு வெள்ளைக்காரக் குடும்பம் அமர்ந்திருந்தது. அவர்களின் சுட்டிப் பெண் விஷ்ணுவைப் பார்த்துக் கையசைத்தாள். இவனும் பதிலுக்குக் கை அசைத்து, நாக்கை நீட்டி, உதட்டைச் சுளித்து, தலையை ஆட்டி எனக் குரங்குச் சேஷ்டைகள் செய்ய, அப்படியொரு சிரிப்பு அந்தக் குட்டிக்கு! இவர்களைக் கவனித்தபடி வந்த ஊர்மிக்கும் முகத்தில் புன்னகை வாடாமல் நின்றது.
இவள் தோள் தொட்டு,
“அங்க பாரு ஊர்மி! எவ்ளோ அழகான காட்சின்னு” எனக் காட்டினான் விஷ்ணு.
ரயிலின் கீழேயும், பக்கவாட்டிலும் அழகான மலைகளும், விவசாய நிலங்களும் பச்சை பசேலெனக் கண்ணுக்குக் குளிர்ச்சியாய் தெரிந்தன. பனிப் படந்த மலைகளைப் பார்க்கப் பார்க்கத் திகட்டவில்லை இவளுக்கு.
“அமேசிங் விஷ்ணு” என்றவளின் முகம் மலர்ந்து கிடந்தது.
ட்ரேய்ன் முவாங் ஹூவா எனும் ஸ்டேஷனில் நின்றதும், இறங்கினார்கள் இவர்கள் இருவரும்.
“இண்டோசைனா ரீஜன்ல ஃபான்சிப்பான்தான் உயரமான மலை!” என்றான் இவன்.
“கைடு வேலைய கரேக்டா செய்ற விஷ்ணு!” எனச் சிரித்தாள் இவள்.
“கொஞ்சம் நடந்து போய் கேபிள் கார் எடுக்கனும்! அதுக்கு முன்ன, இங்க நாம ஒரு ரவுண்ட் சுத்திப் பார்க்கலாம்! அழகான போட்டோ புடிக்கற இடம்லாம் இருக்கு ஊர்மி” என்றவன், அங்கங்கே அவளை நிறுத்திப் படம் எடுத்துக் கொண்டான்.
ஃபான்சிப்பான் மலை உச்சிக்குச் செல்ல கேபிள் கார் எடுக்கும் இடத்திலும் கூட்டம். அங்கே காத்திருப்பவர்களுக்குப் பொழுது போகவென சில வியாட்நாம் பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து நடனம் ஆடினார்கள். அந்த மியூசிக்குக்கு ஏற்றது போல இவனும் அசைந்தாட,
“சும்மா நில்லு விஷ்ணு! எல்லாரும் நம்மள பார்க்கறாங்க” என்றாள் இவள்.
“ஏன்? உன் கை, உன் வலி போல இது என் காலு, என் டான்சு! யார் பார்த்தா எனக்கென்ன?” எனக் கேள்விக் கேட்டவனின் புஜத்தில் லேசாய் ஒன்று வைத்தாள் இவள்.
“வாய்! வாய்!” என முனகியபடியே அவனுக்கு முதுகுக் காட்டி நின்றுக் கொண்டாள்.
வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான் இவன். கியூவில் நின்று சுமார் இருபது பேர் பயணிக்கக் கூடிய சைசில் இருந்த கேபிள் காரில் ஏறினார்கள் இருவரும். அதில் ஏறியதுதான் தெரியும் இவளுக்கு! அதன் பின் தன்னையே மறந்து போனாள் ஊர்மி. மேலே பார்த்தால் பனி சூழ்ந்த மலை முகடுகள். கீழே பார்த்தால் அழகாய் தெரிந்த வயல் வெளிகள். கண்களை மூட முடியவில்லை அவளால். அவளையே கவனித்தபடி வந்த விஷ்ணுவுக்கு அவள் முகத்தை விட்டுப் பார்வையை அங்கிங்கு திருப்ப முடியவில்லை. அவள் கண்கள் காட்டிய ஜாலம், குளிருக்குச் சிவந்து கிடந்த கன்னங்கள், குடை மிளகாய் போல ஜொலித்தக் குட்டி மூக்கு என ஆளை அசரடித்தாள் ஊர்மிளா. வலக் கரம் கொண்டுத் தன் நெஞ்சை நீவிக் கொண்டவன்,
“இவ்ளோ வேகமா துடிக்காதே! பட்டுன்னு போய்டப் போறேன்!” எனத் தன் இருதயத்திடம் மெல்லியக் குரலில் கெஞ்சினான்.
“என்ன விஷ்ணு?”
“ஒன்னும் இல்ல ஊர்மி! இப்போ நாம பயனப்படற கேபிள் காருக்கு கின்னஸ் ரெக்கார்ட்ல இடம் குடுத்திருக்காங்க தெரியுமா! நீளமான த்ரீ ரோப் கேபிள் கார்னு”
“சூப்பர்ல!” எனக் குதூகலித்தாள் இவள்.
சில பல நிமிடங்களில் ஃபான்சிப்பான் மலை உச்சியில் இறங்கினார்கள் இருவரும். இவளுக்கோ குளிர ஆரம்பித்து விட்டது. உதடு தந்தியடிக்க நின்றிருந்தவளைப் புன்னகையுடன் பார்த்திருந்தான் இவன்.
“மேடம்! சுத்திப் பார்க்கனும்னு முடிவெடுத்தா மட்டும் பத்தாது! எங்க போறோமோ, அங்க என்னென்ன தேவைப்படும்னும் பார்த்து ப்ளான் பண்ணனும்!” என்றவன், அவன் அணிந்திருந்த ஸ்போர்ட் ஜாக்கேட்டைக் கழட்டி அவளிடம் நீட்டினான்.
“இல்ல பரவால்ல விஷ்ணு!”
“பனிக் கொட்ட ஆரம்பிச்சிடுச்சு! விரைச்சுப் போய்டுவ ஊர்மி! எடுத்துக்கோ!”
“நீ எப்படி சமாளிப்ப?”
“உன்னை உரசிட்டே நடந்தா, சூடா இருக்கும்! அப்டி சமாளிச்சிப்பேன்”
“ஹேய்!” என முறைத்தாள் இவள்.
“சும்மா! சும்மா! ஜோக்கு” எனப் புன்னகைத்தவன்,
“எனக்கு வெயில்ல, குளிர்ல, பனியில எல்லாம் சுத்திப் பழக்கம் இருக்கு! சமாளிச்சிப்பேன்” என்றான்.
அவன் வாசம் சுமந்திருந்த ஜாக்கேட்டை தயக்கத்துடன் அணிந்து கொண்டாள் ஊர்மி!
“முதல்ல உனக்கொரு சூடானக் காபி! கன்னம் ரெண்டும் ரொம்பக் கலர் காட்டுது! வா ஊர்மி” என ஒரு ரெஸ்டாரண்டுக்கு அழைத்துப் போய் சூடாக காபி வாங்கிக் கொடுத்தான் இவன்.
அவனுக்கும் ஒன்று வாங்கிக் கொண்டான். அங்கேயே கண்ணாடி வைத்த ஜன்னல் பக்கம் அமர்ந்து வெளியே வேடிக்கைப் பார்த்தபடியே காபி அருந்தினார்கள் இருவரும்.
“நீ பார்க்கனும்னு சொன்ன குவன்யின்(guanyin-லேடி புத்தர்) அண்ட் புத்தர் சிலைக்கு படி ஏறி மேல போகனும்டா ஊர்மி! கிட்டத்தட்ட 600 ஸ்டேப்ஸ்! கேபிள் காரும் இருக்கு! அதை எடுத்துடலாம்!”
“படி ஏறலாம் விஷ்ணு”
“நோ!!” என்றவனின் குரல் அழுத்தமாக ஒலித்தது.
இவ்வளவு நேரம் அவன் குரலில் இருந்த மென்மை காணாமல் போயிருக்க, விழித்தாள் இவள்.
“இப்பவே பாரு எப்படி சிவந்து போச்சு முகமெல்லாம்! மலை உச்சி ஊர்மி இது! மேல ஏற, ஏற இன்னும் மூச்சு வாங்கும்! ப்ரீத் பண்ண சிரமமா இருக்கும்! பனியால படிகள் வேற வழுக்கும்டா! எதுக்கு ரிஸ்க்” என்றவனின் டா எனும் மொழி இப்பொழுதுதான் இவளுக்குக் கருத்தில் பதிந்தது.
உள்ளுக்குள் என்னவோ செய்தது இவளுக்கு! அப்படியெல்லாம் என்னை அழைக்காதே எனக் கத்த வேண்டும் போல இருந்தது! என்னை பலவீனப்படுத்தாதே என அழ வேண்டும் போல இருந்தது! அடக்கிக் கொண்டாள்.
“ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரேன் விஷ்ணு” என எழுந்து போய் விட்டாள்.
சில நிமிடங்களில் திரும்பி வந்தவள்,
“கேபிள் கார் எடுக்கலாம் வா” என அழைத்தாள் இவனை.
மென் புன்னகையுடன் வழி நடத்திச் சென்றான் விஷ்ணு. மீண்டும் இயற்கையை ரசித்தபடி ஒரு கேபிள் கார் பயணம். அங்கே இறங்கிய கையோடு மழை பெய்யத் தொடங்கி விட்டது!
“ஊர்மி! உன் கிட்ட ஒரு ப்ளாஸ்டிக் பை குடுத்தேனே! அதை எடு”
சன் பிளாசாவில் ட்ரேய்ன் ஏறும் முன்னே, ஒரு கடைக்குப் போய் வந்தவன், வாங்கி வந்த பொருட்கள் இருந்த ப்ளாஸ்டிக் பையை அவள் பேக்கில் வைக்கச் சொல்லிக் கொடுத்திருந்தான். அதை வெளியே எடுத்துக் கொடுத்தாள் இவள். அந்தப் பையைப் பிரித்து ரெயின் கோட்டை எடுத்தவன் அவளுக்கு ஒன்றை அணிவித்து விட்டு, இவனும் ஒன்றை அணிந்து கொண்டான்.
“வெல் ப்ரீப்பேர்ட்” எனச் சிலாகித்தாள் அவனை.
“இது போல மலைப்பாங்கான இடத்துல சட்டென மாறிடும் வானிலை ஊர்மி! உன்னைப் போலவேத்தான் அதுவும்! மூட் ஸ்வீங்ஸ் இருக்கு!” என்றவனை முறைக்க முயன்று தோற்றுப் போனாள் பெண்.
மழை பத்து நிமிடங்கள் பெய்து நின்று விட, இருவரும் ரெயின் கோட்டை மாட்டியபடியே புத்தரையும், லேடி புத்தரையும் வணங்கினார்கள். அதோடு நிறையப் படங்களும் எடுத்துக் கொண்டார்கள். மேகக் கூட்டங்கள் தலை மேல் வந்து நின்று உறவாடி விட்டுப் போவது போல இருந்ததை மிகவுமே ரசித்தாள் இவள். மனம் அப்படியே இறகாகிப் பறந்தது.
மேகப் பின்னணியில் கவிதையாய் நின்றிருந்தவளைப் பார்த்து,
“அதோ மேக ஊர்வலம்
அதோ மின்னல் தோரணம் அங்கே
இதோ காதல் ஊர்வலம்
இதோ காமன் உற்வசம் இங்கே
ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்
இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன் வா!!!” என முணுமுணுப்பாய் பாடினான்.
“விஷ்ணு! வா வா! ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்” எனும் அவள் அழைப்பில் புன்னகையுடன் அவளை நெருங்கினான் இவன்.
அன்றைய இரவு இவர்கள் ரிசார்ட்டில் கேம்ப்ஃபயர் வைத்திருந்தார்கள். அங்கு தங்கி இருந்த சுற்றுப் பயணிகள், கேம்ப்ஃபயரைச் சுற்றி ஆட்டம், கொண்டாட்டம் என குதூகலித்திருந்தார்கள். இரவு உணவு உண்ண வெளியே வந்த ஊர்மி, புன்னகையுடன் அவர்களைப் பார்த்தபடி நின்றிருந்தாள். அருகில் வந்து ஓர் உருவம் நிற்க, அவன் வாசனையை வைத்தே விஷ்ணு எனத் புரிந்து கொண்டவள், அமைதியாய் இருந்தாள்.
“ஊர்மி”
“ஹ்ம்ம்”
“ஷெல் வீ டான்ஸ்? நீ எனக்கொரு டான்ஸ் கடன் வச்சிருக்க!” எனக் குனிந்து கை நீட்டி அழைத்தான் விஷ்ணு.
தலையை இடம் வலம் ஆட்டிய ஊர்மிளா,
“சாரி விஷ்ணு! ஐ காண்ட்! லேசா தலை வலிக்குது! டின்னர் சாப்பிட்டுட்டு, மருந்து போட்டுட்டு படுக்கனும்! காலைல ஃப்ளைட் பிடிக்க ஓடனும்ல” என்றபடியே உணவுக் கூடத்துக்குள் நுழைந்தாள்.
அவள் குரல் கரகரவென ஞமனநமன வாசிக்க,
“பனி ஒத்துக்கலை போலிருக்கு! இரு செஃப் கிட்ட சொல்லி நண்டு ரசம் செஞ்சுக் குடுக்க சொல்றேன்! இதமா இருக்கும்!” என கிச்சனை நோக்கித் திரும்பியவனை நிறுத்தினாள் இவள்.
“வேணாம் விஷ்ணு! ப்ளீஸ்! என்னைக் கொஞ்சம் தனியா விடு” என்றவளை ஆதங்கத்துடன் பார்த்தான் இவன்.
‘சட்டு சட்டுன்னு கூட்டுக்குள்ள அடைஞ்சிக்கிறாளே இவ! எப்படித்தான் என் மனச புரிய வைக்கறது’ என விழி பிதுங்கி நின்றான் விஷ்ணு.
கிளம்பும் முன் அவளை வெறுப்பேற்றிப் பார்க்க வேண்டாமென கேம்ப்ஃபயர் நடக்கும் பக்கம் சென்று விட்டான். அங்கிருந்தவர்கள் அவனையும் ஆடச் சொல்லி அழைத்துக் கொள்ள, அசைவுகள் இங்கிருந்தாலும் பார்வை மட்டும் பெண்ணவளையே சுற்றிச் சுற்றி வந்தது.
மறுநாள் இவனும் அவளுடனே விமான நிலையத்துக்குக் கிளம்பினான். அவள் இந்தியா போக, இவன் ஜப்பானுக்கு செல்ல வேண்டும். அங்கே லக்கேஜ் ட்ராப் எல்லாம் முடித்து விட்டு, போர்டிங் அழைப்புக்குக் காத்திருந்தார்கள் இருவரும்.
ஊர்மியை விட்டுப் பிரிந்து போவதை நினைத்து நிலைக் கொள்ளாமல் தவித்தான் விஷ்ணு!
‘அவளை அப்படியே நம்ம கூட அள்ளிட்டுப் போய்டலாம்டா விஷ்ணுப்பையா!’ என இதயம் இம்சித்தது.
‘செருப்பக் கழட்டி அதை சாணில முக்கி அடிப்பா! மூடிட்டு ஒழுங்கா முழுசானக் கை காலோட, ஜப்பானுக்குக் கிளம்பற வழிய பாரு’ என மூளை முன் ஜாமின் எடுத்தது.
தலையை அழுந்த கோதிக் கொண்டவன்,
“ஊர்மி” என அழைத்தான்.
“ஹ்ம்ம் விஷ்ணு”
“இப்போ உன் கிட்ட நான் ஒன்னு சொல்ல போறேன்! சட்டுன்னு நோ சொல்லாம, பல நாள் மனசுல போட்டு வச்சு அலசி ஆராஞ்சு அப்புறமா எனக்கு பதில் சொல்லு மேசேஜ்ல!”
“என்ன விஷ்ணு?” என அவன் கண்களைப் பார்த்துக் கேட்டாள் இவள்.
“ஊர்மி!!!”
“சொல்லு”
“ஐ திங்க், ஐம் இன் லவ் வித் யூ ஊர்மிளா!” எனப் பட்டெனச் சொல்லி விட்டான்.
அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள் இவள்.
இவள் என்னவோ பேச வர,
“நோ!” என்றவனின் அழுத்தமானக் குரலில் மௌனித்தாள் பெண்.
“சட்டுன்னு எதையும் சொல்லிடாதே ஊர்மி! ப்ளீஸ்! என்னை நெருங்கவே விடல நீ! உன் கிட்ட பழகிப் பார்க்கனும்னுதான் கேர்ள் ப்ரேண்ட் இருக்குன்னு அடிச்சு விட்டேன்! உன் கூட இருந்த இந்தச் சில நாட்கள் எனக்கு, எப்படி சொல்றதுன்னு தெரியல ஊர்மி! இட் வாஸ் ஹேவன்(சொர்க்கம்)! நீ டைம் எடுத்துக்கோ! அப்புறம் உன் முடிவ சொல்லு! யெஸ் ஆர் நோன்னு எதை சொன்னாலும் நான் ஏத்துப்பேன்!” எனப் படபடத்தவனை ஆழ்ந்து பார்த்தாள் இவள்.
இவளது ப்ளைட்டின் அழைப்பு வர, அவனை மெல்ல அணைத்து விலகியவள்,
“பை விஷ்ணு!” என விடுவிடுவெனக் கிளம்பி விட்டாள்.
தன்னை விட்டுப் போகும் அவள் உருவத்தையே உயிர் பிரியும் வலியுடன் பார்த்திருந்தான் இவன்.
இவனுக்கும் போர்டிங் அழைப்பு வர, பெருமூச்சுடன் நகர்ந்தான் விஷ்ணு. ஒசாக்காவின் கன்சாய் ஏர்போர்ட்டில் இறங்கி போனை ஆன் செய்த விஷ்ணு ஒரு நிமிடம் அதிர்ந்து போனான்.
அங்கே,
“யெஸ்!” என ஒற்றை வார்த்தையில் பதில் வந்திருந்தது ஊர்மிளாவிடமிருந்து.
“யாஹூ!!!!!” எனக் கத்தியவனை ஒரு மார்க்கமாகப் பார்த்தார்கள் மற்றப் பயணிகள்.
(சேர்ந்தாடுவாளா???)

Last edited:
Author: VanishaAdmin
Article Title: Sernthaadu Cindrella--EPI 8
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.