Urasathe--EPI 2

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
918
-1,981
93
அத்தியாயம் 2

வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதைப்போலவே இன்னொரு புறம் அவர்களுக்கு வரக்கூடிய நோய்களும் அதிகரித்திருக்கின்றன. அதில் முக்கியமானது ‘டிமென்ஷியா’ என்றழைக்கப்படும் ஞாபக மறதி நோய். தொடக்கத்தில் சிறுசிறு ஞாபக மறதியாகத் தொடங்கி முற்றிய பிறகு பெற்ற பிள்ளைகள், கட்டிய மனைவி அல்லது கணவனைகூட மறந்துவிடும் அளவுக்கு இந்த நோயின் தாக்கம் இருக்கும்.


“யோவ் வெட்டு, விடுய்யா! கீழ விடாம பிடிச்சுக்க சொன்னா இப்படியா மோந்து மோந்து பார்ப்ப? நான் வேற காலையில குளிக்கல. விடுய்யா விடு!” என துள்ளினாள் அபி.

“சாரி, சாரி!” என தன்னிடம் இருந்து அவளை நகர்த்தி நிறுத்தினான் சதா.

“ஹ்க்கும்! நல்லா கேட்ட சாரி, பூரி, கக்குஸ்காரின்னு. ஒரு பொண்ணு கிட்ட எப்படி நடந்துக்கனும்னு தெரியாது உனக்கு? எவ்வளவு மரியாதையா வெட்டு சார்ன்னு கூப்பிட்டேன்! அதே வாயால இப்படி வா, போன்னு பேச வச்சிட்டியே!” ராமின் தோளில் கைப்போட்டுக் கொண்டு கடுப்புடன் சதாவை முறைத்தாள் அபி.

அவனோ பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டு,

“எல்லாம் சரி! இங்க யாரோ பொண்ணுகிட்ட எப்படி நடந்துக்கனும்னு தெரியலையான்னு கேட்டியே, அந்தப் பொண்ணு எங்கன்னு காட்டுனா மன்னிப்பு கேட்டுக்குவேன்” என சொன்னான் சதா.

“என்ன வெட்டு சார், லந்தா? முடி கொஞ்சம் கட்டையா இருக்கறதுனால நான் பொண்ணா தெரியலையாக்கும்?”

மீண்டும் பார்வையை அவள் புறம் திருப்பியவன், ஒரு விநாடி அவளை மேலிருந்து கீழ் வரை ஆராய்வது போல பார்த்து, பார்வையை மறுபடியும் வேறு புறம் திருப்பிக் கொண்டான்.

“சரி விடு! நீ கெஞ்சி கேக்கறதுனால நீ பொண்ணுதான்னு ஒத்துக்கறேன்” என அடக்கப்பட்ட சிரிப்புடன் கூறினான் சதா. குணாவோ அவர்களின் சண்டையை சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அறிந்து சதா சட்டென யாரிடமும் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்பவன் இல்லை. அதுவும் கேலி கிண்டல் எல்லாம் அறவே அவனிடம் கிடையாது.

“நீங்க ஒத்துக்குங்க இல்ல ஒத்துக்காம போங்க! எனக்கு என்ன வந்துச்சு! அது சரி, முகத்துல என்ன வெட்டு?”

சதாவின் முகத்தில் இடது காதில் ஆரம்பித்து ஒற்றைக் கோடாக கன்னத்தில் பயணித்து நெற்றியைத் தாண்டி முன் பக்க தலையின் முடிகளுக்குள் சென்று மறைந்த வெட்டுக்காய வடுவை சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டே கேட்டாள் அபி.

சதா முகம் இறுக, இரு கரத்தையும் பேண்ட் பாக்கேட்டில் நுழைத்துக் கொண்டான். இவ்வளவு நேரம் இலகுவாக இருந்தவன், அந்தக் கேள்வியில் உடல் விறைக்கவும்,

“லுக், அது உனக்கு தேவையில்லாத விஷயம்” என கோபப்பட்டான் சதாவின் பிஏ கம் ஆருயிர் தோழன் குணா.

“அதில்லை ஆபிசர், வெளேர்னு இருக்கற முகத்துல இந்த கருப்பான வடு எடுப்பாக தெரியுதேன்னு கேட்டேன்! டேய் ராம், நான் பேசுனத கவனிச்சியா? அப்படியே ஹைக்கூ கவிதை துள்ளி விளையாண்டுச்சுடா. கருப்பா, எடுப்பா! அட! அட! என்னா ரைமிங்கடா. வெட்டு சார், உங்கள பார்த்ததும் நானும் கவிஞி ஆகிட்டேன்.”

“அப்பி, நம்ம கவித புக்ல இதையும் எழுதி வைக்கனும்.

‘வடு ஒன்று பார்த்தேன் கருப்பாய்

வெளேர் என்ற முகத்தில் எடுப்பாய்’

நல்லா இருக்குல்ல?” இருவரும் அவன் முன்னாலேயே அவன் குறையை கவிதையாய் வடித்து அரங்கேற்றம் செய்துக் கொண்டிருந்தனர்.

உடல் இறுக்கம் மெல்ல தளர அவர்கள் இருவரையும் ஆச்சரியமாய் பார்த்திருந்தான் சதா.

“ராம், அடி ஜூட்! சிக்ஸ் ஃபேஸ் வராரு. ஓடு, ஓடு! ஆபிசர் வரட்டா! வெட்டு சார் வரட்டா!” வெளியே அவர்களை நோக்கி வந்துக் கொண்டிருந்த ஆறுமுகத்தைப் பார்த்ததும் விழுந்தடித்துக் கொண்டு ஓடினார்கள் அவர்கள் இருவரும்.

“வாங்க மாப்பிள்ளை! வாங்க தம்பி. கார் வந்த சத்தமே கேட்கல. உள்ள வாங்க” ஆரவாரமாக அவர்களை வரவேற்றார் ஆறுமுகம். வீட்டின் உள்ளே நுழைந்தவர்களை அவர் பங்குக்கு பூரணியும் வரவேற்றார். சதாவைக் கண்டதும் முகத்தை சுளித்தான் ராஜா. அலட்சியமாக கால் மேல் கால் போட்டு அவனின் எதிரே அமர்ந்துக் கொண்டான் அவன். பூரணிக்கும் சதாவின் முக லட்சணத்தைப் பார்த்து கொஞ்சம் அதிருப்தி தான். ஆனாலும் சாமார்த்தியமாக மறைத்துக் கொண்டு கலகலவென உரையாடினார்.

இத்தகைய முகச்சுளிப்பெல்லாம் எனக்கு சகஜம்தான் என்பது போல அமைதியாக நாற்காலியில் அமர்ந்தான் சதா.

“மாப்பிள்ளையப் பற்றி தரகர் சொன்னாரு. எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எங்க மகளுக்கும் தான். கல்யாணம் பிக்ஸ் ஆகிருச்சுன்னே வச்சிக்குங்க. சும்மா ஒரு பார்மாலிட்டிக்கு தான் பொண்ணு பார்க்கற சடங்கெல்லாம்” என சிரித்தார் ஆறுமுகம்.

“ஆமா மாப்பிள்ளை!” என ஒத்து ஊதினார் பூரணி.

“அவசரப்படாதீங்க ஆறுமுகம் சார். முதல்ல பார்த்துப் பேசுவோம். இறுதி முடிவ பாஸ் தான் எடுப்பாரு. அதுக்குள்ள மாப்பிள்ளை அப்படி இப்படின்னு கூப்பிட வேணாமே! எங்க பாஸ் பற்றி நல்லா விசாரிச்சிட்டீங்களா? வந்து இந்த மாதிரி லுக் இருக்கறது உங்க பொண்ணுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?” நண்பன் ஏற்கனவே கேட்க சொல்லி இருந்ததைக் கேட்டான் குணா.

“பேங்க் பேலண்ஸ் நிறைவா இருக்கறப்போ லுக்ல என்னப்பா இருக்கு?” என அட்டகாசமாக சிரித்தார் ஆறுமுகம்.

மற்றவர்கள் அறியாமல் கணவனைக் கிள்ளிய பூரணி,

‘அடங்குங்க’ என்பதைப் போல பார்த்தார். கப்பென வாயை மூடிக் கொண்டார் ஆறுமுகம்.

அங்கு நடப்பவைகளுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததைப் போல கைத்தொலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தான் சதா.

“பாஸ் எதிர்பார்க்கறதெல்லாம் அவருக்கு வர போற மனைவி அவரோட அப்பாவ அணுசரிச்சு நல்லவிதமா நடந்துக்கனும்கறதுதான். அதோட அவருக்கு சோசியல் லைப்னா கொஞ்சம் அலர்ஜி. அதனால வெளிய எங்கும் போக மாட்டாரு. அவரு வேலை செய்யறது கூட வீட்டோட வச்சிருக்கற லேப்லதான். அவரோட இந்தக் குணத்த வர போற பொண்ணு அட்ஜஸ்ட் செஞ்சிக்கனும். வேற பெரிய எதிர்ப்பார்ப்பு எதுவும் அவருக்கு இல்ல. அதாவது வரதட்சணை, சீரு செனத்தி இப்படி. கல்யாண செலவுலாம் பாஸோடது. ஆனா கல்யாணத்த சீக்கிரமா வைக்கனும். அது மட்டும்தான் அவரோட ரிக்வேஸ்ட். இதுக்கெல்லாம் நீங்க ஒத்துக்கிட்டதா தரகர் சொல்லவும் தான் நேருல வந்தோம்”

“எங்களுக்கு அதிலெல்லாம் எந்தப் பிரச்சனையும் இல்லப்பா. எங்க பொண்ணு பொறுமையில பூமாதேவி மாதிரி. உங்க தகப்பனார தன் தகப்பனா பார்த்துக்குவா. உங்க கேரக்டரையும் அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்குவா” என தன் மகள் புகழ் பாடினார் பூரணி.

போனிலிருந்து தலையை நிமிர்த்தி குணாவைப் பார்த்தான் சதா. அவனின் குறிப்பை உணர்ந்து,

“உங்க பொண்ண கூப்பிடலாமே! அவங்க வந்து சொன்னா பாஸ் கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணுவாரு” என்றான் குணா.

“இதோ கூப்பிடறேன்” என எழுந்து சென்றார் பூரணி. அவர் சென்ற திசையையேப் பார்த்திருந்தான் சதா.

சற்று நேரத்துக்கெல்லாம் தன் தாயின் பின்னால் தலை குனிந்து அன்ன நடையிட்டு வந்தாள் ராகவி. அவர்கள் அருகில் வரும் வரை எந்த சலனமும் இல்லாமல் கவனித்திருந்தான் சதா.

“நிமிர்ந்து மாப்பிள்ளைய பாரும்மா ராகவி” என குரல் கொடுத்தார் ஆறுமுகம். மெல்ல நிமிர்ந்தவள், சதாவின் முகத்தைப் பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்து, பயந்து சட்டென உணர்ச்சிகளை மறைத்து புன்னகையைப் பூசினாள் முகத்தில். போட்டோவை விட நேரில் சதா படுபயங்கரமாக அவள் கண்ணுக்குத் தெரிந்தான்.

அவளின் அதிர்ந்த பார்வையில் இவ்வளவு நேரம் பிடித்து வைத்திருந்த மூச்சை நிதானமாக வெளியிட்ட சதா, கீழே குனிந்துக் கொண்டு மீண்டும் தன் கைப்பேசியை நோண்ட ஆரம்பித்தான்.
 

Author: VanishaAdmin
Article Title: Urasathe--EPI 2
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
918
-1,981
93
தன்னைப் பார்த்து மயங்கி நிற்பான் இந்த சதா என எண்ணியிருந்த ராகவி, முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் கீழே குனிந்துக் கொண்டவனைப் பார்த்துக் கொலை வெறியானாள். சரியாகப் பார்த்திருக்க மாட்டான் என எண்ணி மீண்டும் அவனைப் பார்க்க வைக்க முயற்சி செய்தாள்.

“வணக்கம் சதா! க்ளேட் டூ மீட் யூ இன் பெர்சன்” என கைகளைக் குவித்து பளீர் புன்னகையை உதட்டுக்குக் கொடுத்தாள் ராகவி.

நிமிர்ந்துப் பார்த்து, நீ சொன்னது கேட்டது என்பது போல தலை அசைப்பைக் கொடுத்துவிட்டு மீண்டும் போனில் மோபைல் லெஜென்ட் கேமில் கவனத்தைப் பதித்தான் அவன்.

ராகவியின் முகமாற்றத்தை குணாவும் அவதானித்துக் கொண்டுதான் இருந்தான். ஏற்கனவே வீட்டில், எந்த முடிவையும் பெண் வீட்டினர் முன்னே உடனேயே அறிவிக்கக் கூடாது என இருவரும் பேசி வைத்திருந்தனர்.

“சரிங்க மிஸ்டர் ஆறுமுகம், நாங்க வீட்டுக்குப் போய் பேசிட்டு உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறோம்” என சொல்லியவாறே எழுந்தான் குணா. ஆனால் தானும் எழாமல், குணாவின் கையைப் பிடித்து மீண்டும் அமர்த்திய சதா நிமிர்ந்து ஆறுமுகத்தைப் பார்த்து,

“உங்க வீட்டுல இன்னும் வேற யார் இருக்கீங்க?” என கேட்டான்.

இவ்வளவு நேரம் அமைதியாக அமர்ந்திருந்தவனின் ஆளுமையான குரலில் எல்லோரும் அவன் முகத்தை கவனிக்க ஆரம்பித்தனர்.

“எங்க கடைசி மகன் மட்டும்தான் மாப்பிள்ளை. எங்கயாச்சும் விளையாடிட்டு இருப்பான்.” என்றார் பூரணி.

“இன்னும் வேற யார் இருக்காங்க?” என அழுத்தமாக கேட்டான் சதா.

“என் தங்கச்சி மக எங்க கூடத்தான் இருக்கா” என்றார் ஆறுமுகம்.

‘இப்போ அத சொல்லியே ஆகனுமா?’ என்பது போல ஆறுமுகத்தை முறைத்த பூரணி,

“அவ ஒரு அனாதை மாப்பிள்ளை. அஞ்சு வயசிலேயே ஆத்தா அப்பன முழுங்கிட்டா. சோத்துக்கு சிங்கி அடிச்சிட்டு இருந்தவள நாங்கதான் பாவப்பட்டு வளர்க்கறோம். படிப்பு ஒன்னும் ஏறல கழுதைக்கு. அடுப்படியிலேயே திருடி தின்னுக்கிட்டு கிடக்கும். எவ்வளவு சாப்பாடு போட்டாலும் உடம்புல ஒட்டாது. திங்கறது எல்லாம் எலும்புல சொருகிகிட்டு வத்தலும் தொத்தலுமா கிடப்பா. எல்லாம் வினை. நம்ப ராகவி மாதிரி லட்சணமும் கிடையாது. பீடை!” அவனிடமே கரித்துக் கொட்டினார் பூரணி.

“உங்க மகனையும், அந்தப் பொண்ணையும் கூப்பிடுங்க. சொந்தம் ஆக போறோம், உங்க குடும்பம் மொத்தமும் எனக்கு தெரியனும்ல!” கட்டளையாக வந்தது அவன் குரல். ஆச்சரியமாக தன் நண்பனைப் பார்த்தான் குணா.

கணவனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார் பூரணி. கூப்பிட சொல்லி ஜாடை காட்டினார் அவர். மாடிப்படியின் அருகில் சென்ற பூரணி,

“ராம் டேய் ராம்! கீழ இறங்கி வாடா. உன்னோட அப்பியையும் கூட்டிட்டு வா” என குரல் கொடுத்தார். மேல் மாடியில் இருந்து கீழே நடப்பதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

ராம் தடதடவென படியில் ஓடி வர அவன் பின்னாலேயே அமைதியாக வந்தாள் அபி. இறங்கி வந்த இருவரும் பூரணியின் அருகில் வந்து நின்றனர். சதா அவளைப் பார்த்து லேசாக புன்னகையை சிந்த

‘அடப்பாவி! எல்லார் முன்னுக்கும் சிரிக்கறானே! இவன் போனதும் இந்த ராகவி பிசாசு என்னைப் பேய் ஓட்டிருமே!’ என மனதில் புலம்பிக் கொண்டே பார்வையை ராகவி மேல் நிறுத்தினாள். அவள் எதிர்ப்பார்த்தது போலவே ராகவியின் மூக்கு விடைத்து துடித்தது.

‘ரைட்டு! இன்னிக்கு வெட்டு சார் தயவுல என் கச்சேரிக்கு நேரம் குறிச்சிட்டா இந்த சாகவி’

“உன் பெயர் என்ன?” என ராமை பார்த்துக் கேட்டான் சதா.

“என் பேரு ராம்சரண். அப்பி அக்காதான் வச்சா இந்தப் பேர. அவளுக்கு தெலுங்கு நடிகர் ராம்சரண ரொம்ப பிடிக்கும். போட்டோ கூட ரூம் கதவுல ஒட்டி வச்சிருக்கா! நான் தான் பேப்பருல இருந்து வெட்டிக் குடுத்தேன்” என்றான் ராம்.

“ஓஹோ! உங்க அக்காவோட பேரே வெறும் அப்பிதானா? இல்ல அழுக்குச்சுப்பிய அப்பின்னு சுருக்கிக் கூப்பிடறயா?” என ஓரக்கண்ணால் அபியைப் பார்த்தப்படியே கேட்டான். அவன் எதிர்பார்த்தது போலவே, ராகவியின் புறம் பார்த்தவாறு நின்றிருந்தவள், இவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தாள்.

“அவ பேரு அப்பிநயசரஸ்வதி, அழுக்குச்சுப்பி இல்ல வெட்டு சார்” என்றான் ராம்சரண்.

ராகவியைப் பார்க்க வந்தவன் பார்வை அபியிடம் பாய்வதைப் பார்த்து நொந்து போனார் ஆறுமுகம். அவன் போனதும் பூரணி இவரை அல்லவா வாட்டி எடுப்பார்.

“சரிடா ராம். அபியைக் கூப்பிட்டு உள்ள போ! நாங்க முக்கியமான விஷயம் பேசனும்” என அவர்களைக் கிளப்ப முனைந்தார் அவர்.

அவர்கள் இருவரும் விட்டால் போதும் என நடையைக் கட்ட,

“அபிநயசரஸ்வதி!” என முழு பேர் சொல்லி கூப்பிட்டு அவளை நிறுத்தினான் சதா.

திரும்பி என்ன என்பது போல அவனைப் பார்த்தாள் அபி.

“என்னைக் கல்யாணம் செஞ்சிக்கிறியா?” என அவள் கண்களை ஆழ்ந்து நோக்கிக் கேட்டான் சதா. அதிர்ச்சியில் எல்லோரும் வாய் பிளந்து நின்றார்கள்.

ஆச்சரியத்தில் விரிந்த அவளின் கண்கள், மறுநொடி பயத்துடன் ராஜாவை நோக்கியது.

“சொல்லு அபி! நீ தாவி தாவி விளையாட நம்ம வீட்டுல நிறைய மரம் நட்டு வைக்கறேன். என்னைக் கல்யாணம் செஞ்சிக்கிறீயா?”

தொடரும்..
 

Thani

Active member
Nov 27, 2025
144
-39
43
ஹீரோ சாரே..! சூப்பர்,தடலடி பேச்சு தான் உங்களுக்கு பிடிக்குமோ..!
அப்பி சதாவை கெட்டியா பிடித்துக்கொள்.