Urasathe--EPI 11

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
932
-1,941
93
அத்தியாயம் 11

டிமென்ஷியாவைத் தடுப்பது எப்படி

மூளையின் செயல்பாட்டை தூண்டுதல்

புதிதாக எதையாவது கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். புதிய இசைக்கருவி(music instrument) வாசிக்கப் பழகுவது, புது பொழுது போக்கை(hobby) உருவாக்கிக் கொள்வது, நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுத்துப் படிப்பது போன்றவை மூளையைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். எப்பொழுதும் இருக்கும் சில பழக்கங்களை மாற்றுவதும் இதற்கு உதவும். வலது கை பழக்கம் உள்ளவர்கள், இடது கையைப் பயன்படுத்தி பார்ப்பது, எப்பொழுதும் பயன்படுத்தும் பாதையை மாற்றி மாற்று வழியில் செல்வது போன்றவை நல்லபடியாக மூளையைத் தூண்டி உயிர்ப்போடு வைத்திருக்கும்.


சதாவைப் பார்த்து செக்கில் சைன் வாங்குவதற்காக காலையிலேயே வந்திருந்தான் குணா. இன்று வேலை செய்பவர்களுக்கு போனஸ் வழங்கும் நாள். சம்பளப் பணம் நேராக எல்லோரின் அக்கவுண்டில் செலுத்தப்படும். போனஸ் மட்டும் வெள்ளையர்கள் போலவே, டிசம்பரில் தான் தருவார்கள் இவர்கள். அதுவும் நேரில் பேசி, அந்த ஆண்டு முழுக்க அவர்களின் வேலைத் திறனைப் பாராட்டி தன் கையாலேயே கவரைக் கொடுப்பான் குணா. திட்டம் எல்லாம் சதாவுடையதுதான், செயல்பாடு மட்டும் குணாவின் கையில் அல்லது தலையில் என சொல்ல வேண்டுமோ!

சதா இன்னும் கீழே வந்திருக்காததால், டைனிங் ஹாலுக்குள் நுழைந்தான் குணா.

“சாமீண்ணா! ஸ்ட்ராங்கா ஒரு கப் காபி குடுங்க! நீங்க குடுக்கற காபிய குடிச்சதும் போன ஜென்ம ஞாபகம் கூட பளீர்ன்னு வரனும்” என சமையல் கட்டை நோக்கிக் குரல் கொடுத்தவன், சாவகாசமாக நாற்காலியில் அமர்ந்தான்.

“இருப்பா வரேன்” உள்ளிருந்து சத்தம் வந்தது. சற்று நேரத்தில் காபி ஜக்குடன் வெளியே வந்த சாமி,

“யப்பா குணா! காலைக்கு சாப்பிட இட்லியும் செஞ்சிருக்கேன். தோசையும் இருக்கு. இரு எடுத்துட்டு வரேன், சாப்பிடு. நான் கொஞ்சம் மார்க்கெட் வரை போய்ட்டு வந்துருறேன். அப்பாவுக்கு நண்டு மசாலா வேணுமாம். திடீர்னு நேத்து நடுராத்திரில தூங்கன என்னை எழுப்பி சொல்லிட்டுப் போனாரு. அந்த மனுஷன் இப்படி ஆசையா சாப்பாடு பண்ணி போட கேட்டு எத்தனை நாளாச்சு! அப்போ புடிச்சு நான் தூங்கல, எப்போ விடியும் எப்போ அவருக்கு சமைச்சுக் குடுப்போம்னு ஒரே பரபரப்பு. நான் நேரா போய், நல்லதா நாலு நண்டு வாங்கிட்டு வரேன். சதா கிட்ட சொல்லிரு” துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டார்.

“நான் சொல்லிடறேன் சதாகிட்ட! சாப்பாட்டுல என்ன கெஞ்சத்தனம்? நாலு நண்டு மட்டும் வாங்காம, நாற்பது நண்டா வாங்கிட்டு வாங்க சாமீண்ணா. இன்னிக்கு எனக்கும் உங்க கையால தான் லன்ச்”

“உனக்கு இல்லாததாப்பா! நான் சமைக்கறத ரசிச்சு ருசுச்சு சாப்பிடற ஒரே ஜீவனாச்சே நீ. இந்த சதா, தட்டுல என்ன விழுகுதுன்னு கூட தெரியாம கொரிச்சுட்டுப் போவான். எனக்கும் கல்யாணம் காட்சி ஆகி இருந்தா, என் பையனும் ஒன்ன மாதிரிதான் என் கை மணத்துல மயங்கிக் கிடப்பானா இருக்கும்!” பெருமூச்சு ஒன்றை விட்டார் சாமி.

“இப்ப மட்டும் என்ன குறைஞ்சு போச்சு சாமீண்ணா! ஹீம்னு ஒரு வார்த்தை சொல்லுங்க நீங்க கட்டிக்க பொண்ணுங்கள கியூல கொண்டு வந்து நிறுத்துறேன்!” என்றான் குணா.

“ஹீம்” என்று பதில் சொன்னார் சாமி.

“என்ன சாமீண்ணா பொசுக்குனு ஹீம் சொல்லிடீங்க! இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்! ஒரு வயசு பையன் இப்படி கேட்டா, பதிலுக்கு நீங்க என்ன சொல்லனும்?”

“என்ன சொல்லனும்?”

“காடு வா வாங்கற வயசுல எனக்கு எதுக்குப்பா பொண்ணு? நீ தான் வயசு பையன், சீக்கிரமா நீ கல்யாணம் பண்ணிக்க. வருஷத்துக்கு மூனா நீ பெத்து போடற பிள்ளைங்கள தூக்கி கொஞ்சி நான் காலத்தை ஓட்டிருறேன்னு சொல்லனும்!”

“ஓஹோ, அது சரி! வருஷத்துக்கு மூனா? ஒருத்தனுக்கு எழுந்து நடக்கவே முடியலையாம், ஆனா நயன்தாரா தான் என் பொண்டாட்டின்னு ஊரே சொல்லிகிட்டு திரிஞ்சானாம்!”

“இப்படிலாம் உங்கள நீங்களே டேமேஜ் பண்ணிக்க கூடாது சாமீண்ணா.”

“அட நான் உன்னைதான்பா சொன்னேன்!” என்றவாறே சமயலறைக்குள் நுழைந்தார் சாமி.

“கிரேட் இன்சல்ட்!” நொந்துகொண்டே காபியை அருந்தினான் குணா.

அவன் பக்கத்தில் உள்ள நாற்காலி இழுபடும் சத்தத்தில் திரும்பிப் பார்த்தான் குணா. கேசிதான் அவனை அற்ப பதர் போல பார்த்துவிட்டு அலட்சியமாக அமர்ந்தாள். கப்பை எடுத்து தனக்கென காபியை ஊற்றிக் கொண்டவள், போனை நோண்ட ஆரம்பித்தாள். தொளதொளவென வெள்ளையில் பெரிய செம்பருத்தி பூக்கள் போட்ட நைட் பேண்டும், அதே ஸ்டைலில் கருப்பு கலர் ஷெர்டும் போட்டிருந்தாள். முகத்தை அப்பொழுதுதான் கழுவி துடைத்திருப்பாள் போலும், மேக்கப் இல்லாமல் ஒன்றும் தெரியாத பச்சைக் குழந்தைப் போல் இருந்தாள்.

‘யாருக்கு, இவளுக்கா ஒன்னும் தெரியாது? விட்டா ஒன்னும் ஒன்னும் நாலுன்னு கணக்கு சொல்லி இரட்டைப் பிள்ளையப் பெத்துக் கையில குடுப்பா! கேடி’ என திட்டிக் கொண்டே ஓரக்கண்ணால் அவளை அளவெடுத்தான்.

‘கொளுகொளுன்னு இருந்தாலும் கலரா அம்சமா தான் இருக்கா! வாய் மட்டும் வாத்து மாதிரி கொஞ்சம் கோணிக்கிட்டு இருக்கு. முத்தம் குடுக்க புருசன்காரனுக்கு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும். அதுக்கூட கரெக்டான பொசிசனுல நிறுத்தி முகத்த கொஞ்சம் லேசா சாய்ச்சு ட்ரை பண்ணா, கரேக்டா கிஸ் அடிக்கலாம்’ அவன் சிந்தனையைக் கலைத்தது அவள் குரல்.

“என்ன பார்வை மிஸ்டர் அருப்புக்கோட்டை அக்ஷயகுணா?”

“ஏய் நாகேசு! அந்தப் பேர தான் வெட்டி விட்டுட்டு குணான்னு மாத்திட்டேனே! எப்படி கண்டுபிடிச்ச?” கடுப்பில் கத்தினான் குணா.

“என்னை மோதிட்டு, ஒருத்தன் நிம்மதியா இருக்கலாமா? அருப்ஸ், உன் ஃபுல் டீடேய்ல், ஐ நோ!” வில்லி மாதிரி சிரித்தாள் கேசி.

“அருப்ஸ்னே அறைஞ்சி வச்சிருவேன் நாகேசு!”

“யூ சீ அருப்ஸ், எனக்கு உன் பேர் தெரிஞ்சதுல இருந்தே ஒரு பெரிய சந்தேகம்! கேட்கலாமா?” என நக்கலாக அவனைப் பார்த்து சிரித்தாள்.

அவளை முறைத்தவாறே அமர்ந்திருந்தான் குணா.
 

Author: VanishaAdmin
Article Title: Urasathe--EPI 11
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Thani and yasotha

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
932
-1,941
93
“முறைச்சா மட்டும் நான் கேட்காம இருந்துடுவேனா? அக்ஷயகுணான்றது உன் பேரு, அருப்புக்கோட்டைன்றது நீ படிச்சு வாங்குன பட்டமா?” கேட்டவள் விழுந்து விழுந்து சிரித்தாள்.

“நாகநாகேஸ்வரி! நீ சிரிக்கறது நாகம் சீறுர மாதிரி கேட்கவே நாராசமா இருக்கு. ப்ளிஸ் ஸ்டாப்!” கத்தினான் குணா.

“என்ன நக்கலா? என் சிரிப்புக்காகவே எனக்கு எவ்வளவு பாலோவர் தெரியுமா? அருப்ஸ்க்கு தெரியுமா அதிரச வாசனை?” பழமொழியை மாற்றி அவனைக் கடுப்பேற்றினாள் கேசி.

‘பழமொழில கூட திங்கறதுதானா? இதுல மட்டும் எனக்கு பொருத்தமா இருக்காளே!’ தலையை ஆட்டி அந்த எண்ணத்தை உதறியவன்,

“ஏன் நாகேசு, நீ நாகினி ட்ராமாலாம் பார்ப்பியா?” என சுவாரசியமாக கேட்டான்.

‘என்ன திடீர்னு கோபத்தை விட்டுட்டு சாந்தமா பேசறான்! சமாளிப்போம்’ என நினைத்தவள்,

“இல்லை, அதுக்கெல்லாம் எனக்கு டைம் இல்ல. யூ சீ அருப்ஸ், வீடீயோ ஷீட் பண்ணி, எடிட் பண்ணி, சவுண்ட் எபெக்ட்லாம் வச்சு அப்லோட் பண்ணவே டைம் எடுக்கும். சோ உன்ன மாதிரி வெட்டியா சீரியல்லாம் பார்க்க நேரமிருக்காது” என்றாள்.

“லேடிஸ் நீங்க பார்க்காட்டியும், காய்ஸ் நாங்க கரெக்டா நாகினி போடற டைம்ல டீவி முன்னால ஆஜர் ஆகிருவோம். என்ன ட்ராமாடா சாமி! ஒவ்வொரு காட்சியும் மனசை அள்ளிக்கும்” ரசித்து சொன்னான் குணா.

‘உன் முகரைய பார்த்தா காட்சிய ரசிக்கற மாதிரி தெரியலையே!’ சந்தேகமாக அவனைப் பார்த்திருந்தாள் கேசி.

“அந்த காலத்துல இந்த ட்ராமா வந்திருந்தா, சத்தியமா உனக்கு இந்தப் பேர வச்சிருக்க மாட்டாங்க.”

“ஏன் அப்படி?”

“வளைஞ்சு நெளிஞ்சு நாகினி நடக்கற அழகெங்கே, கத்திரிக்காய உருட்டி விட்டது மாதிரி உருண்டு போற நீ எங்கே! உனக்கு போய் அருமையான இந்தப் பேரை வச்சிருக்காங்க பாரு!” என்றவன் இடி இடியென சிரித்தான்.

“அருப்ஸ், தலையில என்னவோ இருக்கு! கொஞ்சம் கீழ குனி!” என அமைதியாக அவள் சொல்லவும், ஒன்றும் யோசிக்காமல் குனிந்தான் குணா. கையில் இருந்த காபியை அப்படியே அவன் தலை மேல் கவிழ்த்தாள் கேசி.

“ஏய், என்னடி பண்ணுற?” முகத்தில் வழிந்த காபியைத் துடைத்தபடியே கத்தினான் குணா.

“ஒருத்தரோட தோற்றத்தைப் பார்த்து கிண்டல் பண்ணறது, சைவம் எடுக்கறவனுக்கு முன்னால மட்டன் பிரியாணி சாப்பிடறதுக்கு சமம். ராஸ்கல்! என்னமோ நீ மட்டும் ஆல் இன் ஆல் அழகு ராஜா மாதிரி இருக்கேன்ற நினைப்பா? நாய் பார்த்தா கூட, உன்னைக் கடிக்காது. ஆறடியிலயும் வெறும் எலும்ப மட்டும் சொறுகி வச்சிகிட்டு என்னை ஓட்ட வந்துட்டான்!”

இப்பொழுது இவனுக்கு கோபம் வந்திருந்தது. தன் கையில் இருந்த காபியை அவள் தலையில் அபிஷேகம் செய்தவன், அவளை முறைத்தப்படி நின்றான். அவளும் முகத்தைத் துடைத்துக் கொண்டு அவனை முறைத்த படி இருந்தாள்.

அந்த நேரத்தில் தான் உள்ளே வந்தார்கள் சதாவும் அபியும். இவர்கள் இருந்த நிலையைப் பார்த்து சிரிப்பு வந்தாலும், ஒன்றும் பேசாமல் நாற்காலியில் அமர்ந்தார்கள் இருவரும். சதாவுக்கு காபியை ஊற்றிய அபி,

“வெட்டு சார், காபிய வாய் வழியா குடிக்கனும். மத்தவங்க மாதிரி தலை வழியா குடிக்கக் கூடாது” சிரித்தபடி சொன்னாள். குணாவும் கேசியும் சேர்ந்தே அவளை முறைத்தார்கள்.

“என்ன முறைப்பு ரெண்டு பேருக்கும்? மச்சானும், மச்சினியும் யெல்லோ வாட்டர் ஊத்தி விளையாடற மாதிரி விளையாடிட்டு முறைப்பு வேற! முறைக்கற உங்க ரெண்டு பேரையும் கவிதை சொல்லி கொல்லுறேன் பாருங்க” என்றவள்,

“என்னோட பேரு அபி

பக்கத்துல என் ஹபி

சத்யராஜ் மகன் சிபி

தலையால குடி காபி” என்று சொல்லி விட்டு பகபகவென சிரித்தாள். பக்கத்தில் இருந்த சதாவும் அவளோடு சேர்ந்து சிரித்தான்.

அப்பொழுது அங்கே வந்து அபியின் அருகில் அமர்ந்த குமரகுரு,

“பாப்பா, எனக்கு காபி” என கேட்டார். குடிக்காமல் இருந்த தன் கப்பை அவருக்கு நகர்த்தி வைத்த அபி சிரித்தவாறே,

“குட் மார்னிங் அப்பா” என்றாள்.

“குட் மார்னிங்மா”

குணாவையும் கேசியையும் பார்த்து விழித்த குமரகுரு, என்ன நினைத்தாரோ தன் காபியை எடுத்து அபியின் தலையில் ஊற்றி,

“நீ மட்டும் ஏன் இன்னும் காபி குடிக்காம இருக்க? அப்பா தலைக்கு ஊத்திருக்கேன் பாரு, குடிச்சிரும்மா!” என்றார்.

சூடான காபி, முகத்தில் இறங்கவும் திகைத்துப் போய் எழுந்தாள் அபி.

அவள் திகைத்த முகத்தைப் பார்த்து மற்ற மூவரும் அடக்கமாட்டாமல் சிரித்தார்கள்.

“உங்க பேரு அபி

பக்கத்துல உங்க ஹபி” என குணாவும்

“சத்யராஜ் மகன் சிபி

உன் தலையிலும் காபி” என கேசியும் அவள் கவிதையை அவளுக்கே எடுத்து விட்டு ஹை பை செய்துக் கொண்டார்கள்.

சிரித்தபடி எழுந்து கிச்சன் டவலால் அபியின் முகத்தை துடைத்த சதா, கைப்பற்றி மீண்டும் அவளை அமர வைத்தான்.

நடந்த கூத்தைப் பார்த்திருந்த மணியம், புன்னகையுடன் சாப்பிட அமர்ந்தார். மகள் கையால் தான் சாப்பிடுவேன் என அடம்பிடித்த குமரகுருக்கு தானே இட்லியை ஊட்டி விட்டபடி சாப்பிட்டாள் அபி. அவள் தட்டில் காலி ஆக ஆக, இட்லியை நிரப்பியவாறே சாப்பிட்டான் சதா.

தங்களை அறியாமல், ஹைபை கொடுத்துக் கொண்ட இரண்டு சண்டைக் கோழிகளும் மீண்டும் சிலிர்த்து, முகத்தைத் திருப்பிக் கொண்டு சாப்பிட்டனர்.

எந்நேரமும் அமைதியாக இருக்கும் அந்த சாப்பாட்டு மேசை இன்றுதான் கலகலப்பான சூழலை சந்தித்திருந்தது. தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள குணா இங்கு வந்தால் அவன் பயன்படுத்தும் அறைக்கு சென்றுவிட, அபியும், கேசியும் தங்களது அறைக்கு சென்றார்கள் குளிக்க.

ரூமுக்குள் செல்லும் முன் குமரகுரு,

“தம்பி!” என சதாவைக் கூப்பிட்டார்.

“சொல்லுங்கப்பா” என அவர் அருகில் வந்து கையைப் பற்றிக் கொண்டான் சதா.

“என் மக பேரு என்ன?”

“அவ பேரு அபி”

“ஆமா அபி, அபி! அவளுக்கு நீ நல்ல சாப்பாடே போடறது இல்லையா? ஏன் இப்படி எலும்பும் தோலுமா இருக்கா?”

“இனிமே நல்ல சாப்பாடு போடறேன்பா”

“இனிமேதான் போட போறியா? இவ்வளவு நாளா அவள பாத்துக்காம என்னத்தை வெட்டி முறிச்ச? என் பொண்டாட்டிய நான் எப்படி கைல வச்சு தாங்குவேன் தெரியுமா?”

“தெரியும்பா!” குரல் கரகரத்தது சதாவுக்கு.

“என்னத்த தெரியுமோ போ! தெரிஞ்சா பொண்டாட்டிய இப்படி வச்சிருப்பியா? என் கண்ணுரங்கத்த, என் பொண்டாட்டிய அப்படிதான் செல்லமா கூப்புடுவேன். ஹ்ம்ம்..அவ நிஜ பேரு என்ன?” விழித்தார் குமரகுரு.

“அமராவதி!” கண்கள் லேசாக கலங்கியது சதாவுக்கு.

“ஓ அமராவதியா? சரி, நான் என்ன சொல்ல வந்தேன்?”

“உங்க கண்ணுரங்கத்த எப்படி பார்த்துக்குவீங்கன்னு சொல்ல வந்தீங்கப்பா”

“ஆமா, ஆமா! என் கண்ணுரங்கத்த இந்த கையால தான் ஊட்டி வளர்த்தேன். வீட்டுல இருக்கறப்பல்லாம் நான் தான் அவளுக்கு ஊட்டுவேன். இல்லைனா வேலை இருக்குன்னு சரியா சாப்பிடமாட்டா! என் மகன் பின்னாலயே ஓடிட்டு இருப்பா. அவன் இருக்கானே, என் மகன்! சரியான வாலு. ஒரு இடத்துல அடங்கி உட்கார மாட்டான். அவ இடுப்புலயே வச்சிக்கிட்டு சுத்துவா, எங்க கீழ விட்டா எங்கயாவது விழுந்து வாரிருவானோன்னு. அவ்வளவு பாசக்காரி. அவளுக்கு ஒரு வாய், மகனுக்கு ஒரு வாய்னு ஊட்டி விடுவேன். ரெண்டும் எச்சி வாயாலேயே என் கன்னத்த எச்சிப் பண்ணுங்க. இப்போ ரெண்டு பேரையும் காணோம். எங்க போனாங்கன்னு உனக்கு தெரியுமா?”

“சீக்கிரம் வருவாங்கப்பா”

கண்ணில் கண்ணீர் கோர்த்தது குமரகுருவுக்கு.

“நெஜமா வருவாங்களா? நான் அவங்க ரெண்டு பேரையும் ரொம்ப மிஸ் பண்ணுறேன்.”

“தெரியும்பா!” குரல் கம்மியது சதாவுக்கு.

“கடவுள் அருளால எனக்குப் புது மக கிடைச்சிருக்கா. நல்லா பாத்துக்கோ அவள! இல்லைனா வேற பையனுக்கு கட்டி வச்சிருவேன்!”

“அப்படிலாம் ஏதும் செஞ்சிறாதீங்கப்பா. உங்க கண்ணுரங்கத்த விட்டுட்டு எப்படி உங்களால இருக்க முடியலையோ, அதே மாதிரி உங்க மக இல்லாம என்னால இருக்க முடியாதுப்பா” தன் தந்தையை இறுக அணைத்துக் கொண்டான் சதா.

“விடு, விடு!” அவன் அணைப்பில் இருந்து திமிறி வெளியானார் குமரகுரு.

“ஒரு வருஷத்துல எத்தனை நாளு இருக்கு?” என அவனைப் பார்த்துக் கேட்டார் அவர்.

“365 நாள் இருக்கு”

“அப்போ சரி, அத்தனை நாளுக்குள்ள என் மக நல்ல புஷ்டியா ஆகி எனக்கு ஒரு பேர புள்ளைய பெத்துக் குடுத்தா, நீ அவளுக்குப் புருஷனா இரு. இல்லைனா வேற மருமகனை மாத்திருவேன்” கை நீட்டி எச்சரித்தவர் மெல்ல நடந்து மணியத்துடன் ரூமுக்குள் சென்று விட்டார்.

அவர் பேசியதை கேட்டபடி வந்த குணா,

“என்ன மச்சி, அப்பா உனக்கு ஆப்படிக்கிறாரு! ஹ்ம்ம் பாவம்பா நீ. எனக்கேன்னமோ அடுத்த வருஷம் தங்கச்சிக்கு இன்னொரு மாப்பிள்ளை கன்பர்ம்னு தோணுது.” என அவன் மூடை மாற்றுவதற்காக கிண்டலடித்தான்.

“கொன்னுருவேன்டா உன்னை!”

“கூல் மச்சி! கண்ணால காதல் கடிதம் அனுப்புனா மட்டும் போதுமா? எப்போ அடுத்த ஸ்டேப் எடுத்து வச்சி அப்பாவாகறது?”

“நாங்க கண்ணால காதல் பண்ணுறோம், இல்ல மூக்கால மொஹபத் பண்ணுறோம், அது எங்க பிரச்சனை! நீ வந்த வேலைய கவனி”

“உள்ளத சொன்னா நொள்ளைக் கண்ணனுக்கு நோப்பாளமாம்!” முனகினான் குணா.

“என்ன முணுமுணுப்பு?”

“ஒன்னும் இல்ல பாஸ்! செக்ல சைன் வச்சா நான் நடைய கட்டுவேன்னு சொன்னேன்!”

“குடு” என வாங்கிய சதா, அதோடு தொழில் பேச்சுக்கு தாவி இருந்தான்.

அந்தி சாயும் நேரம், சூரியன் மறைவதைப் பார்த்தவாறு தோட்டத்தில் நின்றிருந்த அபியை இறுக்கமாக இரு கரங்கள் பின்னாலிருந்து அணைத்துக் கொண்டன.
 

Thani

Active member
Nov 27, 2025
144
-39
43
ஹீரோ சார் அபி ஃப்பா சொன்னது புரிஞ்சதா 😀அதை நடத்தி காட்டிடுங்க சாரே இல்லை வருத்தப்படும் படி ஆகிடும்.
 
  • Love
Reactions: VanishaAdmin