அத்தியாயம் 5
நீதானே என் கோயிலில் குடியிருக்கும் அம்பிகை!
தனிக் கட்டிடம், சுற்றிலும் மரங்கள், காண்டீன் என அமைந்தது அல்ல அந்தக் கல்லூரி. கடை வீதியில் இருந்த மூன்று மாடி கட்டிடத்தின் கார்னர் லாட்டை வாங்கி கல்லூரியாக மாற்றி அமைத்திருந்தார்கள். கீழ் தளத்தில் ரிஷப்சன், மீட்டிங் ஹால், விரிவுரையாளர்களுக்கான அறை, ஆபீஸ் அறை, பானங்கள் வாங்க வெண்டிங் மிசின் போன்றவை இருக்கும். இரண்டாம் மாடியில் கணிணி லேப், நூலகம், வகுப்பறைகள் என இருக்கும். மூன்றாவது மாடி முழுவதும் வகுப்பறைகள்தான். எல்லா தளத்திலும் டாய்லட்கள் இருக்கும். இந்தக் கல்லூரியில் ஐ.டி, மேனேஜ்மேண்ட் மற்றும் மனிதவள துறை படிப்புத்தான் முக்கியப் பாடமாக இருந்தது.
2000 ஆண்டின் காலக்கட்டத்தில் இந்நாட்டில் கல்லூரி என்பது படிப்பில் கோட்டை விட்டவர்களுக்கானது எனத்தான் அறியப்பட்டது. நன்றாய் படிப்பவர்கள் பல்கலைக்கழகம், அரசாங்கத் தொழில் கல்லூரிகளில் சேர்க்கப்பட, நன்றாக மார்க் வாங்காத பணம் படைத்தவர்கள் இது போல தனியார் கல்லூரிகளில் பணம் கட்டிப் படிப்பார்கள். அங்கே படிப்பதற்கான கட்டணம் அதிகமாகவே இருக்கும்.
பகாங் மாநிலத்தில் குவாந்தான் டவுனில் இருந்த அந்தக் கல்லூரியிலும் சற்று மேல் தட்டு மக்களே படித்தார்கள். மலேசிய சீனர்களே அங்கு எண்ணிக்கையில் அதிகமாக இருந்த மாணவர்கள். சொற்ப எண்ணிக்கையில்தான் இந்தியர்களும், மலாய் மாணவர்களும் இருந்தார்கள். இந்தக் கல்லூரியில் படித்தால் நன்றாகப் படிக்கலாம், மார்க் நன்றாக எடுக்க முடியும் எனக் காட்டும் விதமாகத்தான் ஏற்கனவே நன்றாகப் படிக்கும் மாணவர்களை ஸ்காலர்ஷிப் கொடுத்து அங்கே சேர்த்துக் கொள்வார்கள். அப்படி சேர்ந்தவன்தான் விஜயவேல். இவன் படித்து முடித்ததும், அவனது மார்க் ஷீட்டை விளம்பரப்படுத்தி, இவர்கள் கல்லூரிக்கு இன்னும் ஆட்களை வர வைக்கும் திட்டம். பணம் கட்டாமல் படிப்பதில் இவனுக்கும் லாபம். இவனை வைத்து இன்னும் பலரை உள்ளே இழுத்துக் கொள்ளப் போவதால் கல்லூரி நிர்வாகத்துக்கும் லாபம்.
படிப்பின் மேல் இவனுக்கு இருந்த ஆர்வமும், படிப்புக்கு இவன் மேல் இருந்த பாசமும் பரிட்சைகளின் போது அப்பட்டமாகவே வெளிப்படும். இவனது திறமையைப் பார்த்துப் பல லெக்சரர்கள் விஜயை கொண்டாடி விடுவார்கள். காலேஜ் ஓனரான சீனரின் மகனான சைமனுக்கு மட்டும் இவனைப் பார்த்தால் அப்படி ஓர் இளக்காரம். அவன் படித்து முடித்து விட்டு காலேஜ் நிர்வாகத்துறையில்தான் வேலைப் பார்த்தான். ஃப்ரீ சீட்டில் வந்தவன் விஜய் என்பதால், அடிக்கடி பல வேலைகளை அவன் தலையில் கட்டி விடுவான் சைமன்.
காலேஜ் நடத்தும் சில நிகழ்ச்சிகளுக்கு பேனர், நேம் கார்ட் டிசைன் செய்வது, புது மாணவர்களுக்கு கைடாக இருப்பது, இப்படி வித விதமான வேலைகள் அவன் தலையில் வந்து விழும். எல்லாமே நமக்கான அனுபவம்தானே என விஜயும் ஆர்வமாகவே செய்வான். இந்த முறை டிப்ளோமா கோர்ஸில் சேரப் போகும் மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சியை விஜய்யிடம்தான் வழி நடத்தச் சொல்லி இருந்தார்கள். அவனோடு சேர்த்து இன்னும் சில சீனியர் மாணவர்களுக்கும் பொறுப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. மீட்டிங் ஹாலில் அமர்ந்து, கணிணியில் இவன் தயாரித்திருந்த ஸ்லைட்களை ஒரு முறை செக் செய்தவன், ப்ராஜெக்டருக்கு கணேக்ஷன் கொடுத்தான்.
இவனோடு வேலை செய்தவர்கள், ப்ரிண்ட் செய்திருந்த ஸ்லைட்களை மாணவர்கள் அமரப் போகும் மேசைகளில் வைத்தார்கள். அதோடு அவர்களுக்கான வாட்டர் பாட்டிலையும் சேர்த்து வைத்தார்கள். இன்னும் அரை மணி நேரத்தில் புது பேட்ச் மாணவர்கள் வரத் தொடங்கி விடுவார்கள்.
அறைக்குள் வந்த சைமன்,
“விஜே! எல்லாம் சரியா இருக்கா? ஸ்டூடண்ட்ஸ் கழுத்துல போட்டுக்கற நேம் கார்ட் எல்லாம் ரெடியா? எந்த வித குறையும் இல்லாம ஓரியெண்டேஷன்(அறிமுக நிகழ்வு) கரேக்டா நடக்கனும். புரிஞ்சதா?” எனக் கேட்டான்.(ஆங்கில, மலாய் சம்பாஷணைகள் உங்களுக்காகத் தமிழில் கொடுக்கப்படுகிறது)
“எல்லாம் சரியா இருக்கு சார்” எனப் பதில் கொடுத்தான் விஜய்.
சைமன் விஜயை விட இரண்டு வருடங்கள்தான் பெரியவனாக இருப்பான். ஆனாலும் பணம் தந்த மிடுக்கும், பதவி தந்த பந்தாவும் அவனைத் தோரணையாகக் காட்டியது.
அந்த மீட்டிங் ஹாலை ஒரு முறை சுற்றிப் பார்த்தவன்,
“நான் நிகழ்ச்சி ஸ்டார்ட் ஆனதும் வரேன்” என வெளியேறிப் போனான்.
“பந்தா பரமசிவம்! இவன் மூஞ்சும் முகரையும்! எனக்கும் ஒரு காலம் வரும்டா! நானும் அப்போ உன்னைப் போல பந்தா பண்ணுவேன் பாரு” என முனகியபடியே வேலைகளைப் பார்த்தான் விஜய்.
அறிமுக நிகழ்ச்சி எல்லா துறை மாணவர்களுக்கும் ஒன்றாகத்தான் நடக்கும். ஒரு நாள் மட்டுமே நடக்கும் இந்த நிகழ்ச்சி முடிந்து மறுநாள் துறை வாரியாக பிரிந்து வகுப்புக்குச் செல்ல ஆரம்பிப்பார்கள் மாணவர்கள். காலை மணி ஒன்பதாக, ஒவ்வொரு மாணவர்களாக உள்ளே வர ஆரம்பித்தார்கள். விஜய் வேலையில் கவனமாக இருந்தாலும், உள்ளே வந்து கொண்டிருக்கும் புதிய மாணவர்களின் மேல் ஒரு கண்ணும் வைத்திருந்தான். வந்தவர்கள் எல்லோரையும் சிரித்த முகமாக வரவேற்று அமர வைத்தார்கள் இவனோடு பொறுப்பில் இருந்தவர்கள்.
கருப்பு வர்ண ஜீன்சும், அதே வர்ணத்தில் டீ ஷர்டும் போட்டிருந்த ஓர் உருவத்தின் மேல் இவன் பார்வை அதிக நேரம் நிலைத்து நின்றது.
“ஷாலு நீ படிக்கற காலேஜ்லதான் ஜாய்ன் ஆகறா! கொஞ்சம் அவள பார்த்துக்கோ விஜய்!” எனப் பல்கலைக்கழகத்துக்குக் கிளம்பும் முன் இவனைப் பார்த்துச் சொல்லி விட்டுச் சென்றிருந்தான் அவளது பெரிய அண்ணன் மகேஷ்வரன்.
இவனும் சரியெனச் சொல்லி இருந்தான். ஆண்கள் மூவரும் கிட்டத்தட்ட சம வயதினராக இருக்க, சட்டென மலர்ந்திருந்தது நட்பு. என்னவோ அவள் அவனிருக்கும் இடத்துக்கே படிக்க வருவது ஒரு வித மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது விஜய்க்கு. அந்த மகிழ்ச்சி ஏன் என ஆராய்ந்து பார்க்க விரும்பாதவன், உள்ளேயே அந்த உணர்வை அடக்கி, அமுக்கி வைத்தான்.
தன்னை யாரோ குறுகுறுவெனப் பார்ப்பதை உணர்ந்து நிமிர்ந்து நோக்கினாள் இவள். அந்தப் பார்வைக்குரியவன் விஜய் எனத் தெரிந்ததும் அலட்சியமாய் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் பெண். அவனும் அங்கேத்தான் படிக்கிறான் என அண்ணன்கள் சொல்லித் தெரியும் இவளுக்கும்.
“மேல் வீட்டு விஜய் அங்கத்தான் ஷாலு படிக்கறான். எதாவது பிரச்சனைனா, இல்ல எதாவது தெரியலைனா அவன கேட்டுக்கோ!” எனச் சொல்லி இருந்தான் மகேஷ்.
‘பிரச்சனையே அவன்தான்!’ என மனதில் நினைத்தவள், தலையை மட்டும் சம்மதமாக ஆட்டி வைத்திருந்தாள் அண்ணனிடம்.
அவன் பார்வை அங்கிங்கு நகராமல் இவள் மேல் பசைப் போட்டு ஒட்டி இருக்க,
‘பார்க்கறத பாரு பஞ்சுமிட்டாய பச்சைக் குழந்தைப் பார்க்கற மாதிரி! பரதேசி!’ என மனதினுள் திட்டித் தீர்த்தவள் அவனை முறைத்துப் பார்த்தாள்.
இவன் பார்த்ததை அவள் கவனித்து விடவும், சட்டென வேறு புறம் திரும்பிப் கொண்டான் விஜய்.
‘ச்சை! என்னதிது அவளயே வச்சக் கண் வாங்காம பார்க்கறேன்! பொறுக்கின்னு நெனைச்சிட போறா! ஏற்கனவே என் மேல கடுப்புல இருக்கா!’ என எண்ணியவனுக்கு அன்றொரு நாள் சூப்பர் மார்க்கேட்டில் நிகழ்ந்தது நினைவுக்கு வந்தது.
“மீண்டும் மீண்டும் பாப்பாவா?”
கோபத்தில் முகம் சிவந்து கிடந்தது அவளுக்கு.
“போன தடவை யாரோதானேன்னு நினைச்சி திட்டறதோட விட்டேன். இந்தத் தடவை சும்மா இருக்க மாட்டேன். உடனே போய் எங்கப்பாட்ட உன்னைப் பத்தி வத்தி வச்சு, வீட்டைக் காலி பண்ண வைக்கறேன் பாரு” எனப் படபடத்தாள் பெண்.
‘மறுபடி இன்னொரு வீடா?’ என எண்ணியவனுக்கு கண்ணைக் கட்டியது.
“சாரி! சாரி! அப்போ இருட்டுல உருவத்த மட்டும் பார்த்துட்டு, சின்னப் பொண்ணுன்னு நினைச்சி அப்படி கூப்டுட்டேன்! சாரி! உன்னைக் கிண்டல் கேலிலாம் பண்ணற எண்ணம் எனக்கு அறவே இல்லை! இப்போ கூட ப்ளேயர்ல கேட்டுட்டு இருந்த பாட்டத்தான் பாடுனேன்” என்றவன், சட்டென இவன் காதில் இருந்து இயர்போனை கழட்டி அவளது காதில் சொறுகி விட்டான்.
சில நிமிடங்கள் உண்ணிப்பாக அந்தப் பாட்டைக் கேட்டவள், இயர்போனை கழட்டி அவனிடம் நீட்டினாள். அவனை ஆழ்ந்து பார்த்து,
“மொட்டை மாடி ஊஞ்சல் எனக்கு மட்டும்தான் சொந்தம்! அதுல நீ உக்கார கூடாது! புரிஞ்சதா?” எனப் பாப்பா பஞ்சாயத்தை விட்டு விட்டு ஊஞ்சலுக்கான உரிமைப் போரை ஆரம்பித்து விட்டுச் சென்று விட்டாள்.
தன்னைக் கடந்து போய் கொண்டிருப்பவளையே பார்த்தபடி நின்றிருந்தான் விஜய்.
‘நைட் டைம்ல அந்த ஊஞ்சல்ல உக்காந்து படிக்கறத பார்த்துட்டா போலிருக்கு! மிழற்றிட்டு போறாளா இல்ல மிரட்டிட்டுப் போறாளான்னே தெரியலையே! குட்டி பொம்மை ஒன்னு வாய் பேசறது போலவே இருக்கு!’ என எண்ணிக் கொண்டவன் மெலிதாய் நகைத்துக் கொண்டான்.
பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி பெண்களிடம் பேசிப் பழகி சிரித்திருக்கிறான் விஜய். நட்பை மட்டுமே அடிப்படையாய் கொண்டிருக்கும் அவன் பழக்கம். இவனது நண்பர்கள் டேட்டிங், சேட்டிங்(chatting) என இருக்கும் போது, நாம் வாழும் இந்தப் பிச்சைக்கார வாழ்க்கையில் இவையெல்லாம் தேவையா என எண்ணி மனதை அலைபாய விட்டதில்லை இவன்.
ஆனால் இந்தக் குட்டிப் பெண் முதல் பார்வையிலேயே இவனை என்னவோ செய்திருந்தாள். வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் செயல்பட்டுக் கொண்டிருந்தவனின் உடலும் உள்ளமும், இவளைக் கண்டதில் இருந்து தட்டுத் தடுமாறி, தடம் மாறிக் கொண்டிருந்தன. தனக்குள்ளும் ஹார்மோன்கள் இருக்கின்றன! அவை சரியாக வேலையும் செய்கின்றன என உணர ஆரம்பித்திருந்தான் விஜய். அந்த உணர்வு நிம்மதியைக் கொடுக்கவில்லை இவனுக்கு. ஒரு வித பயத்தைத்தான் கொடுத்தது.
எந்த மாதத்திலும் இவன் அப்பா தனது பழைய சேஷ்டைகளை ஆரம்பிக்கலாம். வீட்டு ஓனரான அவளது அப்பா கழுத்தைப் பிடித்து இவர்களை வெளியே தள்ளலாம்! மதுஷாலினி முன் கேவலப்பட்டு நிற்கக் கூடிய தருணம் வரக் கூடும் எனத் தெரிந்தும், மனம் அலை பாய்வதை இவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. இது வெறும் ஈர்ப்பா, அல்லது அதையும் தாண்டிய காதலா என ஆராயவே பயமாய் இருந்தது இவனுக்கு. மனதை முடிந்த அளவுக் கட்டுப் படுத்தி வைத்தான்.
மனிதனின் பேச்சைக் கேட்டால் அதன் பெயர் மனம் இல்லையே! இவனது கட்டுப்பாட்டையும் மீறி அவள் வீட்டைக் கடக்கையில் கண்கள் அலைபாயும். எங்காவது அந்தப் பாப்பா தென்படுகிறாளா என அலைந்து தேடும். இப்பொழுது கூட அப்படித்தானே கட்டுப்பாடில்லாமல் அவள் புறம் போய் வந்து கொண்டிருந்தது அவன் பார்வை.
“விஜே! லெட்ஸ் ஸ்டார்ட்” என சைமனின் குரல் கேட்க, தனது போராட்டத்தில் இருந்து வெளி வந்தான் விஜய்.
அங்கிருந்த குட்டி மேடையில் ஏறியவன், வந்திருந்த மாணவர்களை வரவேற்று அவர்கள் படிக்கப் போகும் காலேஜை அறிமுகப்படுத்தினான். அதன் பிறகு சைமனை அழைத்தான் சிறப்புரை ஆற்ற! சைமன், கட்டுத் திட்டங்கள், காலேஜ் ஃபீஸ், பாடத் திட்டங்கள் பற்றி எல்லாம் பொதுவாகப் பேசி விட்டு, மீண்டும் விஜயிடமே பொறுப்பைக் கொடுத்து விட்டுக் கிளம்பி விட்டான்.
புதிதாய் சந்திக்கும் மக்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகமாகிக் கொள்ள உதவும் ஐஸ்ப்ரேக்கர் எனும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தான் விஜய். நாற்காலிகளை எல்லாம் தள்ளி வைத்து விட்டு, எல்லோரையும் நடுவில் ஒன்றாக நிற்க வைத்தான். எல்லா மாணவர்களிடமும் ஒரு குட்டித் தாள் கொடுக்கப்பட்டது! அதில் எழுதி இருக்கும் விஷயத்தை வாய் திறந்து சொல்லாமல், ஒலியை மட்டும் எழுப்பி தனது குழுவினரை கண்டுப்பிடிக்க வேண்டும். கார், பைக், ரயில் என வாகனங்களின் வகைகளே அந்தத் தாளில் எழுதப்பட்டிருந்தன.
சற்று நேரத்தில் அவ்விடமே சந்தைக்கடை போல ஒரே சத்தமாகிப் போனது! ஒவ்வொருவர் முகத்திலும் புன்னகை நிரம்பி வழிந்தது. ஐந்து குழுக்களாக அவர்கள் பிரிந்திருக்க, குழு வாரியாக நிறைய கேம்ஸ் நடத்தினார்கள் விஜயும் அவன் நண்பர்களும்.
விளையாட்டுக்கள் முடித்து ஒவ்வொரு குழுவையும் தனித்தனியாக அழைத்துப் போய் கல்லூரியைச் சுற்றிக் காட்டினார்கள். புது மாணவர்களுக்கு மதிய உணவும் இலவசமாக வழங்கப்பட்டது. சாப்பிட்டு விட்டு வந்ததும் பாடச் சம்பந்தப்பட்ட பொதுவான விஷயங்கள் அலசப்பட்டன. ஒரு செமெஸ்டருக்கு எத்தனை பாடங்கள் என ஏற்கனவே கல்லூரி நிர்வாகம் ஃபிக்ஸ் செய்திருப்பது, அதில் ஏதாவது ஒரு சப்ஜெக்டில் ப்பெயில் ஆனால் எப்படி மறுபடி அந்தப் பேப்பரை எடுப்பது, இப்படி பலதையும் தனது ஆழ்ந்த குரலால் மாணவர்களுக்கு விளக்கினான் விஜய்.
ப்ரோஜெக்டரில் ஸ்லைட் தெரிய, அதை அழகாக விளக்கிக் கொண்டிருந்த விஜயின் மேல் பார்வையைப் பதித்திருந்தாள் மதுஷாலினி.
மனமோ,
‘இந்த காலேஜ்ல இவன் பெரிய அப்பாட்டக்கரு போல! வந்ததுல இருந்து அளந்து விட்டுட்டே இருக்கான்!’ என எண்ணியது.
பொதுவாய் எல்லோரையும் பார்த்துப் பேசினாலும், இவளிடம் சில வினாடிகள் அவன் பார்வை தேங்கிப் போவது புரிந்தது இவளுக்கு.
‘என்னைப் போய் சைட்டடிக்கறானா? கிறுக்கா இவன்?’

Last edited:
Author: VanishaAdmin
Article Title: Sorkam Madhuvile--EPI 5
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.