அத்தியாயம் 10
கதை எழுத வேணுமே லாப்டாப்
உன்னைப் பார்த்தா எகிறுதே லப்டப்!!!!
அன்றைய டியூசன் நேரத்தில்,
“இன்னிக்கு நீ ஒன்னும் சமைக்காத பாண்டியா!!” என்றாள் ஷாமினி.
“ஏன் மேடம்?”
“பிட்ஷா ஆர்டர் பண்ணிக்கலாம்! நான் பெலாஞ்சா(ட்ரீட்) பண்ணறேன்”
“இன்னிக்கு உங்களுக்குப் பிறந்தநாளா?”
“அட லூசே!! பேர்த்டேக்கு மட்டும்தான் ட்ரீட் குடுப்பாங்களா? மொதல்ல சாப்பிடலாம்! பிறகு ஏன்னு சொல்லறேன்” என்றவள், தனது போனில் இருந்து ‘ஃபூட் பாண்டா’(food panda) ஆப்ளிகேஷனில் இருந்து பிட்சா ஆர்டர் செய்தாள்.
இருபது நிமிடங்களில் உணவு டெலிவரி செய்யப்பட, இருவரும் சாப்பிட அமர்ந்தார்கள்.
இந்த இரு வாரமாக இருவருக்குள்ளும் இன்னும் நெருக்கம் அதிகரித்திருந்தது. அவளின் அதட்டல் உருட்டல்கள் அப்படியே இருந்தாலும், அக்கறை அப்பட்டமாக வெளியே தெரிந்தது. இப்பொழுது சரவணனுக்கு டீ ப்ரேக் கிடைத்தது! ஏழு நாளும் உழைப்பது போய், வாரத்தில் ஒரு நாள் அவனுக்கு லீவ் கொடுக்கப்பட்டது! வார இறுதிகளில் காபிதியாம் மிக பிசியாக இருக்க, புதன் கிழமை இவனுக்கு லீவ் நாளாக அமைந்தது.
விடுமுறை கொடுத்தாலும் இவன் எடுத்தால்தானே!! தனி அறையா இருக்கிறது படுத்து ஓய்வெடுக்க! அதனால் பாதி நேரம் ஓவர்டைம் பார்ப்பான். மாலையில் குளித்து விட்டு, சற்று தொலைவில் இருக்கும் கோயிலுக்கு நடந்தே போவான். தங்கைக்காக வேண்டி விட்டு, சற்று நேரம் அங்கேயே அமர்ந்து விட்டு, அங்கே பக்கம் இருக்கும் இந்தியன் ரெஸ்டாரண்டில் நெய் தோசை சாப்பிட்டு விட்டு வருவான்.
இரவு எப்பொழுதும் போல டியூசன் இருக்கும்! அன்று தம்பி செய்தது, காலேஜூல் ஒருத்தன் ப்ரோபோஸ் செய்தது என ஷாமினிக்கு நிறைய விஷயங்கள் இருக்கும் இவனிடம் பகிர்ந்து கொள்ள! வேறு நட்புக்கள் இருந்தாலும், அவர்களிடம் மகிழ்ச்சியை மட்டுமே பகிர்ந்து கொள்வாள் இவள். சரவணனிடம் மட்டுமே எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்திருந்தாள்.
ஆரம்பத்தில் செம்பாவிடம் பேசி மனம் நெகிழ்ந்திருந்த தருணத்தில் தன் மனதைத் திறந்து சரவணனிடம் காட்டி இருந்தவள், இப்பொழுது தங்குத் தடையின்றி எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறாள். கடலலை போல ஆர்ப்பரிப்பவளை சின்னப் புன்னகையுடன் பார்த்திருப்பான் சரவணன். அவனுக்குத் தெரியும், அவளுக்குத் தேவை இவனது காது மட்டுமே என! தேவையான இடங்களில் மட்டும் தனது கருத்தைப் பகிர்ந்து கொள்வான்.
சாப்பிட்டுக் கொண்டிருந்தனின் மனமோ, அன்றொரு நாள் அவன் மேல் தண்ணீரை விசிறி அடித்தவளுக்கும் இப்பொழுது பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவளுக்கும் எவ்வளவு வித்தியாசம் எனக் கணக்கெடுத்துக் கொண்டிருந்தது.
அன்று சங்கடமேப்படாமல் நீரைக் கையால் துடைத்துக் கொண்டவன்,
“உக்காருங்க மேடம்” என்றான்.
“ஒன்னும் தேவையில்ல! நான் கிளம்பறேன்”
“அட உக்காருங்க மேடம்! பேசி முடிச்சிடலாம்”
“உன்னை முடிச்சிட்டு வேணா பேசறேன்!’ என்றவள் கோபத்துடன் அமர்ந்து கொண்டாள்.
இத்தனை நாள் அவளுடைய பழக்க வழக்கங்களை கவனித்திருந்தவனுக்கு, அவளைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவள் ஓர் அடாவடிக் குழந்தை. பேச்சு, நடை, உடை, பாவனையெல்லாம் திமிராகத்தான் இருக்கும். பலாப்பழம் போல வெளியே கரடு முரடாக இருந்தாலும், உள்ளே மிக இனிப்பான குணம் இருந்தது. அவளுடன் ஆத்மார்த்தமாகப் பழகிப் பார்ப்பவர்களுக்குத்தான் அவளுடைய இந்தப் பரிமாணம் புரியும். தான் பாசம் வைப்பவர்கள் மீது இன்னுமே அவளது உருட்டல் மிரட்டல்கள் ஓங்கி இருக்கும். தன்னிடமே இப்படி நடந்து கொள்பவள், உயிரை வைத்திருக்கும் தம்பியிடம் எப்படி நடந்து கொள்வாள் எனப் புரிந்திருந்தது இவனுக்கு.
“மேடம்!”
“என்ன?” எனக் கடுப்பாகக் கேட்டாள் இவள்.
“நானும் உங்க தம்பியோட ஏஜ்ஜ கடந்து வந்திருக்கேன்! அந்த டைம்ல அவங்க மனநிலை எப்படி இருக்கும்னு எனக்கும் கொஞ்சம் தெரியும்! நாம சண்டைப் போட்டுக்காம கொஞ்சம் சமாதானமா பேசலாமா?”
அமைதியாக அவன் முகத்தைப் பார்த்திருந்தவள்,
“ஹ்ம்ம்! பேசு” என்றாள்.
“இது டீனேஜ் வயசு! அப்பா அம்மாவுக்கே அடங்காத பருவம்! நீங்க அவனுக்கு அக்கா மட்டும்தான்”
“அக்கான்னா இன்னொரு அம்மா இல்லையா? நான் அப்படித்தானே நெனைச்சு எல்லாம் செய்யறேன்” என்றவளுக்குக் குரல் தழுதழுத்தது!
சட்டென எழுந்து கொண்டவள், குறுக்கும் நெடுக்கும் சற்று நேரம் நடந்தாள்! கோபம், ஆதங்கம் எல்லாம் அடங்கியதும், மீண்டும் வந்து அமர்ந்தாள்.
“சரி! சொல்லு பாண்டியா!”
“அக்கா ஒரு அம்மா மாதிரித்தான். இல்லைன்னு சொல்லல! ஆனா அம்மா இறந்த கையோட அந்த பொசிஷன நீங்க எடுத்தத அவனால தாங்கிக்க முடியல போல! அவனுக்கு ஒரு அக்காவோட ஆறுதல் தேவைப்பட்டிருக்கலாம்! அண்ணன் எப்போ ஒழிவான் திண்ணை எப்போ காலியாகும்னு சொல்றது போல, அம்மா போனதுமே இவ எப்படி என் அம்மா இடத்துக்கு வரலாம்னு அவன் ஃபீலாகிருப்பான். அவனோட சேர்ந்து கண்ணீர் விட்டுக் கதறி அழுது, துக்கத்த ஷேர் பண்ணிருந்தா நம்மா அக்காவும் பாவம்தான்னு உங்க கூட கை கோர்த்திருப்பான். நீங்க துக்கத்த உள்ளுக்குள்ள மறைச்சி வச்சிட்டு, அவனுக்காக நார்மலா எல்லாம் செய்யவும், உங்களுக்கு அம்மா இழப்பு பாதிக்கலை போலன்னு அவனுக்கு உங்க மேல கோபம் வந்திருக்கும். அம்மா இல்லையே, அப்பா கிட்ட போகலாம்னு நெனைக்கறப்போ, அதுக்கும் நீங்க தடையா இருக்கவும் ஒட்டு மொத்த வெறுப்பும் உங்க மேல திரும்பிடுச்சு! உங்களுக்கு அவன் மேல கொள்ளைப் பாசம் இருந்தாலும், அதை அன்பா காட்டாம அதட்டி உருட்டி காட்டிருப்பீங்க! அதான் இன்னும் காண்டாகி உங்கள வச்சி செய்யறான்”
அமைதியாக அவன் சொன்னதை யோசித்துப் பார்த்தாள் இவள். அம்மா சின்னவனைக் கொஞ்சியது போலத் தான் கொஞ்சியது இல்லைத்தான். பார்த்துப் பார்த்து எல்லாம் செய்தாலும் அதில் ஓர் அதிகாரம் இருக்கும்! இவன் தன்னைப் புரிந்து கொள்ளவில்லையே எனும் எண்ணம் வியாபித்திருக்க, அவனிடம் பேசும் போதெல்லாம் பேச்சில் எரிச்சல் தொனி தெறிக்கும்! யோசிக்க, யோசிக்க இவள் எங்கே தவறினாள் எனப் புரிவது போல இருந்தது.
சரவணனிடம் ஒன்றும் பேசாமல், பேக்கைத் தூக்கிக் கொண்டு கிளம்பிவிட்டாள். வீட்டிற்குள் நுழைந்தவளின் கண்ணில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருக்கும் தம்பி விழுந்தான். இவளைப் பார்த்தும் கண்டுக் கொள்ளாமல் விளையாடிக் கொண்டிருந்தான். உள்ளே போய் உடை மாற்றி வந்தவள், அவன் அருகில் பொத்தென அமர்ந்தாள். அவன் கண்டுக் கொள்ளவேயில்லை. அவர்கள் அம்மா இருக்கும் போது செய்வதைப் போல, அவன் கையில் இருந்த கேம் கொன்சோலைப் பிடிங்கி இவள் விளையாட ஆரம்பித்தாள்.
“கண்ட்ரோல்ல குடுடி பிசாசு குட்டி” எனக் கத்தினான் அவன்.
“முடியாது போடா ஆந்தைக் கண்ணா” என இவள் கத்த, ஆரம்பித்தது இருவருக்கும் சண்டை.
எப்பொழுதும் இப்படி அடித்துக் கொள்ளும் போது, அவர்களின் அம்மா வந்து பிரித்து விட்டு இருவருக்கும் முதுகில் இரண்டு அடிகள் வைத்து விட்டுப் போவார்! இன்று பிரித்து விட ஆளில்லாமல் இருவரும் முடியை இழுத்துப் போட்டு அடித்துக் கொண்டார்கள். ஒரு கட்டத்தில் அடித்துக் களைத்துப் போனவர்கள் சோபாவில் ஆளுக்கொரு பக்கம் விழுந்தார்கள்.
“ஐ மிஸ் அம்மாடா நிதின்”
“மீ டூக்கா” என்றவன் மெல்ல விசும்ப, இவள் பாய்ந்து தம்பியைக் கட்டிக் கொண்டாள்.
இவளுக்கும் கண்கள் கலங்க, கெத்தாய் அடக்கிக் கொள்ளாமல், தம்பியின் முன்னாடியே தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். இத்தனை நாள் உள்ளுக்குள் அடக்கி வைத்திருந்த துக்கமெல்லாம் மேல் எழும்பி கரை உடைக்க, நிறுத்தவே முடியாமல் கண்ணீரில் கரைந்தாள். சற்று நேரம் அவள் அழுவதையே பார்த்திருந்த நிதின், பின் அழுத்தமாய் தன் அக்காவை அணைத்துக் கொண்டான். குழந்தைகள் இருவரும் தங்கள் தாயை நினைத்து, தந்தை இருந்தும் தனித்து இருப்பதை நினைத்து ஏங்கி ஏங்கி அழுதார்கள். உனக்கு நான், எனக்கு நீ என்ற நிதர்சனம் முகத்தில் அறைய அடக்கமாட்டாமல் அழுதார்கள்.
சற்று நேரத்தில் தேறிக் கொண்ட நிதின்,
“அழாதக்கா! உனக்கு நான் இருக்கேன்! அழாதே” என்றான்.
“உனக்கு அக்காவா நானிருக்கேன் நிதின்! இனிமே நான் உனக்கு அக்கா மட்டும்தான். அம்மா இருந்தப்ப நாம எப்படி இருந்தோமோ அப்படியே இருப்போம்டா! அடிச்சிக்கிட்டு, உடனே அத மறந்து சிரிச்சிக்கிட்டுன்னு!” என்றவளின் கன்னத்தைத் துடைத்து விட்டான் தம்பிக்காரன்.
“சாரிக்கா! வேணும்னே உன்ன நெறைய தடவை கஷ்டப்படுத்திட்டேன்”
“அதெல்லாம் விடுடா நிதின்”
“இல்லக்கா! திடீர்னு அம்மா நம்மள விட்டுப் போய்ட்டாங்க! அப்பா எப்பவுமே நம்ம கூட இல்ல! அந்த நேரத்துல அக்காவா இருந்த நீயும் வேற மாதிரி ஆகிட்ட! நான் என்ன செய்ய சொல்லு!! ரொம்ப டிப்ரெஷா ஆகிட்டேன். அம்மா கூடவே போய்டலாம்னு யோசிச்சேன். ஆனாலும் உன்னை விட்டுட்டுப் போக முடியலக்கா! எனக்கு என் அக்கா வேணும்! பழைய பன்னீர்செல்வமா என் அக்கா வேணும்! உன் கிட்ட உக்காந்து பேச முடியல! எது பேச ஆரம்பிச்சாலும் சண்டைல முடியுது! அதனாலத்தான் இப்படிலாம் சேட்டைப் பண்ணிட்டேன்! என்னை மன்னிச்சிருக்கா”
“அடேய் நிதினு! என் மேலத்தான்டா தப்பெல்லாம்! நீ அக்காவ தேடிருக்கன்னு புரிஞ்சுக்காம போய்ட்டேன்! என்னை மன்னிச்சுடுடா மடையா”
“யார பார்த்து மடையான்னு சொன்ன?” என அவன் அடிக்கப் பாய, மறுபடியும் ஒரு சண்டை ஆரம்பித்தது அங்கே.
அன்றிலிருந்து அக்கா தம்பி இருவரும் முன்பு போல பேசிக் கொண்டார்கள், வம்பிழுத்துக் கொண்டார்கள், சிரித்துக் கொண்டார்கள். நிதினும் ஒழுங்காக பள்ளிக்கும் டீயூசனுக்கும் போக ஆரம்பித்தான். ஞாயிற்றுக் கிழமைகளில் ஒன்றாக சமைத்து சாப்பிட்டார்கள்! சேட்டைகள் இருந்தாலும், கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டான் நிதின்.

Author: VanishaAdmin
Article Title: Jagam Nee--EPI 10
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.