அத்தியாயம் 15
நீதானே என் தலைவலிக்கான தைலம்!
ப்ராஜக்ட் மெனேஜர்கள், டீம் லீடர்கள் எனச் சுமார் பத்து பேர் அந்த மீட்டிங் ஹாலில் அமர்ந்திருந்தார்கள். மீட்டிங் இன்னும் ஆரம்பித்திருக்கவில்லை. அவ்விடமே அண்டார்ட்டிக்காவில் இருப்பது போல குளிர் உடலை ஊடுருவ, எழுந்து வெளியேறி தனது மேசைக்குப் போனாள் மதுஷாலினி. அன்றைய மீட்டிங் தங்களுடைய ரீஜினல் ஐ.டி ஹேட்டோடு என அறிந்திருந்தவளுக்கு ஏற்கனவே உடல் கடகடவென ஆடிக் கொண்டுதான் இருந்தது. அதில் குளிர் வேறு சேர்ந்து கொள்ள, நடுநடுங்கித்தான் போனாள்.
நாற்காலி மேல் விரித்துப் போட்டிருந்த ஸ்வெட்டரை எடுத்து அணிந்து கொண்டவள், வேகமாய் மீண்டும் மீட்டிங் ஹாலுக்கு நடந்தாள். அவள் கதவைத் திறக்கும் நேரம், அவள் பின்னே யாரோ நிற்பது போல இருக்க, திரும்பிப் பார்த்தாள் ஷாலினி. அங்கே புன்னகையுடன் நின்றிருந்தான் விஜய்.
“ஹலோ! நியூ ஜாய்னியா? வெல்கம் டூ அவர் டீம்” எனச் சொல்லிக் கை நீட்டியவனின் கண்களிலோ, உடல் மொழியிலோ அவளை அறிந்த பாவமோ, தெரிந்த பாவமோ எதுவும் இல்லை.
அன்றைய பெருநாள் லன்ச்சில் இவள்தான் அவனைப் பார்த்திருந்தாள். மேடையில் பேசி முடித்ததும், உடனே கிளம்பி விட்டிருந்தான் விஜய். அதன் பிறகு இன்றுதான் இருவரும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்கிறார்கள்.
இவளைத் தெரியாதவன் போல அவன் நடந்து கொண்ட விதத்தில் அடி வாங்கியது இவள் நெஞ்சம். இவள் கதவை வேறு திறந்திருக்க, எல்லோரும் இவர்களைத் திரும்பிப் பார்த்தார்கள். கண்ணீரை உள்ளிழுத்து மென்னகையுடன் அவன் கை பிடித்துக் குலுக்கியவள்,
“நைஸ் டூ மீட் யூ சார்!” என்றாள்.
“மீ டூ!” என்றவன் அவள் கையை விடுவித்து விட்டு,
“அஃப்டர் யூ” என உள்ளே நுழையச் சொல்லிச் சைகை செய்தான்.
இவள் நடந்து போய் தனதிருக்கையில் மெல்ல அமர்ந்து கொண்டாள். உள்ளுக்குள் நடக்கும் போராட்டத்தை வெளியே காட்டாதிருக்க பெரும் பாடு பட்டாள் மதுஷாலினி.
“குட் மார்னிங் கைய்ஸ்” எனும் விஜய்யின் குரலில், முயன்று கவனத்தை அவன் மேல் குவித்தாள்.
கடந்த ஆண்டில் ஐ.டி டீம் செய்திருந்த ப்ராஜெக்ட்கள், அதனால் நிறுவனத்துக்கு வந்திருந்த லாபம், ஃபெயிலியர் ஆன ப்ராஜெக்ட்கள், அதனால் ஏற்பட்ட நேர விரயம், பண விரயம் என ஓர் அலசு அலசினான் அவன்.
“நம்ம கம்பேனி மோட்டோ “ஓன் டைம், எவெரி டைம்ங்கறது(on time, every time) நான் சொல்லி உங்களுக்கு எல்லாம் தெரிய வேண்டியது இல்ல. இப்போ சின்னது, பெருசுன்னு நம்மள போல நிறைய டெலிவரி கம்பெனிங்க வந்திடுச்சு! நாம ஃபாஸ்டா, குயீக்கா செர்விஸ் குடுக்கலனா, இன்னொருத்தன் குடுப்பான்னு வேற இடம் தேடி போய்டுவாங்க கஸ்டமர்ஸ். இப்போலாம் லாயல்ட்டிங்கறது ரொம்ப அபூர்வமான வார்த்தையாகிடுச்சு! எங்க பெஸ்ட் கிடைக்குதோ, அங்க கிளம்பி போய்ட்டே இருப்பாங்க! இந்த கம்பெனிக்கு ஐ.டி டீம்தான் முதுகெலும்பு மாதிரி! பார்சல் நம்மட்ட வரதுல இருந்து, உரியவங்கள போய் சேருர வரைக்கும் நம்மளோட பங்களிப்புத்தான் முக்கியமானதா இருக்கு. சோ ஓவ்வொருத்தரும் உங்களோட பொறுப்ப உணர்ந்து, பெஸ்ட்ட குடுங்க! உங்க பெஸ்ட்ட குடுக்கறப்ப, கம்பெனி உங்கள பெஸ்ட்டா பார்த்துப்பாங்க! அதுக்கு நான் கேரெண்டி” என அவன் சொல்லி முடிக்க அப்படி ஒரு கரகோஷம்.
‘விஜய்!! விஜயன்தான்டா நீ! சாதிச்சிட்ட!’ என எண்ணிக் கொண்டவளுக்கு உள்ளுக்குள் பெருமையாய் இருந்தது.
பேசும் போது அவன் பார்வை எல்லோர் முகத்தையும் தொட்டுப் போனது. இவளையும் பார்த்தான்தான்! அந்தப் பார்வையில் அன்பிருந்திருந்தால், அழுதிருப்பாள். வெறுப்பிருந்திருதால், வெம்பி இருப்பாள். ஆனால் அவன் பார்வையில் அறியாத அந்நியரைப் பார்க்கும் பாவம் இருந்தது. அலமலந்துதான் போனாள் மதுஷாலினி. இவளாகவே அவனை ஒதுக்கி வைத்தாள்தான். அதையே அவன் செய்யும் போது அடி வயிற்றில் இருந்து அழுகை வெடித்துக் கிளம்பும் போல இருந்தது.
“கால்ம் டவுன்! கால்ம் டவுன்” எனத் தனக்குத்தானே அறிவுறுத்திக் கொண்டாள் ஷாலினி.
மீட்டிங் முடிவதற்குள் விண்விண்ணெனத் தலை வலிக்க ஆரம்பித்திருந்தது இவளுக்கு. எல்லோரும் கலைந்து போனதும், காண்டினுக்கு ஒரு கப் காபி வாங்கலாம் எனப் போனாள் இவள். கால் செண்டரில் வேலைப் பார்ப்பவர்கள் அங்கங்கே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். காபி வாங்க வரிசையில் நின்றவளுக்கு உணவு மணத்தையும் மீறி மிகப் பரிச்சயமான வாசம். இவள் பின்னால்தான் விஜய் நிற்கிறான் என மனம் அடித்துச் சொன்னது.
திரும்பிப் பார் என இதயம் ஏக்கமாய் கெஞ்ச, மூளையோ மூடிட்டு கிளம்பு ஷாலு எனக் கட்டளையிட்டது. தடதடக்கும் நெஞ்சத்தை அடக்கி வைத்தவள், அமைதியாக வரிசையில் முன்னேறினாள். சிலர் வந்து அவனிடம் நலம் விசாரிப்பதும், அவனும் அவர்களுடன் பேசி சிரிப்பதும் கேட்டாலும் திரும்பவில்லை பெண்.
‘என் மனசு தவிக்கற மாதிரி இவனுக்கு ஒரு ஃபீலும் இல்லையா? எவ்ளோ சாதாரணமா சிரிச்சுப் பேசறான்! குரல்ல எவ்ளோ உற்சாகம்! நான் மட்டும் இப்போ வாய் திறந்தா, குரல் ஞமணநமன போட்டுடும் போலிருக்கே!’ என எண்ணி மறுகினாள் மதுஷாலினி.
இவள் முறை வர, காபி சொன்னவள் பணத்தை எடுப்பதற்குள் முந்திக் கொண்டு இன்னொருத்தன் பணத்தைக் கட்டி இருந்தான்.
“ஹாய் ஷால்! என்னோட ட்ரீட்! நெக்ஸ்ட் டைம் நீங்க வாங்கிக் குடுங்க எனக்கு” எனச் சொன்ன அந்த ஆண் இவள் மறுப்பதற்குள் வேகமாய் ஓடிப் போயிருந்தான்.
அவனும் ஐ.டியில் வேலைப் பார்ப்பவன்தான். வேறொரு டிபார்ட்மெண்டில் இருந்தான். பல தடவை இவளுக்கு ஹாய், பாய் சொல்லி இருக்கிறான்.
இவள் பேப்பர் காபி கப்பை எடுக்கப் போக, பின்னால் நின்றிருந்தவன் அதை எடுத்துக் கொண்டு,
“சாரி மிஸ்! இதை நான் எடுத்துக்கறேன்! எனக்கு ப்ளைட்டுக்கு நேரமாச்சு!” எனச் சொல்லிப் பணத்தை அவ்விடத்தில் வைத்து விட்டு இவளைத் தாண்டி நடந்து போயிருந்தான்.
இவள் அதிர்ச்சியாகப் பார்க்க, காபியைக் குடித்தபடியே அவ்விடத்தை விட்டு வெளியேறி இருந்தான் விஜய்.
“என்னங்கடா நடக்குது இங்க!” என முனகியபடியே இன்னொரு காபியை விஜய் வைத்து விடடுப் போன பணத்தில் வாங்கியவள், தனது இருக்கையில் போய் அமர்ந்தாள்.
“மிஸ்ஸாம் மிஸ்ஸூ! மிஸ் பண்ணிட்டேன்ல அப்படித்தான் கூப்புட தோணும்!” என முணுமுணுத்தவளுக்கு தலை வலி இன்னும் கூடி இருந்தது.
விஜய் அன்றைய தினமே மறுபடி துபாய் கிளம்பி இருந்தான் என காற்றுவாக்கில் காதில் வந்து விழ, பெருமூச்சொன்று வந்து போனது இவளுக்கு. அவனை நேரில் பார்க்காத வரை நினைவுகளிலேயே வாழ்ந்திருந்தவளுக்கு, பார்த்தவுடன் அவன் சுவாசிக்கும் மூச்சுக் காற்று உலாவும் இடத்தில் இருக்க வேண்டும் என அடமாய் நின்றது மனது.
ஒரு வழியாய் வேலைகளை முடித்தவள், வீட்டிற்கு கிளம்பி விட்டாள். ஏற்கனவே அரைத் தூக்கம்தான். இப்பொழுது அவனை மீண்டும் பார்த்ததில் இருந்து தூக்கம் தூர ஓடிப் போய் துக்கம் கட்டிப் பிடித்துப் படுத்துக் கொண்டது இவளை. சாப்பிடப் பிடிக்காமல், தந்தையிடம் மட்டும் பேசி விட்டு வந்து படுத்தவளுக்குக் கடந்த கால நிகழ்வுகள் எல்லாம் இப்பொழுதுதான் நடந்தது போல கண் முன்னே வந்து போயின.
அன்று தூக்கத்தில் இருந்தவளை அண்ணன்கள் இருவரின் ஆக்ரோஷ சத்தம்தான் விழிக்க வைத்தது. சிறு வயதில் அடித்துப் பிடித்துச் சண்டை போட்டு வளர்ந்தவர்கள்தான் இவர்கள் மூவரும். ஆனால் ஒரு காலகட்டம் வந்த பிறகு, சண்டை சச்சரவுகள் குறைந்து விட்டன. அதோடு மூவரும் வெவ்வேறு இடங்களில் இருக்க, வாய்ச் சண்டை கூட வருவதில்லை இப்பொழுதெல்லாம்.
‘என்னாச்சு!’ என எண்ணியபடியே எழுந்து வெளியே வந்தவள் கண்டது அடித்துக் கொள்ளும் அண்ணன்களைத்தான்.
“மகேஷ்! மகேன்!” என அவர்கள் நடுவில் ஓடினாள் மதுஷாலினி.
“அவ என்னோட ஆளுடா! எப்படி நீ அவளுக்கு மேசேஜ் போடலாம்?” என மகேஷ் மகேனை வயிற்றில் குத்த,
“நீதான் டபுள் க்ராஸ் பண்ற! அவ என்னைத்தான் லவ் பண்ணுறா” என மகேன் மகேஷை எத்தினான்.
நடந்த போராட்டத்தில் நடுவில் புகுந்த மதுஷாலினி தள்ளி விடப்பட, மேசை முனையில் அவள் நெற்றிப் பட்டு ரத்தம் குபுக்கென வெளியேறியது.
“அப்பா!” என வலியில் அவள் கூவி விட, அப்பொழுதுதான் மார்க்கேட் போய் விட்டு உள்ளே நுழைந்த மனோகர் ஆடிப் போனார்.
மகள் நெற்றியில் ரத்தத்தைப் பார்த்தவருக்கு வெறிப் பிடித்துக் கொண்டது.
“என்னடா நடக்குது இங்க?” எனக் கேட்டவர் தோளுக்கு மேல் வளர்ந்த மகன்கள் இருவரையும் சரமாரியாக வெளுத்து விட்டார்.
“அப்பா! வேணாம்பா!” என அழுதபடியே கெஞ்சினாள் மதுஷாலினி.
மனோகரின் கையைப் பிடித்து இவள் இழுக்க, அடிப்பதை விட்டவர்,
“சொல்லுங்கடா! கண்ணு மண்ணுத் தெரியாம அடிச்சிக்கற அளவுக்கு என்ன எழவு புடிச்சு ஆட்டுது உங்கள?” எனக் கர்ஜித்தார்.
தங்கையை ரத்தக் காயத்தில் பார்த்து ஏற்கனவே இருவரும் ஆடிப் போயிருந்தார்கள். இருவருக்குமே கண்கள் கலங்கி நின்றது.
“சொல்லுங்கடா!”
“அஸ்மிதா!” எனத் தயங்கிச் சொன்னான் மகேஷ்.
“யாரு? யாரு அஸ்மிதா?” எனக் கோபமாகக் கேட்டார் மனோகர்.
“மேல் வீட்டுப் பொண்ணு” எனப் பம்மினான் மகேன்.
“அவளுக்கு என்ன?”
“அவ என்னைத்தான்பா லவ் பண்ணுறா!” என மகேஷ் பட்டெனச் சொல்ல, அவன் மேல் பாய்ந்தான் மகேன்.
“பொய் சொல்லாதடா! இந்த வீட்டுக்கு வந்ததில இருந்து அவ என்னை மட்டும்தான் லுக் விடறா! நான் யூனிவெர்சிட்டிக்கு கிளம்பும் நேரம், தோட்டத்துல இருந்து வந்தவ என் கைல அவ போன் நம்பர திணிச்சிட்டுப் போனா! அன்னைல இருந்து இப்போ வரைக்கும் நாங்க மேசேஜ் பண்ணிட்டு இருக்கோம்” எனக் கத்தினான் மகேன்.
மகேன் போனில் அஸ்மிதாவின் மேசேஜை பார்த்து விட்டுத்தான் சண்டை ஆரம்பித்திருந்தது சகோதரர்கள் இருவருக்கும்.
“மொட்டை மாடில என்னைப் பார்த்த போது போன் நம்பர் குடுத்தா! அடிக்கடி மேசேஜ் போடுவா! என்னை ரொம்பப் பிடிச்சிருக்குன்னு சொல்வா!” என்ற மகேஷ் ஒடுங்கி அமர்ந்து விட்டான்.
இருவரது போனையும் வாங்கிப் பார்த்த மனோகர், காறித் துப்பி விட்டார்.
“ஒரு சின்னப் பொண்ணு உங்க ரெண்டு பேரையும் வச்சி கேம் விளையாடிருக்கா! வெக்கமா இல்லையாடா உங்களுக்கு! சீச்சீ! காதல், கருமம்லாம் வரனும்னா அது உங்க சொந்தக் காசு கைல இருக்கறப்ப வரனும்டா! அப்பன்காரன் முதுகொடிய சம்பாதிச்சுக் கொட்டறப்ப வரக் கூடாது! நீங்க ரெண்டு பேரும் என் மகனுங்கன்னு சொல்லிக்கவே கேவலமா இருக்கு! த்தூ!”
சகோதரர்கள் இருவரையுமே பிடித்திருக்கிறது எனச் சொல்லி சுத்தலில் விட்டிருக்கிறாள் அஸ்மிதா எனப் புரிந்துப் போனது இருவருக்கும்.
“என் கிட்ட அடிக்கடி மொபைலுக்கு டாப் ஆப் பண்ணி சொல்லக் கேட்டிருக்கா” எனத் தொண்டையடைக்கச் சொன்னான் மகேன்.
“நானும் போட்டு விட்டிருக்கேன்! ரெண்டு மூனு தரம் சாப்பிடக் கூட காசில்லைன்னு சொன்னப்ப, காசு பேங்க் இன் பண்ணி விட்டிருக்கேன்” என்றான் மகேஷ்.
“நானும் பேங்க் இன் பண்ணி விட்டிருக்கேன்” எனக் குரலடைக்கச் சொன்னான் மகேன்.
முதல் காதல் பொய்யாகி போயிருக்க கண்களில் கண்ணீர் வழிந்தது மகேனுக்கு. அவனால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. பெரியவனான மகேஷ் ஓரளவு சமாளித்து விட்டிருந்தான்.
“ரொம்ப லவ் பண்ணேன்ணா அவள! அழுகையா வருது” எனக் கண்ணீர் விட்ட மகேனைப் பார்த்து ஷாலினிக்கு மனது ஓய்ந்து போனது.
மகேனின் கண்ணீரில் கோபம் தலைக்கேற மறுபடியும் மகன்களை அறைந்து தள்ளி விட்டார் மனோகர். தரையில் மடிந்து அமர்ந்து விட்ட மதுஷாலினி,
“விடுங்கப்பா! வேணாப்பா!” என அழுதபடியே கெஞ்சினாள்.
கொடுத்த அடிகளை வாங்கிக் கொண்டு தலை குனிந்து நின்ற மகன்களைப் பார்த்து நெஞ்சு கொதித்தது மனோகருக்கு. பதினாறே வயதான ஒரு சிறுமி, தன் மகன்கள் இருவரையும் ஏமாற்றி அவர்களுக்குள் அடித்துக் கொள்ளுமாறு செய்திருக்கிறாளே என வெகுண்டெழுந்து விட்டார்.

Author: VanishaAdmin
Article Title: Sorkam Madhuvile--EPI 15
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.