Sernthaadu Cindrella--EPI 13

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
918
-1,981
93
அத்தியாயம் 13

“மணவாழ்க்கைல துரோகங்கறது புருஷன/பொண்டாட்டிய விட்டுட்டு இன்னொரு ஆள் கூட பிசிக்கல் ரிலேஷன்சிப் வச்சிக்கறதுல மட்டும் இல்ல! இன்னொருத்தங்க உங்கள குஜிலிமஸ்த்து நோக்கத்தோட அப்ரோச் பண்றாங்கன்னு தெரிஞ்சும் சும்மா ஒரு ஃபன்தானேன்னு அவங்க கூட பேச்சு வார்த்தை வச்சிக்கறதும்தான். மனம் திறந்து புருஷன்/பொண்டாட்டி கூட ஷேர் பண்ணிக்க முடியாம மூடி வைக்கிற மாதிரி பலான விஷயங்கள் உங்க கிட்ட இருக்குன்னா அதுவும் துரோகம்தான்! துரோகத்துக்கு கருட புராணத்துல என்ன தண்டனைத் தெரியுமா? தூக்கிப் போட்டு துவம்சம் பண்றது!! சோ மக்களே, சே நோ டூ துரோகம்!!”

(பாட்காஸ்ட் பை பரதேசி)




ஓடுவது, விழுவது, சேறு உடலெல்லாம் பூசிக் கிடப்பது, மரண ஓலங்கள் கேட்பது, கட்டிடங்கள் சரிந்து விழுவது எனப் பல சம்பவங்கள் தன்னைச் சுற்றி நடப்பது போல இருக்க நிஜமெது கனவெது எனப் புரியாமல் படுத்துக் கிடந்தாள் ஊர்மிளா! என்ன முயன்றும் கண்களை மட்டும் திறக்கவே முடியவில்லை இவளால். உடம்பில் உள்ள ஒவ்வொரு அணுவும் வலிப்பது போல இருந்தன!

வலியில் அலட்டும் போதெல்லாம் மென்மையாய் ஒரு கரம் இவள் நெற்றியை வருடுவது புரிந்தது. அடிக்கடி கன்னத்தில் கொடுக்கப்பட்ட ஈர முத்தம் புரிந்தது!

“ஒன்னும் இல்ல ஊர்மி! நான் இருக்கேன் உன் கூட” என அடிக்கடி உச்சரிக்கப்படும் மேஜிக் வார்த்தைகள் புரிந்தது!

ஆனாலும் கண்களைத் திறக்க முடியவில்லை! கட்டிலில் இருந்து தூக்கி வேறு எங்கோ கொண்டு செல்லப்பட்டது போல இருந்தது! நீண்ட தூரம் பயணித்தது போல இருந்தது! எல்லாம் உணர முடிந்தாலும், விழித்து தன்னைச் சுற்றி இதுதான் நடக்கிறது என அறிந்து கொள்ள முடியவில்லை.

ஆம்புலன்ஸ், ஹெலிகாப்டர், மனிதர்களின் சலசலப்பு எனப் பல வகை ஓசைகள் காதை நிறைத்தன! ஊர்மியைச் சுற்றி என்ன நடந்தாலும் அந்தக் கரங்களின் தொடுகை மட்டும் இவளை விட்டு விலகவேயில்லை! விஷ்ணுதான் கூடவே இருக்கிறான் என மனதிற்கு மட்டும் இல்லை, மசமசத்துக் கிடந்த மூளைக்கும் புரிந்தது. அந்தத் தொடுகை மனதினுள் முட்டி மோதிக் கிடந்த எல்லா உணர்வுகளையும் மீறி ஆசுவாசத்தை விதைத்திருந்தது.

சேற்று வெள்ளத்தில் இருந்து தப்பித்து ஓடியதும், ஓரிடத்தில் களைத்துப் போய் மயக்கம் வருவது போல உணர்ந்ததும் நினைவில் இருந்தது. அதன் பிறகு ஹாஸ்பிட்டல் போல இருந்த கட்டிடம் ஒன்றில், லேசாய் கண்ணைத் திறந்ததும், நர்ஸ் என்னவோ கேட்ட போது மனதில் மனப்பாடமாய் இருந்த விஷ்ணுவின் எண்ணைக் கொடுத்ததும் மட்டும்தான் கடைசியாய் மனதில் பதிந்திருந்தது.

ஒரு வித மயக்க நிலையில் இருந்த ஊர்மிக்கு பேச்சுக் குரல்கள் மசமசவெனக் காதில் விழ ஆரம்பிக்க, கவனத்தை அதில் குமிக்க முயன்றாள்.

“வீட்டுக்குப் போய் குளிச்சிட்டு எதாச்சும் சாப்பிட்டுட்டு வாங்க ப்ரோ! அண்ணி பக்கத்துல நான் இருக்கேன்”

“ட்ரைவர்ட்ட துணிலாம் கொண்டு வர சொல்லிருக்கேன்! இது விஐபி ரூம்தானே! இங்கயே ப்ரெஷ் ஆப் பண்ணிக்கறேன்! நீ போ விஷ்வா! கொஞ்சம் தூங்கி எழுந்து ரெஸ்ட் எடுத்துட்டு வா!”

“நான் கிடைச்ச கேப்ல தூங்கி, நல்லா சாப்பிட்டு தெம்பாத்தான் இருக்கேன் ப்ரோ! நீங்கத்தான் மூஞ்செல்லாம் தாடி மண்டி போய், கண்ணுக்குக் கீழ கரு வளையமா இல்ல கருங் குளமான்னு தெரியாத அளவுக்கு ஒடஞ்சி போய் இருக்கீங்க! அம்மா பார்த்தாங்கன்னா, என் பெரிய மகன் விஷ்ணுசேனாவா இதுன்னு கலங்கிப் போய்டுவாங்க! அண்ணிக்குத்தான் இனி பெருசா பயப்பட ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டாங்கல்ல, உங்களையும் கொஞ்சம் பார்த்துக்கோங்க ப்ரோ”

தம்பியை நெருங்கி இறுக்கமாகக் கட்டிக் கொண்டான் விஷ்ணு!

“தேங்க்ஸ் விஷ்வா! நான் உடஞ்சி விழாம எனக்குப் பக்கபலமா இருந்து மாரல் சப்போர்ட் குடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்!” என்றவனின் குரல் கலங்கி ஒலித்தது.

“வேற எந்த விஷயமா இருந்தாலும் நீங்களே ஜஸ்ட் லைக் தட் சமாளிச்சிருப்பீங்க ப்ரோ! இத்தனை வருஷமா எனக்குத்தான் உங்க சப்போர்ட் பல தடவை தேவைப்பட்டிருக்கு! அண்ணி விஷயம்னால கலங்கிப் போய்ட்டீங்க! லவ்னா ஹேப்பினஸ் மட்டும் இல்ல, தவிப்பு, துடிப்பு, போராட்டம், கவலை, அழுகை இப்படின்னு இன்னொரு பக்கமும் இருக்குன்னு உங்கள பார்த்துப் புரிஞ்சுகிட்டேன்! யப்பா சாமி! எனக்கு இந்த லவ்வே வேணாம்ப்பா!” என்ற தம்பியைப் பார்த்துச் சிரித்தான் விஷ்ணு.

“அப்பாடா! உங்க முகத்துல இப்பத்தான் வெளிச்சம் வந்திருக்கு ப்ரோ! நான் போய்ட்டு குக் கிட்ட நல்ல சாப்பாடா செஞ்சு குடுத்து விடச் சொல்றேன்! சாப்பிட்டுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க! பாய் ப்ரோ”

“பாய்டா விஷ்வா!”

“ப்ரோ!” எனத் தயக்கமாக இழுத்தவனைக் கேள்வியாய் பார்த்தான் விஷ்ணு.

“அப்பா ஹெல்ப்புக்கு ஆளுங்கள அனுப்பனதால உங்க லவ்வுக்கு சம்மதம் குடுத்திடுவாருன்னு நெனைச்சிடாதீங்க! இன்னும் உங்களுக்குப் போராட்டம் முடியல”

கட்டிலில் படுத்திருந்தவளைச் சுட்டிக் காட்டிய விஷ்ணு,

“அவ முதல்ல எழுந்து உக்காரட்டும்! அவ வாழ்க்கைல என்னோட சேப்டர் இன்னும் இருக்கா, இல்லை மூடி வச்சிட்டாளான்னு பதில் சொல்லட்டும்! அப்புறம் மத்தத எல்லாம் பார்த்துக்கறேன்!” என்றவனின் குரலில் ஒரு வித விரக்தி கலந்த ஆதங்கம் இருந்தது.

“எனக்கு அவங்க மேல கோபம் கோபமா வருதுண்ணா! உனக்கு என்ன குறை? ஏன் உன்னைத் தவிக்க விட்டுட்டு ஓடிப் போனாங்க? ஹேண்ட்சமா இருக்க! நல்லா படிச்சிருக்க! அவங்க எதை கை காட்டினாலும் கொண்டு வந்து காலுல போடற அளவுக்கு சம்பாதிக்கற! இன்னும் என்னண்ணா வேணும்?”

அண்ணனின் மேல் இருந்த பாசம், விஷ்வாவைக் கோபப்பட வைத்தது!

தம்பியைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்தான் விஷ்ணு!

“நீ பேசறத பார்த்தா ஹெண்ட்சம், ரிச் அண்ட் ஸ்மார்ட் மட்டும்தான் லவ்வுக்கு மிக முக்கியமான விஷயம் மாதிரில்ல இருக்கு! அது இல்லாதவங்கல்லாம் காதல் பண்ணலியா? சந்தோஷமா வாழலியா? எந்த ரிலேஷன்சிப்லயும் அதி முக்கியமான விஷயம் என்னன்னா, ட்ரஸ்ட்! நம்பிக்கை! என்ன நடந்தாலும், என்ன ஆனாலும், அவளுக்காக நான் இருப்பேன்ற நம்பிக்கைய உங்கண்ணிக்கு நான் குடுக்கல! பொய்யில ஆரம்பிச்ச உறவுல நம்பிக்கை எங்கிருந்து வரும்? நான் யாருன்னு சொல்லாம பழகிருக்கேன் அவ கிட்ட! விஷயம் தெரிஞ்சதும் என்ன பாடுபட்டிருக்கும் அவ மனசு! அறியாத புது ஊருக்கு, என்ன சம்பளமானாலும் பரவாயில்லன்னு ஓடிப் போகற அளவுக்கு அவளைக் கொண்டு நிறுத்தன என் மேலத்தான் விஷ்வா தப்பு!”

“என்னமோ போங்க ப்ரோ! லவ் இஸ் டார்ச்சர்! அது மட்டும் எனக்கு நல்லா புரியுது! நான் நாளைக்கு ப்ளைட்ல ஜப்பான் கிளம்பறேன்! என்ன ஹெல்ப் வேணும்னாலும் என்னைக் கேளுங்க! என்னோட சப்போர்ட் உங்க லவ்வுக்கு எப்பவும் இருக்கும்! மாம் அண்ட் டாட் ரெண்டு பேரு! நாமளும் ரெண்டு பேரு! ஒரு கை பார்த்திடலாம்!” என்றவனைப் புன்னகையுடன் அனுப்பி வைத்தான் விஷ்ணு!

ஊர்மிளாவின் அருகே போய் நின்றவன், அவளையே பார்த்திருந்தான். நெற்றியின் ஓரத்தில் ஒரு ப்ளாஸ்ட்டர்! முகத்தில் அங்கங்கு கீறல்கள். வலது கால் எலும்பு ப்ராக்சர் ஆகியிருந்தது. அதற்கு பெரிதாய் கட்டுப் போட்டு, காலை அசைக்க முடியாதபடி கட்டிலில் கட்டிப் போட்டிருந்தார்கள். வியாட்நாமில் பார்த்தவளுக்கும், இங்கு மருத்துவமனைக் கட்டிலில் படுத்திருந்தவளுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் சொல்லலாம். சரியாகச் சாப்பிட்டிருக்க மாட்டாள் போலிருக்கிறது! இளைத்திருந்தாள்! இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு கன்னங்கள் இன்னுமே ஒட்டிக் கிடந்தன.

ஆனாலும் இவன் கண்களுக்குப் பேரழகியாய்த்தான் தெரிந்தாள் ஊர்மிளா.

“ஐ லவ் யூ ஊர்மி!” என முணுமுணுத்தவன், அவள் கன்னத்தை மெல்ல வருடினான்.

சுளித்திருந்த புருவங்களை நீவி விட்டவன், நாற்காலி எடுத்துப் போட்டு அவள் அருகில் அமர்ந்து கொண்டான். நர்ஸ் வந்து பல்ஸ், மற்றும் மற்ற செக் அப்கள் செய்து விட்டுப் போகும் வரை கூட நகரவில்லை இவன்.

உணவு, உடையோடு ட்ரைவர் வர, அவசரமாய் போய் குளித்து விட்டு வந்தான். தாடியை ஷேவ் செய்யும் நேரத்தில் இவள் கண் விழித்து விடுவாளோ எனும் எண்ணத்தில் அதை தள்ளிப் போட்டான் விஷ்ணு.

உணவு வாசனை நாசியை நிறைத்து வயிற்றுப் பசியைக் கிளறியது! நீண்ட நாட்களுக்குப் பிறகு பசி எனும் உணர்வை உணர முடிந்தது இவனால்.

“பசி வந்தா பத்தும் பறந்து போகும்னு சொல்வாங்க! காதல்ல மட்டும்தான் பரிதவிப்பு வந்தா பசியும் பறந்து போகும் போல!” என முணுமுணுத்தவன், உணவைத் தனக்குப் பரிமாறிக் கொண்டு சாப்பிட அமர்ந்தான்.

பசித்தாலும் ருசித்துச் சாப்பிட முடியவில்லை. உணவில்லாமல் ட்ரிப்ஸில் ஏறும் நீர்ச்சத்தின் வழி சுவாசித்திருக்கும் ஊர்மியைப் பார்த்தவனுக்கு அதற்கு மேல் உணவு இறங்கும் போல் தோன்றவில்லை. பெருமூச்சுடன் தட்டில் இருந்த மீதியை ருசியறியாமல் விழுங்கியவன், தண்ணீரைக் குடித்து எழுந்து விட்டான். தட்டைக் கழுவி வைத்து விட்டு மீண்டும் ஊர்மிளாவின் பக்கத்தில் அமர்ந்தவன் அவளையே பார்த்திருந்தான்.

அந்த நேரம் தொலைப்பேசி அழைப்பு வர, யாரென எடுத்துப் பார்த்தான் விஷ்ணு. முகத்தில் புன்னகைப் பூக்க, அழைப்பை ஏற்றுக் காதில் வைத்து,

“இன்னாம்மே ஊர்வசி!! இன்னா திடிதிப்புன்னு என் மேல பாசம், வாசமா அடிக்கிது? இன்னா மேட்டர்?” என மெல்லியக் குரலில் கேட்டான்.

அந்தப் பக்கம்,

“இன்னாடா சோப்ளாங்கி!! கொரல்ல கொண்டாட்டம் கொப்புளிக்குது! இன்னா உன் ஆளு ஆப்டுக்கிட்டாளா? சோகத்த!! கடவுளுக்குக் கண்ணு இல்ல பாரேன்!” என்றான் அவன்.

“ஏனாம்?”

“கண்ணுருந்தா ஓடிப் போன புள்ள நல்லா இருக்கட்டும்னு வுடாம, மறுக்க உன் கூட கோத்து விட்ருப்பாரா? படா பேஜாருடா இந்த காட்டோட(god)!”

“மாமூ!! கிடைச்சுட்டா மாமு! என் ஆளு கிடைச்சுட்டா”

“மாமூ! மாமூ! உங்கக்கா பேரு கோமூ! கோமூ! போடாங் இவனே! கறிசோறு துன்னுட்டு இருந்தவனுக்குப் போன போட்டு மாமூ, என் அஞ்சலைய காணோம்டான்னு கதறனியே, எவ்ளோ எமோசனா சோத்தைச் தள்ளி வுட்டுட்டு அப்படியா மாமூன்னு கூட சேந்து கதறனேன்! இப்போ ஆள கண்டுப்புடிச்சதும் என்னைக் கூப்ட்டு, கிடைச்சிட்டாடா என் அம்முன்னு சொல்ல உனக்கு டயம் இல்ல! ஃபிகர கண்டதும், ப்ரண்ட்சிப்ப கடாசி விடற உன்னை மாதிரி ப்ளடி பிஸ்கோத்துக்குலாம் ஹெல்ப் பண்றாரே அந்தக் கடவுள், கண்டிப்பா அந்தாளுக்குக் கண்ணு இல்லத்தான்டா!”

“சரி! சரி கோச்சீக்காதே கோவாலு! என் உசுர பார்த்ததுல மத்த கொசுறல்லாம் மறந்துட்டேன்”

“என் கூட பழகிப் பழகி, பீட்டரு உட்டுன்னு இருந்தவன், நல்லா ரைமிங்கா பேசப் பழகிக்கின்னடா! இப்ப எப்டி இருக்கா உன் ஆளு?”

“தேறிட்டே வரா! கால் எலும்பு உடஞ்சு ப்ளேட் வச்சதுல எழுந்து நடமாட சில மாசம் ஆகலாம்! வெள்ளத்துல மாட்டிப் பொழச்சி வந்ததுல, கொஞ்சம் ட்ரௌமா இருக்குமாம்! மத்தபடி சின்னச் சின்னக் காயம்தான்! ஷீ வில் பீ ஆல்ரைட்!”

“மாமூ! கடமை அழைக்குது! நான் போகனும்! உன் ஹெல்த்தையும் பார்த்துக்கோ, என்னா!!! போற முன்னுக்கு ஒரே ஒரு கடி கடிச்சிட்டு போகட்டா?”

“கடிச்சுத் தொலை!”

“இனிமே உன் ஆள் காலுலயே நீ சோறு போட்டுச் சாப்பிடலாம்! ஏன்னு சொல்லேன்?”

“ஏன்?”

“ஏன்னா அவ காலுலதான் ப்ளேட் வச்சிருக்காங்களே!” என சொல்லி அவன் இடி இடியெனச் சிரிக்க, இவனுக்கும் கூட சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.

நீண்ட நாட்கள் கழித்துச் சிரிப்பது அப்படி ஓர் ஆசுவாசத்தைக் கொடுத்தது விஷ்ணுவுக்கு! அழைப்பை நிறுத்து விட்டுக் கட்டிலை ஏறிட, அங்கே இவனைப் பார்த்தபடி படுத்திருந்தாள் ஊர்மிளா.

சட்டென எழுந்து அவள் அருகே போய் கன்னத்தைப் பற்றிக் கொண்டான் விஷ்ணு!

“ஊர்மீ!!!!”

“யார் நீ?” என அவள் கேட்க, அதிர்ந்து போய் விழித்தான் இவன்.

“ஊர்மீ! நானு! நான் விஷ்ணு! என்னைத் தெரியலையா? ஊர்மி!! மை காட்! டாக்டர்!” எனக் கத்தியபடி டாக்டரை அழைக்கும் பஸ்ஸரை அழுத்தப் போக, அவன் கையைப் பிடித்துக் கொண்டாள் ஊர்மிளா.

“இப்படி தாடியும் மீசையும் வச்சிக் கரடி மாதிரி இருந்தா, நீதான் என் விஷ்ணுன்னு எப்படி எனக்குத் தெரியும்?” என மெல்லியக் குரலில் கேட்டவளின் உதட்டில் மென் புன்னகை பளீரிட்டது!

பெரிதாய் மூச்சை இழுத்து விட்டவன்,

“உன்னை!!!!!!” எனக் கூவியபடி, அவளது புன்னகையைத் தன் உதட்டில் வாங்கிக் கொண்டான்.

(சேர்ந்தாடுவாள்!!!!)
 

Author: VanishaAdmin
Article Title: Sernthaadu Cindrella--EPI 13
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Geethazhagan

Active member
Aug 11, 2025
58
38
28
Lovely epi
உதட்டில் வாங்கிக்கொண்டான் புன்னகையை அழகு.
துரோகம் சூப்பர்.
 
  • Love
Reactions: VanishaAdmin

CRVS2797

Active member
Aug 4, 2024
124
-46
43
அடிப்பாவி மக்கா ! யார் நீ... என்கிற ஒரே வார்த்தையில எங்களையும் சேர்த்தில்ல பதற வைச்சிட்ட...?அம்புட்டு கொழுப்பு உனககு.

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
  • Love
Reactions: VanishaAdmin

kothai suresh

Active member
Aug 3, 2024
116
-17
43
அம்மாடி யார் நீன்னு கேட்கவே ஒரு நிமிஷம் பக்குன்னு ஆயிடுச்சு. 😝😝😝😝
இன்னா மா வாநி மா சும்மா பூந்து வெள்ளாடு,ற ஷோக்கா கீது மா 👍👍👍👍
 

sai deepalakshmi

Active member
Dec 2, 2025
57
-36
28
அவளை விட அவன் தான் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறான்.
டைமிங் டைமிங் பேச்சு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
இனி அவளது பிரச்சினை முடிவுக்கு வரும் என்று நம்பலாம்.
கவலையிலும் சிறிது ஆறுதலான பதிவு.