அத்தியாயம் 20
ஐந்து நாட்களாக இலக்கில்லாமல் வீட்டைச் சுற்றி வந்தாள் சுப்பு. சமைக்கப் பிடிக்கவில்லை, சாப்பிடப் பிடிக்கவில்லை, எந்த வேலையும் ஓடவில்லை.
“ஏ சுப்பு! இப்படியே மோட்டுவளைய முறைச்சிக்கிட்டு இருந்தா வயிறு நிறைஞ்சிருமா? வந்து சாப்புடு வா” என அழைத்தாள் பவுனு.
“பசிக்கலக்கா!”
“எங்கள கூண்டோட கைலாசம் அனுப்ப முடிவு பண்ணிட்டியாடி? துரை போறப்ப, உன்னை தனியா விடாம பத்திரமா பாத்துக்க சொல்லிட்டுப் போயிருக்காரு. நீ என்னன்னா சாப்புடவே அழிச்சாட்டியம் பண்ணுற. இரு பட்டுவ வர சொல்லுறேன். அவதான் உனக்கு லாயக்கு”
“வேணாக்கா. நானே சாப்புடறேன்”
மேசையில் அமர்ந்து, தட்டில் இருந்ததை கஷ்டப்பட்டு விழுங்கினாள் சுப்பு. அவளின் கவலைக்குக் காரணம் வேறொன்றுமில்லை, பிரிட்டிஷ் முதலாளிகள் எல்லோரும் ஒரு வார மீட்டிங்குக்கு கேமரன் ஹைலன்ட் (மலை பிரதேசம்) சென்றிருப்பதுதான். அதில் எட்வர்டும் அடக்கம்.
அந்த சுற்றுலா தளத்தில் உள்ள க்லூனி லாட்ஜில் தங்கி, எஸ்டேட் பராமரிப்பு, அரசல் புரசலாக பேசப்படும் மலாயா சுதந்திரம், அதன் பிறகு இவர்களின் நிலை எனப் பேசி முடிவெடுக்கத்தான் இந்தக் கூட்டம். அப்படியே அந்த மலைப்பிரதேசத்தை சுற்றி பார்க்கவும் நேரம் ஒதுக்கி இருந்தார்கள்.
போகும் முன்,
“ப்ளேக்கி! ஒரு வாரத்துல வந்துடுவேன். வீட்டை விட்டு வெளிய போகக் கூடாது. பத்திரமா இருக்கனும். கரெக்டா சாப்புடனும். சரியா?” என அறிவுரைகளை அள்ளி வழங்கினான் எட்வர்ட்.
“கூட்டத்த இங்க வைக்க மாட்டாங்களா? ஏன் அம்புட்டு தொலைவுல வைக்கனும்? துரைக்கு முத்தா குடுத்துக்காம, கட்டிப் புடிச்சுக்காம நான் எப்படி தூங்குவேன்?”
“எனக்கு மட்டும் உன்னை விட்டுட்டுப் போகனும்னு ஆசையா ப்ளேக்கி! முக்கியமான முடிவுகள் எல்லாம் இந்த மீட்டிங்குல தான் எடுப்பாங்க. போய்த்தான் ஆகனும்!” என்றவனின் குரலில் சிறு கலக்கம்.
“சரி போங்க!”
“என்னைத் திரும்பி பாத்து சிரிச்சாப்பல சொல்லு. முதுக காட்டிட்டு நின்னா நான் எப்படி நிம்மதியா போவேன்?”
மெல்ல திரும்பியவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“ச்சூ டார்லிங்! இப்ப எதுக்கு இந்தக் கண்ணீர்? ஏழே நாளுல வந்துருவேன் ப்ளேக்கி”
கண்களைத் துடைத்து அணைத்துக் கொண்டான்.
“ஏழு நாளு!!!”
அவன் நெஞ்சில் முகம் புதைத்தவாறே இழுத்து சொன்னாள்.
“ஆமா, ஏழு நாளுதான்!” என மெலிதாகச் சிரித்தான் இவன்.
“சிரிக்காதீங்க துரை! எனக்குத்தான் சோகமா இருக்கு. உங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என்னை விட்டுட்டுப் போறதுல. உங்க சந்தோசத்துக்கு காரணம் என்னன்னு எனக்குத் தெரியும்”
“ஓ தெரியுமோ? சொல்லேன் கேப்போம்” என இன்னும் சிரித்தான்.
“முத்தா வேணும்னு நான் கேக்கற தொல்லையில இருந்து விடுதலை உங்களுக்கு. அதான் சந்தோஷம். அதோட பிள்ளை வேணும்னு சூரியகாந்தி பூ கேட்டாலும், முடியாது சொல்லுறீங்களே அதுல இருந்தும் விடுதலை. அதான் சந்தோசமா கிளம்பிட்டீங்க” என்றவள் அவன் சட்டையை இன்னும் கண்ணீரில் நனைத்தாள்.
“ஏ ப்ளேக்கி, பைத்தியம்!” என்றவன் இறுக அணைத்துக் கொண்டான் அவளை.
“ஆமா, நான் பைத்தியம்தான். நான் உங்களுக்கு வேணாம். கூட்டத்துக்கு உங்களுக்கு புடிச்ச மாதிரி உங்க இனத்து வெள்ளைக்காரி வருவா! அவள புடிச்சிக்கீங்க. அவளுக்கே சூரியகாந்தி பூ குடுங்க!” எனத் தேம்பினாள்.
தன் நெஞ்சில் புதைந்திருந்தவளை, தள்ளி நிறுத்தினான் எட்வர்ட்.
“ப்ளேக்கி!”
பதில் சொல்லாமல் உதட்டை அழுந்த மூடிக் கொண்டாள்.
“ப்ளேக்கி!” என அழுத்தமாகக் கூப்பிட்டான்.
“ஹ்ம்ம்”
“என்ன பேசறன்னு புரிஞ்சுதான் பேசறியா?”
மீண்டும் அமைதி. உதடு மட்டும் பிதுங்கியது.
“இப்போ எதுக்கு இந்த அழுகை, அழிச்சாட்டியம்? எப்போதும் இப்படிலாம் செஞ்சது இல்லையே நீ. என்ன விஷயம்னு சொல்லு ப்ளேக்கி!” என மென்மையாகக் கேட்டான் எட்வர்ட்.
“எனக்கு பயமா இருக்கு துரை!”
“என்ன பயம்?”
“இங்கன்னா என் கூடவே இருக்கீங்க. அங்க போனா உங்க இனத்து ஆளுங்க எல்லாரும் வருவாங்கன்னு சொன்னீங்களே!”
“ஆமா வருவாங்க”
“அவங்கள பாத்துட்டா, என்னை மறந்துருவீங்களோன்னு பயமா இருக்கு. துரை, என்னை விட்டுட்டு வேற வெள்ளை பொம்பள பின்னாடி போக மாட்டீங்கதானே?”
“போக மாட்டேன் ப்ளேக்கி!”
“நான் வேற கருப்பா இருக்கேன்!”
“ஆமா, கருப்பாத்தான் இருக்க” என்றவனுக்குச் சிரிப்பு எட்டிப் பார்த்தது.
“பாத்தீங்களா, நீங்களே ஒத்துக்கறீங்க நான் கருப்புன்னு” என்றவள் இன்னும் தேம்பினாள்.
மறுபடியும் இழுத்து அணைத்துக் கொண்டான் எட்வர்ட்.
“ப்ளேக்கி! எங்க இனத்து வெள்ளை பொண்ணுதான் வேணும்னா நான் எப்பவோ கல்யாணம் செஞ்சிருப்பேனே! மனசுக்குப் பிடிக்க வேணாமா? காதல் கலர பாத்து வராதும்மா. அது ஒருத்தவங்க கேரக்டர், ஹ்ம்ம் குணநலன், பாத்து வரது. கலர மட்டும் பாத்து காதல் வந்தா, வந்த மாதிரியே சட்டுன்னு காணா போயிரும். எனக்கு கருப்பா இருக்கற உன் மேலதான் காதல் வந்துருக்கு. அதுவும் எக்கச்சக்கமா. ஐ லவ் யூ ப்ளேக்கி!”
அவள் முகத்தை நிமிர்த்தி கண்களை ஆழ்ந்து பார்த்து சொன்னான். எப்பொழுதும் அவன் அப்படி பார்க்கும்போது சளைக்காமல் எதிர்ப் பார்வை பார்ப்பவள், இன்று தலையைக் கவிழ்ந்து கொண்டாள்.
“நீங்க வெள்ளையா இருக்கவும்தானே உங்கள எனக்குப் பிடிக்குது. அப்போ என் காதல் கலர பாத்து வந்ததா? அது சட்டுன்னு காணா போயிருமா துரை?”
“ஏன் ப்ளேக்கி, வெயிலுல நின்னு நானும் கருப்பா போயிட்டா, என்னைப் பிடிக்காம போயிருமா உனக்கு?”
“அதெப்படி போகும்? கருத்து போனாலும், நரை தட்டிப் போனாலும் உங்கள மட்டும்தான் பிடிக்கும்”
“அது ஏன் அப்படி? இப்போதான் கலர பாத்துதான் பிடிச்சதுன்னு சொன்ன!”
“மொதல்ல கலர பாத்து ஒரு மயக்கம். அப்புறம் நீங்க என்னை நல்லா பாத்துக்கறீங்கல்ல, அதனால உங்க மேல ரொம்ப பாசம் வந்துருச்சு. அதான் நீங்க பேசாம இருந்தப்போ தாங்க முடியல. உடனே உங்கள கட்டிக்க சம்மதிச்சேன். உங்கள மாதிரி யாரும் என்னை மதிச்சு, பாசமா பாத்துக்கிட்டது இல்லை துரை! எல்லாரும் சட்டுன்னு கை நீட்டிருவாங்க என் மேல”
“இனி நான் உயிரோட இருக்கற வரைக்கும், யாரும் உன் மேல கை நீட்ட முடியாது. கொன்னுப் போட்டுருவேன்!” என்றவனின் குரல் இறுகி ஒலித்தது.
“அப்படிலாம் பேசக் கூடாது துரை! சாமி கண்ண குத்தும். இனி அழ மாட்டேன். நீங்க கிளம்புங்க”
அவன் அணைப்பில் இருந்து விலகியவள், கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
கண்ணீர் கரையில் நனைந்து போயிருந்த அவன் சட்டையைப் பார்த்தவள்,
“அச்சோ! இப்படி ஆயிருச்சே புது சட்டை. மன்னிச்சுக்கிங்க துரை. நான் போய் வேற சட்டை எடுத்துட்டு வரேன். இத கழட்டுங்க” என்றவாறே சட்டை எடுக்க அலமாரியை நோக்கிப் போனாள்.
சட்டையைக் கழட்டி வைத்து விட்டு, பயணத்துக்கு எடுத்துப் போகும் பெட்டியைக் கட்டிலில் வைத்து குனிந்து மூடினான் எட்வர்ட். மூடிவிட்டு நிமிர்ந்தவனை திடீரென இரு கரங்கள் பின்னிருந்து அணைத்துக் கொண்டன.
“ஏ ப்ளேக்கி! என்ன செய்யற?”
அவள் திடீரென இறுக்கி அணைக்கவும் தடுமாறி அவளையும் இழுத்துக் கொண்டு கட்டிலில் சரிந்தான்.
அவன் வெற்று முதுகில் ஒய்யாரமாகப் படுத்துக் கொண்டு,
“ஒன்னுமே செய்யல. சும்மா கட்டிப் பிடிச்சேன் துரை!” என்றாள் சுப்பு.
“வெளிய கிளம்பிட்டு இருக்கறவன, ஏன் ப்ளேக்கி ஒரு வழி பண்ணுற? கொஞ்சம் எழுந்துக்க ப்ளீஸ்!”
“முடியாது துரை”
“என் டார்லிங் ப்ளேக்கில்ல, எழுந்துக்கம்மா”
“இல்ல, முடியாது”
“இப்ப என்னதான் வேணும் உனக்கு?” என்றவனின் குரலில் ஆயாசம்.
ஆயாசம் என்ன குரலில் பாயசமே இருந்தாலும் அவள் காரியத்தில் சுப்பு கண்ணாக இருந்தாள்.
“ஏழு நாளுக்கு போறீங்கல்ல அதனால ஏழு முத்தா வேணும்”
“வந்த புதுசுல டீ கலக்க கூட கணக்கு தெரியாம இருந்த! இப்போ கணக்கு போட்டு முத்தா கேக்கறியே! நல்லா தேறிட்ட ப்ளேக்கி”
அவனுக்கும் அவளை விட்டு செல்ல மனம் வரவில்லை. கட்டிலில் இன்னும் இலகுவாக படுத்துக் கொண்டவன், முதுகில் ஏறி இருந்த சுமையை சுகமாக தாங்கிக் கொண்டான்.
“குடுக்க முடியுமா முடியாதா?” என மிரட்டினாள் சுப்பு.
வாய் விட்டுச் சிரித்தான் எட்வர்ட்.
“இப்படிதான் உங்க ஊருல, மிரட்டி புருஷன் கிட்ட முத்தா கேப்பீங்களா ப்ளேக்கி?”
“அது தெரியலையே துரை! மிரட்டி கேக்கக் கூடாதோ? அப்புறம் எப்படி கேக்கறது? நீங்க எப்பவும் என்னை கெஞ்ச விடறீங்க. இனிமே மிரட்டிதான் கேப்பேன்” என முறுக்கிக் கொண்டாள்.
“கெஞ்சி கேக்காம கொஞ்சி கேளு குடுக்கறேன்”
“எனக்கு கொஞ்ச தெரியாதே துரை”
அவன் தோளில் தன் தாடையை அழுத்தியவாறே பாவமாகக் கேட்டாள்.
“பொய் சொல்லுற! அன்னிக்கு குட்டிப் பையன அப்படி கொஞ்சு கொஞ்சுன்னு கொஞ்சுன. அதே மாதிரி என்னையும் கொஞ்சுனா , ஏழு முத்தா குடுக்கறேன்”
முதுகில் இருந்து இன்னும் கொஞ்சம் முன்னே நகர்ந்து அவன் தாடையைப் பிடித்தவள்,
“அவன நான் கொஞ்சலையே! சாஞ்சாடம்மாதானே பாடுனேன்” என சொன்னாள்.
“ஆமா, அதுதான். நீ பாடனது எனக்கு கொஞ்சன மாதிரியே இருந்துச்சு. அது மாதிரி எனக்கும் இப்போ பாடு ப்ளேக்கி. ப்ளீஸ்”
“நீங்க பச்ச புள்ள பாரு, உங்களை மடியில போட்டு பாடுறாங்க! க்கும்” என நொடித்துக் கொண்டாள் சுப்பு.
“ப்ளேக்கி, பொண்ணுங்களுக்கு புருஷன்தான் முத குழந்தையாம். அதனால நான்தான் உனக்கு முதல் பிள்ளை, அதுவும் வெள்ளைக்காரப் பிள்ளை. அதனால பாடித்தான் ஆவனும்” எனச் சொல்லி சிரித்தான்.
“சரி பாடுறேன்!”
அவன் மேல் படுத்தவாறே அவன் தாடையை கையில் பிடித்து இடமும் வலமும் ஆட்டிக் கொண்டே பாடினாள் சுப்பு.
“சாஞ்சாடம்மா சாஞ்சாடு
சாயக்கிளியே சாஞ்சாடு
குத்து விளக்கே சாஞ்சாடு
கோயில் புறாவே சாஞ்சாடு
மானே மயிலே சாஞ்சாடு
மரகதக் கிளியே சாஞ்சாடு
கண்ணே மணியே சாஞ்சாடு
கட்டிக் கரும்பே சாஞ்சாடு
மயிலே குயிலே சாஞ்சாடு
மடியில் வந்து சாஞ்சாடு” எனப் பாடி முடித்தவளை முதுகில் இருந்து புரட்டி கட்டிலில் சரித்திருந்தான் எட்வர்ட்.
“விதவிதமா என்னைக் கொஞ்சுன இந்த உதட்டுக்கு ஏழு முத்தா என்ன, ஏழாயிரம் முத்தா குடுப்பேன்”
அவளுக்கு மூச்சு முட்ட முத்தமிட்டு எழுந்தான் எட்வர்ட். நகர போனவன் கையைப் பற்றி நிறுத்தினாள் சுப்பு.
திரும்பி என்னவென கண்களால் வினவியவனைப் பார்த்து வெட்கத்துடன் தலைக் குனிந்தவள்,
“துரைலிங், எனக்கு சூரியகாந்தி பூ வேணும்” என மெல்லியக் குரலில் கேட்டாள்.
“ப்ளேக்கி!”
வெட்கத்தில் பொன்னென ஒளிர்ந்த அவள் முகத்தைப் பார்த்து தடுமாறினான் எட்வர்ட். முதல் முறை போல் இல்லாமல் அவளே காதலாகி கனிய வேண்டும் என எதிர்பார்த்து காத்திருந்தான் எட்வர்ட். இத்தனை நாளாய் குழந்தை வேண்டும் என்பதற்காக அவனை நச்சரித்தவளுக்கும், இன்று வெட்கத்துடன் தலை குனிந்து அமர்ந்திருந்தவளுக்கும் ஆயிரம் வித்தியாசம் தெரிந்தது அவனுக்கு.
தன் தலை முடியைக் கோதிக் கொண்டவன்,
“ஏ ப்ளேக்கி, இதென்ன புதுசா வெக்கம்? மயக்கறப்போ!” என்றபடி கட்டிலில் அமர்ந்திருந்தவளை தன் வயிற்றோடு கட்டிக் கொண்டான் எட்வர்ட்.
சூரியனைக் கண்டதும் இதழ் மலர்த்தும் சூரியகாந்தி பூப்போல தன் முகம் பார்த்து மலர்ந்தவளை கைகளில் அள்ளிக் கொண்டான் எட்வர்ட்.
மனைவியவள் மனம் இசைந்து மயங்கி நிற்க, வெகு இயல்பாய் இன்பமாய் களைகட்ட ஆரம்பித்தது அவர்களின் இல்லறம்.
“என்ன என் பேரு அடிபடுது?” என வந்த பட்டுவின் குரலில் தன்னிலை அடைந்தாள் சுப்பு.
“துரை இல்லாம, இந்தாம்மாவுக்கு பாலும் கசக்குதாம், பாயும் குத்துதாம். நீ வந்து என்ன சேதின்னு கேளு” என்றாள் பவுனு.
“புது வெளக்கமாறுல அப்படித்தான்டி இருக்கும்! கூட்டி, கூட்டி தேஞ்சு போச்சுனா, அடச்சீன்னு மூளைல தூக்கிப் போட்டுருவோம்” என நக்கலடித்தாள் பட்டு.
“நீயும்தான் வருஷ கணக்கா கூட்டுற! ஆனா தூக்கிப் போடாம இறுக்கில வச்சிக்கிற!” எனப் பட்டுவைக் குறி வைத்து தாக்கிப் பேசினாள் பவுனு.
“நான் தூக்கிப் போடாமத்தான் நீ ரெண்டு பெத்தியாக்கும்! வாயப்பாரு, ஏழுறுக்கு கிழியுது” என நொடித்துக் கொண்டாள் பட்டு.
“இப்ப எதுக்கு வெளக்கமாறுக்கு சண்டை போடுறீங்க? சாமான் அறையில நெறைய இருக்கு. ஆளுக்கு ஒன்னு எடுத்துட்டுப் போங்கக்கா” எனத் தீர்ப்புக் கூறினாள் சுப்பு.
பட்டுவும் பவுனுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தலையில் அடித்துக் கொண்டனர்.
“வெளக்கமாறுன்னு சொன்னது உன் சித்தப்பூவதான்டி. துரை போறப்போ காடி ஓட்ட இந்தாளையும் கூட்டிட்டுப் போயிருக்கலாம். நாங்களும் ஒரு வாரம் நிம்மதியா இருந்துருப்போம்” என்றாள் பட்டு.
“ஏன்கா சித்தப்பூவ கரிச்சுக் கொட்டுறீங்க. பாவம்கா அவரு”
“யாரு, அந்தாளு பாவமா? நல்லா சொல்லிப்புடுவேன்! ஒன்னுக்கு ரெண்டு பேரு சேவகம் செய்யறோம்ல, நல்லா உட்காந்துகிட்டு இது நொட்டை இது நொள்ளைன்னு நொரைநாட்டியம் பேசிட்டு திரியுது. உடம்பு கிடம்பு சரியில்லைன்னா, அணுசரனையா ஒரு வார்த்தை பேசாட்டியும் போகுது, குத்திக் காட்டாம இருக்கலாம்ல! என்னமோ ஊரு உலகத்துல உனக்கு மட்டும்தான் மாசா மாசம் பொத்துகிட்டு ஊத்தற மாதிரி அங்க நோவுது இங்க நோவுதுன்னு நடிக்காம வேலைய பாருடின்னு சொல்லிட்டுப் போகும். மரமண்டை!” எனக் கடுப்பில் பேசினாள் பவுனு.
“விடுறி! இப்போதான் கல்யாணம் ஆகிருக்கு. அவ முன்னுக்கு நம்ம சொந்த கதை சோக கதைலாம் பேசி கலங்கடிக்காத. ஏ புள்ள சுப்பு!”
“சொல்லுங்கக்கா”
“துரை கிட்ட பேசி, கையோட ஒரு தாலிய கட்ட சொல்லு புள்ள. என்னதான் மோதிரம் போட்டாலும், நம்ம இனத்துல தாலி கட்டுனாத்தானே கல்யாணம். நாளைக்கு நாலு பேர் நாலு விதமா பேசக் கூடாதுல”
“சொல்லுறேன்கா. துரை நான் சொன்னா கேப்பாரு. சித்தப்பூ மாதிரி இல்ல துரை, என்ன நல்லா பாத்துக்கறாரு. அன்னிக்கு காலு வலிக்குதுன்னு சொன்னேன், தைலம் பூசி புடிச்சு விட்டாரு. அப்புறம் தலை வலிக்குதுன்னு சொன்னேன், தலையும் புடிச்சு விட்டாரு. ஹ்ம்ம் முதுகு வலிக்குதுன்னு சொன்னேன், அங்கயும் புடிச்சு விட்டாரு”
“போதும், போதும் நிறுத்து புள்ள. பச்சப் புள்ள மாதிரி மொகத்தை வச்சிக்கிட்டு என்னம்மா துரைய கைக்குள்ள போட்டு வச்சுருக்க. எமகாதகிடி நீ! கையப் புடிச்சு விட்டாறாம், கால புடிச்சு விட்டாறாம்! எனக்கும் வாச்சிருக்குதே, வெளங்காத வெளெக்கெண்ணெய்!” எனப் பெருமூச்சு விட்டாள் பவுனு.
“நான் செய்ய சொல்லல. அவரேத்தான் புடிச்சுவிட்டாரு. நான் வேணாதான் சொன்னேன். என் பொண்டாட்டிக்கு நான் செய்யாம வேற யார் செய்வான்னு கேட்டாருக்கா”
“போதும் புள்ள! எல்லாத்தையும் சொல்லாத. இவ பொறாமையில பொசுங்கியே செத்துட போறா! துரை மாதிரி புருஷன் கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கனும் புள்ள. இப்படி பொண்டாட்டிக்கு அணுசரனையா இருக்கற ஆம்புளைங்கள விரல் விட்டு எண்ணிறலாம். போன ஜென்மத்துல நீ விதைச்ச புண்ணியத்தை இந்த ஜென்மத்துல அறுவடை பண்ணுற” எனக் கன்னம் வழித்தாள் பட்டு.
“ஏ பவுனு! போய் வரமொளகாய எடுத்துட்டு வாடி! உன் கண்ணே பட்டுருக்கும் புள்ளைக்கு. சுத்தி போடனும். எந்தப் பிரச்சனையும் இல்லாம துரை கூட நூறாண்டு வாழனும் புள்ள நீ!” எனச் சொல்லியவள் சுத்திப் போட்டு விட்டே விட்டாள்.
அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவள் காதில், கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
‘ஏழு நாளுன்னு சொன்னாரே துரை. அஞ்சு நாளுல வந்துட்டாரா?’
நாற்காலியில் இருந்து எழுந்தவள், குதித்துக் கொண்டு வெளியே ஓடினாள்.
காரில் இருந்து இறங்கிய எட்வர்ட், தன் பின்னால் கேட்கும் கொலுசொலி அறிந்து திரும்பும் நேரம் அவன் மேல் பாய்ந்திருந்தாள் சுப்பு. முகம் கொள்ளா சிரிப்புடன் அவளை அள்ளிக் கொண்டான் எட்வர்ட்.
“டார்லிங் ப்ளேக்கி” எனச் சொல்லி இறுக்கி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டவனை,
“ஏடி (Eddie)!” எனும் கோபக் குரல் நடப்புக்குக் கொண்டு வந்தது.
முகம் இறுக சுப்புவை இறக்கியவன், சுதாகரிக்கும் முன் பளீரென ஓர் அறையில் கீழே விழுந்து கிடந்தாள் சுப்பு.
“டாடி!!!!!!”
எட்வர்டின் கர்ஜனை காற்றில் கலந்து எட்டு திக்கும் எதிரொலித்தது.

Last edited:
Author: VanishaAdmin
Article Title: இள மனச--EPI 20
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.