வணக்கம் டியர்ஸ்,
நான் சொல்லிருந்தேன்ல கிளம்பறப்ப எவ்ளோ தடங்கல்கள் இருந்ததுன்னு! அதனால நாங்க போகப் போற எந்த இடத்தையும் நான் ரிசேர்ச் செய்யவே இல்ல! போகிற ஃப்ளோல போவோம்னு இருந்துட்டேன். காலைல எழுந்து ப்ரேக்பஸ்ட் சாப்பிட்டுட்டு பிக்கானேர் கிளம்பிட்டோம். ஹவுஸ் ஓனர்ட்ட இன்னிக்கு பிக்கானேர்னு மேசேஜ் போட்டேன். அந்த மனுஷன் கூகுள் பண்ணி பார்த்துட்டு, பிக்கானேர் பாகிஸ்த்தானுக்கு ரொம்பப் பக்கமா இருக்கு! கவனம்னு பீதிய கிளப்பி விட்டுட்டாரு! நம்ம கொஞ்சம் சந்தோஷமா இருந்தா இந்த ஆண்களுக்குப் பொறுக்காதே!!!!அவ்வ்வ்!
கிட்டத்தட்ட 6-7 ஹவர் பயணம் ஜெய்ப்பூர்ல இருந்து பிக்கானேர்கு. நடுவுல ஒரு இடத்துல ரெஸ்ட்டுக்கு நிறுத்தனாரு ட்ரைவர். அங்க நான் மண் குவளைல டீ வாங்கிக் குடிச்சேன்! செம்ம டேஸ்ட்யா!!! பிறகு மீண்டும் பயணம். நம்ம குட்டி, சித்தி எதாச்சும் கேம் வெளையாடலாம்னு ஆரம்பிச்சா! பாட்டுக்குப் பாட்டு, ஒரு சொல் சொல்லிட்டு(பூன்னா பூக்கள் வர பாட்டா பாடனும்) அதுக்கானப் பாட்டுப் பாடறது, திருடன் போலிஸ் விளையாட்டுன்னு செம்ம ஜாலி நாங்க நாலு பேரும் பின்னாடி உக்காந்துட்டு. பின்னாடி ரெண்டு வரிசைய நாங்க ஆக்ரமிச்சிக்கிட்டோம்! முன்னாடி ரெண்டு வரிசை அந்த மூனு பேரோடது! அந்த முன்னாடிப் பக்கம் எப்பவும் சண்டை நடந்துட்டே இருக்கும்! நாங்க அதை கண்டுக்காம எங்க உலகத்துல இருந்துப்போம்.
பிக்கானேர் கொஞ்சம் பின் தங்கிய இடம் மாதிரி இருந்தது. அங்க படிப்புக்கு ரொம்ப முக்கியத்துவம் தராங்க! வழி நெடுக போஸ்ட்டர்லாம் காலேஜ், நீட், ஸ்கூல் இது சம்பத்தப்பட்டத்தாத்தான் இருந்தது.
ட்ரைவர் எங்கள ஹோட்டல்ல கொண்டு போய் முதல்ல இறக்கிட்டாரு! வேகமா செக் இன் பண்ணிட்டு வாங்க! பிகானேர் கோட்டை மூடிருவான்னு அவசரப்படுத்துனாரு! நாங்களும் லக்கேஜ்லாம் கொண்டு போய் போட்டுட்டு, வேகமா கிளம்பி வந்தோம். இங்கயும் எங்களுக்கு கைட் அரேஞ் பண்ணி தந்தாரு ட்ரைவர். நாங்க மூடறதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடித்தான் போய் சேர்ந்தோம். கைடோட போகவும், எங்கள போ போன்னு விரட்டல, ஆனா ஒவ்வொரு இடத்த நாங்க பார்த்துட்டு வரப்பவும், பின்னாடி பூட்டிட்டே வராங்க! இந்த ட்ராவல் டைம்னால அடிச்சுப் புடிச்சுத்தான் கோட்டைகள பார்க்க முடிஞ்சது. லஞ்ச் வேற சாப்பிடல! சரியானப் பசி! பாப்பாவும் நானும் ஒரு பேரிக்காவ ஷேர் செஞ்சு சாப்பிட்டோம்! நான் வாய்ல வைக்கறப்ப மட்டும், இங்க சாப்பிடக் கூடாதுன்னு சொல்லிட்டானுங்க! சோகத்த!!!
பிக்கானேர் ராஜா ஆக்சுவலி ஜெய்ப்பூர் வாரிசுத்தானாம். ஆனா ராஜா கோவத்துல இவர போக சொல்லிட்டாராம். அப்போ இவர் கொஞ்சம் ஆட்களோட பிக்கானேர் வந்து சேர்ந்திருக்காரு! கருணி மாதா(அந்த ஊர்ல கும்பிடப்படற தெய்வம்) இவருக்கு ராஜ்ஜியம் அமைக்க ஆசீர்வாதம் செஞ்சிருக்காங்க! இதை கைட் சொன்னாரு! நான் சரியா மொழிப் பெயர்த்துக்கிட்டனான்னு தெரியல! நீங்களே கூகுள் செஞ்சிக்கங்க! இந்தக் கோட்டைல ராஜா பயன்படுத்துன ஹெலிகாப்டர், வெள்ளைக்காரன் அவருக்குக் குடுத்த அவார்ட்ஸ், இன்னும் நெறய விஷயங்கள் காட்சிக்கு வச்சிருக்காங்க! இந்த ராஜா நல்லா படிச்சவரா இருக்காரு! வேட்டைக்குலாம் போயிருக்காரு! இவங்க நம்ம மக்கள் பக்தில கத்தி மேல ஏறி நடக்கற மாதிரி, எண்டெர்டெய்ன்மெண்ட்கு ஆணி மேல ஏறி ஆட்டம்லாம் ஆடிருக்காங்க! போட்டோல அதை போடறேன், பாருங்க! இந்த இடத்த சுத்திப் பார்க்கறப்ப. எப்படிலாம் அந்த ராஜாமார்கள் வாழ்ந்திருப்பாங்கன்னு கற்பனைப் பண்ணிப் பார்க்க முடியுது டியர்ஸ்!
இந்த கைட் கொஞ்சம் ஓக்கே! எங்களுக்கு சாப்பிட ஒரு இடம் சஜஸ்ட் பண்ணாரு! அங்க நெறயா ஸ்வீட்ஸ் கூட இருந்தது. பிக்கானேர்தான் ஸ்வீட்ஸ்கு ஃபேமஸான இடம்னு நான் கேள்விப்பட்டேன். நெறய இடத்துக்கு இங்கிருந்துதான் சப்ளை போகுதாம். அந்தக் கடைல நாங்க ஜிலேபி(மொறு மொறுன்னு வாய்ல வச்சதும் சொர்க்கத்துக்கே போய்டலாம் அவ்ளோ ருசி!), டாஹீ பூரி, பானி பூரி, மேகி இப்படின்னு ஆர்டர் செஞ்சு சாப்பிட்டோம். பிறகு பக்கத்துல பழக்கடை இருந்தது, அங்க கொஞ்சம் பழம் வாங்கிக்கிட்டோம்! அஞ்சு மணிக்கு மேல சுத்திப் பார்க்கற இடம்லாம் சாத்திடுவாங்கன்னு, ரூம்ல கொண்டு வந்து விட்டுட்டாரு ட்ரைவர்.
ரூம்ல கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு, கீழ இறங்கி வந்து டின்னர் முடிச்சிட்டுப் படுத்துட்டோம். நெக்ஸ்ட் டே நாங்க ஜெய்சல்மீர் போனோம்! செம்ம எக்ஸ்பீரியன்ஸ் அங்க! அத நெக்ஸ்ட் பதிவுல பார்ப்போம் டியர்ஸ்.
பாய்!!!!

Author: VanishaAdmin
Article Title: 26/3/2026--Day 9
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.