வணக்கம் டியர்ஸ்,
இன்னைக்கு ஜெய்ப்பூர்ல ரெண்டாவது நாள். எழுந்து ஹோட்டல்லயே காலை உணவு சாப்பிட்டுட்டோம். ட்ரைவர் ஊருக்குப் போய்ட்டதுனால(இந்த டைம்ல அவங்க ஊர் மாதா(அம்மன்) பூஜை நடக்கற நாள்) ஓனரே வந்தாரு ஓன் டே ட்ரைவ் பண்ண. முதல் டெஸ்டினேஷன் பிர்லா மந்திர். வெள்ளை வெளேர்னு ரொம்ப அழகான மந்திர். உள்ள போட்டோலாம் எடுக்கக் கூடாது. கார்ட்ஸ் நிக்கறாங்க. ராமரும் சீதையும் அவ்ளோ அழகா இருந்தாங்க பார்க்க. இது ஒரு தியான மடம் மாதிரித்தான் இருக்கு. உள்ள இராமாயணத்த அழகா செதுக்கி வச்சிருக்காங்க. உள் கட்டமைப்பு சலவைக் கற்களால பளபளக்குது. நிமிர்ந்து பார்த்தா அதோட கூரைலாம் அவ்ளோ கலைநயமா இருக்கு. ஐயர் துளசித் தீர்த்தம் குடுத்தாரு. மோஸ்ட்லி அங்க மந்திர்ல துளசி அல்லது துளசித் தீர்த்தம்தான் தராங்க. நெத்திக்கு இட்டுக்க ஒன்னும் தரது இல்ல.
இங்க பார்த்து முடிச்சிட்டு, மொட்டை வெயில்ல Jantar Mantarக்கு கூப்டுப் போனாங்க. அங்க பார்க்கிங்ல டெம்போவ போட்டுட்டாரு ஓனர். ஜண்ட்டர் மண்ட்டர், ஹவா மஹால் எல்லாம் பக்கம் பக்கம்தான். நடந்து போய்டுங்கன்னு சொல்லிட்டாரு! ஆனா நடக்கற அளவுக்குப் பக்கம் பக்கம் இல்ல! இந்த வெயில்ல நடக்க முடியாதுடா சாமின்னு நாங்க ஆட்டோ எடுத்துட்டோம்.
ஜண்ட்டர் மண்ட்டர் ஓர் ஆஸ்ட்ரோலாஜிக்கல் இடம். டிக்கேட் எடுக்கற எடத்துப் பக்கம் ராஜாஸ்த்தான் வளையல், அலங்கரிக்கப்பட்ட புல்லாங்குழல், கீ செயின்லாம் விக்கறாங்க. அங்க எனக்கும் பாப்பாக்கும் வளையல் வாங்கனேன். பிறகு அந்த இடத்துக்குள்ள நுழைஞ்சோம். விளக்கம் வேணும்னு ஒரு கைட வேற புடிச்சோம். கொஞ்சம் வயசான மனுஷன். போட்டோ எடுத்துத் தரேன்னு சொல்லி, போன்லாம் வாங்குனாரு. ஆனா போட்டோத்தான் எடுக்கவே இல்ல. எடுக்க தெரியல அவருக்கு. நல்ல வேள நாங்களே அங்கிங்க போட்டோ எடுத்துக்கிட்டோம்.
அந்தக் காலத்துலயும் சைன்ஸ் எவ்ளோ வளந்திருந்துச்சுன்னு இந்த இடத்தப் பார்த்துத் தெரிஞ்சுக்கலாம். வெயில் விழற இடத்தப் பார்த்து டைம் கணிக்கறது, நாட்கள் என்ன, மாதம் என்னன்னு தெரிஞ்சுக்கறது, ஸ்டார் சைன் என்ன சொல்லுதுன்னு கண்டுப்புடிக்கறதுன்னு அவ்ளோ மண்டை மூளைக்காரங்களா அந்த இடத்த அமைச்சிருக்காங்க.
அங்க முடிச்சிட்டு, ஆட்டோல நாங்க ஷாப்பிங் போய்ட்டோம். அந்தக் கடைல நாங்க நாலு பேர்தான். முன்னாடி வச்சிருந்த பாவாடை கண்ணைக் கவருதுன்னு உள்ள போய், மொத்த ஷாப்பிங்கையும் அங்கயே முடிச்சாச்சு. எனக்கும், பாப்பாக்கும் கண்ணாடி வச்ச டாப்ஸ் வாங்கனேன். அப்புறம் ரொம்ப வேலைப்பாடு நிறைஞ்ச துப்பட்டா ஒன்னு, ஜிகுஜிகு பாவாடை ஒன்னு இப்படின்னு போகுது லிஸ்ட். பாப்பாக்கு ஒரு அழகான பேண்ட் தங்கமலர் வாங்கிக் குடுத்தாங்க. நான் நிறைய ஷாப்பிங் செய்யல. எங்க ஊர்ல புதுசா ஒரு ரூல்ஸ் கொண்டு வந்திருக்கான் இமிகிரேஷன்ல. ஒரு ஆள் இவ்ளோதான் புது ஐட்டம்ஸ் உள்ள கொண்டு வர முடியும்னு. நான் நெறய வாங்கிட்டு வந்து, இமிகிரேஷன்ல நிறுத்தி, டாக்ஸ் கட்டுன்னு சொன்னா, அது வேற கடுப்பான வேலைன்னு தயங்கிட்டே இருந்தேன். தங்கமலர்த்தான் வாங்கு, இவ்ளோ தூரம் வந்துட்டு ஒன்னும் வாங்கலனா நல்லாவா இருக்குன்னு சொல்லிட்டே இருந்தாங்க! நல்ல வேளை அதைக் கேட்டு வாங்கனேன். பாப்பாக்கு அவளோட ஐட்டம்ஸ்லாம் பார்த்து அவ்ளோ சந்தோஷம்.
ஷாப்பிங் முடிஞ்சதும், ஹவா மஹால் பார்க்கப் போனோம் ஆட்டோலயே! இது பிங்க் கலர்ல நிறைய கண்ணாடிகள் வச்ச பில்டிங். அந்த இடத்துல நிம்பு சோடா(அட நம்ம லெமன் சோடாங்க) வாங்கிக் குடிச்சோம். இதுல மேல ஸ்பைசஸ் கொஞ்சமா தூவி விட்ருக்காங்க! ரொம்ப நல்லா இருந்தது. அங்கயும் ஷாப்பிங் செய்ய கடைகள் இருக்கு. பாப்பாக்கும் அவ ப்ரேண்ட்கும் கழுத்துக்கு போடற மாதிரி ஒட்டகம் அண்ட் யானை டிசைன்ல சோக்கர் செட் வாங்கனேன். தென் நானும் தங்கமலரும் மட்டும் நடந்து ஹவா மஹால் முகப்புப் பக்கம் போனோம். அங்க நின்னு போட்டோ எடுக்கறப்ப, ராஜஸ்த்தான் தொப்பி விக்கற ஆள் கடந்து போனாரு. போட்டோக்காக அவர்ட்ட அந்தத் தொப்பிய பத்து ரூபாக்கு ரெண்ட்டுக்கு வாங்கி படம் புடிச்சோம்.
பிறகு எங்க கூட ட்ரீப் வந்தவங்க கூட சேர்ந்து லன்ச்சுக்குப் போனோம். மோஸ்ட்லி இங்க பரோட்டா, சப்பாத்தி, ஃபுல்கா இப்படி ரொட்டி வகைதான். சோறு இருக்கு, ஆனா புலாவ்னு பீஸ் போட்டுக் கொண்டு வந்து வைக்கறான். அது என் தொண்டைக்குள்ள இறங்கவே மாட்டுது. சோ நான் ரொட்டிலயேத்தான் சர்வைவ் பண்ணேன். இன்னைக்கு முட்டைக் குழம்பு வாங்கி, பரோட்டா தொட்டுச் சாப்பிட்டுட்டேன்.
அதுக்குப் பிறகு அல்பர்ட் ஹால் மியூசியம் போனோம். அங்க உள்ள போகல! வெளியவே நின்னு போட்டோ புடிச்சிட்டு வந்துட்டோம். கோட்டைகள் பார்க்கறப்வே அங்க ராஜாக்கள் உபயோகிச்ச துணிமணி, கத்தி, துப்பாக்கி வகைகள், பண்ட பாத்திரம்னு ஷோக்கு வச்சிருக்காங்க! இந்த மியூசியம்லயும் அதேதான்னு சொல்லவும், வெளியவே நின்னுட்டோம். டயர்ட் வேற. பிறகு ஹோட்டலுக்கு வந்தாச்சு. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு, நைட் டின்னர் சாப்பிட்டுட்டு சீக்கிரம் படுத்துட்டோம். மறுநாள் பிக்கானேர்(Bikaner) போறோம்! ஜெய்ப்பூர்ல இருந்து 5-6 ஹவர்ஸ் ட்ரவல்.
பிக்கானேர் பத்தி நெக்ஸ்ட் பார்க்கலாம்.
பாய் டியர் ஆல்.

Author: VanishaAdmin
Article Title: 25/3/2026--Day 8
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.