Vicky Vidya Ka Voh Wala Video

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
589
-2,611
93
OTT--Netflix

View attachment 481


இந்திப் படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. இந்தப் படத்தோட சினோப்சிஸ் பார்த்ததும், அட நல்லா இருக்கேன்னு தோணுச்சு. டைம் இருக்கவும் உக்காந்து பார்த்தேன். ஹீரோ ராஜ்குமார் ராவ்! ரொம்ப சாதாரணமா இருப்பாப்ல! ஆனா செம்ம நடிப்புக்காரன். ஹீரோயின் நம்ம அனிமல் படத்துல வந்து கலக்கன த்ரிப்தி.


கதைக்களம் 1998ல நடக்குது! அப்போ இன்னும் உத்ரகாண்ட் ஆகாம, உத்திரபிரதேசமா இருந்த காலம். அந்த ஹோலி இடத்த சில காட்சிகளில அழகா காட்டுறாங்க! கதைச் சுருக்கம் என்னன்னா, விக்கி(நாயகன்), வித்யா(நாயகி) ரெண்டு பேருமே சின்ன வயசுல இருந்து ப்ரேண்ட்ஸ். போக போக லவ்வாகிடுறாங்க. அவ டாக்டர். இவன் மெஹெந்தி வைக்கறவன். அப்டி இப்டின்னு கல்யாணமும் நடந்திருது. ஹனிமூன் கோவாக்கு போக டிக்கேட் எடுக்கறான் ஹீரோ. ஹிரோயின் வீட்டுல கோயிலுக்குப் போகனும்னு சொல்லி டிக்கட் போட்டுத் தராங்க. ரெண்டும் வீட்ட ஏமாத்திட்டு கோவா போகுதுங்க. அங்க ஹீரோ ஹீரோயின் கிட்ட ஒரு விண்ணப்பம் வைக்கறான். அது என்னன்னா, நாம ரெண்டு பேரும் முதலிரவ வீடியோவா எடுத்து வச்சிப்போம். நாள பின்ன நமக்கு சண்டை வந்தா, மனக் கசப்பு வந்தா இதைப் போட்டுப் பார்ப்போம். ஒரு ஸ்பார்க் வந்து உறவு பலப்படும்னு. முதல்ல வேணாம்னு சொன்னவ, பிறகு ஒத்துக்கறா.

ஹனிமூன் முடிச்சு வந்து வீட்டுல மறுபடி அந்த சீடி போட்டுப் பார்க்கறாங்க ரெண்டு பேரும். அது ப்ளேயர்ல ஸ்டக் ஆகிடுது. தூங்கிடறாங்க இவங்க! அன்னிக்கு நைட்டோட நைட்டா அந்த வீட்டுல திருட்டு நடக்குது! அதுல அந்த ப்ளேயரும், அது உள்ள இருந்த சீடியும் காணா போய்டுது! அதுக்குப் பிறகு வரதுதான் கதை.

இதை செம்ம கமேடியா சொல்லிருக்காங்க! சில இடத்துலலாம் சிரிப்பு தாங்க முடியலை. ரொம்ப நாள் சிரிக்காம இருக்கறவங்க இந்தப் படத்தப் பாருங்க! கண்டிப்பா ரெண்டு மூனு சீனுக்காவது சிரிப்பீங்க! கடைசில சிடிய கண்டுப்புடிச்சாங்களான்றதுதான் கதை!!! ஹீரோக்கு அக்காவா மல்லிகா ஷெராவாட் நடிச்சிருக்கா! ஒரு போலிஸ் வேற வருவான். அவனோட செம்ம காமேடி! அதோட டாலேர் மெஹ்ண்டி பாட்டு ஒன்னு வருது! கடைசில ஒரு நல்ல மேசேஜ் சொல்லிருக்காங்க!


மொத்தத்துல ஒரு நல்ல மூவி!!!
 

Author: VanishaAdmin
Article Title: Vicky Vidya Ka Voh Wala Video
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.