Nimir

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
592
-2,583
93
Fb Post Jan 2019

View attachment 58

படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. இப்போத்தான் ஷெர் பண்ணிக்க டைம் கிடைச்சது. இந்த ஹீரோ படம் எப்போவும் சந்தானத்துக்காக பார்ப்பேன். இது தான் இவருக்காக பார்த்தேன்.

கதைன்னு பார்த்த சின்ன கரு தான். ஆனா குடுத்த விதம்..சூப்பர்..ஹீரோ போட்டோ ஸ்டூடியோகாரரு. அப்பாவோட தொழில பார்க்கறாரு. அடிப்படை அறிவு கூட இல்ல போட்டோகிராபில. அவருக்கு ஒரு தடவை சண்டையில சட்டை கிழிஞ்சிரும். அடிச்சவ திருப்பி அடிக்காம செருப்பு போட மாட்டேன்னு சபதம் எடுப்பாரு. ரொம்ப நல்ல சபதம்யா. அதுக்கு சண்டை கிளாஸ்குலாம் போவாரு. ஆனா பாருங்க, இவர அடிச்ச சமுத்திரகனி வெளிநாட்டு வேலைக்கு போய்ருவாரு. அப்புறம் என்ன ஹீரோ வெறுங்காலுலயே படம் முழுக்க பவனி வருவாரு.
இதுல காதலி வேற, டிமிக்கி குடுத்து இன்னொருத்தன கட்டிக்கும். அப்புறம்தான் ஹீரோயின் என்ட்ரி. புள்ள அழகுங்க. குறும்பு நடிப்பு. நம்மள மாதிரியே வயிறு பசிக்கும்ல கேசு..போட்டோ புடிக்க கடைக்கு போய், ஹீரோவ துப்பிட்டு வருவா ஒனக்கு போட்டோ புடிக்க வருமா வராதானு. அப்புறம் என்ன மோதல், முறைப்பு அப்புறம் காதல்.
இங்கனதான் ட்வீஸ்டு..இவ சமுத்திரகனியோட தொங்கச்சி. யோவ் போங்கய்யா...
ஹீரோ செருப்பு போட்டாரா? காதலிய கரம் புடிச்சாரா? அதுதான் கிளைமேக்ஸ்.

இந்த படத்து நிஜ ஹீரோ யாரு தெரியுமா? N.K Egambaram- சினிமாட்டோகிராபி அவர்தான். யப்பா அந்த ஊரு எதுனு தெரில. ஆனா அப்படி ஒரு அழகு. நெஞ்சில் மாமழை பாட்டுல பேக்ரவுண்ட் வாவ். அதுக்காகவே படம் பார்க்கலாம்..

மொத்தத்தில் நிமிர் ரொம்ப அழகு..
 

Author: VanishaAdmin
Article Title: Nimir
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.