மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இரண்டரை மணி நேர வித்தியாசம் இருக்கு. எங்களுக்கு காலை 8னா இந்தியால காலை 5.30. இந்த வித்தியாசத்துல நான் காலங்காத்தாலயே முழிச்சி உக்காந்துப்பேன். போக போக உடம்பு இந்த டிபரென்ஸ்க்கு பழகிடுச்சு. அலாரம் அடிச்சு கூட தூங்கி, அடிச்சு புடிச்சு கிளம்பனதுலாம் நடந்திருக்கு!
இந்த நாளும் ஒரு ஏழு போல கிளம்பியாச்சு. முந்தைய நாள் பேச்சு வாக்குல கங்கை கொண்ட சோழபுரம் பக்கம்தான்னு ட்ரைவர் சொல்லவும், ஒரே குஷி எனக்கு. எங்க ப்ளான்ல தஞ்சாவூர் பெரிய கோயில் இருந்தது. அதுக்கு ஏற்கனவே போயிருக்கறதுனால அவர் மகன் கட்டனத பார்க்கப் போகலாம்னு முடிவு பண்ணிட்டோம். காபி மட்டும் குடிச்சிட்டு போகிற வழில பசியாறிக்கலாம்னு ப்ளான்.
டீ குடிக்கற இடத்துல நடு ரோட்டுல கன்னுக்குட்டி அம்மாட்ட பால் குடிக்கற காட்சி! காலைல நல்ல சகுனம். வெயில் வரதுக்குள்ள கங்கை கொண்ட சோழபுரம் வந்துட்டோம். பெரிய கோயில் ஸ்டைல்ல கொஞ்சம் சின்னதா இருந்தது! அவ்ளோ அழகு அந்த இடம். அப்படியே ஒரு கால்ம் ஃபீல்! சுட்டெரிக்காத இதமான வெயில், கிளிகளின் கீச்கீச்! பதிகம் பாடறவங்களோட குரல்! செம்ம டிவைன் ஃபீல்! தரிசனம் முடிச்சிட்டு, செதுக்கப்பட்டிருந்த சிற்பங்களையும், கோயிலோட அழகையும் கண் குளிர பார்த்துட்டே இருந்தேன். அங்கிருந்து கிளம்பவே மனசு வரல!
அங்க பக்கத்துல இருந்த ஒரு ஹோட்டல்ல சாப்பிட போனோம்! தோசை, டீ இல்லைங்க, கேஸ் இஸ்யூன்னு சொல்லிட்டாங்க! சோ நான் இட்லி மட்டும் சாப்பிட்டேன். காலைல பொங்கல், கிச்சடிலாம் சாப்பிட்டா மீக்கு டூக்கம் கம்! அப்புறம் எங்க நான் சுத்தி பார்க்க.
அடுத்து நாங்க போன கோயில பலர் கேள்விக் கூடப் பட்டிருக்க மாட்டீங்க! ஸ்ரீ வீழிநாத சுமாமி திருக்கோயில். ரொம்பப் பழமையான கோயில் இது. இடமும் ரொம்ப உள்ள இருந்தது. ரொம்ப நேரம் பயணிச்ச ஃபீல் எனக்கு. இந்தக் கோயிலுக்குப் போகனும்னு நான்தான் கேட்டிருந்தேன். முகப்புத்தகத்துல ஒருத்தவங்க போஸ்ட்ல இந்தக் கோயில் பத்தி படிச்சதும் எனக்கும் போகனும்னு தோணிடுச்சு! பஞ்சம் வந்த டைம்ல சம்பந்தரும் அப்பரும் பதிகம் பாட, சிவன் அவங்களுக்குப் படிக்காசு குடுத்த இடமாம் இது! அங்க கோயில்ல அந்த பதிகத்த எழுதி வச்சிருக்காங்க! அதைப் படிச்சா கடன் தொல்லைகள் தீருமாம்! அங்க உக்காந்து படிக்கறப்ப கைல காசு வச்சிக்கனுமாம்! அந்தக் காச பிறகு வீட்டுப் பூஜையறைல வச்சிக்கனுமாம்! செம்மல்ல! ஆனா நான் பதிகம் படிச்சேனே தவிர, காச கைல வச்சிக்கல! போய்ட்டு வந்துதான் இப்படி செய்யனும்னு தெரியும்! அவ்வ்! மலர் சொன்னாங்க, நீ படிக்கறப்ப பேக் கைலத்தானே வச்சிருந்த, சோ அதுல இருக்கற எதாச்சும் காச எடுத்து பூஜை அறைல வைன்னு! அதையேத்தான் நானும் யோசிச்சேன்! சோ இதைப் படிச்சிட்டுப் போகப் போறவங்க, ரிசேர்ச் பண்ணிட்டுப் போங்கப்பா!! அதோட கல்யாணசுந்தரரா மாப்பிள்ளை சுவாமின்னு எழுந்தருளி இருக்கிறார் அங்க! அவர கும்பிட்டா, பரிகாரம் செஞ்சா கல்யாணம் நடக்கும்னு ஐதீகமாம். நான் அங்க இருந்தப்ப நிறைய அம்மா அப்பாக்கள் மகன்களோட நின்னு வேண்டிக்கிட்டத பார்த்தேன். ரைட்டர் புத்தியாச்சே! அந்த மாப்பிள்ளையாகனும்னு வேண்டிக்கிட்டவங்கள ஊன்றிப் பார்த்தேன். 90ஸ் கிட்ஸ் போல! தலை முடி குறைஞ்சு, முன் வழுக்கை லேசா எட்டிப் பார்க்குது! முகத்துல ஓர் இறுக்கம்! ஏக்கம்! மனசு பாரமாகிடுச்சு எனக்கு! அதுல அப்பா ஒருத்தர், தம்பி நல்லா வேண்டிக்கடான்னு மகன பார்த்து சொன்னது என்னமோ பண்ணிடுச்சு மனச! பலர் கல்யாணம் பண்ணி மனைவிய அலட்சியமா நடத்திக் கொடுமைப்படுத்த, சிலர் கணவன்கிற பதவிக் கிடைச்சிடாதான்னு எப்படி ஏங்கிப் போய் கிடக்கறாங்க! எல்லாம் விதி போல! என்னடா இது, திடீர்னு ட்ராக் மாறி நம்ம கதை எங்கயோ போகுது! சரி வாங்க, மறுபடி ட்ரிப்குள்ள போவோம். அங்க தெப்பக்குளம் இருந்தது! ஆனா செம்ம சூடு! சோ போட்டோ எடுத்துட்டு கிளம்பிட்டோம்! போற வழில போலிஸ் நிப்பாட்டி பேக்லாம் செக் பண்ணாங்க! தேர்தல் டைம்ல இப்படி செய்வாங்களாமே!
நெக்ஸ்ட் சீனிவாசப் பெருமாள் திருக்கோயில் போனோம். நாச்சியார் கோயில்னும் சொல்றாங்க! அங்க கல்கருட பகவான் சந்நிதானமும் இருக்கு! ரொம்ப அழகானக் கோயில் இது! இங்க ரொம்ப வருஷமா கருட பட்சி ரெண்டு ஜோடியா வந்திட்டு இருந்ததாம். அங்கிருக்கிற மகிழ மரத்துக்குக் கீழத்தான் மோட்சம் அடைந்ததாம் அது ரெண்டும்! சிற்பங்கள் எல்லாம் கலர்ல ரொம்ப அழகா செதுக்கி வச்சிருந்தாங்க இந்தக் கோயில்ல! இது முடிஞ்சதும் பகல் உணவுக்கு நிறுத்தனோம். கும்பக்கோணம் பஸ் ஸ்டேண்ட் இருக்குல்ல, அங்க வலது புற மூலையில மேல ஏறிப் போனா, ஒரு சைவ உணவுக் கடை! அங்கத்தான் மீல்ஸ் சாப்பிட்டோம்! நான்லாம் மீல்ஸ் சாப்பிட லாயக்கே இல்ல! ஒரு தடவை அவங்க வைக்கறதுதான்! இன்னொரு தடவைக் கேக்க வயித்துல இடம் இருக்காது! ஆனா சாப்பாடு சூப்பரா இருந்தது. சாப்பிட்டதும் ரூமுக்கு போய்ட்டோம்! கொஞ்ச நேரம் படுத்துட்டேன் நான்.
ஈவ்னிங் கிளம்பி அடுத்த ரவுண்ட் டெம்பிள் ரன்!!! மகாமகம் நடுக்குமாமே அந்தக் குளத்துக்குப் போனோம்! உள்ளலாம் போக முடியாது! கேட் போட்டிருக்காங்க! வெளிய நின்னு போட்டோ எடுத்துட்டு, வந்துட்டோம். அதுக்கு எதிர்த்தாப்புல ஒரு டீ கடை! அங்க கிரீம் பிஸ்கட் ஒன்னு வாங்கி, டீல தொட்டுச் சாப்பிட்டேன்! சொர்க்கம்டா சாமி! டீ மாஸ்ட்டர நாங்க பாராட்ட, மனுஷன் கைய நல்லா கைலில துடைச்சிட்டு கைய நீட்டுனாரு! கை குலுக்கிட்டு வந்தேன்! அம்புட்டு சந்தோஷம் மனுசன் முகத்துல!
அந்த குளத்துக்குப் பக்கத்துலயே ஒரு கோயில் இருந்தது! காசி விஷ்வநாதர் கோயில்னு நினைக்கறேன். டீ குடிக்கற முன்னாடியே அந்தக் கோயிலுக்குப் போய் தரிசனம் பண்ணிட்டோம்!
வேற எந்தக் கோயிலுக்குப் போகன்னு யோசிச்சோம்! நான் கூகுல்ல பார்த்து ராமஸ்வாமி கோயில்ல சித்திரங்கள் இருக்குமாம்! அங்க போலாம்னு சொன்னேன்! சோ நெக்ஸ்ட் அங்க போனோம்! சூப்பரா தரிசனம் பண்ணிட்டு இராமயணத்த சித்திரமா வரைஞ்சு வச்சத ரசிச்சிட்டு வந்தோம்! கலர் கொஞ்சம் மாற ஆரம்பிக்குது! பார்க்கனும்னு நெனைக்கறவங்க, கண்டிப்பா சீக்கிரமா போய் பார்த்துடுங்க!
அதுக்குப் பிறகு ஐராவதேஸ்வரர் கோயில், தாராசுரம் போனோம். எனக்கு என்ன ஆச்சரியம்னா பெரிய கோயில் மாதிரி, கங்கை கொண்ட சோழபுரம் இருந்தா, கங்கை கொண்ட சோழபுரம் மாதிரி இந்த தாராசுரம் கோயில் இருக்கு! அதே போல மதில், அதே போல நடுவுல கோயில், அழகான சிற்பங்கள்னு கண்ண அங்கிங்க திருப்ப முடியல!(என்னோட வியூ தப்பா கூட இருக்கலாம்! எதாவது இங்க நான் தலவரலாற தப்பா சொல்லிருந்தா, நீங்க திருத்தலாம்!) இந்தக் கோயில சுத்தி நல்ல பெரிய இடம் இருக்கறதுனால, நிறைய பேர் பிக்னிக் மாதிரி வந்து உக்காந்து நல்லா காத்து வாங்கறாங்க!
அந்த கட்டிடத்த விட்டு வெளிய வந்து இன்னொரு பக்கம் போனா, அம்மன் திருத்தளம் இருக்கு! அவங்களயும் கும்பிட்டுட்டு வந்தேன்! நல்லா இருட்ட ஆரம்பிச்சிருச்சு அந்த டைம்லாம். பிறகு கார்ல ஏறி உக்காந்ததும் ஒரு கோயில் பத்தி சொன்னாரு ட்ரைவர். அந்தக் கோயில்ல போய் கும்பிட்டா, மறு ஜென்மம்னு ஒன்னு இருக்காதாம். நான் உடனே வேணா, வேணானு சொல்லிட்டேன்! ஹாஹா! ட்ரைவருக்கு சிரிப்பு வந்திடுச்சு! எனக்கு மறு ஜென்மம் வேணும்! இந்த ஜென்மத்துல நான் நிறைய விஷயங்கள அனுபவிக்கல! அடுத்த ஜென்மத்துலயாச்சும் நல்லா சந்தோஷமா நிறைய விஷயங்கள அனுபவிக்கனும்! எப்புடி!!!!!!
லாஸ்ட்டா ஒரு கோயில்! இங்க பாற்கடலில் உள்ள வெள்ளை நுரையில் செய்யப்பட்ட வெள்ளை விநாயகர் இருக்கார்னு சொன்னாங்க! அவருக்கு அபிஷேகம் செய்ய மாட்டாங்களாம்! பச்சைக் கற்பூரம் மட்டும் காட்டுவாங்களாம்! இங்க மேய்ன் சாமி சிவன்தான், டெம்பிள் பேரு கூட கூகுள் பண்ணித்தான் தெரிஞ்சுக்கிட்டேன்! அப்போ இருட்டிட்டதனால சைன் போர்ட் போட்டோ புடிக்கல போல நானு! கபர்தீஸ்வர ஆலயம்! இங்க அம்மனுக்குத் தனி சந்நிதி இருந்தது. நான் ரொம்ப ரசிச்சுப் பார்த்தது காளியோட திரு உருவத்தத்தான். அவ்ளோ அழகா இருந்தாங்க அவங்க! எட்டு கரங்கள் அவங்களுக்கு! காணக் கண் கோடி வேண்டும்! தமிழ்நாட்டுக் கோயில்கள்ல கொட்டிக் கிடக்கற அதிசயங்கள சொல்ல வார்த்தையே இல்ல! டிவைன்!!!
ஒரே நாள்ல நாங்க 7 கோயிலுக்குப் போனோம்! ஆனா களைப்பே தெரியல! கோயில் எல்லாமே செம்ம பெருசு! உள்ள நடந்து போய் ஒவ்வொரு சந்நிதியும் பார்க்கவே அவ்ளோ டைம் எடுக்கும்! சரியானக் கால் வலி! ஆனாலும் வில் பவர்ல நடந்தோம் ரெண்டு பேரும்! ஏழு கோயில்லயுமே கூட்டம் அடிச்சிக்கிட்டு நிக்கல! ரொம்ப அழகான, நிதானமான தரிசனம்! மனசு நிறைஞ்சு இருந்தது.
நைட் சாப்பாட்டுக்கு ட்ரைவர் கொஞ்சம் ஹைஃபை கடைல நிறுத்திட்டாரு! அவருக்கு பார்க்கிங் ஈசின்னு நாங்களும் உள்ள போய்ட்டோம்! அங்கயும் நிறைய ஐட்டம் இல்லைன்னு சொல்லிட்டாங்க! நான் ஷேசுவான் நூடுல்ஸ் ஆர்டர் செஞ்சேன்! கொழுப்புத்தான்! உரைப்பு சாப்பிட்டா ஒத்துக்காது! ஆனாலும் ஆசை!! சாப்பிட்டுட்டு உடனே கேவிஸ்கோன் குடிச்சிட்டேன்! செட்டிலாகிடுச்சு வயிறு! நைட் துணிலாம் எடுத்து வச்சுப் படுத்துட்டோம்! மறுநாள் இன்னொரு ஊருக்குப் போறோம்!! அந்த ஊருலயும் நிறைய கோயில்கள் இருக்கு! Tல ஆரம்பிக்கும்! கெஸ் பண்ணுங்க பார்க்கலாம்! அங்கிருக்கற ஒரு கோயில பார்க்கனும்னு ரொம்ப நாள் ஆசை! அந்தக் கோயில் பேர் நம்ம ஹீரோ ஒருத்தனுக்குக் கூட வச்சிருக்கேன்!
பாய் டியர்ஸ்! அடுத்த அப்டேட்ல பார்க்கலாம்!

Author: VanishaAdmin
Article Title: 20/3/2026--Day 3
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.