22/3/2026--Day 5

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
587
-2,639
93
மதுரை மரிக்கொழுந்து வாசம்! யெஸ்!! அந்த வாசத்த சுவாசிக்கத்தான் மதுரை கிளம்பிட்டோம். காலைல வந்தே பாரத்ல பயணம். ஹோட்டல்ல செக் அவுட் செஞ்சிட்டு அப்படியே காம்ப்ளிமெண்டரி ப்ரேக்பஸ்ட் சாப்பிட்டோம்! அப்புறம் ஆட்டோ எடுத்து ட்ரேயின் ஸ்டேஷன் வந்தாச்சு.

மதுரைல பார்க்க வேண்டியது அறுபடை வீடான திருப்பரங்குன்றம்! போன தடவை வந்தப்ப பார்க்க முடியாம போய்டுச்சு! அழகன் முருகனுக்காகவே இந்தப் பயணம். இது ஒரு டே ட்ரிப் மட்டும்! நைட்டுக்கு ட்ரேயின் புக் பண்ணியாச்சு சென்னைக்கு! நல்ல சொகுசான வந்தே பாரத் பயணம். ப்ரேக்பஸ்ட் குடுத்தாங்க! காலைல சாப்பிட்டதுனால நாங்க அதை பேக் பண்ணிக்கிட்டோம்! மதுரைல இறங்கி ப்ளாட்பாரம்ல உக்காந்திருந்த வயசான ஒருத்தருக்கு அதை குடுத்துட்டோம்! அவரும் சந்தோஷமா வாங்கிக்கிட்டாரு.

லக்கேஜ்லாம் ட்ரேய்ன் ஸ்டேஷன்லயே இருக்கற க்ளாக் ரூம்ல போட்டுட்டோம்! 24 மணி நேரம் அங்க வைக்கலாமாம் மினிமம் கட்டணத்துல! அதுக்குப் பிறகு ஆட்டோ எடுத்து ஸ்ட்ரேய்ட்டா திருப்பரங்குன்றம். எனக்கு செம்ம எக்ஸைட்டேட், அறுபடை வீடெல்லாத்தையும் பார்த்து முடிக்கப் போறோம்னு! அங்க இறங்கனதும், பார்த்தா செம்ம கூட்டம்! வெயில் வேற! வெளிய நின்னு ஒரு இளநீ வாங்கிக் குடிச்சிட்டு, உள்ள போனோம்! டிக்கேட் எடுத்துட்டு வரிசைல போய் நின்னோம்! ஆனா பாருங்க, கூட்டம் நகர்ந்துட்டே இருந்துச்சு! கொஞ்சம் கிட்ட வந்தப்ப, இன்னொரு பாதை திறந்து இதுல போங்கன்னு சொன்னாங்க! யப்பா முருகா, நன்றிடான்னு குடுகுடுன்னு அங்க போயாச்சு! ரொம்ப சந்தோஷமா அழகன் முருகன தரிசனம் பண்ணிட்டு வந்தோம்! அங்கிங்க சுவர் பக்கம் நின்னு போட்டோலாம் எடுத்துக்கிட்டோம்! வெளிய வர முன்னாடி, ப்ராசாதம் குடுக்கறத பார்த்துட்டு, உடனே ஓடு அங்க! ஹாஹா! கோயில் ப்ரசாதம் கிடைக்கறதுலாம் எவ்ளோ புண்ணியம்! இது போல உச்சிப் புள்ளையார் கோயில்லயும் கிடைச்சது! படி இறங்கி வரப்ப, ஓரமா உக்காந்துட்டே புளிசாதம் நினைக்கறேன்! அதை கைல குடுத்தாரு ஐயரு! அண்ணன் புளிசாதம், இங்க தம்பி சர்க்கரைப் பொங்கல்! செம்ம சூடு! ஆனாலும் ஊதி ஊதி சாப்பிட்டுட்டேன்! ரொம்ப திருப்தி.

அப்பவே மணி 12 கிட்ட ஆகிடுச்சு! மதுரைக்கு வந்துட்டு மீனாட்சிய பார்க்கலனா எப்படி! ஏற்கனவே அவங்கள மீட் பண்ணிருக்கேன்! ஆனாலும் இன்னொருக்க மீட் பண்ணலாம்னு ஆசை! அந்த டைம்ல கோயில் திறந்திருக்குமான்ற சந்தேகத்துல, வேற என்ன செய்யலாம்னு யோசிச்சோம்! தங்கமலர் கேட்டாங்க, கீழடி போலாமான்னு! அட! செம்ம ஐடியாவாச்சேன்னு, கோயில் வாசல்லயே ஒரு ஆட்டோவ புடிச்சுப் பேரம் பேசி ஏறிட்டோம். அங்க போனா திரும்பி வர ஆட்டோ கிடைக்க கஷ்டமாம். சோ அவர காத்திருக்க சொல்லிட்டோம்!

செம்ம சூடான க்ளைமேட்! ஆனா கீழடில நல்லா ஏர்கோண்ட்லாம் போட்டு, ரொம்ப அழகா வச்சிருந்தாங்க பில்டிங்க! டிக்கேட் வாங்கிட்டு உள்ள போய்ட்டோம்! குறும்படம் ஒன்னு முதல்ல காட்டனாங்க! நாகரீகம்ங்கறது நம்ம மண்ணுல இருந்துதான் ஆரம்பிச்சதுங்கறத அழகா சொன்னாரு அந்தக் குறும்படத்துல. க்ராபிக்லாம் அழகா இருந்தது. அதுக்குக் குரல் கொடுத்தவர் மட்டும் என் கைல கிடைச்சா, அப்படியே பச்சக் பச்சக்னு கன்னத்துல குடுத்துருவேன்! சிலிர்த்திரும் நமக்கு அவரோட வாய்ஸ் மாடுலேஷன்ல நம்ம பாரம்பரியத்த பத்தி அறிஞ்சிக்கறது! அதை முடிச்சிட்டு, சுத்திப் பார்க்க ஆரம்பிச்சோம்.

குடில் குடிலா இருந்தது! ஒவ்வொரு குடில்லயும் ஒரு கான்செப்ட்! வாழ்வியல், பொருளாதாரம் இப்படி! அந்த கான்சப்டுக்கு ஏத்த மாதிரி இவங்க அகழ்வாராய்ச்சில கண்டுப்புடிச்ச பொருட்கள் அழகா காட்சிப் படுத்தி வச்சிருந்தாங்க! சில இடங்கள்ல 3டி டிவைஸ் வேற இருந்தது! ஒவ்வொரு இடத்துலயும் செக்குரிட்டி இருக்காங்க! நல்லா மேய்ண்டேய்ன் பண்ணிட்டு வராங்க! சுத்தி முடிச்சதும் சரியானப் பசி வேற! அங்க குட்டியா ஒரு சாப்பிடற இடம் இருக்கு! சோடா, டீ, காபி, சுண்டல் மாதிரிதான் கிடைச்சது! இந்த இடம் ரொம்ப உள்ளுக்கு வேற! டவுன் போறதுக்குள்ள பசி காதை அடைச்சிடும்னு சுண்டலும், சோடாவும் வாங்கனோம்!

இப்படித்தான் நம்ம முன்னோர்கள் வாழ்ந்திருக்காங்க! மொழிய கண்டுப்புடிச்சிருக்காங்க! பொருளாதாரத்த பெருக்கிருக்காங்க! அப்படிலாம் பார்க்கறப்போ செம்ம பெருமையா இருந்தது! அதுவும் நம்மளோட நாகரீகம்தான் முதல்ல வந்ததுங்கற மாதிரி சொல்றாங்க! தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நீ நில்லடான்னு மனசுக்குள்ள ஆர்ப்பரிப்பு!

மறுபடி ஒரு பயணம் மதுரை டவுனுக்கு! ஆட்டோ ட்ரைவர் கிட்ட, நல்ல ஒரு சாப்பாட்டு இடமா கூட்டிட்டுப் போக சொன்னோம்! அவரையும் சாப்பிடக் கூப்பிட்டாங்க தங்கமலர்! அவர் வீட்டுல அன்னைக்கு கறி எடுத்துக் குடுத்துட்டு வந்திருக்காராம்! வெய்ட் பண்ணுவாங்களாம்! சோ நாங்க மட்டும் போய் சாப்பிட்டோம்.

அடுத்து மீனாட்சி அம்மன பார்க்கப் போனும்னு மதுரைல நான்வெஜ் சாப்பிடல நானு! மீல்ஸ் சாப்பிட்டதும், ஆட்டோ ட்ரைவர் ஏற்கனவே சொன்ன மாதிரி, நடந்தே மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்துட்டோம். வந்து பார்த்தா, உள்ள போகறதுக்கே அவ்ளோ நீள கியூ! உள்ள புகுந்தா எத்தனை மணிக்கு வருவோம்னு தெரியல! ட்ரெய்ன் வேற இருக்கே! பரவால்லன்னு சொல்லிட்டேன் நான்! அப்ப அங்க ஒருத்தர் நின்னிட்டு இருந்தாரு! இப்ப போய் கியூல நின்னா கூட அம்மன பார்க்க முடியாது! படுதா போடற டைம் ஆகப் போகுது! எப்படியும் ஒரு மணி நேரம் கழிச்சுத்தான் கியூ நகரும்னு சொன்னாரு!

சரி நெக்ஸ்ட் போக வேண்டிய இடத்துக்குக் கிளம்ப வேண்டியதுதான்னு நெனைச்சேன். அப்ப அவரே ஒரு ஆஃபர் குடுத்தாரு! உள்ள கூட்டிட்டுப் போகறதாகவும், இவ்ளோ வரும்னும்! அது ரொம்ப விலையா இருக்கவும், வேணாம்னு சொல்லிட்டோம்! அப்போ ஒரு செட் ஆஃப் நார்த் இந்தியன்ஸ் இவர்ட்ட இந்தில விசாரிச்சாங்க! அவங்களுக்கு கொஞ்சம் குறைவா விலை சொன்னாரு போல இந்தில! தங்கமலருக்கு இந்தி கொஞ்சம் கொஞ்சம் ஆஜா! மறுபடி அவர்ட்ட பேசி, நார்த் இந்தியன்ஸ்க்கு குடுத்த ரேட்டே சரி பண்ணி, என்னை மட்டும் உள்ள அவங்க கூட அனுப்பனாங்க! காசு வெளிய வந்து குடுத்தா போதும்னு சொல்லவும், என்னோட போன், பேக்லாம் தங்கமலர் வாங்கி வச்சிக்கிட்டு பத்திரமா போய்ட்டு வான்னு சொல்லிட்டாங்க! அதை லாக்கர்ல வைக்கறதுன்னு அதுக்கு வேற டைம் எடுக்குமே! இனிமே மறுபடி ரெண்டு வருஷம் கழிச்சு லீவ் கிடைக்கும்! கிடைச்சாலும், மதுரை வருவனா தெரியாது! அதனால கிடைச்ச வாய்ப்ப புடிச்சிக்கிட்டு நார்த் இந்தியன்ஸ வால் புடிச்சுட்டே போய்ட்டேன்.

ஒரு ஐயர் கிட்ட எங்கள விட்டுட்டு டீல் பேசனவரு வெளியே போய்ட்டாரு! அந்த ஐயர் சுந்தரேஸ்வரர பார்க்க முதல்ல அழைச்சிட்டுப் போனாரு! நாங்க எட்டுப் பேர் மட்டும்தான் உள்ள! கண் குளிர, கண் கலங்க அவர தரிசிச்சேன்! பேர் ராசிலாம் கேட்டு அர்ச்சனை கூட பண்ணாரு! பிறகு மீனாட்சி அம்மன பார்க்க அழைச்சிட்டுப் போனாரு! அங்க அம்மன் முன்னாடி இருக்குமே கம்பி, அங்கயே நிக்க எனக்கு சான்ஸ் கிடைச்சது! கண்ண சிமிட்டாம அம்மாவ பார்த்துட்டே இருந்தேன்! அவங்களுக்கு நடந்த பூஜையையும் கிட்டவே நின்னு பார்க்கற பாக்கியம் கிடைச்சது! கடைசியா படுதாவ மூடுற வரை அங்க நின்னேன் நான்! உடம்பே சிலிர்த்திருச்சு! சந்நிதிய விட்டு வெளிய வந்ததும், இந்த நார்த் இந்தியன்ஸ் வாங்கிட்டு வந்த மாலைலாம் அம்மன் கிட்ட வச்சு திரும்ப அவங்கட்ட குடுத்தாரு ஐயர்! என் கழுத்துல ஒரு தாமரைப்பூ மாலைய போட்டுக்க சொல்லிக் குடுத்தாரு! நான் சொன்னேன், ஐயா நான் எதுவும் வாங்கிட்டு வரலை! இந்த மாலை அவங்க வாங்கிட்டு வந்ததுன்னு! அதுக்கு அந்த நார்த் இந்தியன் பொண்ணு, இந்திலயும் ஆங்கிலத்துலயும், பரவால எடுத்துக்கோங்க! அம்மன் உங்களுக்குத்தான் குடுக்கனும்னு விதிச்சிருக்கான்னு சொல்லிட்டாங்க! அப்படியே கண்ணுலாம் வேர்த்திருச்சு! மன நிறைவோட வெளிய வந்து, காத்திருந்த ஆள் கிட்ட காச குடுத்துட்டேன். கைல போன் கூட இல்லையே! யாரையோ நம்பி அனுப்பிட்டமேன்னு பயந்துட்டே வெளிய உக்காந்திருந்தாங்க தங்கமலர்! என் முகத்த பார்த்ததும்தான் அவங்களுக்கு சிரிப்பே வந்தது.

பாப்பா பாவாடை தாவணி கேட்டிருந்தா! மதுரைல நல்லதா கிடைக்கும்னு தங்கமலர் சொல்லவும், கிட்டயே இருந்த ஒரு கடைல அவளுக்கு பாவாடை வாங்கிட்டு ஆட்டோ எடுத்து நாயக்கர் மஹாலுக்குப் போனோம்! போன தடவை வந்தப்ப இந்த இடத்த மிஸ் பண்ணிட்டேன்! இந்த தடவையாச்சும் பார்த்திடலாம்னா, அன்னைக்கும் மூடிட்டாங்க! நாங்க போனது கிட்டத்தட்ட அஞ்சு மணிக்கு! மனசே ஒடைஞ்சு போச்சு! அங்க பக்கத்துலயே மதுரையோட ஒரிஜினல் ஜிகிர்தண்டா இருக்குன்னு சொல்லவும், நடந்தே போனோம் ரெண்டு பேரும்! செம்ம கூட்டம் அங்க! வாங்கிட்டு, மூடி இருந்த ஒரு கடை முன்னாடி அப்படியே உக்காந்துட்டோம். ரோட்ல போகிற வாகனங்கள பார்த்துக்கிட்டே ரசிச்சு சாப்பிட்டேன், இல்ல குடிச்சேன்னு சொல்லனுமோ, இந்த ஜிகிர்தண்டாவ! செம்ம டேஸ்ட்பா! மயங்கிட்டேன்.

அதுக்குப் பிறகு ஸ்ட்ரேய்ட்டா மதுரை ட்ரேன் ஸ்டேஷனுக்கு போய்ட்டோம்! லக்கேஜ கலேக்ட் பண்ணிட்டு, ஓய்வா வந்து உக்காந்துட்டோம்! தங்கமலரோட ப்ரேண்ட் வந்தாங்க எங்களுக்கு டின்னர் வாங்கிக்கிட்டு! இரயில் வந்ததும் உள்ள ஏறி உக்காந்துட்டோம். கொஞ்ச நேரத்துல டின்னர் சாப்பிட்டுட்டு கட்டைய நீட்டியாச்சு! நடந்ததலாம் அசைப் போட்டுட்டே சுகமான உறக்கம்! விடிகாலைல சென்னைல இறங்கி, ஆட்டோ எடுத்து வீட்டுக்கும் வந்தாச்சு!

இதோட அடுத்தப் பதிவுல பார்க்கலாம்! நெக்ஸ்ட் ஸ்டேட்ட விட்டு ஸ்டேட் போறோம்! எங்கயா இருக்கும்னு யோசிச்சிட்டே இருங்க! பாய் டியர் ஆல்!!
 

Author: VanishaAdmin
Article Title: 22/3/2026--Day 5
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Thani

Thani

Active member
Nov 27, 2025
78
-60
43
பொங்கலை பாக்கும் போது எச்சல் ஊறுது நமக்கு ,ஊரில் இருக்கும் போது அப்பாவின் கோயிலில் என்னேரமும் சர்ககரைப்பொங்கல் சாப்பிடுவோம்
ஆனால் இங்கு வாய்ப்பில்லை ராஜா தான்,இங்கு நாம கோயிலுக்கு போறதே ஆடிக்கொரு தடவை ஆவணிக்கு ஒரு தடவையா போய்டுது(நம்ம வீடல இருந்து 80 km தூரத்தில் தான் கோவில்)