Sweet Bobby--My Catfish Nightmare

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
592
-2,583
93
ஸ்பாயிலர் அலர்ட்!!!

நம்பற மாதிரி கதை சொல்லுங்கடேன்னு நெனக்கறவங்க பார்க்க வேண்டிய டாக்குமெண்டரி இது!! நம்பலாமா இல்லையான்னு கன்பியூஸ் ஆகி மண்டை காஞ்சி போய்டுவாங்க!!!இதெல்லாம் சாத்தியமா, நடக்குமா, அடுக்குமான்னு அத்தனை கேள்வி என் மைண்ட்ல!!

எப்பவும் ஒரு கதை எழுதனா, இப்போ இந்த மாதிரி பொண்ணுங்கலாம் எங்க இருக்காங்க!! எல்லாரும் படிச்சிருக்காங்க, புத்திசாலிங்க! அதனால லாஜிக் இல்லாம பொண்ண இப்படிலாம் காட்டாதீங்கன்னு பேசறவங்க ஒரு தடவை இதை பார்க்கனும்!!

இதுல வர கிரட், யூகேல வாழ்ற ஒரு பஞ்சாபி பொண்ணு!! மார்க்கேட்டிங்ல நல்ல ஜாப்!! பார்ட் டைம்மா ரேடியோ ஜாக்கி வேலை வேற!! அவ எப்படி ஆன்லைன்ல ஒருத்தன் கூட நட்பா பழகி, காதலாகி, ஆன்லைன்லயே எங்கேஜ் பண்ணி, அவனோட டார்ச்சருக்கு ஆளாகி வேலைய இழந்து, பேய் மாதிரி பேஸ்தடிச்சு வாழ்ந்தாங்கறததான் இந்த டாக்குமெண்டரி பேசுது!! செம்ம ஷாக்கிங்!!! எப்படிடா எல்லாமே ஆன்லைன்ல???? எப்படி நம்புன நீ??? அவ்ளோ பொய், புழுகு, பித்தலாட்டம்!! நமக்கே தெரியுது! அவளுக்கு ஏன் தெரியல?????

அதான் இங்க நாம சிந்திக்கனும்!! அவளோட குடும்ப சூழ்நிலை!! கல்யாணம் செஞ்சு குடும்பம் குட்டியோட வாழ்ந்தாதான் அது வாழ்க்கைன்னு சின்னதுல இருந்து சொல்லி வளர்க்கப்பட்ட விதம்!! அவ மேல விழுந்த ப்ரஷர்!! இதெல்லாம் அவ ஏமாந்து போனதுக்கு காரணமா இருக்கலாம்!! அவன் பேரு போபி!! ஒரு வருசம் ரெண்டு வருசம் இல்ல!! எட்டு வருஷத்துக்கும் மேல அவன் கூட ஆன்லைன் ரிலேஷன்சிப்ல இருந்திருக்கா!!

இதுல ட்வீஸ்ட் என்னன்னா, அந்த போபி ஒரு அப்பாவி!! அவன மாதிரி ஃபேக் ப்ரோபைல் செஞ்சு, அதோட சேர்த்து கிட்டத்தட்ட 60 ஃபேக் ப்ரோபைல் வச்சு இவள செஞ்சு விட்டது அவளோட சொந்த கசின்!! பேரு சிம்ரன்!!

என்ன சிம்ரன் இதெல்லாம்!!!!!!!!

எதுக்கு அப்படி செஞ்சா இந்த சிம்ரன்??? உன்னை என் கண்ட்ரோல்ல வச்சிருக்கேன்ற அற்ப காரணம்!! அதுல என்ன சந்தோஷம் அவளுக்கு??? அதான் எனக்கும் தெரியல டியர்ஸ்!! மனித மனதின் விசித்திரங்கள விளக்க அந்தக் கடவுளால கூட முடியாது போல!!!

ரொம்ப ஷாக்கிங்காவும் இண்ட்ரெஸ்ட்டிங்காவும் இருந்தது!! கண்டிப்பா பாருங்க!! அந்த கிரட்டோட வாழ்க்கை சோசியல் மீடியானாலேயே அழிஞ்சது!! ஏதோ எட்டு வருஷம் கழிச்சாவது முழிச்சிக்கிட்டாளே!!!!!

OTT--Netflix
 

Author: VanishaAdmin
Article Title: Sweet Bobby--My Catfish Nightmare
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.