இள மனச--EPI 12

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
922
-1,954
93
அத்தியாயம் 12

சுப்பு பூப்பெய்தி மேலும் இரு மாதங்கள் ஓடி இருந்தன. இப்பொழுது எல்லா வேலைகளையும் கற்றுத் தேர்ந்திருந்தாள் அவள். பட்டுவும் பவுனுவும் அவ்வப்பொழுது வந்து தலையை மட்டும் காட்டி விட்டுப் போவார்கள். பட்டு மட்டும் சுப்புவின் வாயைக் கிண்டி விஷயங்களை வாங்கிக் கொள்வாள். சுப்பு உளரும் விஷயங்களில் தப்பானதாக எதுவும் இல்லாததால் நிம்மதியாக இருந்தாள் பட்டு. இருந்தும் பொத்தம் பொதுவாக அறிவுரைகளை வழங்கத் தவறுவதில்லை.

“துரை! இந்த மரத்தை ஏன் வூட்டுக்குள்ள வச்சிருக்கீங்க?”

மரத்தை சுற்றி சுற்றி வந்து அதிசயமாகப் பார்த்தாள் சுப்பு. அந்த மரத்தை இங்கிலாந்தில் இருந்து தருவித்து இருந்தான் எட்வர்ட். அவனுக்கு மட்டுமில்லாது, மற்றும் பல எஸ்டேட்டுகளில் இருந்த அவனது சக பிரிட்டிஷ்கார குடும்பங்களுக்காகவும்தான்.

“இது பேரு ஃபைன் ட்ரீ(pine tree). கிறிஸ்ட்மஸ் வருதுல அதுக்கு இந்த மரத்தை வீட்டுக்குள்ள வச்சி அலங்காரம் செய்வாங்க ப்ளேக்கி”

“கிறிஸ்ட்மஸ்னா என்ன துரை?”

“நீங்க தீபாவளி கொண்டாடுறீங்கல, அது மாதிரி எங்களுக்கு இந்தப் பண்டிகை”

அவன் அந்த மரத்தை அலங்கரிக்க அவனுக்கு உதவியபடி நின்றிருந்தாள் சுப்பு.

“ஓ, பண்டிகையா! நான் கை முறுக்கு செஞ்சி தரவா துரை? தீபாவளிக்கு அது மட்டும்தான் ஆத்தா செய்யும். செஞ்சதும் தகர டின்னுல போட்டு, ஒளிவச்சிருவாங்க. நான் வாசம் புடிச்சே எங்க இருக்குன்னு கண்டுபுடிச்சுருவேன். எல்லோரும் தூங்கனதும், நான் மெதுவா எழுந்து போய் டின்னைத் திறந்து எடுத்து சாப்புடுவேன்”

கை வேலை செய்தாலும் காதை அவள் கதையில் வைத்திருந்தான் எட்வர்ட்.

“ரெண்டு நாளா அப்படிதான் சாப்புட்டேன். மூனாம் நாள் முறுக்க வாயில வச்சிக்கிட்டு திரும்புனா என் சின்னாத்தா பத்ரகாளி கணக்கா பின்னால நிக்கிறாங்க”

“அப்புறம் என்னாச்சு ப்ளேக்கி?”

“என்ன ஆகும்? மண்டை வீங்கிப் போச்சு. பாவம் சின்ன புள்ளதானேன்னு ரெண்டு நாளா கண்டுக்காம விட்டா, தினமும் திருடி சாப்புடறயா? அப்போ தீபாவளி அன்னிக்கு வெறும் டின்னையா சாப்புடுவன்னு கொட்டிப்புட்டாங்க” எனப் புன்னகையுடன் சொன்னவள் திடீரென அமைதியாகி விட்டாள்.

அவள் பேச்சு நிற்கவும், வேலையை விட்டுவிட்டு திரும்பி பார்த்தவன்,

“என்னாச்சு ப்ளேக்கி? அமைதியாகிட்ட!” எனக் கேட்டான்.

“போன மாச தீபாவளிக்குக் கூட என்ன வந்து பாக்கலையே அவங்களாம். புதுத்துணி வாங்கி மட்டும் குடுத்து அனுப்புனா ஆச்சா? நான் ஏங்கிப் போய் கிடப்பேன்னு அவங்களுக்கு தெரியாதா துரை?” என்றவள் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டாள்.

கடந்த மாதம் வந்த தீபாவளிக்கு முனியனிடம் அவள் மாமா புதுத் துணி கொடுத்து விட்டிருந்தார். அதோடு கொஞ்சம் பலகாரங்களும். ஆசையாக வாங்கிக் கொண்டாலும், தீபாவளி குதூகலமே இல்லாமல் முகத்தை தூக்கி வைத்திருந்தாள் சுப்பு. பவுனுதான் கோயிலுக்கு அழைத்து சென்று, அவர்கள் வீட்டு பிள்ளைகளுடன் பட்டாசு கொளுத்த வைத்து அவளை சமாதானப்படுத்தினாள்.

அவள் அருகில் வந்தவன், தாடையை ஒற்றை விரலால் நிமிர்த்தி அவள் கண்களைப் பார்த்தான்.

“ப்ளேக்கி! நீ கல்யாணம் செஞ்சு போய்ட்டா, உங்க ஆத்தாவ அடிக்கடி பார்க்க முடியுமா?” எனக் கேட்டான்.

“அலமு சொன்னா, கண்ணாலம் ஆயிட்டா அடிக்கடி ஆத்தா வீட்டுக்கு வர முடியாதாம்”

“இப்போ உனக்கு கல்யாணம் ஆயிருச்சுன்னு நினைச்சுக்க ப்ளேக்கி. அதனாலதான் ஆத்தா வீட்டுக்கு போக முடியலைன்னு நினைச்சுக்க. சோகமா இருக்காது!”

தலையை மறுப்பாக ஆட்டினாள் சுப்பு.

“அதெப்படி நினைச்சுக்க முடியும்? எனக்கு இன்னும் கண்ணாலம் ஆவலியே! முத்து மாமா இன்னும் தாலி கட்டலையே”

அவள் தாடையில் இருந்த விரலை பட்டென உறுவிக் கொண்டான் எட்வர்ட். அமைதியாக மீண்டும் வண்ண விளக்குகளை மரத்தில் பொருத்த ஆரம்பித்தான் அவன். அவளும் அமைதியாக பெட்டியில் இருந்து, சின்ன சின்ன கலர் விளக்குகளை, அவன் கை நீட்ட எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அரை மணி நேரம் அமைதியாக சென்றது.

“ப்ளேக்கி, யாரு அது முத்து மாமா?”

அமைதியைக் கிழித்துக் கொண்டு வந்தது அவன் கேள்வி.

“உங்களுக்குத் தெரியாதா துரை? அவருதான் என் முறை மாமன். நான் வயசுக்கு வந்தவுடனே அவர தான் கட்டி வைக்கனும்னு ஆத்தா ரெண்டு பேரும் பேசிக்குவாங்க”

“உனக்கு அந்த மாமாவ ரொம்ப பிடிக்குமோ ப்ளேக்கி?”

“புடிக்குமே! எனக்கு முட்டாய்லாம் வாங்கி வந்து குடுக்கும். பார்க்கறப்பலாம் எப்ப வயசுக்கு வருவன்னு கேட்டுட்டே இருக்கும். ரெண்டு கண்ணையும் வச்சு என்னை உத்து உத்து பார்க்கும்”

“ஓ!”

“ஆனா உங்க மாதிரி கலரு இல்ல துரை. கருப்புதான். ஐய்யனார் கணக்கா பெருசா இருக்கும். மீசைய பாத்தாலே எனக்கு பயமா இருக்கும். மாமா என் கிட்ட வந்தாலே நான் ஓடி போயிருவேன்”

“பயமா இருந்தா ஏன் கல்யாணம் செஞ்சுக்கனும்?”

“அங்க அப்பாரு வாக்கு குடுத்துருக்காராம் முத்து மாமாவுக்கு ஜோடி நாந்தான்னு. இங்க நான் வேலை செய்ய வந்ததுக்கு காரணமும் அதுதான். இங்க கிடைக்கற காசுலதான் எனக்கு கண்ணாலம் பண்ணி வைப்பாங்களாம். ஆத்தா ரெண்டு பேரும் பேசனத நான் கேட்டேன்”

“என் கிட்டயே காசு வாங்கி, அதுல உனக்குக் கல்யாணம் பண்ணுவாங்களாமா? ஹ்ம்ம்!”

“ஆமா துரை, அப்படிதான்” எனச் சிரித்தாள் சுப்பு.

திரும்பி அவளை நேராகப் பார்த்தவன்,

“ப்ளேக்கி! உனக்கு வெள்ளையா இருந்தாதானே பிடிக்கும்? அந்த மாமாவ எப்படி பிடிக்குது?” எனக் கேட்டான்.

“ஆங் ஆமா! வெள்ளையா இருந்தா ரொம்ப பிடிக்கும். நீங்களும் வெள்ளையாதான் இருக்கீங்க. எனக்கு உங்களை ரொம்ப பிடிக்குதுதான். அதுக்குன்னு துரைய கட்டிக்க முடியுமா? ஆத்தா சொல்ற மாதிரி ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை. எனக்கு ஏத்த மாதிரி என் முத்து மாமா. கருப்பா இருந்தா என்ன? மூனு வேளை கஞ்சி ஊத்துனா பத்தாதா துரை!”

தாவணியை இழுத்து இடுப்பில் சொருகிக் கொண்டவள், குதித்தபடி அடுப்படிக்கு போய் விட்டாள்.

அவள் பேசியதைக் கேட்டு எட்வர்ட்தான் அசந்து போய் நின்றான்.

‘சின்ன பிள்ளன்னு நினைக்கறப்போ, பெரிய மனுசி மாதிரி பேசறா. பெரிய மனுசியா நினைச்சு பார்க்கறப்போ, சின்ன குழந்தையா நடந்துக்கறா! மை காட்!’

விண்ணெனத் தெறிக்கும் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான் எட்வர்ட்.

கிறிஸ்துமஸ்க்கு இரவு விருந்து ஏற்பாடு செய்திருந்தான் எட்வர்ட். அவனது பிரிட்டிஷ் நண்பர்கள், மற்ற எஸ்டேட் முதலாளிமார்கள் தத்தம் குடும்பத்துடன் கலந்து கொள்வார்கள். வருடா வருடம் அவன் தரும் இந்த விருந்து மது, மாமிசம் எனத் தடபுடல் படும்.

அன்று காலையில் இருந்தே பட்டுவும், பவுனுவும் நிற்க நேரம் இல்லாமல் சுழன்று கொண்டிருந்தார்கள். இதுதான் சுப்புவுக்கு முதல் கிறிஸ்ட்மஸ். கூடமாட இருவருக்கும் ஒத்தாசையாக இருந்தாள் அவள்.

வெளியே டெண்ட் போட்டு மேசை நாற்காலிகளை அடுக்கிக் கொண்டிருந்தார்கள் எஸ்டேட்டில் வேலை செய்பவர்கள். வண்ண விளக்குகள் அங்கங்கே பொருத்தப்பட்டிருந்தன.

ரெக்கார்ட் ப்ளேயர் ஒன்று வாடகைக்கு எடுத்திருந்தான் எட்வர்ட். அந்த கம்பனிக்காரர்கள் அதை கொண்டு வந்து டெண்டின் உள்ளே இருந்த மேசையில் பொருத்தும் போது செய்யும் வேலையை விட்டுவிட்டு ஓடி வந்தாள் சுப்பு. கண் இமைக்காமல் அதையே பார்த்தவாறு நின்றிருந்தாள். எட்வர்டும் அங்கேதான் நின்று அவர்கள் கொண்டு வந்திருந்த இசைத்தட்டுக்ளை கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அருகில் வந்தவள் ஆவலாக அவற்றை நோக்கினாள். கொலுசு சத்தத்தில் நிமிர்ந்தவன், என்ன என்பது போல அவளைப் பார்த்தான்.

கண்கள் பளபளக்க,

“என்னதிது துரை? இந்த வட்ட தட்டுல பாட்டு வருமா?” எனக் கேட்டாள்.

அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன் கண்களில் கோபம் ஏறியது. சுற்றி வேலை செய்து கொண்டிருப்பவர்களை நோட்டமிட்டவன், ஒன்றும் சொல்லாமல் வீட்டின் உள்ளே நுழைந்துவிட்டான்.

முகம் விழுந்து விட்டது சுப்புவுக்கு. மீண்டும் வேலையைப் பார்க்க அடுப்படிக்கு நுழைய போனவளை, ரூமில் இருந்து எட்வர்டின் ப்ளேக்கி என்ற அழைப்புத் தடுத்தது. கதவை இரு முறை தட்டி விட்டு, உள்ளே நுழைந்தாள். நாற்காலியில் அமர்ந்திருந்தவன் அவளை அருகே வர சொல்லி அழைத்தான்.

அவன் பதில் சொல்லாமல் போனதால் ஏற்கனவே கோபமாக இருந்தவள், அவன் அருகே போய் முதுகைக் காட்டிக் கொண்டு திரும்பி நின்று கொண்டாள்.

“இப்ப உனக்கு எதுக்கு கோபம் ப்ளேக்கி?” எனக் கடுப்புடன் கேட்டான் எட்வர்ட்.

ஒன்றும் பேசாமல் அப்படியே நின்றிருந்தாள் சுப்பு.

“முன்னுக்கு திரும்பு ப்ளேக்கி” எனக் கோபமாக கத்தினான்.

அப்பொழுது கூட அடமாக அப்படியே நின்றிருந்தாள் சுப்பு.

கோப மூச்சுடன் எழுந்தவன், அவள் கைப்பற்றி முன்னே திருப்பினான்.

“ரொம்ப பிடிவாதம்”

வேலை செய்வதற்காக அவள் இழுத்து இடுப்பில் சொருகி இருந்த பாவாடையை அவனே கீழிறக்கி விட்டான்.

“இப்படிதான் என்னைப் பாரு என் கால பாருன்னு வெளிய வந்து நிப்பியா ப்ளேக்கி? ஆளுங்களாம் வேலை செய்யறாங்கல, எல்லாரும் ஜாடையா உன்னைத்தான் பார்க்கறாங்க. அவங்களாம் வேலை செஞ்சிட்டு போகற வரைக்கும், வீட்டு வெளிய வரக்கூடாது. புரியுதா ப்ளேக்கி?” என மிரட்டலாகச் சொன்னான்.

“அவங்க ஏன் என்னைய பாக்கனும்? வந்த வேலைய பாக்க வேண்டியதுதானே துரை!”

“ஏன் பார்க்கனும்னு கேட்டா எனக்கு எப்படி தெரியும்? பார்க்கற மாதிரி இருந்துருப்ப, அதனால பார்க்கறாங்க. ஆனா அது எனக்குப் பிடிக்கல. சோ, அவங்க போகற வரை உள்ளயே இரு ப்ளேக்கி. அதோட இன்னைக்கு முழுக்க விருந்து முடியற வரைக்கும் கூட வெளிய வரக்கூடாது” என்றவனின் குரல் கடுமையாக வந்தது.

“கொஞ்ச நாளாவே துரை பொசுக்கு பொசுக்குன்னு என்னைத் திட்டிட்டே இருக்கீங்க. நானும் நம்ம துரைதானே திட்டுறாருன்னு பொறுத்து பொறுத்துப் போறேன். ஆனா இப்போ நான் ரொம்ப கோபமா ஆயிட்டேன். இனிமே உங்க கிட்ட பேசவே மாட்டேன்”

உதடு துடிக்கக் கண்கள் கலங்க பேசினாள் சுப்பு. முழுதாக ஒரு நிமிடம் கண்களை மூடி தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்ட எட்வர்ட்,

“சரி கோவிச்சுக்காதே ப்ளேக்கி. இனிமே திட்டல. என் கிட்ட பேசாம இருப்பேன்னு மட்டும் சொல்லக்கூடாது சரியா?” என தழைந்து போனான்.

“அப்படிதான் சொல்லுவேன்” என முறுக்கிக் கொண்டாள் இவள்.

“நீ கோவிச்சுக்காம இருந்தா, ராத்திரி எல்லோரும் போனதும், உனக்கு மட்டும் பாட்டு பொட்டியில பாட்டு போட்டுக் காட்டறேன்” என ஆசைக் காட்டினான்.

படக்கென அவனை நோக்கி திரும்பியவள்,

“நெஜமாவா துரை? பாட்டு போடுவீங்களா?” எனக் கண்கள் மின்ன கேட்டாள்.

ஆமெனத் தலையை ஆட்டியவன்,

“இப்போ கண்ண துடைச்சுட்டு சிரி பாப்போம்” எனக் கேட்டான்.

முகம் மலர சிரித்தவள்,

“துரை! யாரு என்னைப் பார்த்தாலும், நான் யாரையும் பாக்கல தெரியுமா? உங்கள மட்டும்தான் பாத்தேன். இந்த புது சொக்கால நீங்க எம்புட்டு அழகா இருக்கீங்க தெரியுமா?”

அவன் அணிந்திருந்த சாம்பல் நிற முழுக்கை சட்டையைக் காட்டி சொன்னாள் சுப்பு.

“நெஜமாவா ப்ளேக்கி?”

“சத்தியமா துரை. இந்த கலருல நீங்க ராசா மாதிரி இருக்கீங்க” எனச் சொல்லியவள்,

“நான் போறேன் துரை. வேலை இருக்கு” என ஓடிவிட்டாள்.

குனிந்து தன்னைப் பார்த்து கொண்டவன், முகம் கொள்ளா சிரிப்புடன் வெளியில் நடக்கும் வேலையை மேற்பார்வையிட போனான்.

மாலையில் இருந்து ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள். இன்று நிறைய வெள்ளைக்கார்களைக் காண போகும் குஷியில் சுப்புவும், குளித்து அவள் ஆத்தா வாங்கி கொடுத்தனுப்பி இருந்த பால் நிற பாவாடை தாவணியை அணிந்துக் கொண்டாள். வந்தவர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தான் எட்வர்ட். ஆண்கள் எல்லோருக்கும் வைன் வழங்கப் பட்டது. பெண்கள் டீயுடன் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். பிண்ணனியில் ஃரான்க் சினாட்ரா (Frank Sinatra -- In The Wee Small Hours) பாடிக் கொண்டிருக்க, வண்ண விளக்குகளில் அந்த பங்களாவின் தோட்டமே சொர்க்கலோகம் போல காட்சி அளித்தது.

உணவு வேளை வரவும், சாப்பாட்டுத் தட்டுகளை எடுத்து கொண்டு வந்து மேசை மேல் அடுக்கினர் பட்டுவும் பவுனுவும். கரண்டிகள், பேப்பர் நாப்கின்களை பட்டு சொன்னது போல ஒவ்வொரு மேசையிலும் அடுக்கி வைத்தாள் சுப்பு.

கடைசி மேசையில் அடுக்கிவிட்டு, நகர போனவளின் பின்பக்கத்தில் (பிட்டத்தில்) ஒரு கை அழுந்த படிந்தது. பயந்து போய் பின்னால் நகர்ந்தாள் சுப்பு.

அவளைப் பார்த்து,

“ப்ளேடி இண்டியன்! யூ லுக் டேம்ன் செக்சி!” (bloody Indian! You look damn sexy) எனச் சிரித்தான் பிரிட்டிஷ்காரன் ஒருத்தன்.

அதற்குள் அவள் அருகில் ஓடி வந்த பரசு,

“புள்ள, துரை உன்ன உள்ளாற போக சொன்னாரு. இனிமே வெளிய வரக்கூடாதுன்னும் சொன்னாரு. சுருக்க போ” என அவள் காதோரமாகச் சொன்னான்.

கண்களைச் சுழற்றி எட்வர்டைத் தேடினாள் சுப்பு. அங்கிருந்த இன்னொருவருடன் பேசியபடி இருந்தாலும் அவனின் முழு பார்வையும் இவள் மேல்தான் இருந்தது. உள்ளே போ என்பது போல தலையை மட்டும் அசைத்தான் அவன். அந்தக் கண்களில் தெரிந்த கோபத்தில், பயந்து உள்ளே ஓடிவிட்டாள் சுப்பு.

“ஹேய்! வை மேன் யூ செண்ட் ஹேர் இன்? ஐ ஹெவெண்ட் டன் டால்கிங்”(Hey! why man you send her in? I haven’t done talking) பேச்சு குழறியது அவனுக்கு.

‘நீ என்ன கருமத்தைப் பேச போறென்னு எங்களுக்கு தெரியாதாடா? கட்டை விளக்கமாறு பிஞ்சிரும் படவா ராஸ்கோல்’ என மனசுக்குள் திட்டிய பரசு,

“துரை, அவளுக்கு உள்ள வேலை இருக்கு. நீங்க சாப்புடுங்க” எனப் பொறித்த கோழியை அவன் தட்டில் வைத்து உபசரித்தான்.

பத்து நிமிடங்களில் பங்களாவின் உள்ளே நுழைந்த எட்வர்ட்,

“ப்ளேக்கி!” என வீடே அதிர கூப்பிட்டான்.

சமையலறையில் இருந்து ஓடி வந்து அவன் அருகில் நின்றாள் சுப்பு. அவள் கையைப் பிடித்துத் தரதரவென அவனது ரூமுக்கு இழுத்து சென்றான் எட்வர்ட். அவன் கத்திய போதே சுப்புவுடன் அடுப்படியில் இருந்து வெளியே வந்திருந்த பட்டு, அந்தக் காட்சியைப் பார்த்து திகைத்து நின்றாள்.

‘ஐயய்யோ! கட்டுன பொண்டாட்டி மாதிரி இப்படி கையைப் புடிச்சு ரூமுக்குள்ளாற இழுத்துட்டுப் போறானே. எடுபட்டவன், கட்டையில போறவன்!’ மனசுக்குள் புலம்ப மட்டும்தான் முடிந்தது அவளால்.

வீடு வாசல் கொடுத்து, சம்பளமும் கொடுப்பவன். கையில் துப்பாக்கி வேறு வைத்திருப்பவன். அவனை எதிர்த்து, சுப்புவைக் காக்க முடியுமா அவளால். கண்களில் நீர் வடிய, அவன் அடித்து மூடிய ரூம் கதவையேப் பார்த்திருந்தாள் பட்டு.

சுப்புவை உள்ளே இழுத்து வந்து கட்டிலின் அருகே நிறுத்திய எட்வர்ட், பரபரவென அவள் பின்பக்கத்தை(பிட்டத்தை) தேய்த்து விட்டான்.

கூச்சத்தில் நெளிந்தவள்,

“என்ன செய்றீங்க துரை? விடுங்க என்னை விடுங்க!” என அவன் கையைத் தடுத்தவாறே போராடினாள்.

“அசையாம நில்லு ப்ளேக்கி” எனக் கோபத்தில் கத்தினான் இவன்.

“விடுங்க என்னைய. துரை விடுங்க!”

அவள் பயப்படவும் தேய்ப்பதை நிறுத்தியவன் அவளை முறைத்துப் பார்த்தான்.

“ஏன் முறைக்கறீங்க துரை?” நடுக்கத்துடன் கேட்டாள் சுப்பு.

“உன் கிட்ட என்ன சொன்னேன்?”

“வெ..வெளிய வரக்கூடாதுன்னு சொன்னீங்க!” எனத் திக்கினாள்.

“அப்புறம் எதுக்கு வெளிய வந்த? சொல்லு ப்ளேக்கி, எதுக்கு வந்த?” இன்னும் கத்தினான்.

“அக்காதான் உதவிக்கு…”

குரல் நடுங்கியது அவனின் ரௌத்திரத்தைக் கண்டு. செவ செவவென சிவந்திருந்த அவன் முகத்தைப் பார்க்க பயந்து கண்களை இருக மூடிக் கொண்டாள் சுப்பு. பின் ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்தவள்,

“உங்கள பாக்க எனக்கு பயமா இருக்கு துரை” எனத் தட்டு தடுமாறி பேசினாள்.

ஆழ்ந்த பெரிய மூச்சுகளை இழுத்து விட்டவன்,

“உனக்கு யாரு முதலாளி ப்ளேக்கி? நானா உன் அக்காவா?” என அமைதியாகக் கேட்டான்.

“நீங்கதான் துரை”

“அப்போ யார் சொன்ன பேச்ச நீ கேட்கனும்?”

“உங்களோடததான்”

“இப்போ கண்ணை திற ப்ளேக்கி”

கல்லாய் கணக்கும் காலை நகர்த்தி மெல்ல கதவருகே வந்து நின்றாள் பட்டு. காதை கதவில் பொருத்தி உள்ளே என்ன நடக்கிறது என ஒட்டுக் கேட்டாள் அவள்.

“வேணா துரை. என் பாவாடைய அவுக்காதீங்க!” எனச் சுப்பு உச்சஸ்தாயியில் கத்துவதைக் கேட்டு அதிர்ந்து நின்றாள் பட்டு.
 
Last edited:

Author: VanishaAdmin
Article Title: இள மனச--EPI 12
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Geethazhagan

Active member
Aug 11, 2025
58
39
28
Very interesting epi
துரை காதல் அசத்தல்.
ஆனா இவளுக்கு அந்த மாதிரி ஒன்னும் தோணலையே
 
  • Love
Reactions: VanishaAdmin