அத்தியாயம் 13
கடையில விக்கறான் வடை
அழகா இருக்குடி உன் நடை!!!
பத்து வருடங்களுக்குப் பிறகு…
லுப்லின் நகரம் போலந்து நாட்டில் மிகப் பிரசித்திப் பெற்ற நகரமாகும். அந்நகரம் வரலாற்று சிறப்புமிக்க ஓரிடமாக இருந்தது அந்நாட்டில். மியூசியம், பழமை மாறாத, கோட்டைப் போல முகப்புக் கொண்ட கட்டிடங்கள், தேவாலயங்கள், பூங்காக்கள் என சுற்றுப் பயணிகளை கவரும் எல்லா அம்சங்களும் அடங்கிய இடமாகத் திகழ்ந்தது லுப்லின்.
அந்த நகரில் இருந்த ஒரு பாரில்(bar), இரவு நேர வியாபாரம் களைக் கட்டி இருந்தது. உழைத்துக் களைத்து வரும் மக்கள், நம்மைப் போல் வீட்டிற்கு போய் வேலைகளைப் பார்த்து விட்டு, உணவுத் தட்டோடு தொலைக்காட்சி முன் அமராமல், அந்த பாரில் அமர்ந்து டென்ஷனைப் போக்கிக் கொண்டிருந்தார்கள். வண்ண விளக்குகள் மினுங்க, டி.ஜே சிஸ்டத்தில் இருந்து போலிஷ்(அவர்கள் மொழி) பாடல்கள் முழங்க, உணவு வாசமும், மதுவின் வாசமும், சிகரெட் நெடியும் சுவாசம் நிறைக்க ஜெகஜோதியாக இருந்தது அவ்விடம். ஆண்களும் பெண்களும் ஜோடி ஜோடியாக கை கோர்த்து, உடல் ஒட்டி டான்ஸ் ஃளோரில் ஆடிக் கொண்டிருக்க, வியர்வையின் மணமும் அவ்விடத்தை நிறைத்திருந்தது.
முகத்தில் ஒட்ட வைத்தப் புன்னகையுடன் தன் முன்னே இருந்த வொர்க் ஸ்பேசுக்கு அந்தப்புறம் போடப்பட்டிருந்த பெஞ்சுகளில் அமர்ந்திருந்த சில ஆண்களுக்கு அவர்கள் கேட்டது போல காக்டெயில் கலந்து கொடுத்துக் கொண்டிருந்தாள் ஷாமினி.
ஆண்களைப் போல ஒட்ட வெட்டிய சிகை. அதில் அங்கிங்கு எட்டிப் பார்த்த பிங்க் வர்ண ஹைலைட்! மூக்குத்திப் போல உதட்டின் ஓர் ஓரத்தில் குத்தி இருந்த பியர்சிங், வண்ண விளக்கின் உபயத்தால் டாலடித்தது. வெறுமையான காதுகள். அளவுக்கு அதிகமாக முகத்தில் அப்பி இருந்த மேக்கப்! ரத்தச் சிவப்பில் லிப்ஸ்டிக். உடம்பை இறுக்கிய டீ ஷர்ட். குட்டையாய் ஒரு ஜீன்ஸ் ஸ்கர்ட். இடுப்பில் கட்டி இருந்த ஏப்ரன் என ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருந்தாள் பெண்.
“பேபி! செக்ஸ் ஆன் தி பீச்(sex on the beach) கிடைக்குமா?” என ஒரு மாதிரியானப் புன்னகையுடன் கேட்டான் அவள் முன்னே அமர்ந்திருந்தவன்.
“வை நாட்!” எனப் புன்னகைத்த ஷாமினி, அவன் கேட்ட காக்டெயிலை மிக்ஸ் செய்து கொடுத்தாள்.
செக்ஸ் ஆன் தி பீச் என்பது வோட்கா, பீச் பழம், ஆரஞ்சு ஜூஸ் மற்றும் கிரான்பேரி ஜூஸ் போன்றவைகளைக் கலந்து செய்யப்படும் ஒரு காக்டெயில். அதை உறவுக்கு அழைப்பது போல பிக்கப் லைனாகவும் சிலர் பயன்படுத்துவார்கள்.
ஆரஞ்சு ஸ்லைசை கிளாசில் அலங்காரமாக குத்தி வைத்து, பானத்தை நிரப்பி தன் முன்னே அமர்ந்திருந்தவன் அருகே வைத்தாள் இவள். கிளாசோடு சேர்த்து அவளது கையையும் பற்றிக் கொண்டவன் போலிஷ் மொழியில்,
“நைட் ஷிப்ட் முடிஞ்சதும் என் கூட வரியா? உன்னைப் போல ஆசியனை நான் ட்ரை பண்ணிப் பார்த்ததே இல்லை” என ஆசை வழியக் கேட்டான்.
அடிக்கடி கேட்டுப் பழகிப் போன வார்த்தைகள்தான். ஆரம்பத்தில் உடலெல்லாம் பற்றி எரிவது போல, மூச்சு முட்டுவது போல படபடத்துப் போகும் இவளுக்கு. போகப் போக மறத்துப் போய் விட்டது ஷாமினிக்கு. இந்த முப்பது வயது பாவைக்கு எல்லாவற்றையும் சமாளிக்கத் தெரிந்திருந்தது.
இன்னும் மலர்ந்துப் புன்னகைத்தவள், கேட்டவனின் கையை வருடியபடியே, ஒற்றைக் கண்ணைச் சிமிட்டினாள். அக்கண் சிமிட்டலுக்கே மயங்கி நின்றான் இவன்.
“பேபி! பேபி! கொல்லுறியே!!! அந்த பியர்ஸிங்கோட சேர்த்து உன் லிப்ஸ என் லிப்ஸ்குள்ள வச்சிக்கனும்னு துடிக்குது எனக்கு!” என வழிந்தவனைப் பார்த்து,
“சாரி டியூட்! ஐம் கே(gay)! எனக்கு வேண்டியது உன் கிட்ட இல்ல!” எனப் புன்னகையுடன் சொல்லி சின்னதாக ஒரு சலாம் வைத்தாள்.
அவள் அருகில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த இன்னோரு பார்டெண்டர் பெண் இடுப்பில் கை போட்டு அருகே இழுத்து, அவள் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டவள்,
“மீட் மை கேர்ள்ப்ரெண்ட்” என அறிமுகப்படுத்தி வைத்தாள்.
அவன் முகம் சுருங்கிப் போனது!
“வாட் அ வேஸ்ட்” எனச் சொன்னவன், பானத்துக்கான பணத்தையும் அவளுக்கான டிப்ஸையும் வைத்து விட்டுக் கடுப்பில் வெளியேறிப் போனான்.
ஷாமினியை முறைத்தபடி நின்ற மரியா என்ற அந்த போலத்து பெண்ணின் கன்னத்தை அழுத்தித் துடைத்து விட்டவள், தனக்குக் கிடைத்த டிப்ஸில் பாதியை அவளிடம் நீட்டினாள்.
“கோச்சிக்காதே செல்லம்!” என இவள் தமிழில் சொல்ல, அவர்கள் பாஷையில் கெட்டக் கெட்ட வார்த்தையாகத் திட்டினாள் மரியா.
(போலிஷ் பாஷையில் நடக்கும் பேச்சு வார்த்தைகள் உங்களுக்காகத் தமிழில்)
இங்கு வந்த இந்த ஒன்பது வருடங்களில் (ஒரு வருடம் தம்பி படிப்பு முடிய மலேசியாவிலேயே கழிந்திருந்தது), அவர்களது மொழியை நன்றாகவே பேசக் கற்றிருந்தாள் ஷாமினி.
வேற்று நாட்டில் தட்டுத் தடுமாறி எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளும் போது, அதே நிலையில் மலாய் மொழி கூடத் தெரியாமல் தன் நாட்டில் முன்பிருந்த அவள் நண்பனை நினைத்துக் கொள்வாள். அவன்தான் எல்லாவற்றையும் இவள் கடந்து வர உந்துசக்தியாக இருந்தான்!
காதைத் தேய்த்துக் கொண்ட ஷாமினி,
“போதும்! விட்டுரு! வலிக்குது” எனத் தமிழில் சொல்ல,
“உன்னால இப்போலாம் என்னை ஒரு ஆம்பளக் கூடத் திரும்பிப் பார்க்கறது இல்ல! உனக்குப் புடிக்கலனா, புடிக்கலன்னு நேரா சொல்ல வேண்டியதுதானே! ஏன்டி என்னை இதுல இழுத்து விடற! எனக்கே ஏதோ ஒரு சமயம்தான் எவனாச்சும் பசையுள்ள பார்ட்டி மாட்டறான்! அதையும் கெடுத்து விட்டிரு!” என வசைப்பாடினாள் அவர்கள் மொழியில்.
இவ்வளவு நேரம் அவள் முன்னே அமர்ந்து கண்களால் சிக்னல் கொடுத்துக் கொண்டிருந்த இன்னொருத்தன், ஷாமினி செய்த சேட்டையில் எழுந்து போய் விட்டதில் அவ்வளவு கடுப்பில் இருந்தாள் மரியா.
“சாரிடி மரியா” என இவள் முகத்தைப் பாவமாக வைத்துக் கொள்ள,
“போய் தொலை!” எனச் சொல்லியபடி வேலையைப் பார்க்கப் போய் விட்டாள் அவள்.
டேபிளில் அமர்ந்திருந்த சிலர் பீர் கேட்க, இவள் அவர்கள் கேட்டதை எடுத்துக் கொண்டு போய் மேசையில் வைத்தாள். அங்கு அமர்ந்திருந்த ஒருவன், இவளது ஏப்ரனில் பணத்தைச் சொருக, இவளுக்கு நண்பனை நினைத்துக் கண்கள் பனித்து விட்டது. இவளும் இப்படித்தானே அடிக்கடி அவனது ஏப்ரனில் பணத்தைச் சொருகுவாள். அது போன்ற நேரத்தில் அவன் முகம் அஷ்டக்கோணலாகி விடும்! அதைப் பார்த்து இவள் உள்ளுக்குள் நகைத்துக் கொள்வாள். அதற்காகவே அடிக்கடி இந்த வேலையைச் செய்வாள் ஷாமினி.
சட்டெனத் தன்னை மீட்டுக் கொண்டவள், அடுத்த மேசையில் இருந்தவர்கள் கேட்ட, ப்ரென்ச் ஃப்ரைசை எடுத்து வர கிச்சனுக்குள் நுழைந்தாள். அதையும் கொண்டு போய் கொடுத்து விட்டு,
“மரியா! ஐ நீட் ப்ரேக்” எனச் சொல்லியவள், கிச்சன் கதவைத் திறந்து கொண்டு பின்னாடி தெருவில் போட்டிருந்த கல் இருக்கையில் அமர்ந்தாள்.
பாக்கேட்டில் இருந்த சிகரெட் பேக்கேட்டை எடுத்து, ஒன்றை உருவி வாயில் வைத்தவள், லைட்டரை கொண்டு அதை பற்ற வைத்தாள். உள்ளே ஆழ இழுத்துப் புகையை வெளியே விட்டவளுக்கு, கொஞ்சம் ஆசுவாசமானது போல இருந்தது. பாரின் உள்ளேயிருந்து கசிந்து வந்த இசைக்கு கால்கள் லேசாய் தாளம் போட, விழிகளோ இருட்டை வெறித்தப்படி இருந்தன.
பாக்கேட்டில் வைத்திருந்த போன் வைப்ரேட் ஆனது. எடுத்துப் பார்த்தாள் ஷாமினி. நிதின் அழைத்திருந்தான். ஏற்கனவே சில மிஸ்ட் கால்ஸ் வேறு இருந்தன. அழைப்பை ஏற்றவள்,
“சொல்டா டாக்டரு” எனக் குதூகலக் குரலில் பேச்சைத் தொடங்கினாள்.
“அக்கா”
“என்னடா?”
“சாப்டியா?”
“ஆச்சு! நீ சாப்டியா நிதின்?”
“சாப்டேன்! எங்கக்கா? பார்லயா?”
“ஆமாடா?”
“பகல்லதான் வேலைப் பார்க்கறல்ல! நைட்டுக்கும் உழைக்காட்டி என்ன?” எனச் சிடுசிடுத்தான் அவன்.
“பழகிடுச்சுடா”
“உன் மூஞ்சி! என் கிட்ட வந்திருக்கா! அங்க என்ன இருக்குன்னு இன்னும் காவக் காத்துக்கிட்டு இருக்க நீ?” எனப் பொரிந்தான்.
நிதின் டாக்டர் படிப்பை முடித்து விட்டு அயர்லந்தில்(Ireland) வேலைப் பார்க்கிறான். அங்கு வேலைக் கிடைத்ததில் இருந்து தன் அக்காவை உடன் வந்து விடும்படி அழைத்துக் கொண்டுதான் இருக்கிறான். அவள்தான் போலந்து நாட்டை விட்டு அசைவேனா என இருக்கிறாள்.
“வரேண்டா”
“இதையேத்தான் கேக்கறப்பலாம் சொல்லற நீ! இவ்ளோ நாள் என்னைப் படிக்க வச்ச! இனி நான் உன்னைப் பார்த்துக்கறேன்! வாக்கா” என்றவனின் குரலில் வலி இருந்தது.
பெருமூச்சொன்றை விட்டவள்,
“ராதிகா எப்படி இருக்கா?” எனப் பேச்சை மாற்றினாள்.
“ஷீ இஸ் ஃபைன்!”
“என் செல்லக்குட்டி?”
“அவன் நல்லா இருக்கான்கா! உன் போட்டோ காட்டுனா த்தை(அத்தை)னு சொல்றான்” எனப் பெருமையாகப் பகிர்ந்து கொண்டான்.
அயர்லெந்துக்கு வேலைக்குப் போனவன், அங்கு வேலைப் பார்த்த இன்னொரு டாக்டர் பெண்ணை காதலித்தான். ராதிகா ஸ்ரீ லங்காவை சேர்ந்த தமிழ் பெண். இருவருக்கும் சம வயது! அக்காவுக்காக அவன் திருமணத்தைத் தள்ளிப் போட, ஷாமினிதான் முன்னின்று அவனுக்கு மணம் முடித்து வைத்தாள். அவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது.
தனக்காக எல்லாம் செய்த அக்கா இப்பொழுது தனிமரமாக நிற்பதில் அவ்வளவு மன உளைச்சல் நிதினுக்கு. அவனும் ராதிகாவின் சொந்தம், தனக்குத் தெரிந்த நன்பர்கள் என அக்காவுக்கு வரன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். அவளோ பிடி கொடுப்பதேயில்லை.
“அக்கா! என் டிபார்ட்மெண்ட்ல ஒரு மலேசியக்காரு டாக்டரா வேலைக்கு வந்திருக்காரு”
“சரி”
“அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகல”
“சரி”
“உன்னைப் பத்தி சொன்னேன்”
“சரி!”
“உன் போட்டோ காட்டனேன்”
“ஓஹோ!”
“பழகிப் பார்க்கலாம்னு சொன்னாருக்கா”
“அடேய்! உங்கக்கா படிக்காதவடா! அந்தாளு ஒரு டாக்டர்! இதெல்லாம் சரிப்படுமாடா நிதினு!!! அதோட இந்தக் கல்யாணம் காட்சி, புள்ளைக் குட்டி, கமீட்மெண்ட்லாம் நெனைச்சா கடுப்பா வருதுடா! சிங்கிள்தாண்டா கெத்து! உன்னை மாதிரி ஷாப்பிங் போகக் கூட பால் புட்டி, பேம்பர்ஸ்னு தூக்கிட்டு சுத்தலாம் என்னால முடியாதுடா! உன்னை வளர்த்து விட்டுட்டேன்! இனிமே என் போக்குல என்னைச் சுதந்திரமா விடுடா நிதினு! ப்ளிஸ்”
அவளது கரகரப்பானக் குரல் இவன் மனதை என்னவோ செய்தது.
“ஐ லவ் யூக்கா”
“ஐ லவ் யூ டூடா நிதினு! அக்கா நல்லாருக்கேன்டா! நீ சந்தோஷமா இரு! புரியுதா!!! லாங் லீவ் கிடைச்சா செல்லப் பையனைத் தூக்கிட்டு என்னைப் பார்க்க வாங்க! கண்ணுக்குள்ளயே நிக்கறான்”
“எங்கள பார்க்கக் கூட அந்த போலந்து நாட்ட விட்டு நீ வர மாட்டல்ல!” என ஆதங்கமாகக் கேட்டான் இவன்.
சற்று நேரம் அமைதி இவளிடம்.
“ப்ரேக் முடிஞ்சதுடா நிதினு! உள்ள போகனும்! பைடா” என அழைப்பைத் துண்டித்தவள், எழுந்து உள்ளே போய் விட்டாள்.
மேசைகளைக் கடந்து போகும் போது, பின் பக்கத்தைத் தடவிய ஒருத்தனைப் பார்த்து மனதுக்குள் பல்லைக் கடித்தாலும்,
“டார்லிங்! இது பப்ளிக் ப்ரோபெர்ட்டி இல்ல! என்னோட ப்ரோபர்ட்டி!” எனச் சிரித்த முகமாகச் சொல்லி விட்டு வேலையைப் பார்க்கப் போனாள்.
விடிகாலை இரண்டுக்கு இவளது ஷிப்ட் முடிய, தான் தங்கி இருக்கும் இடம் நோக்கித் தனது பைக்கில் பயணித்தாள் ஷாமினி. என் கனவெல்லாம் ஒரு கட்டிடத்தை வாங்கி அதில் பெட் அண்ட் ப்ரேக்ஃபஸ்ட் நடத்துவதுதான் எனச் சொல்லி இருந்தவள், இப்பொழுது அது போல ஒரு இடத்தில்தான் முதலாளியாக இல்லாமல், காலை ஷிப்டின் சூப்பர்வைசராக வேலைப் பார்க்கிறாள். ஆரம்பத்தில் கடைநிலை ஊழியராக வேலைப் பார்த்தவள்தான்! போகப் போக முன்னேறி வந்திருந்தாள்.
காலையில் ஏழுக்கு ஆரம்பித்து மாலை நான்கு வரை அவளது வேலை நேரம். அங்கு வேலை முடித்து கொஞ்சம் ஓய்வெடுத்து விட்டு, இரவு ஏழுக்கு பாருக்கு பார்ட் டைம் வேலைக்குப் போவாள் ஷாமினி.
பைக்கை பார்க் செய்தவள், பழமையும் புதுமையும் கலந்து அழகாய் எழுந்து நிற்கும் அந்த கட்டிடத்தை ஆசையாகப் பார்த்தாள். பின் ஒரு பெருமூச்சுடன் உள்ளே நுழைந்தாள்.
அவளுக்கென்று ஒரு சிறிய அறை இருந்தது அங்கே! அந்த ஹோட்டல் உரிமையாளரின் பெயர் காஸ்ப்பேர்! ஐம்பத்து இரண்டு வயதாகிறது அவருக்கு. இவள் வேலைக்கு வந்த புதிதில் மற்ற ஆண்களைப் போலத்தான் அவரும் இவளிடம் நடந்து கொண்டார். கை பிடிப்பது, தடவுவது, சேர்ந்து இருக்கலாமா எனக் கேட்பது என சேஷ்டைகள் செய்தார். வெளிநாட்டு மக்களுக்கு நமது ஆசிய மக்களைப் பார்த்தால் இது போலத்தான் தோன்றுமோ! நம்மை விட கீழான நாட்டில் இருப்பவர்கள்தானே! பணமுள்ளவன் தொட்டால் மடிந்து விடுவார்கள் எனும் எண்ணம்!
ஆரம்பத்தில் கோபம், பயம், ஆற்றாமை, நடுக்கம் என இருந்தாலும், எங்கு போனாலும் இப்படியானவர்களைச் சமாளித்துத்தானே ஆக வேண்டும் எனத் திடமாக நின்றாள் ஷாமினி. அவரது சீண்டல்களுக்கு அடி பணியாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்தவளுக்கும் ஒரு விடிவு வந்தது. ஒரு முறை காஸ்ப்பேர் மாரடைப்பால் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே விழ, இவள்தான் முதலுதவி செய்து, ஆம்புலன்ஸை அழைத்து மருத்துவமனையில் கொண்டுப் போய் சேர்த்தாள். சாவின் விளிம்பைத் தொட்டு விட்டு வந்தவருக்கு, தன்னைக் காப்பாற்றியவள் தேவதையாகத் தெரிய ஆரம்பித்தாள். ஏற்கனவே அவளது வேலைப் பார்க்கும் பாங்கும், நேர்மையான குணமும் இவரை கொஞ்சமாக அசைத்துத்தான் பார்த்திருந்தது. இப்பொழுது உயிரை காத்ததும் சேர்ந்து கொள்ள, ஷாமினியை நல்லபடி நடத்த ஆரம்பித்தார்.
வேலைக்குக் கொடுக்கப்படும் சலுகைகளைத் தவிர வேறு எதையும் அவள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரது தனிமைத்தான் தன்னிடம் இப்படியெல்லாம் நடக்க வைக்கிறது எனப் புரிந்து கொண்டவள், தோழமையை மட்டும் அவருக்குக் கொடுத்தாள். உடல் உரசும் சுகத்தை விட, உள்ளம் மகிழ அவள் கொடுக்கும் நட்பு அவருக்கும் பிடித்துப் போக, அவருக்கு ஒரு நல்ல தோழியாய் மாறிப் போனாள் இவள்.
லாபி உள்ளே நுழைந்தவளைப் பார்த்து நைட் ஷிப்ட் பார்க்கும் ரிஷப்சன் பையன் கை ஆட்டினான்.
இவளும் அவனுக்கு பை சொல்லி விட்டு ரிஷப்சனுக்கு சற்றுத் தள்ளி இருக்கும் தனது அறைக்குப் போனாள். மூன்று மாடி இருக்கும் இந்தப் பழங்கால கட்டிடம் இப்பொழுது இருபது அறைகள் கொண்ட பெட் அண்ட் ப்ரேக்ஃபஸ்ட்(ஹோட்டல்) இடமாக மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. கட்டில், சுவர், மற்ற தளவாடப் பொருட்கள் எல்லாம் பழைய காலத்து ஸ்டைலில் இருக்கும். ஆனால் வாட்டர் ஹீட்டர், ஏசி எனப் புதிய டெக்னாலோஜியும் அதனுடன் சேர்த்து இணைக்கப்பட்டிருக்கும்.
இவளது அறையில் ஒற்றைக் கட்டில் ஒன்றும், குட்டியாய் ஒரு மேசையும் அழகாய் சாய்வு நாற்காலி ஒன்றும் இருக்கும். துணிமணிகளை அடுக்கி வைத்துக் கொள்ள ஒரு அலமாரியும் இருந்தது. அட்டாச் பாத்ரூம் இருக்க, அவ்வறையே அவளுக்கு போதுமானதாக இருந்தது.
கசகசப்பு நீங்க குளித்து விட்டு வந்தவள், கட்டிலில் அக்கடாவெனப் காலை நீட்டிப் படுத்து விட்டாள்.
தூக்கம் எப்பொழுதும் போல நெருங்குவேனா என அடம் பிடிக்க, கைத் தொலைப்பேசியை எடுத்து கலேரிக்கு சென்று பழைய போட்டோக்களைப் பார்வையிட ஆரம்பித்தாள் ஷாமினி. அதில் இருந்த நீயூஸ் பேப்பர் க்ளிப் ஒன்றைப் பார்த்தவளுக்கு இத்தனை வருடங்கள் ஓடியும் கண்களில் கண்ணீர் வழிந்தது.
‘கேங் வைத்து ரௌடிஷம் செய்து வந்த பிரபல சாப்பாட்டுக் கடை முதலாளி, மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்’

Author: VanishaAdmin
Article Title: Jagam Nee--EPI 13
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.