அத்தியாயம் 6
தோட்டத்துல பூத்திருக்கு ரோஜா
நான்தானே உன்னோட ராஜா!!!
அன்றைய தினம் காலை எட்டு மணிக்கே குரூப் டிஸ்கஷன் ஒன்று இருந்தது! அதற்காக அலாரம் வைத்து சீக்கிரமே எழுந்திருந்தாள் ஷாமினி. நிதானமாகக் குளித்து வந்தவள், தொடையை இறுக்கிப் பிடிப்பது போல ஸ்கின்னி ஜீன்ஸ் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டு, கைகளில் மட்டும் வலைப் பின்னல் போல இருக்கும் வெள்ளை நிற டாப்ஸ் ஒன்றையும் உடுத்திக் கொண்டாள். முகத்துக்கு மேக்கப் போட்டு, உதட்டுக்கு லிப் குளொஸ் போட்டு, பர்பியூம் அடித்துக் கொண்டவள், தனது ஸ்டடி டேபிளுக்குப் போனாள்.
புத்தகங்களை எடுத்து பேக்கில் திணித்துக் கொண்டவள், மேசையில் வைத்திருந்த தனது அம்மாவின் படத்தை எடுத்து ஆசையாக முத்தமிட்டாள்.
“குட் மார்னிங் மா” எனப் புன்னகை முகமாகச் சொல்லியவள், அறையில் இருந்து வெளியே வந்தாள்.
அவள் வசிப்பது ஒரு நவீன ரக கொண்டோமினியம்! அவளோடு அவளது தம்பி நிதினும் அங்கே வசிக்கிறான்.
“க்கா!!! டோஸ்ட் அண்ட் காபி போதும்!” என வீட்டோடு இருக்கும் வேலைக்காரிக்குக் குரல் கொடுத்தவள், ஹாலில் அமர்ந்து பள்ளி காலணியை அணிந்து கொண்டிருந்த தம்பியின் அருகே போனாள்.
“நிதின்”
“வாட்!!!!”
அவனது அலட்சிய பாவம் இவளுக்கு வெறியேற்றியது! இன்னும் நெருங்கிப் போய் தலையில் மடமடவெனக் கொட்டியவள்,
“என்னடா, என்ன??? நீயும் குட்டி ரௌடியா ஃபார்ம் ஆகலாம்னு நெனப்புல இருக்கியா? எதுக்குடா நேத்து ஸ்கூலுல பையனுங்கள அடிச்சியாம்! டிசிப்ளின் டீச்சர் கூப்டு வச்சு காதைத் தீச்சிட்டாங்க! இங்க பாரு நிதின்! அந்தாளு சங்காத்தமே வேணாம்னுதான் உன்னைத் தனியா கூட்டிட்டு வந்து, இங்க இருக்கேன்! இந்த அடிதடி, வட்டிக்கு விட்டு எடுக்கறதுலாம் பெரிய ரிஸ்க்கு! என்னிக்கு எவன் போட்டுத் தள்ளுவான்னே தெரியாது! சோ ஒழுங்கா போய் படிக்கற வேலையை மட்டும் பாரு! படிச்சு முடிச்சதும் நாம ரெண்டு பேரும், இந்தாளும் வேணா, இந்த நாடும் வேணான்னு போலண்ட்கு(Poland) போய் மாமா கூட செட்டிலாகிடலாம்! புரியுதா?” எனக் கத்தினாள்.
அவளுக்கும் மேலாக இவன் கத்தினான்!
“உன் வாழ்க்கையை மட்டும் நீ பாரு! நான் என்ன செய்யனும், எங்க படிக்கனும், எந்த நாட்டுல செட்டிலாகனும்லாம் நீ சொல்ல வேணாம்! எனக்கு அப்பா பாசம் கிடைக்காம நீதான் தடையா இருக்க! ஐ ஹேட் யூ!! ஹேட் யூ சோ மச்” எனக் கத்தியவன், மடமடவென வெளியேறி விட்டான்.
சட்டென மடங்கி சோபாவில் அமர்ந்தாள் ஷாமினி. மனது எப்பொழுதும் போல கனத்துப் போனது!
“பயமா இருக்குமா!!! இவன எப்படி என் வழிக்குக் கொண்டு வர போறேன்னு தெரியல! அன்பா பேசனாலும் கத்துறான்! ஆத்திரமா பேசனாலும் கத்தறான்! எனக்கு என்ன பண்ணன்னு புரியலம்மா! இவ்ளோ பெரிய பொறுப்ப என் கிட்ட குடுத்துட்டுப் போய்ட்டீங்களே!” எனக் கண் கலங்கினாள்.
ரௌடி ரங்கன் எனச் சரவணப்பாண்டியன் அழைக்கும் பெரிய முதலாளியின் மகள்தான் இந்த ஷாமினி. வளர வளரத்தான் தந்தை செய்யும் ரௌடிஷமும், வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் விஷயமும் தெரியும் இவளுக்கு. ஆனால் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளும் வயதோ பக்குவமோ இல்லை அவளுக்கு.
கையில் புரளும் பணம், நண்பர்களோடு அரட்டை, படிப்பு, அசைண்ட்மெண்ட் என உல்லாசமாகத்தான் போனது வாழ்க்கை. இவளது தந்தை தனசேகரை வீட்டில் காண்பதே அபூர்வம்தான். அப்படி இருக்கும் நேரம், கண்ணு எனக் கூப்பிட்டு பாசமாக இரண்டு வார்த்தைகள் பேசுவார். வீட்டிலேயே இருந்து அன்பைக் கொட்டும் அன்னையை விட, ஏதோ ஒரு சமயம் வரும் அப்பாவின் மேல்தான் பிள்ளைகள் இருவருக்குமே அன்பு அதிகம்.
இவளது பதினேழாவது வயதில், பரிட்சை முடித்து விட்டு ஜாலியாக இருந்தாள் ஷாமினி. ப்ரேண்ட்ஸ், மூவி, அவுட்டிங் என மகிழ்ச்சியாக இருந்த சமயமது! வெளியே ஷாப்பிங் சென்ற இவளது அன்னை, ஹாஸ்பிட்டலில் இருப்பதாக செய்தி வர, பதறிக் கொண்டு ஓடினாள் பெண். தோள், கழுத்து, கை என வெட்டுக் காயத்தோட உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார் அவர்.
“மினிம்மா! உங்க ரெண்டு பேரையும் இப்படி விட்டுட்டு போறத நெனைச்சா எனக்கு நெஞ்சுக் கலங்குதுமா! இந்தப் பொல்லாத உலகத்துல எப்படி பொழப்பீங்களோன்னு நெனைச்சு உடம்பெல்லாம் பதறுது! இந்த அப்பா உங்களுக்கு வேணாம்டா கண்ணம்மா! உங்கப்பாவோட வீர தீரத்தப் பார்த்து, காதலிச்சு ஆசையாத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்! ஆனா எப்போ கண்ணால ஒருத்தன துடிதுடிக்க வெட்டிக் கொன்னத பார்த்தனோ, அப்பவே இந்த ஆசை, காதல் எல்லாம் ஓடி ஒளிஞ்சிட்டது! கந்து வட்டி வாங்கனவன், வயித்தெரிச்சலோட சாபம் விடறப்பலாம், ஐயோ என் புள்ளைங்கள அந்தச் சாபம் எதாவது பண்ணிடுமோன்னு நான் துடிக்காத நாளில்ல! வேணாம்னு விலகி வந்துட்டேன்! உங்களுக்காக டைவர்ஸ் பண்ணிக்கல நாங்க! அப்பாங்கற அவரோட உரிமைய என்னைக்கும் அவர் விட்டுக் குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு! அதான் அப்பப்ப அவர் வந்து பார்த்துட்டுப் போகறப்போ நான் ஒன்னும் சொல்லிக்கிட்டது கிடையாது! நான் விட்டு வந்ததும் உங்கப்பா இன்னொருத்திய சின்ன வீடா எடுத்துக்கிட்டாரு! வயசுக்கு வந்த பொண்ணு கிட்ட இதையெல்லாம் என்னன்னு நான் சொல்லுவேன்! அப்பா, அப்பான்னு ரெண்டு பேரும் அவர் மேல உசுர வச்சிருக்கீங்க!” எனத் திணறி சொன்னவர் மகளின் கரத்தை இறுக பற்றிக் கொண்டார்.
“உங்கப்பாவோட எதிரிங்க யாரோத்தான் கரம் வச்சு என்னை வெட்டிட்டாங்க! கத்தி எடுத்தவனுக்குக் கத்தியிலத்தான் சாவு! அவனுக்கு மட்டும் இல்ல! அவன் குடும்பத்துக்கும் இதுதான் விதி! என் உசுரு போனதோட இந்த சாபம் நீங்கட்டும்! தம்பிய பத்திரமா பார்த்துக்கம்மா! நீயும் பத்திரமா இரு” என்றதோடு அவரது மூச்சு அடங்கிப் போனது!
தேற்ற ஆளில்லாமல் கத்திக் கதறித் தீர்த்தாள் ஷாமினி. அந்த ஒரு நாளில் பல வருடங்கள் மூப்படைந்தது போல ஒரு பிரமை. இவளது தந்தையே ஈமக்காரியங்களை எடுத்து செய்தார். அழுதழுது கண்ணீர் வற்றி ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தாள் பதினேழு வயது பெதும்பை பெண். அவளது மடியில் சுருண்டுக் கிடந்த நிதினுக்கு அப்பொழுது பதினான்கு வயது!
பதினாறு நாட்கள் முடிந்து காரியமும் முடிந்திருக்க, இவர்களின் வீட்டுக்கு வந்தார் தனசேகர்.
“கண்ணு”
நிமிர்ந்து பார்த்தவள், பதில் பேசவில்லை.
“இனி தனியா எப்படி இருப்பீங்க! என் கூட நம்ம வீட்டுக்கு வந்திடுங்க” என அழைத்தார் அவர்.
“வேண்டாம்!”
“ஷாமினி!” எனக் குரலை உயர்த்தினார் அவர்.
“அப்பா கூட போகலாம்கா” எனத் தந்தை அருகே போய் அவர் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னான் நிதின்.
“நாங்க தனியாகவே இருந்துக்கறோம்! தம்பி எஸ்.பி.எம்(மலேசிய உயர்தர பரிட்சை) படிச்சு முடிச்சதும் ஸ்டூடண்ட் விசாவுல நாங்க போலண்ட் போகப் போறோம்! அம்மா சாவுல மாசமா இருந்த உங்க புதுப் பொண்டாட்டிய பார்த்தேன்! நீங்க அவங்க கூட குழந்தை குட்டின்னு சந்தோஷமா இருங்க! நாங்க வேணாம் உங்களுக்கு! நீங்க செஞ்ச பாவத்தால எங்கம்மாவ இழந்து நாங்க அனாதையா நிக்கறது போதும்! எங்களயும் உங்க கூட வரச் சொல்லி, எங்க உசுரயும் எடுத்துடாதீங்க” எனத் தேம்பியபடியே சொன்னாலும், தெளிவாகச் சொன்னாள் ஷாமினி.
மகளின் தீர்மானத்திலும் தைரியத்திலும் தன்னையே நேரில் பார்த்தார் தனசேகர். மெல்லிய புன்னகை ஒன்று முகிழ்த்தது அவருக்கு.
“சரிம்மா கண்ணு! தனியாத்தானே இருக்கனும்! இருந்துக்குங்க! எப்பவும் என்னோட ரெண்டு கண்ணும் உங்க ரெண்டு பேர் மேலத்தான் இருக்கும்! உங்கம்மா விஷயத்துல தவற விட்ட மாதிரி, உங்க ரெண்டு பேருக்கும் எதுவும் ஆகிட விடமாட்டேன்!” என்றவர் எழுந்து கொண்டார்.
நிதின் அழுகையுடன்,
“அவ வரலன்னா போறாப்பா! நான் உங்க கூட வரேன்” என அடம் பிடித்தான்.
“டேய் தம்பி! ஆம்பளயா லட்சணமா அக்காவுக்குப் பாதுகாப்பா இருடா!” எனச் சொல்லியவர், அவனை இறுக்கி அணைத்துச் சமாதானப்படுத்தி விட்டுக் கிளம்பி விட்டார்.

Last edited:
Author: VanishaAdmin
Article Title: Jagam Nee--EPI 6
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.