Jagam Nee--EPI 7

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
930
-1,942
93
அத்தியாயம் 7



கல்யாணத்துக்கு கட்டறது பட்டு

கண்ணே நீதான் என் தேன் சிட்டு!!!




“ஜோ!!! கொக்கோய் தினமும் லேட்டா கிளம்புதே, என்ன மேட்டரு?” எனச் சரவணனைப் பார்த்துக் கேட்டான் இளா.

“அட! நீ வேற ஏன்டா படுத்தற!!! அவங்களுக்கு மேத்ஸ் சொல்லித் தரேன்டா! அதுதான் மேட்டரு”

“எதே!! மேத்ஸ்சா?”

“ஹ்ம்ம்! ஃபர்தர் மேத்ஸ்”

“எதே!!! ஃபர்தர் மேத்ஸ்சா?”

“ஏன்டா ஜோ!!! ஏன் இவளோ அதிர்ச்சி?”

சரவணனை ஒரு ரவுண்ட் சுற்றி வந்து பார்த்தவன்,

“எப்படி ஜோ!!! நீ என்ன படிக்காத மேதையா??? சாதாரண மேத்ஸே என் கிட்ட அடி உதை வாங்கும்! நீ என்னடான்னா கிளாஸ் அட்டேண்ட் பண்ணாமலேயே ஃபர்தர் மேத்ஸ் சொல்லித் தர! கிரேட் ஜோ நீ” என்றான்.

“கிளாஸ் அட்டேண்ட் பண்ணலன்னு யார் சொன்னா?”

“என்ன சரா சொல்ற?”

“இப்போலாம் நேருக்கு நேர் படிக்கறது போல ஹைபிரிட்(hybrid) கிளாசும் இருக்காமே! அன்னைக்கு கிளாஸ்கு வர இஷ்டப்படாதவங்க ஆன்லைன்ல லாகின் பண்ணி லெக்சர் பார்க்கலாமாம்! அதெல்லாம் ரெக்கார்ட் வேற பண்ணி இருக்காமே, எப்ப வேணா ஸ்டூடெண்ட்ஸ் போய் ரிஃபர் பண்ணற மாதிரி! டியூசன் ஆரம்பத்துல லேப்டாப்ல லாகின் பண்ணி அந்த ரெக்கார்டட் லெஸ்சன போட்டுக் காட்டுவாடா! நான் அதை கிரகிச்சுட்டு, இவளுக்கு சொல்லிக் குடுக்கனும்!”

“வாவ்! செம்ம சரா! ஹைபிரிட் கிளாஸ் இருக்குன்னு எனக்கும் தெரியும்! ஆனா இத இப்படிலாம் கூட சாதகமா பயன்படுத்திக்க முடியும்னு இப்போத்தான்டா புரியுது! இந்த கேடி அவ பாடத்த உன்னையும் படிக்க வச்சு, சொல்லியும் குடுக்க வைக்கறா பாரேன்! எங்கயோ போய்ட்டாடா!”

அதற்குள் இளாவை சூப்பர்வைசர் அழைத்திருக்க, அவன் வேறு வேலைப் பார்க்கப் போய் விட்டான். இவனோ முழுக்கை சட்டை மறைத்திருத்த மணிக்கட்டை லேசாய் நீவி விட்டுக் கொண்டே பெல் பட்டன் அழுத்தி இருந்த மேசைக்காரர்களிடம் போய் நின்றான். அவர்கள் ஆர்டர் செய்திருந்த உணவு வகைகளைக் குறித்துக் கொண்டவன், சீட்டை கிச்சனுக்கு அனுப்பி வைத்தான்.

இவர்கள் காபிதியாமில் பார்கோட்(barcode) வைத்து ஆர்டர் செய்யும் சிஸ்டம் வந்து விட்டது! இவர்கள் கொடுக்கும் பார்கோட்டை கஸ்டமர்கள் தங்களது போனில் ஸ்கேன் செய்து அதில் வரும் ஈ-மெனுவிலேயே ஆர்டர் செய்யலாம். அது நேரடியாக கிச்சனுக்குள் இருக்கும் சிஸ்டத்தில் போய் சேர்ந்து விடும்! அங்கிருப்பவர்களும் அதை பார்த்து தேவையானதை தயாரிப்பார்கள். ஆனாலும் இன்னும் பலர் அந்த அளவுக்கு தொழில் நுட்ப வளர்ச்சியில் ஒன்றி போகாமல் இருக்க, மேனுவலாகவும் இவர்கள் மெனு கார்ட் கொடுத்து ஆர்டர் எடுப்பார்கள்.

அன்றைய தினம் என்னவோ அப்படி ஒரு களைப்பாக இருந்தது சரவணப்பாண்டியனுக்கு! கிச்சனுக்கு போய் ஒரு காபியோடு சேர்த்து உடல் வலிக்கான பாரசிட்டமோல் மாத்திரையும் போட்டுக் கொண்டவன், மிக சிரமப்பட்டே வேலையைப் பார்த்தான்.

எப்பொழுதும் போல காலேஜ் முடித்து நான்கு மணிக்கு வேலைக்கு வந்தாள் ஷாமினி. அவள் கேட்காமலேயே வைட் காபி கொண்டு போய் அவள் அமர்ந்திருந்த மேசையில் வைத்து விட்டு வந்தான் இவன்.

“தேங்க்ஸ் பாண்டியா!” என்றவள் அதை அருந்தி விட்டு, சுறுசுறுப்பாக வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.

சற்று நேரம் கழித்து அவள் அருகே போனவன்,

“மேடம்” என்றான்.

“வாட்?”

“இன்னிக்கு டியூசன் கென்சல் பண்ணிக்கலாமா?” எனத் தயங்கியபடியே கேட்டான்.

அவனை முறைத்துப் பார்த்தவள்,

“என்ன பாண்டியா!!! கொஞ்சம் நல்லா பேசனா, உடனே என் தலை மேல ஏறி டான்ஸ் ஆடுவியா! தொலைச்சிடுவேன் பார்த்துக்கோ!!! இன்னிக்குன்னு அவ்ளோ பாடம் இருக்கு! என்ன வெளையாடறியா?” எனத் திட்டி விட்டாள்.

“ஓகே! ஒகே! பிரச்சனையில்ல” என்றவன், கிச்சனுக்குப் போய் விட்டான்.

“ஏன்டா ஜோ, குட்டிப் போட்ட பூனை மாதிரி ரெஸ்ட்லெஸாவே இருக்க?” என இளாவும் கவனித்து விட்டுக் கேட்டான்.

“ஒன்னும் இல்லடா! ஐ அம் ஒகே! கொஞ்சம் டயர்ட்! அவ்ளோதான்”

சரவணனின் முகத்தை ஆழ்ந்து பார்த்தவன்,

“என்னமோ சரியில்ல! ஆனா என் கிட்ட சொல்ல மாட்டற! விடு! விடு” என முறுக்கிக் கொண்டான்.

நண்பனின் முகத் திருப்பலில் புன்னகை வந்தது இவனுக்கு.

அன்று முழுக்க வேலை நடுவே, சரவணனை முறைத்துக் கொண்டே திரிந்தாள் ஷாமினி.

அவர்களின் வேலை நேரம் முடிந்திருக்க, ஸ்டாஃப் எல்லோரும் கிளம்பியதும் முன் ஷட்டரை மூடி விட்டு வந்தான் சரவணப்பாண்டியன்.

மோப் போட இவன் ஆயத்தம் செய்ய, ஷாமினி அவனிடம் இருந்து மோப்பை பிடிங்கிக் கொண்டாள்.

“டேபிள்ல காபி வச்சிருக்கேன்! குடி! இன்னிக்கு நான் மோப் போடறேன்”

“இல்ல மேடம்! நான் செஞ்சிடறேன்” என்றான் இவன்.

“இங்க யாரு பாஸ்?”

“நீங்கதான்”

“அப்போ மூடிட்டு, நான் சொன்னத செய்” எனக் கத்த, இவன் வேகமாய் போய் நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

எப்பொழுதும் இவன் செய்யும் இரவு வேலைகளை முடித்தவள், கை கழுவிக் கொண்டு இவன் அருகே வந்து அமர்ந்தாள்.

“நீ குளிக்க போகலியா?”

“அப்புறம் குளிச்சிக்கறேன் மேடம்”

அவள் பாடங்களை படித்துக் கொண்டிருக்க, குளித்து விட்டு வந்துதான் டியூசன் எடுக்க ஆரம்பிப்பான் இவன். இன்று அவனது நடவடிக்கையே ஒரு மாதிரி இருக்க, அவனை ஆழ்ந்து பார்த்தாள் பெண். அவளது பார்வையைத் தவிர்க்க, கீழே குனிந்து கொண்டான் சரவணன். இடது கை தன்னிச்சையாய், வலது கை மணிக் கட்டை வருடிக் கொண்டது.

சட்டென அவனை நெருங்கி, வலது கை சட்டை ஸ்லீஃபை மேலேற்றிப் பார்த்தவள் திகைத்துப் போனாள்.

“என்னடா இது இப்படி கொப்பளிச்சுப் போயிருக்கு?”

“ஒன்னும் இல்ல மேடம்” என்றவன் மீண்டும் சட்டைக் கையை இழுத்து விட,

“அப்படியே அறைஞ்சுடுவேன் பாண்டியா! அறிவில்ல உனக்கு! கை இப்படி இருக்கு! அதை மறைக்க லாங் ஸ்லீஃப் சட்டைப் போட்டு மூடி வச்சிருக்க! காயத்துல துணி உரசி, உரசி இன்னும் செவந்து தோல் வலண்டு கிடக்கு! காயம் பட்டிருக்குன்னு சொல்றதுக்கு என்ன? வாய்ல என்ன கொழுக்கட்டையா வச்சிருக்க” எனப் படபடவெனத் திட்டியவள்,

“போய் வர்க் பெர்மிட் எடுத்துட்டு வா! வெளிய போகலாம்” என முடித்தாள்.

“எங்க மேடம்?”

“ஹான்ன்ன்!! கோயிலுக்கு விளக்கு வைக்க! போடான்றேன்! கேள்வி கேட்டுட்டு இருக்க” என அவள் பொரிய, இவன் ஸ்டோர் ரூமில் வைத்திருந்த பேக்கில் இருந்து வர்க் பெர்மிட் எடுத்துக் கொண்டு வந்து அவள் முன்னே நின்றான்.

“வா” என்றவள் நடக்க, இவனும் அவள் காலடி பின்பற்றினான்.

கடையை லாக் செய்து அலாரத்தைப் போட்டு விட்டவள், கடையின் முன் புறம் நடந்து வந்து தனது காரை ஸ்டார்ட் செய்தாள்.

ஏறாமல் நின்று கொண்டிருந்தவனைப் பார்த்து,

“ஓய் பாண்டியா! வெத்தலைப் பாக்கு வச்சு அழைக்கனுமா? உள்ளே ஏறு” எனச் சத்தம் போட்டாள்.

கை வலியிலும், அந்த காரில் ஏறப் போவதில் அப்படி ஓர் ஆனந்தம் அவனுக்கு. அவளது பக்கத்து சீட்டில் அமர்ந்தவன், அவளது காலணிகளை ஒதுக்கி வைத்து விட்டு, நன்றாகக் கால் நீட்டிக் கொண்டான்.

கண்கள் அந்தக் காரை ஆசையாகப் பார்த்தன. கை கொண்டு தன் முன்னால் இருந்த டேஷ் போர்ட்டை வருடினான் இவன்.

“தடவறத விட்டுட்டு, கைல எப்படி இப்படி ஆச்சுன்னு சொல்லு பாண்டியா!” எனக் கேட்டபடியே காரை ஓட்ட ஆரம்பித்தாள் ஷாமினி.

“இன்னிக்கு காலைல, நாசி லெமாக் சோறு ஆக்கிட்டு, வெந்திடுச்சான்னு பார்க்க குக்கர் மூடிய திறந்தப்ப அந்த ஆவி கைல அடிச்சிடுச்சு!” என மெல்லியக் குரலில் சொன்னான் சரவணப்பாண்டியன்.

“இத்தனை நாளா இந்த வேலைய செய்யறதானே! இன்னிக்கு ஏன் இந்த கவனக்குறைவு?” எனச் சரியாகக் கேட்டவளை, மெல்லத் திரும்பிப் பார்த்தான் இவன்.

“இன்னிக்கு…ஹ்ம்ம்.. எங்கம்மா அப்பாவோட நினைவு நாள்! நேத்துல இருந்து அவங்க நினைப்பாவே இருந்துச்சு! அப்பாவோட சிரிச்ச முகமும், அம்மாவோட கொஞ்சலும்னு மனசெல்லாம் பல ஞாபகங்கள்! நாங்க சேர்ந்து சிரிச்சு மகிழ்ந்த தருணங்கள் ஒவ்வொன்னும் படமா ஓடி மனச குத்திக் கிழிக்குது! தாங்கிக்க முடியல கிளி! அதான் கொஞ்சம் கேர்லஸா இருந்துட்டேன்”

அவனது சோகம் ததும்பியக் குரல் இவளை என்னவோ செய்தது! அவனே அறியாமல் சொல்லி இருந்த கிளி எனும் சொல் இவளுக்கு கேட்டிருந்தாலும், அதை வைத்து இந்த நேரத்தில் சண்டை இட மனம் வரவில்லை.

இடது கை நீட்டி, அவனது வலது கையைப் பற்றிக் கொண்டு,

“மறைஞ்சு போறது உடல் மட்டும்தான்! இறந்தவங்க ஆன்மா எப்பவுமே நம்ம சுத்திதான் இருக்கும்! பல தடவை அத நாம ஃபீல் பண்ணலாம் பாண்டியா! தலை கலைச்சி விடும் காத்துல அப்பா இருப்பாரு! காலை குளிருக்கு இதமா சூடு தர சூரிய ஒளில அம்மா இருப்பாங்க! பாதம் தீண்டி போற கடலலைல தாத்தா இருப்பாங்க! நாசி தீண்டி போற சுகமான பூ வாசத்துல பாட்டி இருப்பாங்க! நமக்காக நம்ம சுற்றி, இயற்கைன்ற பேருல அவங்களாம் வாழ்ந்துட்டுத்தான் இருக்காங்க பாண்டியா! சோ ஃபீல் பண்ணாதே! ஓகேவா?” எனக் கேட்டவள் அவனது கரத்தை லேசாய் அழுத்தி விடுவித்தாள்.

இந்த அடங்காபிடாரிக்குள் இப்படி ஓர் அழகிய பரிமாணமா என ஆச்சரியமாகப் பார்த்தான் இவன்.

“என்ன?”

“ஒன்னும் இல்ல”

அதற்குள் கிளினிக் இருக்கும் இடம் வந்திருந்தது.

“இறங்கு” எனச் சொன்னவள், காரை பூட்டி விட்டு நடந்தாள்.

இவனும் கூடவே நடந்தான். இவனது வர்க் பர்மிட் காட்டி ரெஜிஸ்டர் செய்தவள், இவர்கள் முறைக்குக் காத்திருப்பதற்காக நாற்காலியில் போய் அமர்ந்தாள். இவனும் இரண்டு சீட் தள்ளி அமர்ந்தான்.
 
Last edited:

Author: VanishaAdmin
Article Title: Jagam Nee--EPI 7
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
930
-1,942
93
“சட்டை கையை மேல ஏத்தி விடு! காயத்துல படுது பாரு! சொரணைக் கெட்ட எருமை” எனத் திட்டியவள், தனது போனை எடுத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

அந்த நேரம் போன் அழைப்பு வர,

“ஹ்ம்ம் சொல்லுங்க” எனப் பேசினாள்.

“ஆமா! கிளினிக்குக்குத்தான் வந்திருக்கேன்! இந்த பாண்டியா இருக்கானே, அவன் கையில ஆவி அடிச்சு வெந்து போச்சு! அந்த கையோட சாப்பாடுலாம் ஹேண்டில் பண்ணறது ஹைஜீனிக் இல்ல! அதான் கூட்டி வந்தேன்! அவனுக்கு ரெண்டு நாள் லீவு குடுக்கப் போறேன்!”

“குடுத்துதான் ஆகனும்! இவன் கையைப் பார்த்தா கஸ்டமர் சாப்பிட்டதெல்லாம் வாந்தியா எடுத்துடுவாங்க”

“சரி! ஓகே! பாய்” என அழைப்பைத் துண்டித்தவள் இவனைப் பார்த்து,

“உன் முதலாளிதான் போனுல!! லீவ்லாம் எதுக்குன்னு குதிக்கறாரு” என்றாள்.

“வேணா மேடம்! என்னால வேலை செய்ய முடியும்!”

அவனைத் திரும்பிப் பார்த்து நன்கு முறைத்தவள்,

“நான் சொல்லறத கேட்டு நல்லப் புள்ளையா நீ நடந்தா, வாழ்க்கை ஸ்மூத்தா போகும் பாண்டியா! அத விட்டுட்டு இல்ல நொல்லன்னு ஆரம்பிச்ச, அரச குடும்பம்னு கூடப் பார்க்க மாட்டேன்! கிழிச்சு தோரணம் கட்டிருவேன்” என மிரட்டியவள், போனை நோண்ட ஆரம்பித்து விட்டாள்.

‘அவங்கப்பா பெரிய ரௌடினா, இது சின்ன ரௌடி! ஷப்பா! நமக்கு எதுக்கு வம்பு! வாய மூடிட்டே இருந்துப்போம்’ என மனதிலேயே முனகிக் கொண்டான் இவன்.

இவர்கள் முறையும் வந்தது. உள்ளே இவன் போக, அவனுடனே இவளும் போனாள். டாக்டர் கையைப் பரிசோதித்து, காயத்தைக் கழுவி, மருந்து போட்டு, ஒரு ஊசியும் போட்டு விட்டார். கையில் தடவ களிம்பும், அதோடு இன்பெஃசன் ஆகாமல் இருக்க சாப்பிட வேண்டிய மருந்தும் கொடுத்தார்.

“காய்ச்சல் வர சான்ஸ் இருக்கு! காய்ச்சல் மருந்தும் தரேன்! நாலு மணி நேரத்துக்கு ஒரு மாத்திரை போடுங்க!” எனச் சொன்னார் டாக்டர்.

இவனுக்கு ஏற்கனவே உடம்பு லேசாக தள்ளாடுவது போலத்தான் இருந்தது. வெளியே ரிஷப்சனில் பணத்தை இவன் செலுத்தப் போக, அவள் ஒரே ஒரு பார்வைத்தான் பார்த்தாள். சட்டென நகர்ந்து இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான் இவன். அவள் தனது கார்டில் பணம் செலுத்தியதும், இருவரும் காரில் ஏறிக் கொண்டார்கள்.

காபிதியாமுக்குள் நுழைந்ததும்,

“பாண்டியா! போய் சின்ன பேக்ல ரெண்டு செட் துணி எடுத்துக்க! அதோட போன், சார்ஜர் எல்லாம் எடுத்துக்க!” என்றாள்.

“எதுக்கு மேடம்?”

“ஹான்ன்ன்! என் மாமனாரு விக்ரம் ஐஸ்வர்யாவ ராவணன் படத்துல கடத்தனது போல, உன்னைக் கடத்திட்டுப் போய் சிறை வைக்கப் போறேன்! போ, போ! கேள்வி கேக்காம இருக்கப் பழகு”

பெருமூச்சுடன் போய் அவள் சொன்னபடி பேக்கில் துணிகளை அடுக்கி எடுத்து வந்தான். இவளும் தனது காலேஜ் பேக்கை எடுத்துக் கொண்டு ரெடியாக நின்றிருந்தாள்.

மீண்டும் ஒரு கார் பயணம்! ஒரு ஹோட்டலின் பக்கம் காரை நிறுத்தியவள்,

“வா” என அழைத்து விட்டுப் போனாள்.

அவளைப் பின்பற்றிப் போனான் இவன். இவனுக்கு இரண்டு நாள் தங்குவதற்காக ஓர் அறை எடுத்தாள் ஷாமினி.

“மேடம்! ஏன் மேடம்! இதெல்லாம் வேணாம் மேடம்” எனத் தயங்கினான் இவன்.

“கடைக்குள்ள எங்க ரெஸ்ட் எடுப்ப நீ? ஸ்டோர் ரூமுக்குள்ளயா? பக்கத்துல நிக்கற எனக்கே உன் மேல காய்ச்சல் அனலா அடிக்கறது தெரியுது! ஒழுங்கா மருந்து போட்டுட்டு, தூங்கி ரெஸ்ட் எடு!”

“என் வேலைலாம்…” என இவன் தயங்க,

“காபிதியாம நீதான் தூக்கி சுமக்கறியா? நீ வரதுக்கு முன்ன எப்படி வேலை நடந்துச்சோ அப்படியே இப்பவும் நடக்கும்! உழைச்சு ஓடா தேஞ்சு நீ செத்துட்டா கூட, நாளைக்கு இன்னொருத்தன வச்சி ரிப்லேஸ் பண்ணிட்டு கடை நடக்கத்தான் செய்யும்! நான் சொல்ல வரது புரியுதா பாண்டியா? உடம்புதான் முக்கியம்! இந்தா! கீகார்ட்! ரூம் நம்பர் 203! பாய்” என்றவள், கிளம்பி வாசல் வரை போய் விட்டு மீண்டும் வந்தாள்.

“இரு! இந்த ரிஷப்சன்லயே கொஞ்ச நேரம் உக்காரு! நான் வரேன்” என வெளியேறினாள்.

இவன் அப்படியே சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டான். தலை பாரமாக இருந்தது. இருபது நிமிடத்தில் வந்து சேர்த்தாள் ஷாமினி. அவள் கையில் ஒரு பை இருந்தது.

“இந்தா! எடுத்துட்டு போ” என்றவளைப் பார்த்து,

“மேடம்! கணக்குப் பாடம் இருக்குன்னு சொன்னீங்களே” என இவன் சொல்ல,

“அடேய்! கடமை கண்ணாயிரம்! உன் மண்டைய நான் பொளக்கறதுக்குள்ள ஓடிப் போயிடு” எனக் குரலை உயர்த்தினாள் பெண்.

“சரி! போறேன்”

அவன் லிப்ட் ஏறும் வரை நின்றிருந்து விட்டுக் கிளம்பி விட்டாள் ஷாமினி.

அறைக்குள் வந்தவன் அவள் கொடுத்த பையைத் திறந்து பார்க்க, அதனுள்ளே கப் நூடுல்ஸ், ப்ரேட் வகைகள், சாக்லேட், சிப்ஸ், டின் பானங்கள் என பல சாப்பாட்டு ஐட்டங்கள் இருந்தன.

மெலிதாகப் புன்னகைத்தவன் ஏசியை போட்டு விட்டு, பாத்ரூம் போய் விட்டு வந்தான். கட்டிலும் மெத்தையும் கை நீட்டி அழைக்க அப்படியே அதில் சரிந்து படுத்துக் கொண்டான் சரவணப்பாண்டியன்.

‘அடேயப்பா! எத்தனை வருஷத்துக்குப் பிறகான சுகம்டா இது! அப்படியே மெத்தை மெத்துன்னு இருக்கே! சொர்க்கம்டா! சொர்க்கத்த காட்டுன கிளிக்கு கோடி தேங்க்ஸ்’ என நினைத்துக் கொண்டே உறங்கிப் போனான் இவன்.
 

CRVS2797

Active member
Aug 4, 2024
123
-47
43
இந்த வசதி, சந்தோஷம், அக்கறை எல்லாம் பெத்தவங்க இருக்கிறவரைக்கும் தான் போல.

😌😌😌
CRVS (or) CRVS 2797
 
  • Love
Reactions: VanishaAdmin