அத்தியாயம் 12
பொட்டு வைத்துப் பூ முடிக்கும் நிலா
தேரில் வரும் உலா
காதலுக்குக் கார்த்திகை மாதம் விழா!
அது ஒரு சனிக்கிழமை மாலைப் பொழுது. வேலைத் தலைக்கு மேல் கிடந்தாலும் ஐந்து மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்து விட்டிருந்தான் தினகரன்.
“என்னடா மகனே, அடிக்கடி வீட்டுப் பக்கம் காத்து வீசுது! நீ இல்லைனா வேலைப் பார்க்கறவங்க கடையைத் தூக்கி கக்கத்துல வச்சிக்குவாங்கன்ற மாதிரி ஓவர் பில்டப் குடுப்ப!” என மகனைப் பார்த்து நக்கலாகக் கேட்டார் அதியமான்.
“ப்பா! வயசான காலத்துல ஆக்டிவா இருக்கனுமாம்! இல்லைனா மூளையோட செல்கள் செல்லரிச்சுப் போய் டிமேன்ஷியா வந்திடுமாம்! அப்படி எதாச்சும் உங்களுக்கு நடந்தா என்னால தாங்கிக்க முடியாதுப்பா! நான் கடைல இருந்தாத்தான் நீங்க எட்டிப் பார்க்க மாட்டிக்கிறீங்களே! அந்தக் காரணத்துக்காகத்தான்பா மனசைக் கல்லாக்கிக்கிட்டு இப்படி நான் வீட்டுக்கு வரேன். நான் இல்லாதப்ப நீங்க அங்க போய் நாலு மக்கா மனுஷங்கள பாருங்கப்பா! ஃப்ரெஷா ஃபீல் பண்ணுவீங்க!” என்றான் இவன்.
“ஓஹோ! எனக்காகத்தான் சாரு, மோரு, நம்ம தினகரு வீட்டுக்கு வராரு! சரிப்பா சரி! நீ சொன்னா சரியாத்தான் இருக்கும். நான் கடைக்குக் கிளம்பறேன்” எனக் கிண்டலாகச் சொல்லியவர், மகிழ்ச்சியுடன் கிளம்பிப் போய் விட்டார்.
தினகரன் வீட்டுக்கு வந்ததை பார்த்தத் தாமரை, வேலைப் பார்க்கும் அக்காவிடம் காபியையும் ஸ்நாக்சையும் கொடுத்தனுப்பினாள். அன்றைய மழை நாளில் அவன் கண்ணீரைப் பார்த்ததில் இருந்து ஒதுங்கித்தான் போகிறாள் பெண். சின்னவள் நிவேதாவைத் தன்னுள் தேடுவது போல, மது மயக்கத்தில் நிவேதாவை மனதில் வைத்துத் தடுமாறி இவளை முத்தமிட முனைந்திருப்பான். கடைசி நேரத்தில் இவள் அவளில்லை என உணர்ந்த பின்புதான் தள்ளி விடச் சொல்லி இருப்பான் என எண்ணிக் கொண்டவள், அவன் முகத்தைப் பார்க்கவே சங்கடப்பட்டாள்.
கணவன் தொடுகையில் உடல் சிலிர்க்கத்தான் செய்தது இவளுக்கு. மழையால் வந்த சிலிர்ப்பு என அச்சம்பவத்தை மனதில் இருந்து ஒதுக்கி வைத்திருந்தாள். பின்னே இன்னொருத்தியை, அவள் ஒன்று விட்ட அக்காவாகவே இருந்தாலும், அவளை நினைத்துத் தன்னைத் தடவிப் பார்த்தான் என்பதை எந்தப் பெண்தான் ஏற்றுக் கொள்வாள்! யார் என்ன நெருக்கினாலும், இனி அவனாகவே தன்னை மனைவி என மனதில் இருத்திக் கொண்டு நெருங்கினால் மட்டுமே குடும்ப வாழ்க்கையைத் தொடங்குவது என முடிவெடுத்தவள், தினகரனைத் தவிர்க்க ஆரம்பித்தாள். குடி போதையில் அவன் உளறியது எல்லாம் மனதில் பல கேள்விகளைத் தோற்றுவித்தாலும், அவனிடம் பேசி எதையும் கேட்டுக் கொள்ளப் பிடிக்காததால் அமைதியாகவே இருந்து விட்டாள் தாமரை. எதாக இருந்தாலும் அது அவன் வாய் வழியாகவே வரட்டும் எனக் காத்திருந்தாள். கோபமாய், எரிச்சலாய், கேலியாய், கிண்டலாய் எனப் பல அவதாரத்தில் அவன் முகத்தைப் பார்த்திருந்தாலும், கணவனது அழுகை முகம் இவளை அசைத்துப் பார்த்து விட்டது.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, இனி டார்ச்சர் செய்ய மாட்டேன் எனச் சொன்னதை நிஜமாக்கும் விதமாக அவனுக்கு மேசேஜ் போடுவதை நிறுத்தினாள். தினகரன் வீடு வரும் வரை விழித்திருந்தாலும், கீழே இறங்கி வருவதைத் தவிர்த்தாள். மகளுக்கானத் தேவைக்கு மட்டுமே அவனிடம் அளந்து பேசினாள். மொத்தத்தில் அவள் உலகம் பூக்குட்டி மட்டுமே என்பது போல இருந்து கொண்டாள்.
“மனுஷன் எத்தனை மணிக்கு வரான், என்ன சாப்பிடறான், எத்தனை மணிக்குப் போறான்னுலாம் கவனிக்க இந்த வீட்டுல யாருக்கு அக்கறை இருக்கு! கல்யாணம்னா கமிட்மேன்ட்! அதெல்லாம் இங்க யாருக்குப் புரியுது” என அவன் சத்தமாய் முணுமுணுத்தாலும் மனதில் திட்டித் தீர்த்தாளே தவிர பதிலடி கொடுக்காமல் அமைதியாகவே கடந்து போனாள்.
தன்னருகே வந்து சோபாவில் அமர்ந்த பூந்தென்றலைப் பார்த்துப் புன்னகைத்தான் தினகரன். அவள் பின்னாலேயே வந்த தாமரை, பூஸ்ட் இருந்த கப்பையும் பிஸ்கட் தட்டையும் மேசையில் வைத்து விட்டு,
“சாப்பிட்டுட்டு வாம்மா! சித்தி மொட்டை மாடில இருப்பேன்! நாம விளையாடலாம்” எனச் சொல்லி சென்றாள்.
முன்பெல்லாம் இது போல தினகரன் வீட்டுக்கு வரும் சில சமயங்களில், பூந்தென்றலுடன் தாமரையும் அவளுடைய டீ கப்புடன் வந்து அமர்ந்து கொள்ளுவாள். இவன் சிடுசிடுப்பாய் முகத்தை வைத்திருந்தாலும், ஒன்றிரண்டு வார்த்தைகள் சாதாரணமாய் பேசுவாள் தாமரை. இன்றோ மகளை மட்டும் இவனுக்குத் துணையாய் விட்டு விட்டு அவள் மாடி ஏறி விட, கோபமாய் வந்தது இவனுக்கு.
‘கொஞ்ச நேரம் உக்காந்து பேசனாத்தான் என்னவாம்! வாய்ல இருக்கற முத்து வாய்க்கால்ல சிந்திருமா! ஓவரா பண்ணறா’ என மனதில் பொருமியவனுக்கு வாய் எனும் வார்த்தையில் அன்று வாயும் வாயும் ஒட்டிக் கொண்ட நினைவுகள் கிளர்ந்து எழுந்தன.
‘அறிவுக் கெட்டவனே! கிட்ட வராத, டைம் குடு, மயக்காதே என்னைன்னு வித விதமா சொல்லி அவள தள்ளி வச்சிட்டு, இப்படி மானங் கெட்ட வேலைப் பார்த்துட்டியேடா! தாமரை உன்னைத் தாறுமாறா நெனைச்சிருப்பாடா! தண்ணியடிச்சாலும் தம் கட்டி ஸ்டெடியா நின்னிருக்கனும் நீ! அல்கஹோல ‘நான் ஆளான தாமரை’(ஒரு மாதிரியான கில்மா பாட்டு) மோடுக்குப் போகறதுக்கு லைசென்ஸா பயன்படுத்தன உன்னைலாம் வெளக்கமாத்தால அடிக்கனும்! ச்சைக்’ எனத் தன்னைத்தானே திட்டிக் கொண்டான்.
அன்று நடந்ததெல்லாம் ஓரளவுக்கு ஞாபகத்தில் இருந்தது தினகரனுக்கு. நிதானம் தப்பி இருந்த நேரத்திலும், அத்து மீறி அவளை ஆட் கொண்டிருக்கவில்லை எனும் எண்ணம் மட்டுமே கொஞ்சம் ஆசுவாசம் கொடுத்தது இவனுக்கு.
என்னதான் வேண்டும் தனக்கு எனத் தினகரனுக்கே கேள்விக் குறியாய் இருந்தது. தாமரை நெருங்கி வந்தால், உள்ளம் குமைகிறது. அவள் தள்ளிப் போனால் மனம் வலிக்கிறது. அவளை அருகில் விடவும் முடியவில்லை. தள்ளி விலக்கவும் முடியவில்லை. கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்கும் இடையே நின்று உள்ளம் ஊசலாடியது.
“அப்பா!”
“என்னம்மா?”
“காபி குடிங்க! ஆறுது”
மகளைத் தூக்கிக் கன்னத்தில் முத்தமிட்டவன்,
“தென்றல் குட்டி! அப்பா நல்லவரா கெட்டவரா?” எனக் கேட்டான்.
“மை அப்பா ஆல்வேய்ஸ் குட் அப்பா” எனச் சிரித்த முகமாய் பூக்குட்டி சொல்ல, இவனுக்குமே புன்னகைப் பூத்தது.
“அப்பா லவ் யூடாம்மா”
“தென்றல் பாப்பா லவ் அப்பா டூ” எனச் சொன்னவள்,
“சீக்கிரம் குடிங்க! நீங்க குடிச்சு முடிக்கற வரைக்கும் உங்க கூடத்தான் இருக்கனும்னு சித்தி சொல்லிருக்காங்க!” என வற்புறுத்தினாள் தகப்பனை.
அவன் காபி குடித்து முடித்தால்தானே இவள் மேலே போய் தாமரையுடன் விளையாட முடியும். மகள் கன்னத்தை வருடி விட்டவன், காபியை எடுத்து அருந்தினான். அவன் பருகி முடித்த நொடி சிட்டாய் பறந்திருந்தாள் பூக்குட்டி.
மகள் போனதும், அந்த வரவேற்பறையிலேயே குட்டிப் போட்டப் பூனைப் போல சற்று நேரம் நடந்தான் தினகரன். கண்டதையும் நினைத்த மனம் மீண்டும் தாமரை மேல் கோபத்தை இழுத்துப் பிடித்தது.
“இவள யாரு என்னை மாமா கோமான்னு கூப்பிட சொன்னா? இப்போ ரோபோட் மாதிரி என் கிட்ட பேசறப்ப, அந்த மாமாவ என் காது தேடித் தொலையுது”
“இவள யாரு நைட்டு நான் வர வரைக்கும் முழிச்சிருக்க சொன்னா? இப்போ இவ உருவத்தக் காணாம என் கண்ணு தேடித் தொலையுது”
“இவள யாரு சாப்டீங்களா மாமா, டீ குடிச்சீங்களா மாமான்னு மேசேஜா போட்டுத் தள்ள சொன்னா? இப்போ மேசேஜ் வந்துச்சா இல்லையான்னு என் விரலு போனைத் தட்டிப் பார்த்துத் தொலையுது”
நடந்து ஓய்ந்து சோபாவில் சரிந்து அமர்ந்தவன், தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான். ஏதோ பாடல் ஓடிக் கொண்டிருந்தது. இவன் தாமரையைத் உள்ளுக்குள் திட்டிக் கொண்டிருக்க, தொலைக்காட்சி பெட்டியில் இருந்தும் தாமரை எனப் பாட்டு வந்தது.
“தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி” என அது பாட,
“ஹான்ன்ன்! அதுவா வரல! நான் கட்டிக் கூட்டிட்டு வந்திருக்கேன்” எனப் பதில் சொன்னவன் தொலைக்காட்சியை ஆஃப் செய்தான்.
மகளிடம் பாய் சொல்லி விட்டுக் கடைக்குக் கிளம்பலாம் என மாடியேறினான் தினகரன். மூளை அப்படி சால்ஜாப்பு சொல்லிக் கொண்டாலும், தாமரையை ஒரு முறை பார்த்து விடத்தான் இந்த நடை என்பது அவன் மானங்கெட்ட மனசாட்சிக்கு மட்டுமே தெரியும்.
மொட்டை மாடிக்கு வந்தவனின் காதை இரு பெண்களின் சிரிப்பொலி சிம்பொனியாய் நிறைத்தது. கதவோரமாய் சாய்ந்து நின்று மகளையும் மனைவியையும் பார்த்திருந்தான் தினகரன். வீட்டில் இருக்கும் போது அணியும் தொள தொள குர்தி அணிந்திருந்தாள் தாமரை. சின்னவள் ஓட, தாமரை அவளைத் துரத்திக் கொண்டிருந்தாள். இருவரின் முகமும் வியர்த்து சிவந்து கிடந்தது. அவர்களுடன் போய் இணைந்து கொள்ளச் சொல்லி உடலும், உள்ளமும் இவனை உந்தி தள்ளியது. ஓரடி அவர்களை நோக்கி எடுத்து வைத்தவன், பின் மனம் மாறி கீழே இறங்கி விட்டான்.
நேராய் பூஜை அறைக்குப் போன தினகரன், அங்கு சுவரில் வெறும் நினைவுகளாய் மட்டும் வீற்றிருக்கும் நிவேதாவின் போட்டோ அருகே போய் நின்றான். அவளது பிம்பத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்குக் கண்கள் லேசாய் கலங்கின.
அமைதியாய் இருந்த அவ்விடத்தில் திடீரெனத் தடதடவெனக் காலடி சத்தம் கேட்க, பூஜை அறை வாயிலை நோக்கினான் தினகரன்.
“அப்பா” எனக் கத்தியபடி ஓடி வந்தாள் பூந்தென்றல்.
அவள் குரலில் தெரிந்த பதட்டத்தில், வேகமாய் வெளியே ஓடினான் தினகரன்.
கண்கள் கலங்க அவன் காலைக் கட்டிக் கொண்டவள்,
“சித்தி! சித்தி!” எனத் திக்கித் திணறினாள்.
நெஞ்சம் படபடவென முரசு கொட்ட மகளைத் தூக்கிக் கொண்டு மொட்டை மாடிக்கு ஓடினான் தினகரன்.
அழுதபடியே,
“சித்தி! டொப்புன்னு! விழுந்துட்டாங்க! எழுந்துக்கவே இல்லை” என வார்த்தைகளைப் பிட்டுப் பிட்டுப் பேசினாள் சின்னச் சிட்டு.
மொட்டை மாடியை அடைந்தவன் கண்டது அசையாமல் கீழே கிடந்த தாமரையைத்தான். ஓட்டமாய் அவளை நெருங்கியவன், மகளை கீழே இறக்கி விட்டு விட்டு,
“தாமரை! தாமரை” எனக் கத்தினான்.
அவள் கண்களைத் திறக்கவேயில்லை. அப்படியே அவளை அள்ளி மடியில் கிடத்திக் கொண்டவனுக்கு, நெஞ்சம் கலங்கியது. கன்னத்தைத் தட்டி, தலையை வருடி,
“தாமரை! கண்ணைத் திற” என இவன் பதற, லேசாய் சிப்பி இதழைத் திறந்து,
“வலிக்குது மாமா” எனத் தீனமாய் சொன்னாள் இவள்.
தலையில் புடைத்திருக்கிறதா என ஆராய்ந்து, கை, இடுப்பு, முதுகு எனத் தடவியபடியே வந்தான் தினகரன். காலைத் தொடும் போது,
“மாமா” என அலறினாள் தாமரை.
“ஒன்னும் இல்ல! ஒன்னும் இல்ல! இப்ப ஹாஸ்ப்பிட்டல் போயிடலாம்” என்றவன் அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டான்.
தாமரையின் அழுகையைப் பார்த்துப் பூக்குட்டியும் கத்திக் கதறி அழ ஆரம்பித்தாள்.
இவளால் சின்னவளும் அழுகிறாள் என உணர்ந்து, கண்ணீர் நிறைந்த கண்களை அழுந்த மூடி, தினகரனின் கழுத்தில் உதட்டை அழுத்தி வைத்து அழுகையை அடக்கப் போராடினாள் தாமரை.
“பூக்குட்டி அழாதீங்க! நீங்களும் அழுதா அப்பா யாரைப் பார்ப்பேன்! அழாம சமத்துப் புள்ளையா கீழ ஓடி, அப்பாவோட கார் சாவி, வாலட் எல்லாம் எடுத்து வச்சிக்கிட்டு வாசல் பக்கம் வெய்ட் பண்ணுங்க! ஓடுங்க” என மகளுக்கு வேலைக் கொடுத்தான் தினகரன்.
சின்னவள் கண்ணைத் துடைத்தபடி கீழே ஓட, தாமரையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன், அவளது நெற்றியில் அழுத்தமாய் இதழ் பதித்தான்.
“எல்லாம் சரியாகிடும்மா!” என்றவனின் குரல் தளுதளுத்திருந்தது.
அன்று அன்பாய் அவளை அணைத்துக் கொண்டவன் மறுநாளே,
“ஏன்டி! அறிவுன்னு ஒன்னு இருக்கா, இல்லை அதெதுக்குத் தெண்டமான்னு அடகு வச்சிட்டியா?” என வறுத்தெடுத்தான்.
ஏற்கனவே வலியில் இருந்தவள், அமைதிப் போராட்டத்தைக் கை விட்டு,
“ஏன் உங்களுக்கு அறிவு இல்லையா? என்னோடது கடனா வேணுமா? சாரி! என் அறிவா இருந்தாலும் சரி, அன்பா இருந்தாலும் சரி பாத்திரம் அறிஞ்சுத்தான் குடுப்பேன்! பாத்திரக் கடைக்காரனுக்குக் குடுக்க மாட்டேன்!” என ஒரே போடாய் போட்டு விட்டாள்.

Last edited:
Author: VanishaAdmin
Article Title: Pirithor Nesamithu--EPI 12
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.