அத்தியாயம் 9
பூஜைக்கேத்த பூவிது
நேத்துத்தானே பூத்தது
அட பூத்தது யாரத பார்த்தது!
செந்தாமரை பாடத்தை நடத்தி முடிக்கவும், பள்ளி முடிவதற்கான மணி அடிக்கவும் சரியாக இருந்தது. மாணவர்கள் அவசரமாகப் புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு ஓடாமல், இவள் முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள்.
புன்னகையுடன் அவர்களை ஏறிட்டவள்,
“இப்போ படிச்சுக் குடுத்த டாபிக்ல இருந்து திங்கள் கிழமைக் குட்டியா ஒரு டெஸ்ட் இருக்கு” என்றாள்.
“டெஸ்ட்டா? ஐயோ! வேணாம் டீச்சர்! ப்ளீஸ் டீச்சர்” எனப் பல குரல்கள் கலவையாய் ஒலிக்க, கை தூக்கிச் சத்தத்தைக் குறைக்குமாறு சைகை செய்தாள் தாமரை.
“மண்டே டெஸ்ட் முடிச்சதும், மீடியா ரூம் போகலாம்” என அவள் சொல்லி முடிக்க, பிள்ளைகளின் மத்தியில் சந்தோஷ ஆரவாரம்.
மீடியா அறையில் சரித்திரம், மொழி, கலாச்சாரம் சம்பந்தப்பட்ட ஆவணப் படங்களைத்தான் போட்டுக் காட்டுவார்கள். அதைப் பார்த்து விட்டு வந்து, கட்டுரையோ கதையோ எழுத சொல்லி பணிப்பார்கள். அப்படி இருந்தும் ஏசி அறையில் நண்பர்களுடன் அமர்ந்து பார்ப்பதில் ஒரே குஷி இந்தப் பிள்ளைகளுக்கு. இவள் போதிக்கும் மாணவர்கள் மத்தியில் ஸ்ட்ரேஸ் லெவல் கூடி இருப்பது போல தோன்றினால், மீடியா அறைக்கோ, பள்ளி நூலகத்துக்கோ அழைத்துப் போவாள் தாமரை. பாடத்தில் கண்டிப்பாய் இருந்தாலும், அவர்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் இந்தத் தாமரை டீச்சரை மிகவும் பிடித்தது மாணாக்கர்களுக்கு.
“பாய் டீச்சர்!” எனக் கத்திச் சொல்லியபடியே சிரிப்புடன் தன்னைக் கடந்து போகும் பிள்ளைகளை இன்முகத்துடன் வழி அனுப்பி வைத்தாள் இவள்.
அதன் பிறகு ஸ்டாஃப் ரூமுக்குப் போனவள், திருத்த வேண்டிய பேப்பர்களைத் திருத்துவதிலும், திங்களன்று படித்துக் கொடுக்கப் போகும் பாடங்களை ஒழுங்குப்படுத்துவதிலும் நேரத்தைச் செலவிட்டாள். பூந்தென்றல் படிக்கும் இந்தத் தனியார் பள்ளியில் இவள் வேலைக்குச் சேர்ந்து இன்றோடு இரண்டு வாரங்கள் ஓடி இருந்தன.
என்னவோ அவன் சம்பாதிப்பதை எல்லாம் சங்கூத வந்தவள் இவள் என்பது போல தினகர் பேசி வைத்ததை இன்னும் கூட ஜீரணிக்க முடியவில்லை பெண்ணால். இத்தனைக்கும் இவள் அக்கவுண்டில் கந்தன் அவ்வளவு பணம் போட்டு விட்டிருந்தார். இது வரை இவள் சம்பாதித்தப் பணம் கூட பேங்கில் ஃபிக்ஸ் டெபாசிட்டாக குட்டிப் போட்டுக் கொண்டிருந்தது. திருமணமாகி வந்ததில் இருந்து இது வரை அவனிடம் பணம் வேண்டும், பொருள் வேண்டும் எனப் போய் நின்றதில்லை தாமரை. அப்படிப்பட்டவளைப் பார்த்து அந்த வார்த்தைச் சொல்லி விட்டானே! அவர்கள் வீட்டில் ஓசியில் சாப்பிடுவதாக எண்ணமோ? மனைவி என வந்தவளுக்குச் சோறு கூட போட மாட்டானா? மனம் ஆறவேயில்லை பெண்ணுக்கு.
அந்த ஆத்திரத்தில்தான்,
“மொளகா அரைக்க நீங்க அம்மியும் இல்ல! இனி வீட்ல இருந்து உங்க காசுல திங்க நான் டம்மியும் இல்ல!” எனப் பொங்கி இருந்தாள்.
எவ்வளவு அடக்கியும் கண்ணோரம் கண்ணீர் கசிந்து விட்டது பெண்ணுக்கு.
அவள் முகத்தைப் பார்த்தவன் சற்று நேரம் எதுவும் பேசவில்லை.
“இக்கட சூடு தாமரை!! கவர்மெண்ட் என்ன சொல்லுது? தண்ணீரைச் சேமிப்போம்னு சொல்லுது! நீ என்னடான்னா சும்மா கண்ணுல இருந்து தண்ணிய கொட்டி வேஸ்ட் பண்ணிட்டு இருக்க”
“அது தண்ணீரு இல்ல கண்ணீரு” என மூக்கை உறிந்து கொண்டே சொன்னாள் இவள்.
“எல்லாம் ஒன்னுதான்! லேசா உப்புக் கரிக்குதுன்றதால கண்ணீர தண்ணீர் கேட்டகரில இருந்து எடுத்துட முடியாது”
அவன் அலும்பில் கண்ணீர் நின்று கடுப்பு வந்திருக்க,
“இப்ப நான் என்னத்தான் செய்யனும் தினகர் மாமா?” எனக் குரலை உயர்த்திக் கேட்டாள் செந்தாமரை.
“உன் செலவுக்கு நீயே சம்பாதிச்சுக்கோ”
“எனக்கு எந்தச் செலவும் இல்ல! அப்படி செலவுன்னு வந்தாலும் உங்க கிட்ட வந்து நிக்க மாட்டேன்”
தாடையைத் தேய்த்து யோசித்தவன்,
“நீ எதுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிட்டு இங்க வந்த?” எனக் கேட்டான்.
“பூக்குட்டியைப் பார்த்துக்க”
“வீட்டுல இருக்கறப்ப பார்த்துப்ப! ஸ்கூல் போய்ட்டா அவள யார் பார்த்துப்பா?”
“ஸ்கூல்லயும் போய் நிக்கவா நானு?” என இவள் நக்கலாய் கேட்க,
“தாராளமா! அதுக்குத்தான் பிரின்சிபல் கிட்ட போய் பேசிட்டு வந்தேன். அவங்க டீச்சர் போஸ்ட் காலி இருக்குன்னு சொன்னாங்க! உன்னோட எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் எடுத்து சொல்லிருக்கேன். அவங்களும் உன் கிட்ட பேசிப் பார்த்துட்டுத் திருப்தியானா வேலைக்கு எடுத்துக்கறதா சொல்லிட்டாங்க! சம்பளத்துக்கு சம்பளமும் ஆச்சி, அப்பப்ப பூக்குட்டியைப் போய் எட்டிப் பார்த்த மாதிரியும் ஆச்சி. ப்ராப்ளம் சால்வ்ட்” எனச் சொன்னவன் கடைக்குக் கிளம்பிப் போயிருந்தான்.
விளையாட்டுக்குச் சொல்லியிருக்கவில்லை அவன். மறுநாளே இவளை நேர்க்காணலுக்கு அழைத்துப் போனான் தினகரன். தாமரை பூந்தென்றலை ஹேண்டில் செய்ததிலேயே திருப்தியாகி இருந்த பிரின்சிபல், மற்றத் தகுதிகளும் பிடித்துப் போக, வேலைக்கு எடுத்துக் கொண்டார் தாமரையை.
பூந்தென்றலுக்குத் தாமரைக்கு முன்னமே பள்ளி முடிந்து விடும். அதன் பிறகு பள்ளி நடத்தும் நர்சரியிலேயே இருந்து கொள்வாள். சற்று நேரம் தூக்கம், பிறகு ஓவியம் வரைதல், ரைம் நேரம், மேலும் படிப்பு, விளையாட்டு எனச் சொல்லிக் கொடுப்பார்கள். ஓய்வுக் கிடைக்கும் போது தாமரையும் மகளை வந்துப் பார்த்து விட்டுப் போவாள். சித்தி விட்டு விட்டு வீட்டுக்குப் போகாமல் பள்ளி வளாகத்திலேயேத்தான் இருக்கிறாள் என்பது மகிழ்ச்சியைக் கொடுத்தது பூக்குட்டிக்கு. அதோடு புது நண்பர்களும் செட்டாகி விட, சந்தோஷமாய் பள்ளிக்குப் போனாள் பூந்தென்றல்.
தாமரைப் பிடித்துத்தானே இந்தத் தொழிலை தேர்ந்தெடுத்தாள். திருமணமாகி சென்னைக்கு வந்த போது அப்பாவை விட்டு விட்டுப் போக வேண்டுமே எனக் கலங்கியதோடு, ஆத்மார்த்தமாய் பார்த்த வேலையையும் விட்டுப் போவதும் மனதை வாட்டியதே! பிள்ளையைப் பார்ப்பதற்காகத் திருமணம் செய்தவளை, வேலைக்கு அனுப்புவது சாத்தியமேயில்லை என எண்ணியிருந்தவளுக்கு இது ஒரு சந்தோஷ நிகழ்வுதான். தினகரன் மகளுக்காக இவளை வேலைக்கு அனுப்பி இருந்தாலும், இவள் மனதை ரணமாக்கி இருந்தாலும், விளைந்ததென்னவோ நன்மைதான் என மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டாள்.
அலாரச் சத்தம் தாமரையின் சிந்தனையைக் கலைத்தது. பூக்குட்டியின் நர்சரி டைம் முடிவடைந்ததை அறிவிக்கும் அலாரம் அது. இவள்தான் போனில் செட் செய்திருந்தாள். அதை நிறுத்தி, மேசையை ஒழுங்குப் படுத்தி விட்டுக் கிளம்பினாள் செந்தாமரை. நர்சரி இடத்துக்கு அருகே இவள் வர, பூக்குட்டியின் சிரிப்புச் சத்தம் உரக்கக் கேட்டது. புன்னகையுடன் நடையை எட்டிப் போட்டாள் தாமரை.
தினகரன் சின்னவளைத் தூக்கி வைத்துக் கொண்டு என்னவோ சொல்ல, அதற்குத்தான் சிரித்திருக்கிறாள் குட்டி எனப் புரிந்தது தாமரைக்கு. எப்பொழுதும் இவர்களைப் பள்ளியில் விட்டு, அழைத்துப் போக அதியமான்தான் வருவார். இன்றென்னவோ தினகரன் வந்திருந்தான். அப்பாவைப் பார்த்ததும் அப்பா கோண்டுக்குச் சிரிக்கச் சொல்லியா கொடுக்க வேண்டும் என எண்ணமிட்டப்படியே அவர்களை நெருங்கினாள் தாமரை.
“சித்தி!” என இவளிடம் தாவினாள் பூந்தென்றல்.
அவளை ஏந்திக் கொண்ட தாமரை, எப்பொழுதும் போல அவள் இரு கன்னங்களிலும் முத்தமிட்டாள். பதிலுக்கு முத்தமிட்ட பூந்தென்றல், தாமரையின் கழுத்தில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். இருவரையும் பார்த்தபடி நின்றிருந்த தினகரன்,
“கிளம்பலாமா?” எனக் கேட்டான்.
வெளியே நின்றிருந்த பூக்குட்டியின் டீச்சரிடம் பாய் சொல்லி விட்டுக் கிளம்பினார்கள் மூவரும்.
“அப்பா!”
“என்னம்மா?”
“நாளைக்கு ஸ்கூல் லீவ்”
“சட்டர்டே, சண்டேன்னா லீவ்தானடாம்மா”
“நீங்க ஃப்ரைடே லேட்டா தூங்கலாம்னு சொல்லிருக்கீங்கத்தானேப்பா” எனக் குயில் கொஞ்சியது.
“ஆமாடாம்மா”
“ஆனா வீட்டுக்கு நாம ஏர்லியா போனா, ஏர்லியா தூக்கம் வரும்ப்பா”
இவனுக்கு மகள் எதற்கோ அடிப் போடுகிறாள் எனப் புரிந்தது. ஆனாலும் காட்டிக் கொள்ளாமல் பேச்சை வளர்த்தான்.
“அதுக்கு என்னம்மா செய்யலாம்?”
“பீச்சுக்குப் போலாம்! அங்க போய் விளையாடினா லேட்டாகும்! வீட்டுக்கும் லேட்டா போவோம்! தூக்கமும் லேட்டா வரும்”
‘உங்கள மடக்க ஆள் வெளிய இருந்து வர வேணாம் தினகர் மாமா! வீட்டுலயே விளைஞ்சு நிக்கிது’
சின்னவளின் புத்திசாலித்தனத்தை நினைத்துத் தாமரைக்குச் சிரிப்பு வந்தது!
“வீட்டுக்குப் போய் கார்ட்டூன் பார்த்தாலும் லேட்டா தூங்கலாம்டா” என அவளுக்கு அப்பன் என நிரூபித்தான் இவன்.
உதட்டைப் பிதுக்கியவள்,
“நீங்க என் கூட டைம் ஸ்பேன்ட் பண்ணி சோ மேனி டேய்ஸ் ஆச்சுப்பா! பூக்குட்டி மிஸ் அப்பா” என்றாள்.
அவள் பேசுவதைக் கேட்ட இருவருக்குமே உருகிப் போய் விட்டது. புதிய ஸ்டாக் வந்ததில் இவனுக்கு வேலை அதிகம்தான். வீட்டுக்கும் மிகத் தாமதமாகத்தான் வருகிறான். தினகரன் வருவதற்குள் பெண்கள் இருவரும் உறங்கி இருப்பார்கள். காலையில் அவன் அசந்து தூங்குவதைப் பார்த்து, சத்தமில்லாமல்தான் கிளம்பிப் போவார்கள் சித்தியும், மகளும்.
“சரிம்மா! சரி! பீச்சுக்குப் போகலாம்!” எனத் தினகரன் சொல்ல, அப்படி ஓர் ஆர்ப்பாட்டம் பெண்ணுக்கு.
மரினா பீச்சின் கார் தரிப்பிடத்தில் காரை பார்க் செய்தவர்கள், மணலில் கால் புதையப் புதைய நடந்து போனார்கள். எப்பொழுதும் போல கூட்டம் அலை மோதியது அங்கே. கடலை நெருங்கியதும் ஓர் இடம் பார்த்து தினகரன் அமர்ந்து விட, தண்ணீருக்குள் போகலாம் எனத் தாமரையின் கையைப் பிடித்து இழுத்தாள் பூக்குட்டி.
மரீனா கடற்கரைக்கு அன்றுதான் முதன் முறை வருகிறாள் தாமரை. சென்னைக்கு சில முறைகள் வந்திருந்தாலும், இப்படி எல்லாம் வெளியே வந்து சுற்றிப் பார்த்ததில்லை. பின் வைத்துக் குத்தி இருந்த சேலை முந்தானைக் காற்றுக்குப் பறந்தது. அதை இழுத்து முன்னே கொண்டு வந்து இடுப்பில் சொருகிக் கொண்டத் தாமரை, உற்சாகமாகச் சின்னவளுடன் தண்ணீரில் இறங்கினாள். அடித்த வெயிலுக்கு, மாலையாகி இருந்தாலும் கடல் நீர் வெது வெதுப்பாக இருந்தது.
அலைமகள் என அலையைப் பெண்ணாய் கருதுகிறார்களே, அது பொய்யாய் இருக்குமோ எனும் எண்ணம் வந்தது தாமரைக்கு. இவள் கால்களை மணல் கொண்டு குறும்பாய் குறுகுறுக்க வைத்து, அன்பாய் தழுவிப் போகும் அலை ஆணாய்த்தான் இருக்கும் என நினைத்துக் கொண்டவளுக்குப் புன்னகை முகிழ்த்தது.
முகத்தில் சடாரென வந்து மோதிய தண்ணீரால் புன்னகை மறைந்துப் போக, குட்டிப் பெண்ணைப் பொய்யாய் முறைத்தாள் செந்தாமரை.
“தென்றல்! சித்தி மேல தண்ணியடிக்காதடா! சேலை நனையுதுல்ல” என இவள் சொல்லி முடிப்பதற்குள் அலை ஒன்றுத் தாக்க சின்னவள் தலைக்குப்புற விழுந்திருந்தாள்.
அடித்துப் பிடித்து அவளைத் தூக்கியதில் மொத்தமாய் நனைந்துப் போயிருந்தாள் தாமரை. மகள் விழுந்ததைப் பார்த்ததும் ஓடி வந்திருந்தான் தினகரன். இவளிடமிருந்து மகளைத் தூக்கிக் கொண்டவன், லேசாய் குனிந்து மெல்லியக் குரலில்,
“அப்படியே என் பின்னாடியே மெல்ல நடந்து வா தாமரை! மொத்தமா நனைஞ்சு, சேலை உடம்போட ஒட்டி கில்மா பட கதாநாயகி மாதிரி தெரியற நீ! சேலை காத்துல காயற வரைக்கும் உக்காந்திரு! இவளுக்கு நான் விளையாட்டுக் காட்டறேன்” என்றான்.
கில்மா கதாநாயகி எனச் சொன்னதில் முகமே சிவந்து விட்டது இவளுக்கு. அவன் அப்படிச் சொன்னதில் ஆத்திரம் வந்தாலும், கீழே குனிந்து தன்னைப் பார்த்தவள், எந்தச் சண்டையும் போடாமல், பரந்து விரிந்திருந்த அவன் முதுகை கோட்டைச் சுவராய் பாவித்து பதவிசாய் நடந்தாள்.
அமைதியாய் மணலில் அமர்ந்து கொண்ட தாமரை, சுற்றி வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள். சுக்குக் காபி, சுண்டல், பலூன் விற்பவர்கள், காதல் கடலில் முங்கிக் கிடந்தவர்கள், கணவன் மனைவியாய் சண்டைப் போட்டுக் கொண்டவர்கள், குழந்தைகள் பின்னால் ஓடியவர்கள், ஜாகிங் செய்தவர்கள் என எல்லோரையும் சுவாரசியமாகப் பார்த்தாள் தாமரை. கடல் காற்று முகத்தில் மோதக் கையைப் பற்றிக் கொண்டு சிரித்து பேசியபடி போன ஒரு ஜோடியின் மேல் இவள் பார்வைப் பதிந்தது. அவர்கள் இவள் பார்வையை விட்டு மறையும் வரை, பார்த்துக் கொண்டே இருந்தாள் செந்தாமரை. பொறாமையாகவோ, ஏக்கமாகவோ பார்க்கவில்லை. என்னவோ அவர்கள் மேலிருந்து பார்வையை அகற்ற முடியவில்லை பெண்ணால்.
சில்லெனத் தண்ணீர் முகத்தில் படவும்தான் திரும்பி இடது புறம் பார்த்தாள் இவள். தினகரன்தான் தண்ணீரைத் தெளித்திருந்தான் இவள் முகத்தில்.
“வேடிக்கைப் பார்த்து முடிச்சிட்டியா லோட்டஸ்? கிளம்பலாமா?” எனக் கேட்டான் இவன்.
எழுந்து கொண்டவள், காய்ந்து போன சேலை முந்தானையால் சின்னவள் முகத்தையும் தலையையும் லேசாய் துவட்டினாள்.
“கார்ல துண்டு இருக்கும்! சேலையை மறுபடி நனைச்சிக்காதே தாமரை” என்றவன் மகளைத் தூக்கிக் கொண்டு நடந்தான்.
சற்று தூரத்தில் தாமரையின் செருப்பு மணலில் மாட்டிக் கொண்டதால் இவள் தடுமாற, அவள் கையை இறுக்கப் பற்றி நிறுத்தினான் தினகரன். அதன் பிறகு, காரை அடையும் வரை அவள் கை அவன் கையில் அடைக்கலமாகி இருந்தது.
கையைப் பிடித்தான் இன்று
மெய்யைப்(உடம்பு) பிடிப்பது என்று?

Last edited:
Author: VanishaAdmin
Article Title: Pirithor Nesamithu--EPI 9
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.