அத்தியாயம் 10-1
“எவ்ளோ சம்பாதிச்சாலும் பத்தவே மாட்டுதே, ஏன்னு யோசிச்சீங்களா? விலைவாசி ஏற்றம் மட்டும் அதுக்கு காரணம் இல்ல! நம்மளோட நிலைமாறும் மனசும்தான் அதுக்குக் காரணம். சாதாரண போன் யூஸ் பண்ணிட்டு இருப்போம். கொஞ்சம் சம்பளம் ஏறனதும், இன்னும் கொஞ்சம் நல்ல போனா தேடி வாங்குவோம்! வாரத்துல ஒரு தடவை வெளிய போய் சாப்பிடுவோம்! காசு கொஞ்சம் கூட வந்தா மூனு தடவைப் போவோம்! அப்போ நாங்களாம் நல்லா வாழக் கூடாதாடா பாட்காஸ்ட் பரதேசின்னு கேக்கறீங்களா? வாழுங்கப்பா! ஜோரா வாழுங்க! அப்புறம் எதுக்கு கைல வாங்கனேன் பைல போடல காசு போன இடம் தெரியலன்னு பொலம்பித் தள்ளுறீங்க!! காண்டாகுதுல்ல எனக்கு!”
(பாட்காஸ்ட் பை பரதேசி!!!)
“அவன் கிட்ட கொஞ்சம் எடுத்து சொல்லுடா விஷ்வா!” என்றார் விஜயசேனா.
“என்னன்னு சொல்லனும்பா?” என இடக்காகக் கேட்டான் விஷ்வசேனா.
“இவ்ளோ நேரம் அப்பா என்ன சொன்னாருன்னு உனக்குப் புரியலயா! இல்ல புரியாத மாதிரி நடிக்கறியா?” எனக் கடுப்பாகக் கேட்க முனைந்தாலும் குரல் பாசமாய்த்தான் வந்தது காயத்ரிக்கு.
அந்த நேரம் டீ ரூமின் கதவுத் தட்டப்பட, மூவரும் பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள்.
“கம்மின்” என காயத்ரி சொல்ல, கதவைத் திறந்து கொண்டு வேலையாள் ஒருத்தன் உள்ளே நுழைந்தான்.
டீ ட்ரே கார்ட்டை(cart) அறையின் ஓர் ஓரமாய் இருந்த மேசைக்குத் தள்ளிக் கொண்டுப் போனவன், அதன் மேல் சைனா கப்களையும், டீ ஜக்கையும், கப் கேக்குகளையும் அடுக்கினான். அதோடு சில இந்தியப் பலகாரங்களும் இருந்தன.
“டீ சர்வ் பண்ணவா மேம்?” எனக் காயத்ரியின் முகத்தை அவன் பார்த்து நிற்க,
“நானே பண்ணிக்கறேன்! நீ போகலாம்” என்றவரின் குரலில் இருந்த கட்டளைக்கு அடிபணிந்து வேகமாய் அறையை விட்டு வெளியேறினான் வேலையாள்.
குஷன் நாற்காலியில் இருந்து எழுந்த காயத்ரி கணவருக்கும், மகனுக்கும் தேநீரை ஊற்றிக் கொடுத்தார். விஷ்வா அங்கிருந்த கேக்கை எடுத்துச் சாப்பிட்டவாறே பெற்றவர்களை ஓரக்கண்ணால் அளவெடுத்தான்.
‘இப்படி என்னை இக்கட்டுல மாட்டி விட்டுடீங்களே ப்ரோ! இப்ப மிசின் கன் மாதிரி இவங்க ரெண்டுப் பேரும் துளைச்சு எடுக்கற கேள்விகளையெல்லாம் எப்படி நான் தடுத்துப் புடிக்கப் போறேன்! ஹரே பகவான்!’ என நொந்து கொண்டான் அவன்.
குடும்பத்தினர் மட்டும் தேநீர் அல்லது மதுபானம் அருந்துவதற்கென அமைக்கப்பட்டிருந்த அறை அது. ஒரு பக்கச் சுவர் முழுக்க பல நாட்டு மதுபானங்கள் கண்ணாடி செல்ஃபில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. வசதியாக அமரக் கூடிய வகையில் ரிக்ளைனர் இருக்கைகள் மற்றும் மசாஜ் இருக்கைகள் ஒரு பக்கம் அழகாய் வீற்றிருந்தன. பாஸ்ட்டல் கலரில் வால்பேப்பர் போடப்பட்டு, கலைநயமானப் படங்கள் மாட்டப்பட்டு அமைதியான மனநிலையைக் கொடுக்கக் கூடிய இடமாய் அமைக்கப்பட்டிருந்தது அவ்வறை.
அப்படி இருந்தும் அந்த அறையில் கூடி இருந்த மூவரின் மனதிலும் அமைதி என்பது மருந்துக்கும் இருக்கவில்லை.
ஹேட்டல் மற்றும் டூரிசம் தொழிலில் கொடிக் கட்டிப் பறக்கும் சேனா குருப்ஸின் தற்போதைய மேனேஜிங் டைரக்டர்தான் விஜயசேனா. அவரது தாத்தாவின் காலத்தில் இருந்து இந்தத் தொழிலில் இருக்கிறார்கள். இது மட்டும் இல்லாமல், தொலைத்தொடர்பு துறையிலும் இவர்கள் கால் ஊன்றிப் பல வருடங்கள் ஆகி இருந்தன. ஹோட்டல் மேனேஜ்மெண்ட் இவரிடமும், தொலைத்தொடர்பு நிறுவனம் இவர் தம்பியிடமும் இருந்தது. இருவரும் இரு வேறு துறையில் இருக்க, போட்டிப் பொறாமைகள் இன்றி தனித்து வசித்தாலும் ஒற்றுமையாகவே வாழ்ந்தார்கள்.
விஜயசேனாவுக்குப் பெற்றவர்கள் பார்த்து மணமுடித்தப் பெண்தான் காயத்ரி! அவரும் கோடிஸ்வரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். இவர்களுக்கு விஷ்ணுசேனா, விஷ்வசேனா என இரு மகன்கள். விஷ்ணு வெளிநாட்டு ஹோட்டல்களை பார்த்துக் கொள்ள, சின்னவன் விஷ்வா உள்நாட்டு ஹோட்டல்களை மேனேஜ் செய்கிறான்.
அண்ணன், தம்பி இருவருமே ஜாலியான பேர்வழிகள்தான். உயர்ந்தர படிப்பு, கேட்டது கையில் கிடைக்கும் வரம் என சந்தோஷமாகத் திரிந்தவர்கள்தான். ஆனாலும் சிறு வயதில் இருந்தே பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனப் பயிற்றுவிக்கப்பட்டிருந்தனர். எதை செய்தாலும் அதில் நூறு சதவீத உழைப்பைப் போட வேண்டும் எனக் கற்றுக் கொடுத்திருந்தார் விஜயசேனா. பிள்ளைகள் பார்ட்டி, ஃபன் எனத் திரிந்தாலும், அவர்களைத் தடுத்தது இல்லை அவர். ஆனாலும் அவர்கள் இருவருக்கும் சுயமாய் யோசித்துச் செயல்பட முடியும் எனும் நம்பிக்கை வரும் வரை இவரின் கண்காணிப்பு இலைமறைக் காயாக இருந்து வந்தது. அப்படி எல்லை மீறிப் போகிறார்கள் எனத் தெரிந்தால் கூப்பிட்டு வைத்துக் கண்டித்து விடுவார். சிறு வயதில் இருந்தே பணம் இருக்கிறது, எப்படி வேண்டுமானாலும் செலவு செய்யலாம் எனப் பழக்காமல், பணம் இருக்கிறது, அது எப்படி வந்தது என இருவருக்கும் கற்றுக் கொடுப்பார். இன்வெஸ்ட்மெண்ட், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், செஃல்ப் டிசிப்ளின் என இவர் தந்தை இவருக்குப் போதித்ததை மகன்கள் இருவருக்கும் போதித்தே வளர்த்தார் விஜயசேனா.
“பணங்கறது ஒரு போதை! அது இல்லாதவன்தான் பணம் இருந்தா மட்டும் போதுமா! வாழ்க்கையில நிம்மதி வேணும்னு பாடம் எடுப்பான்! பணம் இருக்கறவன், அதை இன்னும் எப்படி பெருக்கனும்னுதான் யோசிப்பான்! ஏன்னா பணப் போதைல திளைச்சு நின்னுட்டவனுக்கு அது இல்லாம வாழ முடியாது! நம்ம கிட்டத்தான் இவ்ளோ பணம் இருக்கேன்னு நெனைச்சு எடுத்து செலவு பண்ணிட்டே இருந்தா, அது டாட்டா பாய்பாய் சொல்லிட்டுப் பறந்து போய்டும்! ராபார்ட் கியோசாக்கின்னு ஒருத்தரு கோட் ஒன்னு சொல்லிருக்காரு! நாம எவ்ளோ சம்பாதிக்கறோம்ங்கறது மேட்டர் இல்ல! அதுல எவ்ளோ சேர்க்கறோம், சேர்த்த காசு உனக்காக எப்படி உழைக்குது, எத்தனை ஜெனரேஷனுக்கு அதை நாம கொண்டு சேர்க்கறோம்ங்கறதுதான் முக்கியம்! ( It's not how much money you make, but how much money you keep, how hard it works for you, and how many generations you keep it for). அதை மட்டும் நெஞ்சுல நிறுத்திக்குங்க டியர் பாய்ஸ்” என அவர் போதிக்காத நாளில்லை.
இருவருமே தகப்பன் மேல் அன்பும் மரியாதையும் கொண்டிருந்தனர். அதோடு சேர்த்து அவர் போதித்ததை நெஞ்சில் பச்சைக் குத்தி வைத்திருந்தனர்.
காயத்ரி இருவரின் மேலும் அதீதப் பாசம் வைத்திருந்தார். அவரது நிலையில் உள்ளப் பெண்மணிகள் போல, கணவருக்கு தொழிலிலும், அவர்கள் நிறுவனம் நடத்தும் சேரிட்டி பணிகளிலும் பிசியாக இருந்தாலும், மகன்களோடு கொஞ்சி விளையாட நேரம் ஒதுக்க மறக்க மாட்டார். வெளியே மற்றவர்களிடம் ஆளுமையாய். அதிகாரமாய் நடந்து கொண்டாலும், பிள்ளைகள் என வந்து விட்டால் குழைந்து, தழைந்து போய் விடுவார். மகன்கள் இருவரும் அம்மாவைத் தங்கள் சுண்டு விரலில் முடிந்து வைத்திருந்தனர்.
“கொஞ்சம் கண்டிப்ப காட்டிப் பழகு காயூ” எனக் கணவர் சொன்னாலும்,
“ரெண்டுப் பேரும் என்னத் தப்பு செய்யறாங்க கண்டிப்ப காட்ட! பெரியவன் படிப்பிலும் சரி, விளையாட்டிலும் சரி சூப்பரா செய்யறான். சின்னவன் படிப்புல கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும், விளையாட்டுலயும், அதர் ஆக்டிவிட்டிஸ்லயும் நல்லா ஸ்கோர் பண்ணறான்! வேற என்ன வேணும் விஜய்? மத்தப் பணக்காரப் பசங்க மாதிரி வேலைக்காரங்கள டார்ச்சர் பண்ணறது, திமிர்த்தனம் காட்டறது, நினைச்சது நடக்கனும்னு அட்டகாசம் பண்றதுன்ன்னா இருக்காங்க! அப்படி நாம வளக்கலியே அவங்கள! சின்னச் சின்னக் குறும்புத்தனம் இருக்கு! வளர, வளர அதுவும் சரியாகிடும்! டிபிக்கல் பேரெண்ட்ஸ் மாதிரி நடந்துக்காதீங்க!” எனக் கணவரை அடக்கி விடுவார் காயத்ரி!

Last edited:
Author: VanishaAdmin
Article Title: Sernthaadu Cindrella--EPi 10(Part 1)
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.