Uyir Vangum Rojave--EPI 16

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
923
-1,951
93
அத்தியாயம் 16

கல்யாணம் பண்ணிட்டு கசமுசா பண்ணா ஹீரோ! கசமுசா பண்ணிட்டு கல்யாணம் பண்ணா வில்லன்!

(படம் – தீயா வேலை செய்யனும் குமாரு)




வீட்டுக் கிரகப் பிரவேசம் முடிந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. தேவியும் வேந்தனும் அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்திருந்தனர். தேவி ஓடிவிட்டு வருவதற்குள் வேந்தனும் யோகாசனம் முடித்து விட்டுக் குளித்து ரெடியாகி இருப்பான்.

கார்த்திக் எப்பொழுதும் போல் காலையில் அவர்கள் வீட்டுக்கு வந்து விடுவான். தேவி கிளம்பி வந்ததும் மூவரும் ஒன்றாக உணவருந்துவார்கள். வேந்தன் எது கேட்டாலும் செய்து கொடுக்கும்படி முனிம்மாவுக்குத் தேவியிடம் இருந்து உத்தரவு. காலையில் மட்டும்தான் சொந்தமாகக் சாப்பிடுவாள் அவள். பகல் வேளையில் இருவரும் தனித்தனியே வெளியே சாப்பிட்டுக் கொள்வார்கள். இரவில் மட்டும் வேந்தன் அவளுக்கு ஊட்டி விட வேண்டும். முதலில் அவள் ஆசையாகக் கேட்ட போது வெகுவாக தயங்கினான். கண்டிஷன் நம்பர் ஓன் எனச் சொல்லித்தான் வழிக்குக் கொண்டு வந்திருந்தாள் தேவி. அவளுக்கு ஊட்டி முடித்துத்தான் இவன் சாப்பிடுவான். அந்த நேரம் அவன் சாப்பிடும் அழகை கண் எடுக்காமல் பார்த்திருப்பாள் தேவி.

‘இப்படி கண்ணு வச்சா சாப்பிடறது ஒட்டுமா?’ என மனதிலேயே புலம்புவான் வேந்தன்.

காலை வேளையில் கார்த்திக் இவர்கள் இருவரையும் கண்டு கொள்ள மாட்டான். (சாப்பிட) வந்த வேலையை கரெக்டாக செய்வான்.

“மலர்! எப்படி இவ்வளவு காரமா சாப்பிடற? கேஸ்ட்ரிக் வந்திடப் போகுது. இனிமே காரத்தைக் குறைச்சிக்க. முனிம்மா, சாருக்கு இனிமே காரத்தைக் குறைச்சு சாப்பாடு போடுங்க” என உத்தரவிட்டாள் தேவி.

முந்தைய தினம் நடந்த சம்பவத்திலிருந்து அவன் மேல் இன்னும் அக்கறை வந்திருந்தது தேவிக்கு.

‘ரோஜா செல்லம்! இந்த வீட்டுல நான் பார்க்கற உருப்படியான வேலையே சாப்பிடறதுதான். அது கூட உனக்குப் பொறுக்கலையா?’ எனக் குமுறினான் வேந்தன்.

ஆனாலும் அவளை நிமிர்ந்து பார்க்கவில்லை. வெட்கம் வந்து தடுத்தது.

“ஆமாம் மேடம். சாரோட குடும்ப ஹிஸ்டரில, வயிறு சம்பந்தப்பட்டக் கோளாறுகள் நிறைய இருக்கு. நீங்க எடுத்த முடிவுதான் சரி” எனக் கார சட்னியை வழித்து சாப்பிட்டுக் கொண்டே தேவியை ஏற்றி விட்டான் கார்த்திக்.

தேவி பார்க்காத போது, வேந்தனைப் பார்த்துக் கண் சிமிட்டி சிரிக்கவும் மறக்கவில்லை இவன்.

‘எல்லாம் நல்லபடி நடந்துடுச்சு போல. வேந்தன் முகத்துல பல்பு எரியுது’ என்றெண்ணிச் சிரித்துக் கொண்டான் கார்த்திக்.

‘ஏன்டா, கடன்காரா நீயுமா? மொக்கறதப் பாரு பத்து நாளு பஞ்சத்துல அடிப்பட்டவன் மாதிரி. உனக்கெல்லாம் சுடுதண்ணீ கூட வைக்கத் தெரியாதவதான் பொண்டாட்டியா வருவா’ எனச் சாபம் கொடுத்தான் வேந்தன்.

பகலில் இரண்டு நாட்கள் அம்மா வீட்டுக்குச் சென்று விடுவான், அவர் கையால் சாப்பிட. மீதி இரு நாட்கள் கடையிலும், ஒரு நாளை லட்டுவின் காலேஜ் கண்டீனில் அவளிடம் பேசியபடியும் உணவருந்துவான். இன்று லட்டுவைப் பார்க்கும் நாள். இருவரிடமும் சொல்லி விட்டுக் கிளம்பினான் வேந்தன். லன்ச் டைமுக்கு கரெக்டாக காலேஜ் செல்ல வேண்டும் எனத் திட்டமிட்டப்படியே நடந்தவனை,

“மலர் கொஞ்சம் ரூமுக்கு வா. என்னோட ஃபைல காணோம்” என்ற தேவியின் குரல் அழைத்தது.

உள்ளே சென்றவனைக் கதவின் பின்னாலிருந்து அணைத்துக் கொண்டாள் தேவி.

“என்னைப் பார்த்து என்ன வெட்கம் மலர்?” என்றவள் அவன் முகத்தைப் பிடித்துக் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.

“ஐ லவ் யூ மலர்!” என ஆசையாக சொன்னாள் தேவி.

“மீ டூ!” எனச் சொன்னவன் வேகமாக அறையை விட்டு ஓடி விட்டான்.

காலேஜ் காண்டீனில் சாப்பாடு வாங்கிக் கொண்டு அமர்ந்தார்கள் அண்ணனும் தங்கையும்.

“எப்படிணா இருக்க? ரொம்ப இளைச்ச மாதிரி இருக்க. அந்த வீட்டுல சாப்பாட்டை உன் கண்ணுலயே காட்டுறது இல்லையா?”

“நம்ம வீட்டுல சாப்பிடற மாதிரி இல்லடா. ஹ்ம்ம்! என் கதைய விடு. உன் படிப்பெல்லாம் எப்படிப் போகுது?”

“வரப்ப எல்லாம் இதையே கேப்பியா? நல்லா போகுது. லாஸ்ட் செம் இன்னும் ரெண்டு மாசத்துல முடியுது. அதுக்கு அப்புறம் வேலைக்கு போகலாம்னு இருக்கேன். நீதான் முடியாது, இன்னும் படின்னு சொல்லுற” எனக் குறைப்பட்டுக் கொண்டாள்.

“நீ அதுக்குள்ள வேலைக்குப் போயிட்டா, அப்புறம் பொண்ணு குடுன்னு வந்து நிப்பானுங்க. ஏற்கனவே அங்க, இங்க பார்த்துட்டு அம்மாகிட்ட சில பேரு உன்னைப் பத்தி விசாரிக்கறாங்க. எத்தனைப் பேருக்குத்தான் சொல்லுறது மூத்தவளுக்கு முடிச்சதும்தான் உனக்குன்னு. நம்ம சொந்தக்காரங்க எல்லாருக்கும் மண்டையில மசாலா மட்டும்தான் இருக்கு. நம்ம அனு சின்ன வயசுல சீக்கா இருந்தா! என்னமோ அவ இன்னும் படுத்தப் படுக்கையா இருக்கற மாதிரி அவளைப் பொண்ணெடுக்கவே பயப்படுறானுங்க. இதுல இந்த மதனோட மன்மத லீலை வேற. வெறுப்பா இருக்கு”

“கவலைப்படாதே அண்ணா. அனுக்குன்னு இன்னொருத்தன் இனி மேலா பொறந்து வர போறான். நேரம் வரும் போது அவளுக்கும் எல்லாம் கரெக்டா நடக்கும். அவ அருமை யாருக்கும் தெரியலை. சரி விடு! நான் இன்னும் கொஞ்ச நாளைக்குப் படிப்ப கன்ட்டினியூ பண்ணுறேன்”

“மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு லட்டும்மா. அனு படிப்புலயும் சுமார் தான்! அம்மா பைத்தியம் வேற. பேசற சத்தம் கூட வெளிய கேக்காது. வேலைக்கு ட்ரை பன்ணுற இடத்துல எல்லாம் இவ அமைதிய பார்த்தே ரிஜேக்ட் பண்ணிருறாங்க”

“அத ஏண்ணா கேக்குற! ஆபிஸ் வேலைதான் கிடைக்க மாட்டுதேன்ற விரக்தியில நேத்து ஒரு சூப்பர் மார்க்கேட்டுக்கு கேசியர் வேலை கேட்டு போயிருக்கா. அந்த மேனேஜர் ஒரு நாற்காலிய குடுத்து, அதை தூக்கச் சொன்னாராம். ஏன்னு கேட்டதுக்கு, இப்படி ஒடிசலா இருக்கியே, வேலை செய்ய பலம் இருக்கான்னு செக் செய்யத்தான்னு சொல்லி இருக்காரு. இவ அழுது கிட்டே காருல வந்துருக்கா. நம்ப செக்கியூரிட்டி சிவப்பு சொக்கா, அந்த மேனஜர்தான் இவள என்னமோ பண்ணிட்டான்னு, அவனைத் தூக்கிப் போட்டு மிதிச்சு, ஒரே ரகளை. அப்புறம் விவரம் தெரிஞ்சு அவரே செட்டில் பண்ணிட்டு வந்திருக்காரு. நீ டென்ஷன் ஆகிருவன்னுதான் அம்மா உன் கிட்ட சொல்லல”

“இவள யாரு திரும்பவும் வேலைத் தேட சொன்னது? நான்தான் வீட்டுலயே இருக்க சொன்னேனே!” என்றவன் நெற்றியைத் தேய்த்து விட்டுக் கொண்டான்.

“அவளுக்கும் வீட்டுக்குள்ளயே அடைஞ்சி கெடக்க முடியலைண்ணா. இனிமே போக மாட்டா. நேத்து சிகப்பு சொக்கா பண்ண ரகளையில ரொம்ப பயந்துட்டா”

“உங்களுக்கு எல்லாம் வசதியா இருக்காம்மா? ஏதாவது பிரச்சனைன்னா நீதான் என் கிட்ட சொல்லனும். அம்மாவும் அனுவும் எதுக்கும் என் கிட்ட வாய் திறக்க மாட்டாங்க”

“இப்போதைக்குப் பிரச்சனை ஒன்னும் இல்ல. நீ சொல்லு, நான் போட்டுக் குடுத்தக் காரசாரமான பிளான் எந்த அளவுக்கு சக்சஸ் ஆச்சு?” என ஆவலாகக் கேட்டாள் லட்டு.

‘அதை என் வாயால எப்படிம்மா சொல்லுவேன்? பிரிக்கனும்னு நீ போட்டுக் கொடுத்த பிளான்னு எங்கள கோர்த்து விட்டுருச்சே. பிரிஞ்சி போக நீ பண்ண பிளான்னு எங்கள பிசைஞ்சி போட்டுருச்சேம்மா’

அவன் அமைதியைப் பார்த்த அவள்,

“இது சொதப்புனா சொதப்பிட்டு போகுது. நெக்ஸ்டு?” எனக் கேட்டாள்.

‘எனக்கு ரெஸ்ட்டு. சங்கூதற வயசுல சங்கீதான்னு பேரு வச்சாங்கலாம். அது போல தோத்து போன எனக்கு எதுக்குமா இனிமே வேற பிளான்னு?’ என மனதிலே கவுண்ட்டர் கொடுத்தான் வேந்தன்.

வாயைத் திறந்து தங்கையிடம் கூட எதையும் சொல்ல முடியவில்லை அவனால். முந்தைய இரவின் ஞாபகங்கள் நிழலாடின அவன் மனதில்.

லட்டு சொல்லிக் கொடுத்தபடியே, தேவி குளித்து விட்டு வருவதற்குள் அவளுக்குச் சாதத்தைப் பிசைந்து வைத்துக் கொண்டு காத்திருந்தான் இவன். ஊசி மிளகாய் ஊறுகாயை சாதத்தில் சேர்த்துப் பிசைந்திருந்தான். லட்டு இரண்டு கரண்டி போடச் சொல்லியிருந்தாள். இவன்தான் மனது கேட்காமல் அரை கரண்டி மட்டும் போட்டிருந்தான்.

ஆசையாக அவன் பக்கத்தில் வந்தமர்ந்து ஆவேன தன் பிங்க் அதரங்களைத் திறந்தாள் தேவி. கை நடுங்க ஒரு வாய் ஊட்டினான். அவள் சாப்பிட்டவுடன் மீண்டும் மறு வாய் ஊட்டினான். அப்பொழுதுதான் அவளுக்குக் காரம் உறைக்க ஆரம்பித்திருந்தது. அவன் கண்களை நோக்கியவள்,

“எனக்குக் காரம் ஆகாதுன்னு தெரியும் தானே மலர்?” எனக் கேட்டாள்.

ஆம் என்றும் இல்லை என்றும் ஒரு மாதிரியாகத் தலையாட்டினான் இவன்.

“அப்போ தெரியும்? தெரிஞ்சும் காரத்த கலந்துருக்க. சரி உன் ஆசையா ஏன் கெடுப்பானேன். இன்னும் ஊட்டு” எனக் கட்டளை இட்டாள்.

அதற்குள் அவள் நாக்கு, முகம், கழுத்து எல்லாம் சிவந்து போயிருந்தது. வேந்தன் முடியாது எனத் தலையாட்டினான்.

“இப்ப நீ ஊட்டுறியா இல்ல நானே சாப்பிடவா?” என மிரட்டலாக வந்தது குரல்.

“தெரியாம கலந்துட்டேன் ரோஜா. வேண்டாம் விடு. கண்ணுல தண்ணி வருது பாரு. இந்தா குடி” எனத் தண்ணீர் டம்ளரை நீட்டினான்.
 

Author: VanishaAdmin
Article Title: Uyir Vangum Rojave--EPI 16
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
923
-1,951
93
அவனை முறைத்தவள் பிடிவாதமாகத் தட்டைப் பறித்து உணவை அள்ளி வாயில் வைத்தாள். கண்ணீரைத் துடைத்துக் கொண்டே மீண்டும், மீண்டும் சோற்றை வாயில் திணித்தாள். வேந்தன் மிரண்டு விட்டான்.

அவள் கையிலிருந்த தட்டைக் கீழே தட்டி விட்டான். தண்ணீரைக் குடிக்க மாட்டேன் என இறுக வாயை முடி இருந்தவளை என்ன செய்வது என்றே அவனுக்குத் தெரியவில்லை. அவள் முகத்தை ஒரு பக்கமாக அவன் நெஞ்சில் சாய்த்து, உதட்டைப் பலம் கொண்ட மட்டும் திறந்து தண்ணீரை ஊற்ற பாடுபட்டான். அவள் சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. இன்னும் சிவப்பேறிக் கொண்டே போகும் அவள் முகத்தைப் பார்த்து இவனுக்குப் பதட்டம் ஏறியது.

“ரோஜா! என்னை மன்னிச்சிருடா. இனிமே இப்படிக் காரத்தைப் போட மாட்டேன். ப்ளீஸ்டா. தண்ணிய குடி” எனக் கிட்டத்தட்டக் கெஞ்சினான். அதற்கும் பலன் இல்லை.

“ஏன்டி என்னை இப்படி கொல்லுற? ப்ளீஸ்டி ரோஜா. என் கண்ணுல” எனக் குரல் கரகரத்தது வேந்தனுக்கு.

அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாளே தவிர, பிடிவாதத்தைத் தளர்த்தவேயில்லை. வேறு வழியின்றி அவளது முகத்தை நிமிர்த்தித் தன் முதல் முத்திரையை அவள் இதழ்களில் அவசரமாகப் பதித்தான் வேந்தன். ஒரு நொடி அதிர்ந்தவள், அவனைத் தள்ள முற்பட்டாள். இறுக அவள் கன்னங்களைப் பற்றி அவளது முயற்சியை சுலபமாக முறியடித்தான் இவன். மெல்ல அவன் வசமானவள், வேந்தனின் தோள்களில் மாலையாகக் கைகளைக் கோர்த்துக் கொண்டாள். அவளது காரத்தைத் தன் வாய்க்கு மாற்றிக் கொள்ளும் மிஷனில் இறங்கி இருந்த வேந்தன் அப்படியே மிசினில் அரைப்பட்ட கரும்பு போல் நிலைக் குலைந்து போனான்.

“டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை” எனும் கார்த்திக்கின் பாட்டும் கணைப்புச் சத்தமும்தான் இருவரையும் பூமிக்கு இழுத்து வந்தது. சட்டென விலகிய வேந்தன், தண்ணீர் டம்ளரை தேவியின் கையில் திணித்தான்.

“குடி ரோஜா” என முகத்தைப் பார்க்காமல் சொன்னவன், அவள் டம்ளரை வாங்கியதும் கார்த்திக்கை நோக்கித் திரும்பினான்.

“என்னடா இந்த நேரத்துல?”

“ஹ்ம்ம் புரியுது மாமு. என்னடா இந்த நேரத்துல சிவ பூஜையில கரடின்னு கேக்குற?” எனக் கிசு கிசுப்பாகக் கேட்டான்.

“அது வந்து, நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்லைடா”

“டேய்! கல்யாணம் வேணான்னு சொல்றான் பாத்தியா, அவன கூட நம்பிடலாம். ஆனா தங்கச்சி கல்யாணம் முடிஞ்சுதான் தனக்கு எல்லாம்னு சொல்லுறான் பாத்தியா, அவன மட்டும் நம்பவே கூடாதுடா” என வேந்தனை ஓட்டி எடுத்தான் கார்த்திக்.

கடுப்பான வேந்தன்,

“நீ முதல்ல எதுக்கு வந்தேன்னு சொல்லித் தொலை” என எரிந்து விழுந்தான்.

“நான்தான் வரச் சொன்னேன். அந்த கொட்டேஷன இப்படிக் குடு கார்த்திக்” என ஃபைலை வாங்கியவள், விடு விடுவென மேலேறி சென்று விட்டாள்.

“மச்சி, மேடம் சூடா போறாங்க. என்ன பண்ண? ஐ மீன், இந்தக் கசமுசாவ மைனஸ் பண்ணிட்டு சொல்லு. வயசு பையன் அதை எல்லாம் கேட்டா கெட்டுப் போயிருவேன். எங்க வீட்டுல ஃபிரிட்ஜ் வேற இல்லை!” எனச் சொல்லிக் கண்களால் சிரித்தான் கார்த்திக்.

“ஒன்னும் இல்லடா. கொஞ்சமா காரம் குடுத்துப் பழக்கினேன். அதுக்கு கோவிச்சுக்கிட்டாங்க!”

‘மொச புடிக்கற நாய மூஞ்சப் பாத்தா தெரியாது? ஏன்டா, மேடத்துக்கு உறைப்பக் குடுத்து காலி பண்ண பாக்கறியா. இரு இன்னிக்கு உனக்கு ஆப்ப அழகா சொருகிட்டு போறேன்’

“அவங்க அப்படித்தான்டா. எதையும் சீக்கிரமா பழகிக்க மாட்டாங்க. நீ அதை எல்லாம் மனசுல வச்சிக்காதே. என்ன முகமெல்லாம் சோர்ந்து போய் கிடக்கு? வா, வந்து சாப்பிடு. நான் போய் பாதாம் பால் எடுத்துட்டு வரேன்”

சொல்லி விட்டு பின்னால் வழியாகக் காருக்குச் சென்றவன், பப்புக்கு போகும் போது நண்பன் ஒருவன் கொடுத்த மருந்தை டேஸ்போர்டிலிருந்து எடுத்து வந்தான். ஆண்களுக்கு ஆசை அதிகம் வர வைக்கக் கூடிய பில் அது. தூக்கி வீச மறந்து டேஸ்போர்டிலே இருந்த மருந்துக்கு அப்பொழுதுதான் வேலை வந்திருந்தது.

‘மச்சி! நீ இன்னைக்கு பண்ணத யோசிச்சுப் பார்த்தா ஒன்னு மேடத்தைக் காலி பண்ண பிளான் போட்டிருக்கனும். இல்ல பிரிஞ்சு போக நினைச்சிருக்கனும். கண்டிப்பா காலி பண்ணுற அளவுக்கு நீ இறங்க மாட்ட. பிரியத்தான் நினைச்சிருப்ப. அது நான் உசுரோட இருக்கற வரைக்கும் நடக்காது. உன்னை மாதிரி ஒரு பாசக்காரன் அவங்களுக்கு கிடைக்க மாட்டான். உன் முகத்தையும் நடந்துக்கற விதத்தையும் பார்த்தா கண்டிப்பா உங்களுக்குள்ள ஒன்னும் நடக்கலைன்னு புரியுது. தப்புன்னு ஒன்னு நடந்துட்டா நீ கண்டிப்பா அவங்கள விட்டுப் போக மாட்ட. அதென்ன தப்பு? கல்யாணம் பண்ணிட்டு கசமுசா பண்ணாட்டிதான் தப்பு. புருஷன் பொண்டாட்டிக்குள்ள நடந்தா அது ரைட்டு தான். இப்ப உன்ன ரைட்டான பாதைக்கு நான் தள்ளி விடறேன். அதுக்கு மேல ஆண்டவன் விட்ட வழி’

மருந்தை இடித்துப் பாலில் கலந்தவாறே மெல்லியக் குரலில் பாடினான் கார்த்திக்.

“ஜிங்ஜினக்கு ஜனக்கு

நான் சொல்லி தரேன் கணக்கு”

“என்ன கார்த்திக், இவ்வளவு சந்தோஷமா பாடிக்கிட்டு வர?”

“அதுவா மச்சி, நல்ல காரியத்துக்குப் பிள்ளையார் சுழி ஒன்னு போட்டிருக்கேன். அதான் சந்தோஷம்”

“நீ நினைச்ச காரியம் நல்ல படியா நடக்க வாழ்த்துக்கள்டா. சரி, பாலை குடு! குடிச்சுட்டுப் படுக்கறேன்” என வாங்கி பாதி அருந்தியவன்,

“உனக்கு மச்சி? ஓன் பை டூ வேணுமா? நாம காலேஜ்ல குடிப்போமே அப்படி” எனக் கேட்டான்.

“ஐயய்யோ வேணாம் மாமு. எனக்குப் பாலுனாலே அலர்ஜி. இன்னைக்குச் செத்தா நாளைக்கு பாலு மச்சி. அதனால பால் குடிக்கறதையே விட்டுட்டேன்”

“சரி விடு, நீ செத்தா மட்டும் பாலுக்கு பதிலா காபி ஊத்த சொல்லுறேன். இப்ப நீ நடையைக் கட்டு” என அவனை அனுப்பியவன் மெல்லப் படியேறினான்.

ரூமில் தேவி யோசனையில் அமர்ந்திருந்தாள்.

‘எனக்கு ஒத்துக்காதுன்னு தெரிஞ்சும் ஏன் இப்படி செஞ்சான் மலர்? எனக்குக் கோப மூட்டிப் பார்க்க ஆசைப்படறானா? எதனால? ஓ! நானா டைவர்ஸ் பண்ணுவேன்னு காய நகர்த்தறான் போல. ஹ்ம்ம். அப்புறம் ஏன் அப்படித் துடிச்சான்? பிரியனும்னு நினைக்கிறான், ஆனா என்னைத் துன்பப்படுத்திப் பார்க்க முடியல’

மெல்லியப் புன்னகைப் பூத்தது இவளுக்கு.

‘மலர்! நீ நிஜமாலுமே ரொம்ப மென்மையானவன்டா. உன்னை எந்தக் காரணத்தைக் கொண்டும் நான் பிரிய மாட்டேன். ஐ நீட் யூ இன் மை மிசரபள் லைஃப்’

அந்த நேரம் வாட்ஸாப் மேசேஜ் கார்த்திக்கிடம் இருந்து வந்தது. வேந்தன் சாப்பிடும் நேரத்தில் அதை அனுப்பி இருந்தான் கார்த்திக்.

“மேடம், வேந்தனுக்கு என்ன ரொம்ப பிடிக்கும்னு கேட்டீங்களே? அவனுக்குப் பாட்டுப் பிடிக்கும்னு உங்களுக்கே தெரியும். அதுவும் இந்தப் பாட்டுப் பாடுனீங்கன்னா அப்படியே மயங்கிருவான்” என டைப் செய்து, ஆங்கிலத்தில் பாடல் வரியையும், யூ டியூப்பில் பாடல் வீடியோவையும் அனுப்பி இருந்தான்.

வேகமாகப் பாடலை மனனம் செய்தவளுக்கு ராகம், சுருதி, ஸ்வரம் என்பதெல்லாம் என்னவென்று தெரியாது. அவள் கேட்பதெல்லாம் ஆங்கில பாடல்கள்தான்.

உள்ளே நுழைந்த வேந்தனைக் கைப் பிடித்து அழைத்துச் சென்று கட்டிலில் தன் அருகில் அமர வைத்துக் கொண்டாள் தேவி.

“மலர்! உனக்குப் பாட்டுனா ரொம்ப பிடிக்குமில்ல? உனக்காக நான் ஒரு பாட்டுப் பாடவா?” என ஆசையாகக் கேட்டாள்.

மருந்து இன்னும் வேலையைக் காட்டி இருக்கவில்லை. வேந்தன் தெளிவாகதான் இருந்தான். அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவன்,

“பாடுங்க ரோஜா” என்றான்.

குரலைக் கணைத்துக் கொண்டவள் கண்ணோடு கண் பார்த்து,

‘மலரே மோனமா

மோனமே வேடமா’ எனப் பாடினாள்.

இசை எனும் இன்ப வெள்ளத்தில் மூழ்க காத்திருந்த வேந்தனுக்கு, கல்ப்ஸ் அக்காவுக்குப் போட்டியாகப் பாட ஆரம்பித்த தேவியைப் பார்த்துச் சிரிப்புத் தாளவில்லை. கஷ்டப்பட்டு முகத்தை நார்மலாக வைத்திருந்தான்.
“மலர்கள் பேசூமா

பேசீனால் ஓய் உம்ம்மா அம்பே”

‘என்னாது உம்மாவா? இப்பத்தானே குடுத்தேன். இன்னும் வேணும்னு சிம்பாலிக்கா கேக்குறாளோ?’

இப்பொழுது மருந்து மெல்ல வேலையைக் காட்ட ஆரம்பித்திருந்தது.
“பாடி ஜீவன் கொண்ட்டு

டேகம் வாண்டு வண்டதோ... ஹா”

அவள் இழுத்த ஹாவில் அப்படியே சொக்கிப் போனான் வேந்தன்.

விரலை அவள் உதட்டின் மேல் வைத்தவன், மிச்ச பாடலை அனுபவித்து அவனே பாடினான்.
“மீதி ஜீவன்

உன்னைப் பார்த்தப் போது வந்ததோ...ஓ
ஏதோ சுகம் உள்ளூறுதே
ஏனோ மனம் தள்ளாடுதே
விரல்கள் தொடவா
விருந்தைத் தரவா
மார்போடு கண்கள் மூடவா” எனப் பாடி முடித்தவன் அவளை மார்போடு தழுவிக் கொண்டான்.