லக்கி வீடு - 19

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

Ush

Well-known member
Feb 8, 2026
71
174
93
“லக்கிம்மா என்ன ஒரே புன்னகையா இருக்கு? உங்க பையன் மிஸ்டர் ஹல்க் வர்றார்ன்னா?” வர்ணி காபியை எடுத்துக்கொண்டு வர லக்கியோ சிப்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்தார், அவள் சொன்னது அவருக்கு கேட்டது போல தெரியவில்லை.

“சாஹித்யன், உங்க சாஹி வரார் லக்கிம்மா” அவரளவுக்கு குனிந்து அவள் சொல்லவும்

அவரது கண்களில் தொற்றிக்கொண்ட மகிழ்வை கண்டதும் வாஞ்சையாய் சிரித்தாள் வர்ணி.

இதுக்குப்போய் பயந்து சோகமா உக்காந்திருந்தான் அந்த லூசுப்பையன். அவங்க எப்படி அவனை இரண்டு வாரத்துல மறக்க முடியும்? ஆனால் அவனுக்கு திரும்பி வந்து லக்கிம்மா அவனை சாஹி என்று சொல்லும் வரை அந்த பயம் இருக்கும் என்று அவளுக்கு நன்றாகவே தெரியுமே. சிரித்துக்கொண்டே எழுந்து அறைக்குள் போனவள் குளித்து விட்டு வந்தாள்.

“உங்க சாஹி வந்ததும் அவன் கிட்ட பேசி நம்மளே சொந்தமா ஒரு குட்டி பிரஸ் ஆரம்பிக்கலாம்” என்று வர்ணி சொல்லவும்

“நமக்கு தான் இருக்கே” என்றார் லக்கி குழப்பமாய்

“நல்ல ஆளு நீங்க..அது செல்வி அக்காவோடது. நாம நமக்கு சொந்தமா ஒண்ணு நம்ம மால்லையே ஆரம்பிப்போம். எங்க காபே பக்கத்துல…அங்கே நீங்க தான் முதலாளி சரியா?”

அவள் சொன்னதை கிரகித்தாரோ இல்லையோ அவளுக்கு தெரியாது. அவரது சந்தோஷமான புன்னகையே அவளுக்கு போதுமாய் இருந்தது.

இந்த இரண்டு வாரம் எப்படி போனதென்றே வர்ணிக்கு தெரியவில்லை. ஆனால் இந்த கடந்த நாட்கள் அவளை எப்படி பண்படுத்தியது என்பது அவளுக்கே பெரிய அதிசயம் தான். எப்போதும் பறந்து கொண்டே இருக்கும் அவளுக்கு நிதானத்தை கற்றுக்கொடுத்தது.. உலகத்தை பார்க்கும் பார்வையை மாற்றியது… இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒரு குழந்தைக்கு பெற்றோர் ஆகும் போது, நம் வாழ்க்கை மீண்டு போக முடியாத ஒரு பாதைக்கு மாறும் என்பார்கள், வர்ணிக்கும் இந்த இரண்டு வாரங்கள் அப்படித்தான் உணர வைத்தன.

இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் அவன் வந்துவிடுவான்.

அவனை எண்ணிய கணமே அவளது இதழ்களில் சிரிப்பு முளைக்க பாடலொன்றை முணுமுணுத்தபடி தலைவாரி கிளிப் போட்டுக்கொண்டவள் அவன் வரும் நேரத்துக்காய் காத்திருக்க ஆரம்பித்தாள்.

எதிர்காலத்தில் இப்படி ஒரு உறவு அவளுக்கு கிடைக்கும் என்று எண்ணியதே இல்லையே.. முழுமனத்தால் அவளுக்கானவன் என்று ஒருவனை ஏற்று அவனோடு ஒரு குடும்பத்தை உருவாக்குவது குறித்து அவள் மனதில் எப்போதுமே பயமும் குழப்பங்களும் தான் இருந்தது. ஆனால் சாஹித்யன் வந்த பிறகு எந்தவொரு கேள்வியும் இல்லாமல் அவளுடைய இடத்தில் சென்று பொருந்திக்கொண்டது போல ஒரு ஆசுவாச தளர்வு மட்டும் தானே அவளுக்கு இருந்தது.

அவன் செய்ததை போலவே இரண்டு நாட்களுக்கு அவனுக்கு சமைக்கும் வேலை வைக்காமல் பத்திரமாய் பாக் செய்த உணவுகளோடு லக்கியின் பொருட்களையும் சரியாய் அடுக்கி ஹாலில் கொண்டு வந்து வர்ணி வைக்க கதவு கடகடவென தட்டப்பட்டது.

தட்டலின் வேகமே அடிவயிற்றில் கலக்கத்தை உண்டு பண்ண சாஹி? என்றபடி ஓடிப்போய் கதவை திறந்தவள் வெளியே நின்றவனை பார்த்து அதிர்ந்தே போனாள்.

சாஹித்யனே தான். ஆனால் கண்கள் கோபத்தில் செவ்வரியோடிக்கிடக்க அவனது தலை மொத்தமாய் கலைந்து கிடந்தது. எங்கோ யாரோடேயோ சண்டைக்கு போனதை போல ஷர்ட் எல்லாம் இழுபட்டு அழுக்காகி ..அவள் இதுவரை அவனை இப்படி ஒரு கோலத்தில் பார்த்ததே இல்லை. அதெல்லாம் மீறி அவனது கண்களின் கோபம் தான் அவளுக்கு முதலாவதாய் மனதில் படிந்தது.

“என்னாச்சு..முதல்ல உள்ளே வாங்க” என்று வர்ணி பதட்டமாய் அழைக்க

விடுவென உள்ளே வந்தவன்

“என்னாச்சு சாஹி, என் இப்படி இருக்கீங்க?” என்று வர்ணி அவசரமாய் அவனை ஆராய “சாஹி” என்று சிரித்த அம்மாவை பார்த்து வலிந்து புன்னகைத்து விட்டு இவளது கையை முரட்டுத்தனமாய்பிடித்து இழுத்துக்கொண்டு அறைக்குள் போக அதிர்ச்சியில் அவனோடு இழுபட்டாள் வர்ணி.

அறைக்குள் போய் கதவை சாத்தியதுமே..

“சாஹி” என்று அவள் கோபமாய் கேட்க வர

ஒற்றைக்கையால் அவளை நிறுத்தியவன்

“அம்மாவை யாரோ மனோகரனாமே? அவன் வீட்டுக்கு கூட்டிட்டு போனியா? என்று கேட்டான்.

வர்ணிக்குள் இடி இடிக்க ஆரம்பித்தது. இதை பக்குவமாய் அவனோடு பேசத் தானே அவள் இவ்வளவு நேரமும் காத்திருந்தாள்.

“சாஹி..அது வந்து” எப்படி ஆரம்பிக்க என்று தெரியாமல் அவள் தடுமாற

“கூட்டிட்டு போனியா இல்லையா?” என்று ஒவ்வொரு வார்த்தையையும் நெருப்பாய் துப்பினான் அவன்

“நான் சொல்றதை பொறுமையா கேளுங்களேன்” என்று வர்ணி அவன் கையை பிடிக்க கையை உதறியதிலேயே அவள் வெலவெலத்து போய்விட்டாள்.

“தேவையில்லாமல் பேசாத… கூட்டிட்டு போனியா இல்லையா?அதுக்கு மட்டும் பதில் சொல்லு ” மீண்டும் அழுத்தமாய் கேட்டான் அவன்

“ஆம்” என்று அவள் தலை அசைய கண்களில் மழுக்கென்று நீர் கட்டிக்கொண்டது அவளுக்கு .

அவளையே பார்த்திருந்த அவனது கண்களிலோ உயிரே இல்லை. ஐயோ என்றாகி விட்டது அவளுக்கு.

“அந்த மனோகரனுக்கும் அம்மாவுக்கும்..” என்று ஆரம்பித்தவன்..அதை சொல்ல முடியாமல் விழுங்கி விட்டு “அந்த கதை உனக்கு தெரியுமா தெரியாதா?” என்று அவளது கண்ணையே பார்த்தபடி கேட்க தெரியாது என்று சொல்லேன் என்று அவன் கண்கள் அவளை இறைஞ்சின

சாஹி.. அவளுக்கு குரல் தழுதழுத்தது விட்டது. இப்படிக்கேட்டால் எப்படி சொல்வது?

“நீங்க நினைக்கற போல இல்லை சாஹி. கொஞ்சம் பொறுமையா கேளுங்களேன்.”

“அப்போ உனக்கு தெரியும் இல்லைடி?” ரௌத்ரனாய் நின்று கொண்டிருந்தான் அவன்

சாஹி..

தலையில் கைவைத்துக்கொண்டவன் “நான் உன்னை நம்பினேன்டி. எவனையும் நம்பி அவங்களை விட்டுட்டு போனதேயில்லை. உன்னை நம்பினேன்டி.” என்று நெற்றியில் அடித்தவன் “உடம்பு சரியில்லாதவங்க அவங்க . யோசிக்க கூட தெரியாது. அவங்களை போய் பழைய காதலனை பார்க்க போயிருக்காங்கன்னு பேச்சு கேட்க வச்சிட்டியேடி அவங்க கௌரவம் உனக்கு ஒண்ணுமே இல்லையா? ஒரு நிமிஷம் என்னை நினைச்சு பார்த்திருந்தா இதை செஞ்சிருப்பியா?” என்றவன் கண்களில் நீர் நிரம்ப

யாரோ அவளது இதயத்தை முறுக்கி பிழிவது போலாகி விட்டது வர்ணிக்கு.

“சாஹி. யாரோ சொல்றத விடுங்க..நீங்க அப்படி நினைக்கிறீங்களா? நான் அவங்களை அசிங்கப்படுத்துற போல நடப்பேனா? நான் பார்த்தது எதுவும் நீங்க பார்க்கலை. முழு நேரமும் நான் கூடவே இருந்தேன். எவனோ நம்ம அம்மாவை பத்தி பேசினா நம்மளும் அதுக்கு ரியாக்ட் பண்ணனுமா? அவங்களுக்கு அப்படியெல்லாம் நினைக்க கூட தெரியாது சாஹி . அங்கே நடந்த விஷயமே வேற. ப்ரஸ்” என்று அவள் தவிப்பாய் புரியவைத்து விட ஆரம்பிக்க

அவனோ அவள் சொல்வதை கேட்டது போலவே தெரியவில்லை.

“யாருமே இல்லாம தன்னந்தனியா அம்மாவை நான் பார்த்துக்கிட்டேன்டி. என்னை கூட எவனும் கைநீட்டி பேசிடக்கூடாதுன்னு அவ்ளோ ஒழுக்கமா இருப்பேன். என் முன்னாடி எங்கம்மாவை தப்பா பேசற அளவுக்கு கொண்டு வந்து விட்டிட்டியே..”

விஷயத்தை கொஞ்சமும் புரிந்து கொள்ளாமல் கௌரவம் போய்விட்டது என்றே நின்று கொண்டிருக்கிறான் நான் சொல்வததை இவனுக்கு புரிந்து கொள்ளக்கூட முடியாது என்ற கையாலாகா உணர்வில் வர்ணி கண்ணீர் சொரிய நின்று கொண்டிருக்க

“உனக்கு எல்லாமே விளையாட்டுதான்ல? எதைத்தான் வாழ்க்கைல சீரியஸா எடுப்ப? உன்னை பத்தி தெரிஞ்சும் நான் ..”

“சாஹி” அவளுக்கு கோபமும் வருத்தமும் பேசவே நாவு குழறியது.

என்னால அவங்களை அப்படி பார்க்க முடியலையே.. நீ வந்து உன்னோட அம்மா உன்னோட அம்மான்னு சொல்லும் போது தானே அவங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு புரியுது.. நான் உனக்கு ஒண்ணுமே இல்லையா? என் பக்கம் ஏதாவது இருக்கும் என்று எண்ணிப்பார்க்க கூட உனக்கு மனசில்லாம போய்டுச்சா? ஆனால் அவன் தந்த காயத்தையும் மீறிக்கொண்டு அவன் உடைந்து நின்ற கோலமே மனதை தாக்க

ஓடிப்போய் அவன் கையை பற்றிக்கொண்டு “சாஹி என் இடத்துல நீங்க இருந்து நான் பார்த்ததை நீங்களும் பார்த்திருந்தா அதே தான் செய்திருப்பீங்க? எனக்கு என் சாஹித்யனை தெரியும்” என்றாள் வர்ணி விம்மியபடியே
 

Author: Ush
Article Title: லக்கி வீடு - 19
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Ush

Well-known member
Feb 8, 2026
71
174
93
“உன் சாஹித்யனா?” என்று விரக்தியாய் சிரித்தவன் “தினமும் போன்ல பேசுவேன்ல..என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லணுன்னு தோணிச்சா உனக்கு?” என்று கேட்டான்.

“போன்ல பேசி புரியவைக்கற விஷயம் இல்லை இது. ஏன் உங்களுக்கு புரியலை? நான் நம்ம குடும்பமனு நினைச்சு தான் இதை செஞ்சேன். வேணும்னா இப்போவே நீங்களும் எங்க கூட வாங்க. கண்ணால பாருங்க உங்களுக்கு புரியும்” அவள் அவனை இழுக்க

ச்சை… என்று அவளை உதறித்தள்ளியவன் “அவ்வளவு தாண்டி உனக்கு!” என்று குமுறியவன் “குடும்பமா? குடும்பத்தை பத்தி உனக்கு என்னடி தெரியும் ராஸ்கல்? “என்றவன் கண்ணை மூடி திறக்க

இவளோ தன்னை ஒரு லாரி வந்து மோதி விட்டு போன உணர்வில் சொன்னது நீதானா? என்று அதிர்வாய் பார்த்துக்கொண்டு நின்றாள். பேசக்கூட வார்த்தை வரவில்லை.

“போதும். நீ பண்ணது எல்லாத்துக்கும் பெரிய கும்பிடு. இனிமே என் கண்லயே படாத. பட்ட..என் கோபத்தை பத்தி உனக்கு தெரியாது சாவடிச்சிருவேன்!” என்று ஒற்றை விரல் நீட்டி குமுறிவிட்டு வெளியே போய்விட்டான் சாஹித்யன். அப்படியே கட்டிலில் தோய்ந்து போய் அமர்ந்திருந்தாள் வர்ணி. அவன் லக்கியை கூட்டிக்கொண்டு பெட்டிகளை எடுத்துக்கொண்டு போனதெல்லாம் அவளுக்கு தெரியாது.

குடும்பத்தை பத்தி உனக்கு என்ன தெரியும் என்ற அவனது கேள்வி தான் திரும்ப திரும்ப அவளது காதில் கேட்டுக்கொண்டே இருக்க கண்ணில் மழையாய் நீர் சொரிந்து கொண்டே இருந்தது.

நான் தெளிவாய் தானே இருந்தேன். அம்மா தம்பி அக்கா என்று பழகுவார்கள், நாம் என்றைக்கு குடும்பத்துக்குள் நுழைகிறோமோ அன்றைக்கு தெரியும் சுயரூபம் என்று தெரிந்திருந்த எனக்கு அந்த வரிசையில் நீயும் இருப்பாய் என்று எனக்கு தெரியவில்லையே..

நான் விளையாட்டு தனமாய் எல்லாம் செய்பவள் தான். ஆனால் உனக்காகத்த்தானே அத்தனை கவனமாய் இருந்தேன்! எனக்கு நன்றாகவே தெரியுமே நீ இதை கேள்விப்பட்டால் சாதாரணமாய் எடுத்துக்கொள்ள மாட்டாய் என்று. என்னால் முடிந்தவரை லக்கிம்மாவை நானே வெளியே போக விடாம தானே வச்சிருந்தேன். அவங்க உயிரே இல்லாம இருக்கறதை என்னால பார்க்க முடியலையே..அதனால தானே உண்மை என்னன்னு பார்க்க அங்கே போனேன். நீ வந்ததும் உன்கிட்ட புரியவச்சு மால்லையே அவங்களுக்கு ஒரு சின்ன பிரெஸ் செட் பண்ணி கொடுக்கலாம்னு வேற நினைச்சேன்..கொஞ்சம் கூட உண்மை நிலைவரம் தெரியாம எவனோ என்னமோ சொல்லிட்டானாம்.. வந்து ஆடிட்டு போற..

நம்ம அம்மாவை பத்தி நமக்கு தெரிய வேணாமா? அவங்க தனியாவா போனாங்க.. நானும் தானே கூட இருந்தேன். நான் மட்டுமா கூட இருபது பேருக்கு மேல எங்க கூட இருந்தாங்க.. அவங்க குழந்தைடா..அவங்களை போய்! யாரோ சொல்றானாம்..அவன் வாயை உடைக்கவேணாம்? அவன் பேசறதுக்கும் நீ செய்றதுக்கும் என்ன வித்யாசம் இருக்கு? ரெண்டும் ஒண்ணு தானே..

எண்ணிக்கொண்டே போனவள் அதுதான் நான் யாரோன்னு சொல்லிட்டானே. இதெல்லாம் குடும்ப விஷயம். இனிமேல் எனக்கு என்ன இருக்கு. குடும்பம் என்றால் எனக்கு என்ன தெரியும்? என்று விரக்தியாய் கண்ணீரை ஆவேசமாய் துடைக்க லக்கியின் அப்பாவி புன்னகை முகம் நினைவில் வந்து அவளது கேவல் இன்னும் பெருத்தது.

முடிஞ்சு என் வாழ்க்கைல எல்லாமே முடிஞ்சு… உங்களுக்கு வச்சு பார்த்துக்க முடியலைன்னா என்னை எதுக்கு பெத்தீங்க? உங்க இரக்கம் இப்போ என்னை என்ன பண்ணுது பார்த்தீங்களா? சாகும் வரை நான் யாருக்குமே சொந்தமாக முடியாது. இரக்கம் பார்க்காம அப்போவே என்னை பெக்காம விட்டிருக்கலாமே.. உங்களை ஒவ்வொருத்தங்க கிட்டயும் தேடி பாசம் வச்சு இப்படி திட்டு வாங்கி மனசு நோகாம அடுத்த ஜென்மத்துக்கு போயிருப்பேனே..அவளது உள்ளம் சுயபச்சாத்தாபத்தில் நைந்து போனது.

இந்தப்பக்கம் வீட்டுக்குள் வந்து கதவை அடைத்தவன் மதிய சாப்பாடு மருந்தெல்லாம் கொடுத்து லக்கியை தூங்க வைக்கும் வரை முகத்தை எப்படி சரியாக வைத்துக்கொண்டிருதான் என்று அவனுக்கே தெரியாது.

அறைக்குள் வந்து கட்டிலில் கண்ணுக்கு மேல் கையை வைத்துக்கொண்டு படுத்துக்கிடந்தவனின் மனது உலைக்களமாய் கொதித்துக்கொண்டிருந்தது.

எவ்வளவு சந்தோஷமாய் வந்தான். கடைசியில் அவன் யாரை நம்பினானோ அவளே அவனை தலைகுனிந்து நிற்க வைத்து விட்டாள். அதைக்கூட அவன் பொறுத்திருப்பான். அம்மா? உளமார நேசிக்கிறாள் என்று நினைத்தானே.. அவரைப்போய் களங்கப்படுத்தி விட்டாளே..அதுவும் அவரை தன் தரப்பு விளக்கத்தை பேசக்கூட முடியாத நிலையிலுள்ளவரை! மனது தாங்கவே இல்லை..

இதுவரை அவன் தள்ளியே வைத்திருந்த உறவுகளில் ஒருவன் அவனையே கைநீட்டி கேவலமாய் பேசிவிட்டான்.

அம்மா யாரையோ காதலித்தார்களாமே அதுவே அவனுக்கு புதிய செய்தி.

அவன் பார்த்திருக்கிறான். அப்பா அம்மாவை அடக்கி வைத்திருந்தது. அவர் இல்லாமல் பொதுவாக அம்மா வெளியேவே போனதில்லை. தன்னை சுற்றி வீட்டுக்குள்ளேயே ஒரு அமைதி உலகை உருவாக்கிக்கொண்டு அம்மா வாழ்ந்தது. இதெல்லாம் அவனுடைய அப்பா ஒரு ஆணாதிக்கவாதி என்பதால் என்று நினைத்திருந்தானே..இப்போது அதெல்லாம் புதிய அர்த்தத்தில் தெரிந்து அவனை உலுக்கியது.

அம்மா இதுவரை வாழ்ந்தது வற்புறுத்தலின் பேரிலான ஒரு வாழ்க்கையை தானா? அவன் கூட அப்படி ஒரு வாழ்வின் விளைவா? மனது பிடுங்கி வெயிலில் போட்ட செடியாய் காய்ந்தது. அதிகம் வெளியே போகாமல் அம்மாவை வீட்டுக்குள் வைத்திருந்தது கூட… நினைக்காதே மனமே நினைக்காதே..கண்ணீர் பொங்கி வந்தது அவனுக்கு.

அவனுக்கு தெரியும் இப்போது இருக்கும் அம்மா பெரும்பாலும் அவரது நிறைவேறாத ஆசைகளின் உருவகமே.. அப்படியானால் அது கூட…

அதற்கு மேல் சிந்திக்க கூட அவனது மனதில் பலமில்லை. அந்த அவனின் பேச்சு திரும்ப திரும்ப மனதில் சுற்றி வந்து கொண்டே இருந்தது.

ஏதாவது ஸ்வீட் வாங்கிப்போகலாம் என்று கடையில் இறங்கியபோது தான் அந்த கூட்டத்தில் ஒருவன் அவனோடு வம்பு வளர்த்தான்.

“நல்ல வேளை உங்கப்பா போய் சேர்ந்துட்டான்”

“நீ அந்த ரங்கநாதன் குடும்பத்தை கண்டவங்களோட சேர்ந்து அசிங்கப்படுத்தினதா கேள்விப்பட்டப்போ கூட நாங்க நம்பலை.”

மாலுக்குள்ளேயே யாரோ ஊர் பேர் தெரியாத பொண்ணு கூட ஜோடியா சுத்துறன்னு கேள்விப்பட்டோம். சந்திரன் பையன் தவறமாட்டான்னு அதையும் தட்டி விட்டுட்டோம்.”

“இப்போ இந்த அசிங்கத்தை பார்த்த பிறகும் நம்ம எப்படி சும்மா இருப்போம். முப்பது வருஷம் ஆகி மனநிலை சரியில்லாம போயும் பழைய காதலனை தேடியிருக்காளாமே உங்கம்மா? அந்த மனோகர் வீட்டுக்கு அவளை கூட்டிட்டு போறதே நீ சுத்துற பொண்ணு தானாமே.. ச்சை. எங்களுக்கு இனிமே உன் கூட ஒட்டுமில்லை உறவுமில்லை” என்று சொல்ல சுற்றியிருந்தவர்களின் பார்வை வேறு அவனையே துளைக்க

“எங்கம்மாவை பத்தி அபாண்டமா பேசறியா?” என்று அந்த ஆளை பிடித்து சாஹித்யன் அடித்தே விட்டான். கூட சேர்ந்து வந்தவன் “உனக்கு தெரியலைன்னா அது நடக்கலைன்னு அர்த்தமா, உங்கப்பாவுக்கு அவசரமா கல்யாணம் பண்ணி வச்சதே உங்கம்மா ஓடிப்போயிரும்னு பயந்து தான்” என்று சொல்ல அவனையும் இவன் அடிக்க போய் பெரிய கைகலப்பாகி கடைசியில் சுற்றி நின்றவர்கள் அவர்களை பிரித்து விட்டு

தம்பி அம்மாவுக்கு புத்தி சுவாதீனம் இல்லைன்னா தனியா வீட்டுக்குள்ளேயே வச்சு பார்த்துக்கோப்பா.இப்படி வெளியே விடாத. உங்கப்பா கவுரமா வாழ்ந்த மனுஷன். அவனுக்காகவாவது” என்று அவனிடம் சொல்லி செல்ல உடைந்தே போய்விட்டான் அவன்.

எத்தனை அதிர்ச்சியை தான் தங்குவது? அவனுக்கு முன்பாகவே சுற்றி நின்றவர்கள் லக்கியை மனோஹரோடு பார்த்ததை போல கதை கட்டி பேச ஆரம்பிக்க சாஹி மனதளவில் மரித்தே போய்விட்டான். கண்டிப்பாய் வர்ணிக்கு இது தெரிந்திருக்காது என்று அவன் மனம் நம்பிற்று.

அவளது ஆம் என்ற ஒற்றை வார்த்தை அவனை உடைத்து போட்டு விட்டது.

எப்படி பட்ட பழிக்கு அம்மாவை ஆளாக்கி விட்டாள்! அம்மாவுக்கு பிரக்ஞயில்லை. இவளுக்கு புரியாதா?

சுயநினைவுகள் இல்லையென்பதால் மட்டும் அவர் இந்த சமூகத்தின் கண்களில் குற்றங்களுக்கு விலக்குப்பெற்று விடுவாரா? இப்படி ஒரு கறுப்பு புள்ளி எங்கள் மேல் வர நீயே காரண கர்த்தாவாய் இருந்திருக்கிறாய்..அவனுக்கு தாங்கவே முடியவில்லை.

குடும்பம் என்பதே எனக்கு கனவென்று நினைத்தேன், என் வேலிகளை தாண்டிக்கொண்டு உள்ளே வந்து என்னை கனவு காண அனுமதித்ததாய்..அதெல்லாம் வெறும் கானல் நீர் என்று எனக்கு தெரியவில்லையே.

அவளிடம் கோபத்தில் அதிகமாய் வாய் விட்டு விட்டேனோ? என்று நேசம் கொண்ட மனம் இன்னும் வருந்த

அடிக்காமல் என்னை கட்டுப்படுத்தியதே பெரியவிஷயம். வேண்டாம் என்று ஆயிற்று. வார்த்தையை விட்டு என்ன விடாமல் இருந்தென்ன? விரக்தியாய் அவனே பதிலும் சொல்லிக்கொண்டான்.

எவ்வளவு நேரம் அப்படி இருந்தானோ தெரியாது. ஒரு முடிவோடு எழுந்தவன் டாக்டர் கொடுத்த கார்டை தேடி எடுத்து வந்தான்.

“எனக்கு நீங்க சொன்ன அந்த பயிற்சி பெற்ற நர்ஸ்களில் ஒருத்தங்க வேணும் டாக்டர்”

….

“இல்லை. முழுநேரம். எட்டுமணிக்கு வீட்டுக்கு வரணும். நான் ஐந்து மணிக்கு திரும்பி வந்ததும் அவங்க கிளம்பற போல இருந்தா நல்லது”

…

நாளைக்கே”

….

தாங்க்ஸ் டாக்டர்.








என்னை திட்டாதீங்க மக்களே
 
Aug 3, 2024
89
45
43
திட்டாம என்ன செய்றது..
இப்படி செய்திட்டீங்களே..
புலி வரும், சிங்கம் வரும் னு பயந்துட்டு இருந்தா கண்ணுக்கு தெரியாத பேயை வச்சி பீதியை கிளப்புறீங்க
 
Last edited:
  • Like
Reactions: yaazh30 and Ush

Mano Ramesh

Member
May 28, 2026
36
28
18
நீங்க தள்ளிக்கோங்க திட்டு வாங்க வேண்டியது சாஹி தான். அடேய் அவங்களுக்கு என்னமோ இது மட்டும் தான் பிரச்சனை மாதிரி பீல் பண்ற நீ என்ன பண்ணாலும் இல்லைனாலும் பிரச்சினை தான். அதிர்ச்சி நியாயம் தான் அதுக்குன்னு இவனுங்க எல்லாம் ஒரு ஆளு அவங்க சொல்றது எல்லாம் கருத்துன்னு இஷ்டத்துக்கு பேசிட்டு அடிக்காமல் இருந்ததே சாதனைன்னு வேற நினைச்சிட்டு இருக்க. இவனை விடாத வர்ணி வெச்சு செஞ்சுடு
 

Ush

Well-known member
Feb 8, 2026
71
174
93
திட்டமா என்ன செய்றது..
இப்படி செய்திட்டீங்களே..
புலி வரும், சிங்கம் வரும் னு பயந்துட்டு இருந்தா கண்ணுக்கு தெரியாத பேயை வச்சி பீதியை கிளப்புறீங்க
naan clue koduthutte than vandhen :(
 

Ush

Well-known member
Feb 8, 2026
71
174
93
நீங்க தள்ளிக்கோங்க திட்டு வாங்க வேண்டியது சாஹி தான். அடேய் அவங்களுக்கு என்னமோ இது மட்டும் தான் பிரச்சனை மாதிரி பீல் பண்ற நீ என்ன பண்ணாலும் இல்லைனாலும் பிரச்சினை தான். அதிர்ச்சி நியாயம் தான் அதுக்குன்னு இவனுங்க எல்லாம் ஒரு ஆளு அவங்க சொல்றது எல்லாம் கருத்துன்னு இஷ்டத்துக்கு பேசிட்டு அடிக்காமல் இருந்ததே சாதனைன்னு வேற நினைச்சிட்டு இருக்க. இவனை விடாத வர்ணி வெச்சு செஞ்சுடு
exactly ore test than vandhathu. naan polisaamiyar thannu prove pannittaan. varni vera its all or nothing kinda person. enna aavumo therla
 

Chitra ganesan

Active member
Aug 3, 2024
92
-13
43
நாங்க ஒன்னு நினைச்சி பயந்துட்டு இருந்தா நீங்க வேற ஒன்னு கொடுத்து வர்ணியை மட்டும் இல்லாமல் எங்களையும் கலங்க வச்சிட்டேங்களே🙄
 

Ush

Well-known member
Feb 8, 2026
71
174
93
Deii sahiii 🙄
Press nu sollum podhe edho history irukum nu thonuchu. But athu ipdi irukum nu ninaikala. But ivan react pannathu too much 😑

Ithu adikka vera seivanama.. 🧐
avan adi vaanguvaan wait pannunga :p
 

Ush

Well-known member
Feb 8, 2026
71
174
93
T
Wow awesome
hank you
நாங்க ஒன்னு நினைச்சி பயந்துட்டு இருந்தா நீங்க வேற ஒன்னு கொடுத்து வர்ணியை மட்டும் இல்லாமல் எங்களையும் கலங்க வச்சிட்டேங்களே🙄
innume 2 episodes episodes than. wait pannunga semma sambavam loading hhe
Ithai naan ethirparkalai .
aww clue koduthuttu vandhene
 
  • Wow
Reactions: Chitra ganesan