மொத்தத்தில் இரு பையன்களும் ராஜா வீட்டுக் கன்றுக் குட்டிகளாக இருந்தாலும், மனிதாபிமானம் கொண்டவர்களாகத்தான் வளர்ந்திருந்தார்கள்.
காயத்ரி தேநீரை அருந்தி முடித்திருக்க,
“எதாச்சும் சாப்பிடு காயூ! லன்ச் கூட சரியா எடுத்துக்கலையே நீ” என்றபடியே எழுந்து போய் மனைவிக்கு சில பதார்த்தங்களைத் தட்டில் வைத்துக் கொண்டு வந்து கொடுத்தார் விஜயசேனா.
“நீங்களும் எடுத்துக்கோங்க டியர்” எனக் கணவரின் தட்டையும் கவனித்தார் காயத்ரி.
எப்பொழுதும் போல பெற்றவர்கள் இருவரும் அவர்களின் தனி உலகத்தில் நுழைந்து கொண்டதை பார்த்துப் புன்னகைத்துக் கொண்டான் விஷ்வா. காயத்ரியை, பணம் பணத்தோடு சேர வேண்டும் எனும் கான்சப்டில்தான் மணந்து கொண்டார் விஜய். காயத்ரியுமே பெற்றவர்கள் பார்த்து வைத்தத் தங்கள் தகுதிக்கு ஏற்றக் கணவன் எனும் காரணத்துக்காகத்தான் விஜயை மணந்து கொண்டார். ஏதோ ஒரு காரணத்துக்காக இணைந்திருந்தாலும், இருவருக்கும் திருமணத்துக்குப் பிறகு காதல் வந்து விட்டிருந்தது. தங்கள் நேசத்தை அவர்கள் பிள்ளைகளின் முன் மூடி மறைத்தது இல்லை. எப்பொழுது வீட்டுக்குள் நுழைந்தாலும், மனைவியை லேசாய் அணைத்து உச்சியில் முத்தமிட மறக்க மாட்டார் விஜய். காயத்ரியும் காலையில் அவருக்கு முன்னே எழுந்து ஜாகிங் முடித்து விட்டு வரும் கணவரின் கன்னத்தில் முத்தமிடாமல் தனது நாளைத் துவங்க மாட்டார்.
இதையெல்லாம் பார்த்துத்தான் வளர்ந்தார்கள் விஷ்ணுவும், விஷ்வாவும். தங்கள் நண்பர்களின் வீட்டில் சர்வ சாதாரணமாய் நடக்கும் விவாகரத்துக்கள், அஃபேர்கள் போன்று ஏதுமில்லாமல், இவர்களைப் பெற்றவர்கள் அந்நியோன்யமாய் இருப்பதில் இருவருக்குமே மிகுந்த பெருமை.
ஒரு வழியாய் மூவரும் தேநீர் அருந்தி முடித்து மறுபடியும் கையில் இருக்கும் பிரச்சனைக்கு வந்தார்கள்.
“இது சரிப்படாது விஷ்வா” என்றார் விஜய்.
“ஏன்ப்பா?”
“அந்தப் பொண்ணுக்கு பெருசா பின்புலம் ஒன்னும் இல்ல”
“பெரிய பின்புலம்னு ஏன் சொல்றீங்க! பின்புலமே இல்லன்னு சொல்லுங்க! ஏதோ அனாதை ஆசிரமத்துல வளந்திருக்கா! அது மட்டும் இல்லாம, நம்ம எஜீகேஷன் ஃபண்ட்ல படிச்சு, நம்ம கன்சர்ன்லயே வேலைப் பார்க்கற பொண்ணுடா! சேனா குரூப்சோட நெக்ஸ்ட் எம்.டி விஷ்ணுசேனாவுக்கு அவத்தான் வைஃப்னு எப்படி நாங்க வெளிய சொல்லிக்கறது?”
“இதே கேள்விய நேத்து சில மணி நேரம் இங்க வந்திருந்தானே விஷ்ணு, அவன் கிட்ட கேட்டீங்களா மாம்?”
கணவனும் மனைவியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டனர்.
“டாட்! மாம்! சீக்கிரம் சொல்லுங்க! நான் இன்னும் நாலு மணி நேரத்துல ஜப்பானுக்கு ஃப்ளைட்ட புடிக்கனும்! இவ்ளோ இஸ்யூ அவன் வாழ்க்கைல போய்ட்டு இருந்தாலும், உங்க மகன் கடமை கண்ணாயிரம் என்னைப் போய் ஒசாக்கா ஹோட்டல் டேக் ஓவர பார்த்துக்கன்னு சொல்லிட்டுத்தான் அண்ணிய தேடிப் போய்ருக்கான்”
“டேய்! டேய் விஷ்வா! அண்ணின்னுலாம் சொல்லாதடா!” எனப் பதறினார் காயத்ரி.
விஷ்வாவுக்குத் தாயின் படபடப்பில் லேசாய் சிரிப்பு எட்டிப் பார்த்தது! ஆனாலும் அடக்கிக் கொண்டான். அவரை நெருங்கிக் கட்டிக் கொண்டவன்,
“அம்மா! விஷ்ணுவ பத்தி உங்களுக்குத் தெரியாதா? எத்தனைப் பொண்ணுங்கள கொண்டு வந்து நிறுத்தனீங்க நீங்க! பிஸ்னஸ் சர்க்கிள்ல உள்ளவங்க, சொந்தக்காரங்க, வெளிநாட்டு தொழிலதிபர் வீட்டுப் பொண்ணுங்கன்னு கொண்டு வந்தீங்க! அதுக்கு அவன் என்ன சொன்னான்? நீங்களும் டாடியும் வாழற மாதிரி ஒரு இனிமையான வாழ்க்கை நான் வாழனும்மா! எனக்குப் பணம், அந்தஸ்த்துலாம் முக்கியம் இல்ல! பார்த்ததும் ஒரு ஸ்பார்க் வரனும்! மனசுக்குள்ள, இவ கூட வாழ்ந்தா வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும்னு தோணனும்! அப்படி யாராச்சும் கிடைக்கறப்ப கல்யாணம் பண்ணிக்கறேன்! ப்ளீஸ்னு சொன்னான்ல! இப்ப கிடைச்சிருச்சு! அதான் கல்யாணத்துக்கு ரெடியாகிட்டான். அப்பா சொல்லிக் குடுத்ததுதான்மா! செய்யற எல்லாத்துலயும் 100 பர்சண்ட் குடுக்கனும்னு எங்க நெஞ்சுல பதிச்சு வச்சிருக்காரு! அதைதான் ஃபோலோ பண்ணி நம்ம ப்யூச்சர் எம்.டி காதல்ல காட்டறாரு” என்றான்.
எப்பொழுதுமே ஒரு ப்ராஜெக்ட் முடியும் போது தன்னைக் கொஞ்சம் ரிலேக்ஸ் செய்து கொள்வதற்காகத்தான் அவர்கள் ஹோட்டலில் ட்ரெய்னர், கைட் போன்ற வேலைகளில் ஈடுபடுவான் விஷ்ணு. அப்படித்தான் சிங்கப்பூரில் ஒரு டேக் ஓவர் முடித்து விட்டு, வியாட்நாமுக்கு வந்திருந்தான். அங்கே மீள முடியாத காதல் கடலில் விழுந்திருந்தவன், ஓசாக்கா டேக் ஓவர் முடித்து வந்து நேரில் ஊர்மியைப் பார்த்துத் தன்னைப் பற்றி முழுதாக அவளிடம் சொல்லி விடுவதற்குதான் இருந்தான். சாதாரண ட்ரெய்னராக பழகும் போதே, அவள் ஒதுக்கம் காட்டியிருக்க, அவள் வேலைப் பார்க்கும் நிறுவனத்துக்கே தாம்தான் அடுத்த எம்.டி எனச் சொல்லி இருந்தால், விழுந்தடித்துக் கொண்டு ஓடியிருப்பாள் எனப் புரிந்திருந்தது இவனுக்கு. உண்மையைச் சொல்லும் போது அவளின் எதிர்வினை எப்படி இருக்குமோ எனும் கலக்கம் உள்ளுக்குள் அவனை உருக்கிக் கொண்டுதான் இருந்தது. நேரில் போய் சொல்லி விட்டு, அவள் அடித்தாலும் பிடித்தாலும் காலில் விழுந்தாவது மன்னிப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனும் பல திட்டங்கள் போட்டு வைத்திருந்தான்.
அந்தக் கவலையில் அல்லாடிக் கிடந்தவனை, காணாமல் போய் கலங்கடித்திருந்தாள் ஊர்மிளா. இந்தியாவில் இருக்கும் விஷ்வாவிடம்தான் முதலில் அவளைத் தேடச் சொல்லி உதவிக் கேட்டிருந்தான். அங்கே தம்பி தேடலில் இருக்க, இவன் ஊர் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தான். வேலைகளை பி.ஏவிடம் கொடுத்தவன்,
“விஷ்வா வந்திடுவான்! அது வரைக்கும் சமாளி” எனக் கூறிக் கிளம்பி விட்டிருந்தான்.
விஷ்வா உதய்ப்பூர் ஹோட்டலுக்குத் தானே தொடர்பு கொண்டு விசாரித்தான்.
“ப்ரோ! அவங்க நம்ம கிட்ட வேலைச் செய்ய போட்டிருந்த காண்ட்ரேக்ட் முடிஞ்சிருச்சு”
“அவங்க இல்ல விஷ்வா! அண்ணி” என்றான் விஷ்ணு.
“யா! யா! அண்ணி!” என்றவனுக்கு அண்ணன்காரன் காதலின் தீவிரம் புரிந்தது.
“சோ அண்ணி இதுக்கு மேல வேலையைக் கண்ட்டினியூ பண்ணலன்னு சொல்லிட்டாங்களாம். அங்க எல்லாருக்குமே ரொம்ப அதிர்ச்சி! நெக்ஸ்ட் எங்க போறாங்கன்னு எந்த டீட்டேலும் குடுக்காம கிளம்பிட்டாங்க! இப்போ நான் ஹயர் பண்ண டிட்டேக்டிவ் துப்புத் துலக்கிட்டு இருக்காங்க! கண்டுப்புடிச்சிடலாம் ப்ரோ! டோண்ட் வர்ரி!”
“முடியலடா விஷ்வா! நல்லா பேசிட்டு இருந்தா! அப்புறம் வேலை பிசின்னு சொன்னா! தென் கால்ஸ் கொறஞ்சி மேசேஜ் வந்தது! இப்போ ஆளே ஆப்ஸ்காண்ட் ஆகிட்டா! ரொம்ப பயமா இருக்கு! என்னாச்சோ, ஏதாச்சோன்னு மனசு கிடந்து தவிக்கிது! லவ் இஸ் பெய்ன்னு கேள்விப்பட்டிருக்கேன்! ஆனா அதை அனுபவிச்சுப் பார்க்கறப்பத்தான் என்ன மாதிரி பெய்ன்னு தெரியுது! தூங்க முடியல, சாப்பிட முடியல, நான் நானாகவே இல்ல! நெஞ்சுக்குள்ள இரும்புக் குண்ட தூக்கி வச்ச மாதிரி பளு போட்டு அழுத்துதுடா!” என்றவனின் குரல் கலங்கி ஒலிக்க, பயந்து விட்டான் விஷ்வா!
“ப்ரோ! ப்ரோ! நாம எப்படியாப்பட்ட ஆளுங்க! இண்டு இடுக்கெல்லாம் கூட தேடி புடிச்சு குடுக்கற மாதிரி நமக்கு ஆள் பலமும், பண பலமும் இருக்கு! நீங்க இங்க வாங்க ப்ரோ! எல்லாத்தையும் பார்த்துக்கலாம்!” எனத் தேற்றி இருந்தான் விஷ்வா!
முதலில் சென்னையில் இறங்கிப் பெற்றவர்களைக் காண வந்தான் விஷ்ணு. அவர்களிடம் தனது காதலைச் சொல்லி,
“ஐ அம் நத்திங் விதவுட் ஹெர் மாம்! டாட்!” என்றிருந்தான்.
திகைத்துத்தான் போயினர் பெற்றவர்கள். மகனிடம் கிடைக்கப் பெற்றத் தகவல்களின்படி, ஊர்மிளா எனும் ஓர் ஆனாதைப் பெண் தங்கள் பணத்தைப் பெற்றுப் படித்து, தங்கள் நிறுவனத்தில் வேலைப் பார்க்கிறாள் என்பதே பெரும் இடியாக இருந்தது. மகனின் திருமணத்தைப் பற்றிப் பல கனவுகள் கண்டிருந்த காயத்ரிக்கு மயக்கம் வராத குறைதான்.
ஊர்மி காணாமல் போனதில் இருந்து நெஞ்சுக்குள் பெரிய வெற்றிடத்தை உணர்ந்த விஷ்ணு, அவள் கிடைத்தக் கையோடு திருமணத்தை முடித்து விடும் எண்ணத்தில் இருந்தான். மூன்றாவது முறையாக அவளைத் தவற விட்டு விடக் கூடாது எனும் பயம் கொத்தித் தின்றது இவனை! திருமணம் எனும் உறவில் அவளைத் தன்னோடு பிணைத்துக் கொள்ள வேண்டும் எனும் நோக்கில்தான் பெற்றவர்களைத் தேடி வந்தான் முதலில். அவர்களிடம் தன் மனதை ஆளுபவளைப் பற்றிச் சொல்லி, தனது திருமண எண்ணத்தையும் வெளியிட்டு விட வேண்டும் எனத்தான் சென்னை வந்திருந்தான்.
“நோ சன்!” என இரண்டே வார்த்தைகளில் மறுப்பைக் காட்டினார் விஜயசேனா.
அமைதியாய் தாயை நோக்கினான் விஷ்ணு!
நோ என்பது போல தலையை இடமும் வலமும் அசைத்தார் காயத்ரி.
பெருமூச்சுடன் எழுந்து நின்றான் மகன்காரன்.
“அவளுக்கு என்னம்மா குறை? அனாதைங்கறதா? அந்த நிலைய அவளாப்பா தேர்ந்தெடுத்தா? அது அவ மேல திணிக்கப்பட்ட ஒன்னு! அதை வச்சு அவள வேணாம்னு சொல்வீங்களா? வேற என்னம்மா குறை? பணம் இல்லைன்றதா? எதுக்குப் பணம் வேணும்? உங்க மகன் திறமைசாலி இல்லையா? நான் இன்னும் சாதிச்சுப் பெரும் பணம் ஈட்ட மாட்டேனா? நான் கட்டிக்கப் போற பொண்ணுட்ட இருந்து வரத வச்சித்தான் வாழனும்னு இருக்கா என்ன? நல்லா படிச்சிருக்காப்பா அவ! அவளோட திறமை அறிஞ்சுத்தானே வேலைப் போட்டுக் குடுத்திருக்கீங்க! சில வருஷத்துல எத்தனை கிரேட் ஏறிட்டா அவ உழைப்புனால! என் கூட இருந்தா, அம்மா உங்களுக்குப் பக்கபலமா இருந்தது போல எனக்கு அவ பக்கபலமா இருப்பா! வேறென்ன பிரச்சனை? உங்க சோ கால்ட் அந்தஸ்த்தா? அந்த அந்தஸ்த்து என் கூட சிரிச்சுப் பேசாதுப்பா! எனக்காக கலங்கி நிக்காது! எனக்காக சந்தோஷப்படாது! என்னை எனக்காக மட்டும் லவ் பண்ண பொண்ணும்மா அவ! என் பணத்தைப் பார்க்கல அவ! என் குணத்தப் பார்த்தவ! என் பதவிய பார்க்கல, என் உதவிய மட்டும் பார்த்தவ! என் அந்தஸ்த்த பார்க்கல! என் அன்ப மட்டும் பார்த்தவ! என்னை எனக்காக ஏத்துக்கிட்டவ! அவ கூட வாழ்ந்தா மட்டும்தான் உங்க மகன் வாழ்வான்! இல்லைனா வீழ்ந்துதான் போவான்! ப்ளீஸ் எதையும் நெகட்டிவ்வா சொல்லாதீங்க இப்போ! அவள தேடிப் போறேன் நான்! இந்த நேரத்துல உங்களோட ரிஜேக்ஷன என்னால தாங்கிக்க முடியாது!” என்றபடி பெற்றவர்களைக் கட்டிக் கொண்டவன், சட்டென விலகி வெளியேறிப் போய் விட்டான்.
நகர்ந்து போன மகனின் கண்கள் கண்ணீரால் பளபளத்தது போல இருந்ததை இவர்கள் இருவருமே உணர்ந்திருந்தனர். அதை நினைத்துக் கொண்டே சின்ன மகன் விஷ்வாவைப் பார்த்த விஜயசேனா,
“அவன் என்ன பேசிருப்பான்னு உனக்கும் தெரியும்! இப்போ அந்தப் பொண்ணு காணோங்கற ஸ்ட்ரெஸ்ல இருக்கான்! அவ கிடைக்கட்டும்! பிறகு எல்லாத்தையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வரலாம்” என்றார்.
“குட் லக் மை மம்மி அண்ட் டாடி” எனப் புன்னகைத்தான் விஷ்வா.
அங்கே உதய்ப்பூரில் ஊர்மிளாவின் அறையில் இருந்தான் விஷ்ணு. அவளது பொருட்கள் ஏதும் இல்லாத அறையில், பெண்ணின் வாசம் மட்டும் தேங்கி இருப்பதைப் போல உணர்ந்தான் இவன். அவள் படுக்கும் கட்டிலில், அவளது தலையணையில் தலை சாய்த்துப் படுத்தவனுக்கு கண்கள் கலங்கும் போல் இருந்தன. இங்கே வந்து அவளோடு வேலைப் பார்த்தவர்களை இவனே விசாரித்திருந்தான். அவளோடு நல்ல உறவாய் இருந்த செஃப்கு கூட போகும் இடம் சொல்லி இருக்கவில்லை ஊர்மிளா. மனதே விட்டுப் போனது இவனுக்கு.
“எங்கடி போன? போன்ல விஷ்ணு, விஷ்ணுன்னு கொஞ்சனியே, இப்படி என்னைத் தவிக்க விடத்தானா? ஏன்டி என்னை விட்டு மறைஞ்சுப் போன? ஏன், ஏன், ஏன்?” எனச் சத்தமாகவே புலம்பினான் இவன்.
தூக்கமில்லாமல் கண்கள் சிவந்து கிடந்தன. சரியாகச் சாப்பிடாமல், நீர் அருந்தாமல் உதடுகள் உலர்ந்து கிடந்தன. உள்ளம் ஊமையாய் அழ, உடைந்து போயிருந்தான் இந்த ஆண்மகன். அந்த நேரம் போன் கால் ஒன்று வந்தது!
“ஹலோ” என்றவன் அங்கிருந்து வந்த சேதியில்,
“நேபாளா????”(Nepal) என அதிர்ந்து கூவினான்.

Last edited:
Author: VanishaAdmin
Article Title: Sernthaadu Cindrella--EPI 10(Part 2)
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.