சாத்தியமே!

lakkuCPT

New member
May 24, 2026
20
0
3
மண்டியிடவே வேண்டாம் அல்லாஹ்விடம்!
மன்னிப்புக் கேட்கவே வேண்டாம் ஏசுவிடம்!
கோரிக்கை ஏதும் வேண்டாம்,
பிறப்பறுக்கும் ஈசனிடம்!
.
.
.
.
எப்போது!
.
.
.
எப்போது எனில் . .
.
.
.
.
எழுமெண்ணங்களால் எவ்வுயிர்க்கும்
எவ்விதத் தீங்கும்
எண்ணாதிருக்கையில்!

எப்போதேனும்
எரிந்து விழுகையிலும், எரிசொற்களால் எம்மனதையும் எரிக்காதிருக்கையில், தீயினாற்சுட்டப் புண்ணாய்!

தன் சுயநலத்தேவைக்காய்,
தன் செய்கையால்,
பிறவுயிர்களை இம்மியளவும் துன்புறுத்தாதிருக்கையில்!
.
.
.
சாத்தியமா?
சாத்தியமே!
அன்றைய புத்தர் முதல்,
இடை வந்த வள்ளலார்,
நேற்றைய அன்னை தெரிசா வரை!
சாத்தியம் என்றனரே!

அது சரி,
ஆன்மிகத்தில், மக்கட்தொண்டில் சாத்தியம்!
அரசியலில் சாத்தியமா?
சாத்தியமே!
கண்டதுண்டே கண்கூடாக!
காமராஜர்,
கக்கன்,
கலாம் ஐயா!

மண்டியிடவே வேண்டாம் அல்லாஹ்விடம்!
மன்னிப்புக் கேட்கவே வேண்டாம் ஏசுவிடம்!
கோரிக்கை ஏதும் வேண்டாம்,
பிறப்பறுக்கும் ஈசனிடம்!