நிலவு வந்தது
“ஹாய் நிலா, ஐ அம் சூர்யா!”
“இருந்துட்டுப்போ!”
‘இருந்துட்டுப்போவா!’
“நான் உங்க பக்கத்து ப்ளாட்டுக்குக் குடி வந்துருக்கேங்க! நீங்க பிள்ளைங்கள பார்த்துக்கற டே கேர் வச்சிருக்கீங்கன்னு உங்கம்மா சொன்னாங்க”
“ஓ, டே கேர் விஷயமா பேச வந்தீங்களா? சாரி சூர்யா சார். அது தெரியாம கடுப்பேத்தற மாதிரி பதில் சொல்லிட்டேன். அடிக்கடி நான் போக வர லூசு மாதிரி பார்த்திட்டு நிப்பீங்களா, அதான் ப்ரோபோஸ் பண்ண வந்துட்டீங்களோன்னு நினைச்சிட்டேன். ரியலி சாரி”
“என்னை எப்படிங்க இப்படி நினைக்கலாம்? பக்கத்து வீட்டுல இருக்கீங்களே, நல்லவங்களா கெட்டவங்களான்னு தெரிஞ்சிக்கறதுக்கு உத்துப் பார்க்க மாட்டாங்களா? அது எப்படிங்க பார்த்ததுக்கே ப்ரோபோஸ் பண்ண வந்துருவேன்னு இப்படி கேவலமா நினைக்கலாம்?” குரலில் காட்டம் இருந்தது.
“சூரியா சார், மன்னிச்சிருங்க சார்! என் அழகுல மயங்கி பாதி பசங்க இப்படித்தான் வந்து வழிஞ்சிட்டு நிப்பாங்க! நீங்களும் அந்த கேட்டகரியோன்னு நினைச்சு பேசிட்டேன்.”
“அது எப்படிங்க என்னைப் பத்தி இவ்வளவு உயர்வா நீங்க நினைக்கலாம்? என்னைப் பார்த்தா அழகான பொண்ணுங்க பின்னால ப்ரோபோஸ் பண்ணிகிட்டு வெட்டியா சுத்தறவன் மாதிரி இருக்காங்க? நான் டீசண்டான ஆளுங்க. குழந்தைகள் நல டாக்டர்ங்க. சொந்தமா க்ளினிக் கூட வச்சிருக்கேன். அது எப்படிங்க என்னைப் பார்த்து இப்படி நினைக்கலாம்?”
‘ஐயய்யோ! இன்னிக்கு யார் மூஞ்சில முழிச்சேன்னு தெரியலையே! அது எப்படிங்க, அது எப்படிங்கன்னு கேட்டு கேட்டு கொல்லுறானே! பார்க்க நல்லா இருக்கான், ஆனா கோபக்காரனா இருப்பான் போலிருக்கே! நான் வீட்ட விட்டு கிளம்பறப்பவும், திரும்பி வரப்பவும் ஜன்னல் கிட்ட இவன் முகம் தெரியுதேன்னு தப்பு கணக்குப் போட்டுட்டேன்.’
“சூர்யா சார், அதான் மன்னிப்பு கேட்டுட்டேன்ல, அதுவும் பல தடவை. இன்னும் அதையே புடிச்சு தொங்குனா எப்படி சார்? இனிமே சத்தியமா உங்கள பத்தி தப்பா நினைக்க மாட்டேன். இப்போ சொல்லுங்க சார், உங்க குழந்தை பெயர் என்ன? ஃபுல் டீடேய்ல்ஸ் சொல்லுங்க”
“பானுமதிங்க அவ பேரு. அழகு குட்டி, பார்த்தா அசந்துருவீங்க! வெள்ளை வெளேர்னு சருமம், ப்ரௌனிஸ்சான சுருட்டை முடி, கோலி குண்டு கண்ணு, குட்டி மூக்கு, லாலிபாப் வாய்ன்னு அவ்வளவு அழகு. தூக்குனா கீழ இறக்கி விட மாட்டிங்க.”
“நீங்க சொல்லுறப்பவே குட்டியப் பார்க்கனும் போல இருக்குங்க சூரியா சார்! பேபிக்கு எத்தனை வயசு?”
“மத்த டீடேய்ல்ஸ் சொல்லுறதுக்கு முன்ன உங்கள பத்தி அதாவது உங்க டே கேர் பத்தி சொல்லுங்க நிலா! என் மக உங்க கையில பாதுகாப்பா இருக்கான்னு எனக்குத் தெரியனும்ல!”
“கண்டிப்பா சூரியா சார்! நான் ஆஸ்திரேலியாவுல ஏர்லி சைல்ட்ஹூட் கோர்ஸ் முடிச்சிருக்கேன். இந்த டே கேர் தொடங்கி நாலு வருஷம் ஆகுது. மூனு ஆசிஸ்டேண்ட் இருக்காங்க. பிள்ளைங்கள பொறுப்பா பார்த்துக்கறது மட்டுமில்லாம நன்னெறிகளும் சொல்லிக் கொடுக்கறோம். அவங்க வேலைகளை அவங்களே செய்யற மாதிரி பழக்கறோம். விளையாட்டோட பாடமும் சொல்லிக் கொடுக்கறோம். என்னோட டே கேர் இந்த ப்ளாட் வளாகத்துல தான் இருக்கு. உங்களுக்கு விட்டுட்டு கூட்டிட்டுப் போகவும் சுலபமா இருக்கும்.”
“நீங்க ஏன் இந்த கேரியர தேர்ந்தெடுத்தீங்க நிலா?”
“நீங்க ஏன் சார் பிள்ளைங்க நல டாக்டருக்குப் படிச்சீங்க?” என எதிர்கேள்வி கேட்டாள் நிலா.
“குழந்தைகள்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் நிலா. நான் ஒத்தைப் புள்ளையா போய்ட்டதுனால விளையாட ஆள் இல்லாம ரொம்ப ஏங்கிப் போய்தான் வளர்ந்தேன். அந்த ஏக்கம் தான் இந்த ஃபீல்டுல என்னை இழுத்து விட்டுருக்குப் போல”
“நானும் ஒத்தைப்புள்ளதான் சூரியா சார்! உங்க ஏக்கம் எனக்கும் இருந்துருக்கும் போல. ஆனா டாக்டருக்குப் படிக்கற அளவுக்கு மண்டைல சரக்கு இல்ல. சோ இந்த ஃபீல்டுல இறங்கிட்டேன்” என சிரித்தாள் நிலா.
அவளுக்கே ஒர் ஆண்மகனிடம் இப்படி மனது விட்டுப் பேசுவது ஆச்சரியமாக இருந்தது. சிறு வயதிலேயே தந்தையை இழந்து தாயிடம் மட்டுமே செல்லம் கொஞ்சி வளர்ந்தவளுக்கு என்றுமே ஆண்களை ஒரு லிமிட்டோடு தள்ளி வைத்துப் பழகிதான் பழக்கம்.
‘கல்யாணம் ஆகி பிள்ளைக்குட்டியோட இருக்கறவன் கிட்ட என்ன இளிப்பு நிலா! கண்ட்ரோல்!’ தன்னையேத் திட்டிக் கொண்டவள், மீண்டும் தன் கூட்டுக்குள் சுருங்கினாள்.
“இப்போ சொல்லுங்க சூரியா சார், பானுமதிக்கு எத்தனை வயசு?”
“என் மதிக்குட்டி இன்னும் பொறக்கவே இல்லை நிலா”
“வாட்?”
“ஆமா நிலா, அவ இன்னும் பொறக்கவே இல்லை. நீ எப்போ என்னைக் கட்டிக்க சம்மதம் சொல்லுறயோ, அடுத்த பத்தாம் மாசம் பானுமதிய ரிலீஸ் பண்ணிறலாம்”
“வாட்????”
“ஆமாடா செல்லம்! சூரியனோட மறுபெயர் பானு, நிலாவோட மறுபெயர் மதி. சோ நம்ம ரெண்டு பேரும் காதலோட இணைஞ்சுப் பெத்துக்க போற நம்ம மக பேரு பானுமதி! எப்படி இருக்கு?”
“டேய்! எங்கம்மா எனக்குப் பார்த்துருக்கேன்னு சொன்ன மாப்பிள்ளை சூர்யபிரகாஷ் நீதானா?”
“அப்பாடா, இப்பவாச்சும் பல்ப் எரிஞ்சுச்சே உனக்கு! குழந்தைங்க கூட பழகி நீயும் குழந்தையாவே இருக்கியோன்னு பயந்துட்டேன் செல்லம். எவனும் உன்னை இம்ப்ரேஸ் பண்ணல அதனால கல்யாணம் வேணாம்னு சொன்னியாம்! இந்த சூர்யா இம்ப்ரேஸ் பண்ணிட்டேனா?”
“உன்னை கொலை பண்ணுற அளவுக்கு இம்ப்ரேஸ் பண்ணிட்டடா!” என அவள் துரத்த, அவள் கையில் பிடிபடாமல் ஓடினான் சூர்யா! காதலும் அவர்கள் பின்னாலேயே லொங்கு லொங்கு என ஓடியது….