இங்கு ஸ்டியரிங் வீல் மீது தலை சாய்த்து மழையை வேடிக்கைப் பார்த்தபடி சோர்வாக அமர்ந்திருந்த விஸ்வேஷ் மழையின் வலு சற்று குறைந்ததை கண்டு தன் ஜீப்பை உயிர்ப்பித்தவன், மிதமான வேகத்தில் பயணித்து இரவு எட்டரை மணிக்கு வனத்துறை அலுவலகத்தை அடைந்திருந்தான்...
இரவு நேரமென்பதால் இருவர் மட்டுமே அங்கிருந்த கணினியின் முன்பு அமர்ந்து எதையோ சரிபார்த்து கொண்டிருந்தனர்...
அவர்களிடம் அவன் வந்த வேலையைப் பற்றி எடுத்து சொன்னதும், வரவேற்பாக புன்னகைத்த ஒருவர் அவனிடம் ஒரு படிவத்தில் கையெழுத்து வாங்கி விட்டு அவன் தங்க போகும் மர வீட்டின் சாவியை எடுத்து அவனிடம் கொடுத்தார்...
அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு வெளியே வந்த பின்னர் தான் அது அவனுக்கு ஒதுக்கியிருந்த அறையின் எண்ணிற்குரிய சாவி இல்லை என்பதை சரியாக கவனித்தவன்,
"அட இவனுங்க வேற.." என்று சலித்தபடி மீண்டும் உள்ளே சென்று தனக்கு சாவி கொடுத்தவரிடம், "எனக்கு அலார்ட் பண்ண காட்டேஜ் நம்பர் நைன், பட் இந்த சாவில இருக்க நம்பர் டென்... கொஞ்சம் பார்த்து சீக்கிரமா சேஞ்ச் பண்ணி தாங்க சார்..." என்றான் பொறுமையை இழுத்து பிடித்தவனாக...
"தேங்க் காட்... உங்க கைல இருக்க கீ எங்க யுக்தா மேடம் வேற யாருக்கோ வேணும்னு வச்சுருக்கது.. நல்லவேளையா இப்பவே கண்டுபிடிச்சு வந்தீங்க.. இல்லைனா அவங்க கிட்ட திட்டு வாங்கியிருப்போம்... சாரி ஃபார் தி இன்கன்வீயன்ஸ் சார்..." என சொல்லி விட்டு சங்கடமாக சிரித்தவர், சரியான சாவியை அவனிடம் கொடுத்து விட்டு அவனைப் பற்றிய தகவல்களை விசாரித்து கொண்டார்...
பதிலுக்கு அவரிடம் விசாரித்ததில் அவரது பெயர் மதன்லால் என்பதும், அவருக்கு வயது ஐம்பதை நெருங்கி கொண்டிருப்பதையும் அறிந்த விஸ்வேஷ், அந்த ஐ.எஃப்.எஸ் பெண்ணிற்கு கீழே அவரை மாதிரி இருபது நபர்கள் வேலையில் இருப்பதையும் கேட்டு தெரிந்து கொண்டான்...
'ஓ மேடம் பெரிய ஆள் தான் போல...' என்று மனதில் நினைத்தபடி, சற்று நட்பாக பேசிய மதன்லாலிடம், "நான் இன்னும் நைட் டின்னர் சாப்டல, பக்கத்தில எதுவும் நல்ல ஹோட்டல் இருக்கா சார்?.." என விசாரித்தான்...
"ஹாஹா இந்த காட்டுல ஹோட்டல் எப்படி சார் இருக்கும்.. இங்க இருந்து ரெண்டு கிலோமீட்டர்ல ஒரு சின்ன கடை இருக்கு... மலையில இருந்து வந்து அங்க கிடைக்கிற அரிய வகை அரிசியில சில மூலிகை சேர்த்து கஞ்சியா காய்ச்சி விற்பாங்க... அதுவும் மார்னிங் பத்து மணியில இருந்து ஈவ்னிங் ஏழு மணி வரைக்கும் தான் இருக்கும்... அவங்களும் இந்நேரம் வீட்டுக்குப் போயிருப்பாங்க... எனக்கு வீட்ல இருந்து இன்னும் டின்னர் வரல.. வெயிட் பண்ணுங்க உங்களுக்கும் சேர்த்து கொடுத்துவிட சொல்றேன்..." என்றார் வாஞ்சையாக...
"இல்ல சார் பரவால... காட்டேஜ்ல இன்டெக்ஷன் ஸ்டவ் இருக்கும்ல, நான் பிரெட் கொண்டு வந்துருக்கேன்... அத வச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்..." என்று மறுத்தவனை வற்புறுத்தி உண்ண வைத்த பின்னரே அனுப்பி வைத்தார்...
நல்லவேளையாக மதன்லால் நன்றாக ஆங்கிலம் பேசக்கூடியவராக இருந்ததால் தப்பித்தான்... இல்லையேல் அவனுக்கு தெரிந்த பெங்காலியை வைத்து சமாளிப்பதற்குள் விடிந்திருக்கும்...
வனத்துறை அலுவலகத்தை விட்டு வெளியே வந்த விஸ்வேஷ், இரவின் ஏகாந்தத்தை ரசித்தவாறே தனது வாகனத்தை அந்த காட்டுவழிப் பாதையில் மெதுவாக ஓட்டிச் சென்றான்...
அவன் வெளியேறிய சில நிமிடங்களில் அலுவலகத்திற்கு வந்த சம்யுக்தா, அவளுக்கு ஒதுக்கியிருந்த காட்டேஜின் சாவியை வாங்கிக் கொண்டு அவன் சென்ற அதே பாதையில் வேகமாக நடந்தாள்...
அவன் நினைத்ததற்கு மாறாக இருந்த சாலையின் தரத்தை வியந்தபடி, "பரவால்லயே மதன்லால் சொன்ன மாதிரி ஐ.எஃப்.எஸ் மேடம் பெரிய திறமைசாலி தான் போல.. உதவிக்கு யாருமில்லாத இந்த அத்துவான காட்டுல ஒத்தையடி பாதையில நடக்குற மாதிரி வந்துடுமோனு நினைச்சேன்... ஓரளவுக்கு நல்ல ரோடு போட்டு வச்சுருக்காங்க... மேடத்த பார்த்தா கண்டிப்பா பாராட்டணும்.." என்று நினைத்து கொண்டவனை, அவன் பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த அலைபேசியின் அதிர்வு தொல்லை செய்ததது...
நண்பன் சரியான நேரத்திற்கு சென்று விட்டானா என்பதை அறிந்து கொள்வதற்காக திவாகர் தான் அழைத்திருந்தான்...
அதை ஏற்றவன், "ஹலோ வெயிட் மச்சான்.. வண்டிய நிறுத்திட்டு பேசுறேன்..."
"ஓ ம்ம்.."
"க்ம் இப்போ சொல்லு திவா... இங்க ஃபாரஸ்ட்டோட இன்டீரியர் ஏரியாக்கு வந்துட்டேன்டா.. அதான்
இன்ஜின் ஆஃப் பண்ணிட்டு பேசுறேன்.." என்றான் மெதுவான குரலில்.
அடர்ந்த வனப்பகுதி என்பதால் வாகனத்தை வேகமாக இயக்கக் கூடாது, சத்தம் போட்டு பேசக் கூடாது என்பன போன்ற பல அறிவுரைகளை மதன்லால் ஏற்கனவே வழங்கியிருந்தார்... அவன் பணிபுரியும் வேலையால் சிலது அவனுக்கே தெரியுமென்றாலும் அவர் சொல்லும்போது மறுப்பு கூறாமல் நல்ல பிள்ளையாக கேட்டுக் கொண்டான்...
"ஓ அது சரி... அங்க எல்லாம் ஓகேவாடா? உன்கிட்ட எதுவும் என்கொயரி பண்ணாங்களா?.."
"ச்ச ச்ச இல்ல மச்சான்.. ஒரு ஃபார்ம்ல சைன் வாங்கிட்டு சாவிய கொடுத்துட்டாங்க..."
"ம்ம் சூப்பர்டா விஸ்வா... நீ போன வேலைய முடிக்கிற வரைக்கும் அப்படியே மெயின்டெய்ன் பண்ணிக்க.." என்று எச்சரித்த திவாகர், மேலும் சில நிமிடங்கள் பேசி விட்டு கடைசியாக இங்கு தில்லைநாயகி அவனுக்கு நிச்சயம் செய்து வைத்த தகவலை பகிர்ந்தான்...
அவன் வீசிய வெடியில் ஒன்றும் புரியாமல் சில நொடிகள் ஸ்தம்பித்து அமர்ந்துவிட்ட விஸ்வேஷ் சற்று தெளிந்து, "என்னடா சொல்ற? இது எப்போ?..." என அதிர்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்த வேளையில், முதுகில் ஒரு பேக்கை மாட்டிக் கொண்டு அந்த வழியில் வேகமாக நடந்து வந்த சம்யுக்தா அவனது ஜீப்பை கடந்து சென்றிருந்தாள்...
"ஹேய் திவா ஒரு நிமிஷம் இருடா..." என்றபடி ஜீப்பை விட்டு இறங்கி நின்றவன், நொடிகளில் தன்னை கடந்து போன பெண்ணவளை காணாது திகைத்து நின்றான்...
ஏற்கனவே நண்பன் சொன்ன தகவலைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்திருந்த விஸ்வேஷின் கண்களுக்கு, அவள் அந்த காரிருள் சூழ்ந்திருந்த வனத்தில் உலவும் மோகினியாகவே தெரிந்தாள்...!!!
பூக்கள் தூவும்...