இன்றைக்கு சாஹித்யனுக்கு கொஞ்சம் பிசி நாள் தான். இரண்டு பல்கலைக்கழக பையன்கள் புதிதாய் வந்து ஆர்வக்கோளாறாய் எல்லாவற்றையும் முயற்சித்து கொண்டிருக்க, அவர்களோடு கொஞ்சம் நேரம் செலவு செய்து ஆரம்பத்தை கற்று தந்தவன் பிரேமை அவர்களை மேற்பார்வை செய்ய விட்டு விட்டு அக்கடா என்று வந்து அமர்ந்தான் சாஹித்யன்.
இப்போதெல்லாம் போட்டிகளுக்கு பயிற்சி எடுக்கவென்றே தினமும் யாராவது அவனை தேடிக்கொண்டு வந்து விடுகிறார்கள். அவனிடம் பயின்றவர்கள் ஜெயிக்க ஆரம்பித்திருப்பதனால் கூட இருக்கலாம். எல்லாம் சரியாய் போனால் லோன் வாங்கி இதை விட கொஞ்சம் நகர்ப்புறமாய் நமக்கென்றே தனியாய் ஒரு பயிற்சிக் கூடமே கட்டிக்கொள்ளலாம். ஆசைதான், ஆனால் இப்போதைக்கு முடியாது என்றது அவன் மனம்.
கொஞ்சம் காலம் போக வேண்டும். வர்ணியும் கொஞ்சம் காலூன்றட்டும். இப்போது தான் ஆரம்பித்திருக்கிறாள், திடீரென்று அவளை நகர்ப்புறமாய் இழுத்துப்போக முடியாது. பார்க்கலாம். எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரும். இப்படியெல்லாம் அவனே மூன்று மாதங்களுக்கு முன் யோசித்து கூட பார்த்திருக்க மாட்டான், இப்போது வாழ்க்கையே மாறவில்லையா? அப்படி ஒரு தருணம் அப்போதும் வரும் என்று தனக்கே சொல்லிக்கொண்டான் சாஹித்யன்.
அது சரி, எங்கே இவள்? மூன்று மணிக்கெல்லாம் காபி டெலிவரி செய்கிறேன் என்று தொல்லை செய்ய வந்துவிடுவாளே! வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் அவள் எதையாவது எடுத்து வருவதால் ஒரு மாதத்துக்கு மொத்தமாகவே முன்பணத்தை கொடுத்து சர்க்கரை இல்லாத காபி இரண்டுக்கு ஆர்டர் செய்து விட்டான். வேறு வழி?
சின்ன சிரிப்போடு அவள் வரும் வழியில் அவன் ஆர்வமாய் விழிகளை பதிக்க அவனை ஏமாற்றாமல் சின்ன சிரிப்போடு கையில் இரண்டு மூடிய காபி கப்களோடு வந்து கொண்டிருந்தாள் வர்ணி. அவனை கண்டதுமே அவளது கண்களும் வெளிச்சம் போட்டுக்கொள்ள குறும்பாய் ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு பிரேமை எட்டிப்பார்த்தாள்.
“பிரேம் அண்ணா, காபி”
அவரும் சிரித்துக்கொண்டே அவளை நெருங்கி காபியை வாங்கிக்கொண்டு போக
அந்த மாணவர்களின் பார்வை ஆர்வமாய் இவள் மேல் படிந்தது.
“நாங்களும் ஆர்டர் பண்ணலாமா? எந்த கடை உங்களோடது?” என்று புதியவர்களில் ஒருவன் கேட்க அனிச்சையாய் எழுந்து அவர்களை நோக்கி நடந்தான் சாஹி.
“சாரி. ப. மு. கவுக்கு மட்டும் தான் டோர் டெலிவரி. நீங்க டார்லிங் காபேக்கு தான் வந்து வாங்கிக்கணும்” என்று விட்டு அவளும் எழுந்து வந்து கொண்டிருந்த அவனை நோக்கி வந்து காபிக்காப்பை கையில் திணிக்க
“அதெப்படி டோர் டெலிவெரின்னா எல்லாருக்கும் தான பண்ணணும்?” என்று இன்னொருவன் குரல் கொடுத்தான்.
ஒரு பொண்ணு கண்ல படக்கூடாதே.. உடனே ஆரம்பிச்சிடுறானுங்க என்று கடுப்பாகிப்போன சாஹித்யன் அவனை திரும்பிப் பார்த்த பார்வையில் பாவம் என்ன புரிந்ததோ இருவரும் மற்றப்பக்கம் ஓடியே போய்விட்டார்கள்.
“நீ வா” என்று அவளை அவன் அமரும் இடத்தை நோக்கி சாஹி அழைத்துக்கொண்டு போக
“இப்போ எதுக்கு தேவையில்லாம அந்த பையனை பயமுறுத்துறீங்க?” என்று சிரித்தபடியே வந்து அவனுக்கு எதிரே அமர்ந்தாள் வர்ணி.
“நான் பயமுறுத்தினேனா?” என்று அவன் கேட்கவும்
“பின்னே கண்ணாலேயே ஏரிக்கற போல பார்க்கலை?” என்று கேட்டாள் அவள் அவனது பார்வையை பிரதியெடுக்க முயன்றபடி.
“ஆமாமாம் நான் முனிவர், கண்ணால எரிக்கறது தான் என் வேலை .. அடியேய் நான் தேவையில்லாம யாருக்கும் கைநீட்டினது கூட இல்லை” என்ற சாஹித்யனின் இதழ்களில் லேசான சிரிப்பு. அவளை நன்றாக பார்த்தபடியே தளர்வாய் சாய்ந்து அமர்ந்து கொண்டான் அவன்.
அவளது உடல்மொழியும் அவனை அனிச்சையாய் பிரதிசெய்ய நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தவள் “ ஆஹான் எங்க அத்தானுக்கு பொளீர்னு ஒண்ணு விட்டது வேற யாரோவா?” என்று இமையை உயர்த்தி குறும்பாய் கேட்டாள்
“அத்தானா?” சாஹியின் முகமே அஷ்டகோணலாகி விட்டது.
“பிரதீப் அத்தான் தான்” அவள் சிரித்தாள் என்னமோ ஆண்டாண்டு காலமாய் அப்படியே அவனை அழைப்பது போல!
“சகிக்கலை. நீயே அவனை கலாய்ச்சிட்டு தான இருந்த?..இப்போ என்ன அவனுக்கு திடீர் மரியாதை?”
“வாரிசு வந்துச்சுல்ல இனிமே அப்படித்தான்” என்று அவள் சொல்ல தலையை இடமும் வலமுமாய் அசைத்தவனுக்கு வர்ணியின் லாஜிக்கின் பின்னான காரிய காரியங்களை அலசி புரிந்து கொள்ள சக்தியில்லாததால் அதை அப்படியே டீலில் விட்டு விட்டான்.
“சில விஷயங்களை நீங்க கொஞ்சம் பொறுமையா அணுகற காலம் வந்துடுச்சு சாமியார்” வர்ணி மெதுவாய் சொல்லிவிட்டு குனிந்து கொள்ள
“என்ன?” என்று இமை சுருக்கினான் சாஹி
“ஒண்ணுமில்லையே”
ஒரு அரைநிமிடம் அவளையே ஊன்றி பார்த்திருந்தவன் அவள் பதில் சொல்லப்போவதில்லை என்று புரியவும் கையில் இருந்த காபியை குடித்து பார்த்து விட்டு “என்ன காபி வித்தியாசமா இருக்கு?” என்று கேட்டான்.
“ஓட்ஸ் பாலில் செஞ்சேன்”
“ஓட்ஸ் பாலா?” என்று பல்லை கடித்தவன் டொம்மென்று அதை மேசையில் வைத்து விட்டான். “ஓவரா போயிட்டிருக்க நீ! உனக்கு டெஸ்ட் பண்ணி பார்க்க நான் தான் கிடைச்சேனா? என்று சிரித்துக்கொண்டிருந்தவளை முறைத்தவன் நானும் என்னோட ஜிம்முக்கு உன்னை வச்சு டெஸ்ட் பண்ணி பார்க்க ஆரம்பிக்கவா? அவள் புறம் சரிந்து மெதுவாய் கேட்க
பட்டென்று முகம் சிவந்து அவன் கையில் கிள்ளி விட்டு நாற்காலியை தள்ளி போட்டுக்கொண்டு விட்டாள்.
அதற்கு மேல் வம்பிழுக்காமல் அவனும் வேறு வழியில்லாமல் அந்த காபியை குடித்துக்கொண்டிருக்க இவள் இப்போது அவனது மேசையில் இருந்த பேப்பர் ஒன்றை இழுத்து வைத்துக்கொண்டு படம் வரைந்து கொண்டிருந்தாள். அதில் இரண்டு எலும்புக்கூடு மனிதர்கள் உருவாக்கிக்கொண்டிருக்க ஒரு எலும்புக்கூடு மட்டும் இரண்டு மடங்கு உயரத்திலும் அகலத்திலும் இருந்ததை பார்க்க அவனது உதடுகளில் லேசான சிரிப்பு ஒட்டிக்கொண்டது.
தலைநிமிராமல் வரைந்து கொண்டே இருந்தவளின் போனிடெயிலில் இருந்து தப்பித்து வந்த முடிகள் இப்போது அவளின் கண் வரை முன்னே விழுந்து கிடக்க அவனது விழிகளோ அவளது விரல்களின் அசைவுகள், இமைகளின் துடிப்பு, அவனது பார்வையை உணர்ந்திருக்கிறாள் என்பதை சொல்லும் கன்னக்கதுப்புக்களில் நாவின் அசைவு என்று விடாமல் பார்த்துக்கொண்டிருக்க வெளியுலக காலக்கோட்டை மறந்து தங்களுக்குள்ளே ஒரு லூப்புக்குள் மாட்டிக்கொண்டிருந்தனர் இருவரும் இப்போது சமீப காலமாய் நடப்பதை போலவே
“சாஹித்யன்?”
இருவருமே திடுக்கிட்டு நிமிர “குரு வாங்க” என்று எழுந்து வந்தான் சாஹித்யன்.
சிரித்துக்கொண்டே வந்து சாக்லேட் பெட்டியை நீட்டிய குரு “ ரிசல்ட் அனுப்பிட்டாங்க. நான் தேசிய மட்ட போட்டிக்கு போறேன்” என்றான் முகம் முழுக்க மகிழ்வுடன்.
“வாழ்த்துக்கள்” என்று இவனும் சந்தோஷமாய் கைகுலுக்க வர்ணிக்கும் ப்ரேமுக்கும் சாக்லேட் கொடுத்து அவளது வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டவன் “சாஹி போட்டி இரண்டு வாரம் நடக்கும் போல என் கூட வாரீங்களா” என்று ஆர்வமம் எதிர்பார்ப்புமாய் கேட்க சாஹிக்கோ சங்கடமாய் போய்விட்டது.
இரண்டு வாரம் வெளியூரில் அவன் இருப்பது நடக்கக்கூடிய காரியமா?
“இரண்டு வாரமா?..அது…” என்று யோசித்தவன் “வரப்பார்க்கிறேன் குரு. அப்படி என்னால முடியலைன்னா நம்பிக்கையான யாரையாவது கண்டிப்பா கூட அனுப்புவேன்” என்று சொல்லிவிட்டான்.
“நீங்க வந்த ஒரு படி அதிக தெம்பா இருக்கும். கண்டிப்பா முயற்சி பண்ணுங்க” என்று விட்டு குருவும் கிளம்பி விட்டான்.
சாஹிக்கு இன்னும் சங்கடம். முதல் முறையாய் அவன் பயிற்றுவித்த ஒருவன் தேசிய மட்ட போட்டிக்கு போகிறான். ஆனால் அவனோ ப்ச்.

Author: Ush
Article Title: லக்கி வீடு - 16
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.