ஞாயிற்றுக்கிழமை. அன்று மதியத்தில் இருந்து படபடப்பாக வீடெல்லாம் கூட்டி துடைத்து கொண்டிருந்த வர்ணியின் காதுகள் கதவை குறிவைத்துக்கொண்டே இருந்தன. மூன்று மணிக்கு ஒரு வழியாய் கதவு தட்டும் சத்தம் கேட்கவே பறந்து சென்று கதவை திறந்தவள் கொஞ்சம் அதிர்ந்து தான் போனாள்.
அவள் எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் தான் வெளியே நின்று கொண்டிருந்தனர். லக்கி சிரித்தபடி முன்னே நிற்க வாசலை அடைத்து பைகளை வைத்து விட்டு பின்னே விட்டு விட்டிருந்த இன்னொரு சின்ன சூட்கேஸை வேறு இழுத்து வந்து கொண்டிருந்தான் சாஹித்யன்.
என்ன இவ்வளவு கொண்டு வந்திருக்கான்?
அவன் ஏற்கனவே கொண்டு வந்து வைத்திருந்த ஒரு சூட்கேஸ் சக சின்ன பொதிகளையும் பிறகு அவன் கொண்டு வந்து சேர்த்த சின்ன சூட்கேசையும் மாறி மாறி பார்த்தவள் சிரிப்பு வந்தாலும் அவனுடைய உர் முகத்தை பார்த்தே அதைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் “வாங்க மானேஜர்” என்று சிரித்தபடி கதவை விரியத்திறந்து வைத்தாள்.
மீண்டும் அவளுக்கு பெரிய சிரிப்பை பரிசளித்தவர் “பாட்டு நல்லா இருக்கு. இப்போல்லாம் இப்படி பாட்டை கேட்கறதே இல்லை” என்று சொல்லிக்கொண்டே லக்கி டிவியின் முன்னே போய் அமர்ந்து தாளம் போட ஆரம்பித்து விட சாஹித்யனோ இப்போதும் இவளின் முகம் பாராமல் எல்லாவற்றையும் உள்ளே இழுத்துக்கொண்டு போவதில் முனைந்திருந்தாள்.
மெல்ல வீட்டு கதவை பூட்டி விட்டு அவனை தேடிக்கொண்டு பின்னாலேயே போனவள் “என் வீட்டுக்கு குடி வாரீங்களா சார்? என்ன தான் நான் ஜாலியா சுத்தினாலும் கலாச்சாரம் பார்ப்பேன். இந்த லிவிங் டுகெதர் எல்லாம் நமக்கு செட்டாகாது” என்று வம்பிழுக்க
அவளை முறைத்தவனோ “உளறுறதை விட்டுட்டு வந்து நான் சொல்றது ஒழுங்கா கவனி” என்று அழைத்தான்.
உளர்றேனா? என்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அவளும் அருகில் வர “இந்த சூட்கேசில் அம்மாவோட ட்ரெஸ் எல்லாம் இருக்கு. இந்த குட்டி சூட்கேசில் அவங்களாட மருந்து சோப் அந்த மாதிரி பொருட்கள் எல்லாம் இருக்கும். அவங்க குடிக்கற கப் , டவல் எல்லாமே வச்சிருக்கேன். அப்போ தான் குழப்பம் இல்லாம இருப்பாங்க” என்றான் அவன் படு சீரியஸான முகபாவத்தோடு.
‘அதுக்குன்னு இவ்வளவா? எத்தனை மாசம்டா டூர் போற?’ என்று கேட்கத்தோன்றிய மனதை தலையில் கொட்டி அடக்கியவள் சிரிப்பில் துடித்த இதழ்களை கடித்தபடியே “புரிஞ்சது அடுத்து?” என்று கேட்க
அவள் சிரிக்கிறாள் என்று புரிந்ததும் அவளை இன்னொரு முறை முறைத்து விட்டு சின்ன பொதிகளை இப்போது அவன் ஒவ்வொன்றாய் திறக்க ஆரம்பிக்க வர்ணிக்க வாயில் இருந்து பேச்சே வரவில்லை. பார்த்துக்கொண்டே நின்றாள்.
“தனி தனியா சமைச்சிட்டு இருக்காத, பிரைட் ட்ரைஸ் செய்றது, வெரைட்டி ரைஸ் பண்றது, சாம்பார் சாதம் இப்படியே பண்ணிடு. ஈஸியா இருக்கும். காய்கறி எல்லாம் ஒவ்வொன்றுக்கும் ஏத்தாப்போல வெட்டியே ப்ரீஸ் பண்ணி வச்சிருக்கேன் பார்” என்று ஒவ்வொன்றாய் எடுத்து மேசையில் பரப்ப இமை தட்டி விழித்தாள் வர்ணி.
எவ்வளவு நேரம் இதெல்லாம் வாங்கி கழுவி வெட்டி பாக் செய்ய ஆகியிருக்கும்?
அடேய் சாமியார் ஏன்டா இப்படி பண்ற? வர்ணில்லாம் ஸ்ட்ராங் நீ என்ன தலைகீழா நின்னு டிராமா பண்ணினாலும் நான் எமோஷனல் ஆகவே மாட்டேன்.
மேசையை சுற்றி வந்து அவன் பரப்பியவற்றை பார்வையிட ஆரம்பித்தாள் வர்ணி.
காரட், பீன்ஸ், கத்தரி, இத்யாதி இத்யாதி, இஞ்சி பூண்டு பேஸ்ட் என மேசை நிரம்பி வழிய வெங்காயம் மட்டும் தான் வெட்டி வைக்கவில்லை. மீதி எல்லாமே உணவு முன்தயாரிப்பு செய்வதை போல சகலமும் தயாராய் வைத்திருந்தான். ரெண்டு வாரத்துக்கு அவள் எதுவுமே செய்ய வேண்டியது இல்லை.
“பிரைட் ரைஸுக்கு மெல்லிசா உன்னை போல எனக்கு வெட்ட வரலை..அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என்றவன் பிறகு இன்னொரு உறைநிலையில் இருந்த பார்சலை காட்டி
“மீனை கிளீன் பண்றது தானே உனக்கு பிரச்சனை, அதனால நானே வெட்டி கழுவி மசாலா போட்டு ப்ரீஸ் பண்ணிட்டேன். அம்மா சாப்பிட மாட்டாங்க தானேன்னு நீயும் மீன் சாப்பிடாம இருப்ப அது தான் இப்படி செஞ்சேன். ஒரு மணி நேரம் முன்னே எடுத்து வெளியே வச்சிட்டா டக்குன்னு பொரிச்சிடலாம்.நைட்டுக்காவது சாப்பிடு” என்றபடி அடுத்த பார்சலை அவன் கையில் எடுக்க
அவனின் உருவம் அவளின் கண்ணில் கலங்கலாக பொங்கி வந்த உணர்வு தாளாமல் பட்டென்று ஓடிப்போய் பின்புறமாக தாவி அவன் கழுத்தை கட்டிக்கொண்டு அவனை முதுகோடு அணைத்துக்கொண்டாள் வர்ணி.
“ஏய்!” என்றவனின் அசைவும் அப்படியே உறைந்து போக அடுத்த கணம் பின் பக்கம் தொங்கிக்கொண்டிருந்தவளை தன் முன்னே கொண்டு வந்து அணைத்தவன் மூச்சுக்கு தவிப்பவன் போல முத்தமிட ஆரம்பிக்க போகவே இவள் தான் சிரிப்போடு நெளிந்தாள்.
எப்படி இருவரும் டைனிங் ஹாலில் இருந்த ஒற்றை நாற்காலிக்கு வந்தனரோ தெரியாது “போகவே மனசில்லைடி” என்றான் சாஹித்யன்
“அப்போ போகாதீங்க” இவள் அவன் முடியை இழுத்து பார்த்தபடி சொல்ல
“இப்போ வந்து சொல்லு.” என்று அவளை முறைத்தான்
“ஹாஹா” இவளின் கரங்களும் அவனது கழுத்தை சுற்றி இறுக அவளையே பார்த்திருந்தவன் “நான் முடிவு பண்ணிட்டேன் வர்ணி” என்றான் அவன் அவள் காதோரம் உதடசைத்து
“ம்ம்ம்..”வர்ணி எங்கே இங்கிருந்தாள்? அவள் தான் வழக்கம் போல மேக மூட்டத்துக்கு மத்தியில் பறந்து கொண்டிருந்தாளே!
“ப்ச் நான் சொல்றது கேக்குதா உனக்கு?”
“ம்ஹ்ம்..” மெல்ல அவனது விழிகளை ஏறிட்டுப்பார்த்தாள் வர்ணி.
“இதுக்கு மேல நம்ம ரெண்டு பேரும் தனி தனியா இருக்க வேண்டாம். நான் வந்ததும் பூஜா கிட்டயும் உன் நொத்தான் கிட்டயும் பேசறேன்” என்று அவன் சொல்ல
சட்டென்று நிமிர்த்து அவன் முகத்தையே பார்த்தவளுக்கு புன்னகையோடு அவளையே பார்த்திருந்த கண்கள் இமைமூடி திறந்து அவள் கேட்டது உண்மை தான் என்று சொல்ல அவனையே பார்த்திருந்தவளின் இமைகளில் உதடொற்றினான் அவன்.
“சாஹி ரொம்ப நேரமா உள்ளே இருக்கோம். அம்மா வந்துட போறாங்க”என்று அவள் சொல்லி முடிக்கவில்லை. சாஹி என்றபடி லக்கியின் குரல் கேட்க பட்டென்று விலகிக்கொண்டனர் இருவரும்.
அவன் கொண்டு வந்ததை எல்லாம் ப்ரீசரில் போடுவது போல திரும்பிக்கொண்ட வர்ணிக்கு இன்னும் முகச்சிவப்பு போகவில்லை.
அவன் அம்மாவின் இரண்டு சூட்கேஸ்களையும் கொண்டு போய் சுவாதீனமாய் அவளது அறையில் வைத்து விட்டு வர அவனை பார்த்ததும் மீண்டும் லேசான சிரிப்பு வந்தது அவளுக்கு.
இருவருக்கும் காபி கொடுத்தவள் இருவரின் நடுவில் போய் உட்கார்ந்து கொண்டு ”இல்ல…. பூ கொடுத்து ப்ரொபோஸ் பண்ணி பார்த்திருக்கேன், மோதிரம் கொடுத்து ப்ரொபோஸ் பண்ணி பார்த்திருக்கேன், மீல் பிரேப் கொடுத்து ப்ரொபோஸ் பண்ணினது அகில உலகத்துலயே நீங்க மட்டும் தான் சாமியாரே..” என்று நக்கல் செய்ய
“சாமியார்னு சொல்லாதடி” என்று முறைத்தவனுக்கும் சிரிப்பு வந்து விட்டது.
“சாமியார் தான். போலிச்சாமியார்” என்று மேலும் அவள் வம்பிழுக்க அடிங்க என்றபடி அவளது கையை பற்றியவனின் கை மெல்ல மெல்ல இறுக்கம் கூட்ட கண்கள் எங்கோ வெறிக்க ஆரம்பித்திருந்தன. பட்டென்று அவனது உணர்வுகளை படித்து விட்டாள் வர்ணி.
“இரண்டே வாரம் தான் சாஹி. அம்மா கூட அடிக்கடி வீடியோ கால் பேசுங்க. எதுவும் மாறிடாது” என்று சொன்னவளுக்கும் ஏனோ சின்ன தவிப்பு.
போகும் பொது தாயை மெலிதாய் அணைத்து விட்டு விழிகளாலேயே இவளிடமும் அவன் விடைபெற்றுக்கொண்டு போக வர்ணிக்குள்ளும் தன்னுடைய உயிரின் துண்டொன்றை அவன் கையோடேயே கொண்டு போகும் உணர்வு. கண் கலங்கி விட்டது அவளுக்கு.
ஆனால் அவளோடே இருந்த லக்கியின் பிரசன்னம் அந்த உணர்வை துரத்தியடித்து விட மகிழ்வுடன் அவரை அழைத்துக்கொண்டு அன்று ஏழு மணி வரை பார்க் ஷாப்பிங் என்று சுற்றி விட்டு வீட்டுக்கு வர எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு வைத்தால் போல வாயெல்லாம் பல்லாய் நந்தன் அவர்களை வரவேற்றார்.
பத்து வருடங்களின் பின்னர் நித்யா கர்ப்பம் தரித்திருக்கும் செய்தியை அவர்களால் இன்னும் நம்பக்கூட முடியவில்லை. அழுகையும் மகிழ்வுமாய் தம்பதிகள் சேதி சொல்ல இவளும் அவர்களோடு சேர்ந்து கண்கலங்கி சிரித்து சந்தோஷம் கொண்டாடி வீட்டுக்கு வர தூங்கும் நேரமே வந்து விட்டது.
சாப்பிட்டு மருந்துகளை கொடுத்து சாஹித்யனோடு ஒரு வீடியோ கால் பேசவைத்து லக்கியை தூங்க விட்டு விட்டு தன்னுடைய கட்டிலில் வந்து படுத்தவளுக்கு மனம் ஒரு மாதிரி பரபரப்பில் இருக்க தூக்கம் வருவேனா என்று சவால் விட்டது.
பூஜாவின் குழந்தை நித்யாக்காவின் குழந்தை எல்லாம் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே வயதில் இருப்பார்கள் தானே..நமக்கும் கல்யாணம் ஆகி குழந்தை வந்தால் ஒண்ணா விளையாடி ஜாலியா இருப்பாங்கள்ல? என்று எண்ணங்கள் எங்கெங்கோ பறக்க அப்போது தான் என்ன எண்ணுகிறோம் என்று உணர்ந்து முகம் சிவந்து தலையணையில் முகத்தை அழுத்திக்கொண்டாள் வர்ணி
இப்போது தான் சாமியார் மனசு வந்து கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம் என்றே சொல்லியிருக்கிறான். இதில் நீ குழந்தைகளை ஒன்றாய் விளையாட விடுவதை பற்றி யோசிக்கிறாய் என்று அவள் மனமே அவளை கிண்டல் செய்ய சிரித்துக்கொண்டே தூங்கிப்போனாள்.

Author: Ush
Article Title: லக்கி வீடு - 17
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.