வலிகளில்லா வாழ்க்கை?

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

lakkuCPT

New member
May 24, 2026
20
0
3
அவ்வப்போது அதட்டல்!
அப்பப்போ திட்டு!
எப்போதாவது அடி!
எல்லா மழலையரும்
எதிர்கொள்வர்!
அடுத்தவர் நிலையறியா
தங்குறும்புக்காக!
திருத்தப் படவேண்டிய
தந்தவறுக்காக!
பத்து/பதினைந்து வயது வரை!
பள்ளிக்கூட நாட்களில்!

தரும் பெற்றோர்
துவள்வர் தனக்குள்!
தடமாறி, தடுமாறி
தரையில் வீழக் கூடாதே,
தறுதலையாய்
தன் பிள்ளை
ஆளாகக் கூடாதே,
மற்றவர் தூற்றலுக்கு,
எனுங்கவலையால்!
மழலைக் கடக்கும்
மன உளைச்சலை விட,
பிரசவவலியினூஉம் பெரிதாய்
மனவலிச் சுமக்கும்
மாசற்றப் பெற்றோர்
மனம் வெளிக்காட்டுவதில்லை,
தந்நிலையை!

இனிக்குமில்லறம்
தாம் தொடங்கி,
தம் வாரிசும்
தொடர்சங்கிலியென
இல்லறமெட்டுவரை,
இணந்துப் பெற்றோர்
ஒவ்வோருவரும்
உணரும் பயணமிது!

வலிகளில்லா வாழ்க்கையா?
வலிகளில்லாதது வாழ்க்கையா?
வலிகளால்
வலிமையாக்கப்படுவதே
வாழ்க்கை!
வலிமட்டுமா? வழியுமுண்டே!
வாழ்வில் அனைவருக்கும்!
அழிவில்லா, அளவில்லா
இறையருளால், என்றென்றும்!!
 

Author: lakkuCPT
Article Title: வலிகளில்லா வாழ்க்கை?
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.