உங்களுக்கு ஆனந்தக் கண்ணன தெரியுமா? நிறையப் பேருக்கு தமிழ் நாட்டுல நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய இந்த சிங்கப்பூர் ஆனந்தக் கண்ணன தெரிஞ்சிருக்கும். இப்போ அவர் உயிரோட இல்ல.
நாங்க சிங்கப்பூர்ல தங்கி இருந்த காலக் கட்டத்துல வசந்தம் தொலைக்காட்சிக்கு இவர் தொகுத்து வழங்கன ஊர்க்குருவி நிகழ்ச்சிய விடாம பார்த்தோம். அதுல இந்தியால இருக்கற பல இடங்கள அவ்ளோ லைவ்லியா, நகைச்சுவையா சுத்திக் காட்டிருப்பாரு. அப்படி நான் பார்த்துப் பரவசப்பட்ட ஓரிடம்தான் ஜெய்ப்பூர். அப்பருந்தே சொல்லிட்டே இருப்பேன், என்னைக்காச்சும் பிங்க் சிட்டியான ஜெய்ப்பூர் போயே ஆகனும்னு! ஆசைப்பட்டு ஒரு இருபது வருடங்கள் ஓடிருச்சு! அந்தக் கனவு இப்பத்தான் தங்கமலரால நனவாகி இருக்கு.
யெஸ்! நெக்ஸ்ட் நாங்க போனது ராஜஸ்த்தானுக்கு. இந்த ட்ரிப்ப தங்கமலர் ஒரு ட்ராவல் பேக்கேஜ்ல அரேஞ் பண்ணாங்க! மார்னிங் 6.45கு இண்டிகோ ப்ளைட்ல டிபார்ச்சர்! நைட்டே கார் புக் பண்ணிட்டாங்க! அதிகாலைலே எழுந்து, பட்டர் ஜேம் ப்ரேட் செஞ்சி எடுத்துக்கிட்டு, கார்ல கிளம்பிட்டோம். அங்க போய் லக்கேஜ்லாம் போட்டுட்டு, காபி வாங்கி குடிச்சிட்டு வேய்ட் பண்ணோம். இந்தக் காபி கொஞ்சம் மலிவாவும் குடிக்க டேஸ்ட்டாவும் இருந்தது! போட்டோல பார்த்துக்கோங்க கடை பேர.
நான் தங்கமலர்ட்ட கேட்டுட்டே இருக்கேன், எத்தனை பேர் நம்ம க்ரூப்ல, முழுசான ஸ்கேடியூல் வந்திட்டதான்னு! அவங்க க்ரோப் பண்ணி ஸ்கேடியூல் மட்டும் அனுப்பனாங்க! என்னடா இது, முழுசா பி.டி.எப் அனுப்பாம ஏன் இப்படின்னு மீ யோசிச்சிங்! அப்புறம்தான் தெரியுது, போன ட்ரீப்ல எங்க கூட வந்த ஜெ.எஸ்சும் இந்த ட்ரீப்ல ஜாய்ன் செய்யறாங்கன்னு! அதை இவங்க எனக்கு சர்ப்ரைஸா வச்சிருந்திருக்காங்க! எனக்கு நெஜமாலுமே சர்ப்ரைஸ்தான். அவங்க 10 வயசு பேத்தியையும் கூட்டிட்டு வந்திருந்தாங்க எங்க கூட ட்ரீப்கு! அந்தப் பாப்பா சீக்கிரமாவே என் கூட ஜெல் ஆகிட்டா! அவளுக்கு நெறய அத்தைதான் இருக்காம்! சித்தி இல்லையாம்! என்னைச் சித்தின்னு கூப்பிடவான்னு கேட்டா! நான் ஓக்கே சொல்லிட்டேன்! தங்கமலருக்குத்தான் கடுப்பு! அவ அம்மாக்கு உன்னை விட அவ்ளோ வயசு குறைவு! நீ அவளுக்கு சித்தியா? நியாமம் வேணான்னு! ஹஹஹ! வயச குறைச்சா நாம வேணாம்னா சொல்லுவோம்!
எங்க கூட இன்னும் மூனு பேர் அந்த டூர் குருப்ல இருந்து வந்தாங்க! அவங்கள பத்தி இதுல நான் எழுதப் போறது இல்ல! அப்புறம் இது ட்ராவல் கட்டுரையா இல்லாம கம்ப்ளேண்ட் கட்டுரையா மாறிடும்! அவ்வ்வ்வ்!
ப்ளைட்ல ஏறி உக்காந்தாச்சு! ஜன்னல் சீட் எனக்கு! வியூவ எங்க பார்க்கற மாதிரி இருக்கு! தூக்கம்தான் தள்ளுது! அவ்ளோ அலுப்பு! ஒரு வழியா தரை இறங்க போறோம்! சீட் பெல்ட்ட போடுங்கன்னு அறிவிப்பு செஞ்சிட்டாங்க! அப்ப பார்த்து ஒரு மனுஷன் எழுந்து நின்னு சண்டை! ஹிந்தியா, பெங்காலியான்னு தெரில எனக்கு! உக்காருன்னு ஸ்பீக்கர்ல சொல்லிட்டே இருக்காங்க! இவன் எழுந்து நின்னு பக்கத்து சீட்ல உள்ளவங்க கூட சண்டை! ப்ளைட் லேண்ட் ஆகறப்ப, சீட் பெல்ட் போட்டுட்டு, நகராம கம்முன்னு உக்காந்திருக்கனும்ங்கறது சேப்டி ரூல்ஸ்! இவன் என்னன்னா அப்பத்தான் பிலிம் காட்டிட்டு இருக்கான்! சில பேசெஞ்சர் பொங்கிட்டாங்க! கெட்ட வார்த்தைலாம் தமிழ்ல பறக்குது! ரெண்டு ஆம்பளைங்க எழுந்து போய் அவன் பொடனிய புடிச்சு உக்காருடா ஹேரேன்னு ஒரே ரகளை!
யப்பா, எந்த அசம்பாவிதமும் இல்லாம நல்லபடியா தரை இறங்கிட்டோம். ஜெய்ப்பூர் விமான நிலையத்துல வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்துட்டு, வெளியேறிட்டோம். எங்களோட டெம்ப்போ ட்ரைவர் போன் பண்ணி இடம் சொல்ல, அவர தேடி லக்கேஜ உருட்டிட்டு போனோம். சின்னப் பையன்தான் ட்ரைவர். கொஞ்சமா ஆங்கிலம் வருது. எங்கள கொண்டு போய் ஹோட்டல்ல முதல்ல விட்டுட்டான். அங்க போய் செக் இன் செஞ்சிட்டு, கொஞ்ச நேரத்துல கிளம்பி லாபி வந்துட்டோம்.
எங்களோட முதல் டெஸ்டினேஷன் Amber Fort(கோட்டை). அங்க எங்களோட டெம்போவ உள்ள விடல. ஆட்டோலத்தான் மேல போகனும் சொல்லிட்டாங்க! ட்ரைவர் ஆட்டோவும் கைடும் அரேஞ் பண்ணிக் குடுத்தாரு! இங்க ஒன்னு சொல்லனும்! ராஜஸ்த்தான்ல மோஸ்ட் கோட்டைலாம் அஞ்சு மணிக்கே மூடிடறாங்க! சோ நல்லா பார்க்கனும்னு நெனைச்சா, சீக்கிரமா போய் பாருங்க! இல்லைன்னா பொடனில புடிச்சுத் தள்ளாத குறையா வெளிய போக சொல்லிடுவாங்க! கைட் ஒவ்வொரு இடமா விளக்க(ஆங்கிலம் பேசறவங்கள அரேஞ் பண்ணிக் குடுக்கறாங்க! ஆனாலும் அவங்களோட ஆங்கிலம் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு எனக்குப் புரிஞ்சுக்க!) இந்தக் கோட்டைலத்தான் நிறையப் படங்கள் ஷூட் பண்ணிருக்காங்களாம். ஜோதா அக்பர்ல முழு மதி அவளது முகமாகும் பாட்டு எடுத்த இடம்லாம் நான் போட்டோ புடிச்சேன். ரொம்ப அழகான கட்டுமானம்! பெல்ஜியம் கண்ணாடிகள் வச்ச சுவர்கள் கண்ணப் பறிக்குது! எப்படிலாம் இந்த ராஜாக்கள் வாழ்ந்திருப்பாங்கன்னு நினைக்கறப்ப, புல்லரிக்குது போங்க! ஆனா ராணிகள் ஒரு கூண்டுல அடைப்பட்டக் கிளிகள்தான். ராஜாவுக்கு ஒரு ராணி, நெறய ஸ்டெப்பனிகள்! இதை அந்த கைடு அழுத்தி அழுத்தி வேற சொன்னாரு. எங்களுக்கு ஒரு பக்கம் கடுப்பு! ஒரு பக்கம் சிரிப்பு! பெண்கள் சட்டுன்னு வெளிய வந்துட முடியாது! அவங்களுக்குன்னு வெளி உலகத்த பார்க்க, சிறு சிறு தூவரங்கள்(ஜன்னல்) வச்ச ரூம் போல இருக்கு! அங்கிருந்துதான் எதையும் பார்க்க முடியும்!
இங்க சுத்திப் பார்த்து முடிஞ்சதும், இந்த கைடு ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போனாரு! அது ஷாப்பிங் செய்யற இடம். இதெல்லாம் ஒரு ஸ்கேம் மாதிரி! கைடுங்க கூட்டிட்டுப் போற இடத்துல நாம வாங்கனா, அவங்களுக்கு காசு கிடைக்கும் போல. ஆனா இது போல இடங்கள்ல விலை அதிகமா இருக்கு! அதோட பஷார்ல வாங்கறது போல சாய்ஸ் இல்ல! நாங்க எதுவும் வாங்கல அங்க! பிறகு மதிய உணவுக்கு ட்ரைவர் ஒரு ஹோட்டல்ல நிறுத்தனாரு.
ராஜாஸ்த்தான்ல என்ன சாப்பாடு பேமெஸ்னு கேட்டுட்டு, லால் மாஸ் ஆர்டர் பண்ணோம். இது உறைப்பான மட்டன் குழம்பு! செம்மையா இருந்தது ரொட்டில தொட்டுச் சாப்பிடறப்ப! அதோட ராஜாஸ்த்தான் தாலியும் ஆர்டர் செஞ்சாங்க! நாங்க நாலு பேரும் ஷேர் பண்ணி சாப்பிட்டுக்கிட்டோம்.
சாப்பிடதும் ஜல் மஹால் பார்க்கப் போனோம்! தண்ணிக்குள்ள மிதங்குது இந்த மஹால்! நாங்க கிட்ட போல! தூரமா இருந்தே பார்த்தோம். அங்க தரைல துணி போட்டு பேக், தொப்பி, கீ செயின், பாவாடை, சட்டைன்னு விக்கறாங்க! அதோட ராஜாஸ்த்தான் ட்ரெடிஷியனல் ட்ரேஸ் வாடகைக்கு விட்டுப் போட்டோவும் எடுத்துக் குடுக்கறாங்க. நானும் ஒரு ரெட் கலர்ல ட்ரேஸ் போட்டு போட்டோலாம் எடுத்தேன். அவனுங்களே நம்ம சட்டைக்கு மேல அந்த உடுப்ப போட்டு விட்டு, தாலியைக் கட்டி(ஹஹஹ ஐ மீன் மணி மணியா இருக்கும் சங்கிலி), இடுப்புலயும் மணிய கட்டி விடறானுங்க! ஜல், ஜல், ஜலக், ஜலக்னு அத போட்டுட்டு நடக்கறப்ப, நான் ராஜாஸ்த்தான்காரியாவே மாறிட்டேனா பார்த்துக்கோங்க! இங்க சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குதுனு பாட்ட நீங்களே இன்செர்ட் பண்ணிக்கோங்க டியர்ஸ்!
அங்கயே இளநீர் வாங்கிக் குடிச்சிட்டு, கொஞ்சம் ஷாப்பிங் செஞ்சிட்டு ரூமுக்கு வந்துட்டோம்! காலை உணவு, டின்னர் ரெண்டும் தங்கி இருக்கற ஹோட்டல்லயே தந்திடுவாங்க! நைட் டின்னர் சாப்பிட்டுட்டு, ரூமுக்கு வந்தா, கதவு தட்டற சத்தம். வேற யாரு, என்னோட புது மகத்தான். சித்தி கார்ட்ஸ் விளையாடலாம் வாங்க சித்தின்னு கூப்ட்டா! நாங்க மூனு பேரும் உக்காந்து அவ கூட விளையாடனோம். அதுக்கு அப்புறம் டயர்ட்ல தூங்கியாச்சு!
மறு நாளும் ஜெய்ப்பூர்தான்! என்ன செஞ்சோம்னு அடுத்த அப்டேட்ல சொல்றேன். பாய் டியர் ஆல்!!!

Author: VanishaAdmin
Article Title: 24/3/2026--Day 7
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.