வணக்கம் டியர்ஸ்,
வாங்க இன்னொரு ட்ரீப் போகலாம். இந்தத் தடவை பட்ஜெட் ட்ரீப், சிங்கப்பூருக்கு!
பதினைஞ்சு வருஷத்துக்கு முன்ன நாங்க சிங்கப்பூர்லதான் இருந்தோம். ஹவுஸ் ஓனருக்கு அங்க வேலை கிடைச்சதனால ஒரு 4 வருஷம் அங்க லிவிங்ஸ்டன். அதன் பிறகு மலேசியாவுக்கு(ஜொகூர் மாநிலம்—சிங்கப்பூர்ல இருந்து கடல் தாண்டி வந்தா இந்த மாநிலம்- வா வா எந்தன் வாழ்வே கதைல இதைப் பத்தி நெறய எழுதிருப்பேன்) மறுபடி வந்துட்டோம். பிறகும் அடிக்கடி போவோம் சிங்கப்பூருக்கு. பாப்பா வந்ததுல இருந்து ஒரு பத்து வருஷமா அங்க அடிக்கடி போக முடியல. சோ இந்த ட்ரீப் ப்ளான் பண்ணேன் அவளுக்கும் அம்மாவுக்கும். மூனு ஜெனெரெஷன் லேடிஸ் ட்ரீப் இது.
செவ்வாய்க்கிழமை காலை பத்து மணி போல ஜொகூர்ல இருந்து பஸ் எடுத்தோம். மலேசிய இமிகிரேஷன், சிங்கப்பூர் இமிகிரேஷன்னு பஸ்ல லக்கேஜ தூக்கிட்டு இறங்கி ஏறி இறங்கி ஏறின்னு ஒரு வழியாகிட்டேன். ரெண்டு பக்க இமிகிரேஷனும் கியூ.ஆர் கோட் அறிமுகப் படுத்திருக்காங்க ஈசியா கடந்து போக! இமிகிரேஷன் செக்லாம் முடிஞ்சு பஸ்ல பூன் லே(Boon Lay MRT) வந்து இறங்கிட்டோம். அங்க ஜூரோங் போய்ண்ட்(Jurong Point)னு ஒரு மால் இருக்கு. பிறகென்ன, மால பார்த்ததும் எங்கூட்டு குட்டிக்கு பசிச்சிடுச்சு!!!
அவளோட சாய்ஸ்ல விடவும், Jollybeeனு ஒரு ஃபாஸ்ட் ஃபூட்ல உக்கார வச்சா! மேக்டோனல்ட் மாதிரிதான் இதுவும். ஆனா ஃப்ரைட் சிக்கன் செம்ம ருசி. அம்மாவுக்கு பர்கர். நான் ரெண்டு பேர் கிட்டயும் கொஞ்சம் எடுத்து சாப்பிட்டேன். பட்ஜேட் ட்ரீப்னா இப்படித்தான்னு வைங்களேன்!!!! எங்க ஊரு காசுக்கு 3 வெள்ளினா சிங்கப்பூர் காசு 1 தொராயமா 1 டாலர். பாப்பாக்கும் அம்மாவுக்கும் சொல்லித்தான் கூப்டு வந்தேன். சாப்பாடு என்ன வேணும்னா கேளுங்க! வாங்கி தரேன். நமக்கு சோறு முக்கியம். மத்தபடி சாமான் செட்டுலாம் கேக்காதீங்கன்னு!!!
View attachment 466
ஹோட்டல் செக் இன் 3 மணிக்குத்தான். அதனால மெதுவாவே சாப்பிட்டோம்! பிறகு அந்த மால ஒரு ரவுண்ட் வித் லக்கேஜ் பேக். Don Don Donkiனு ஒரு கடை. அங்க ஜப்பான்ல கிடைக்கற பொருளேல்லாம் கிடைக்குமாம். அங்க போயே ஆகனும்னு நம்ம பாப்பா நிக்கறா! சரின்னு போனோம். தேடித் தேடி என்னமோ ஸ்னேக் வாங்கனா.
View attachment 467
அம்மாவும் பாப்பாவும்
மணி 1.30 ஆகவும் MRT(ட்ரேன்) ஸ்டேஷன் போனோம். போற வழில என்னோட ஃபேவரேட் Old Chang Kee கடை. போற வழில என்னோட ஃபேவரேட் Old Chang Kee கடை. அங்க கறிபாப்(சமோசா போல) ரொம்ப ஃபேமஸ். எனக்கு ரொம்பப் பிடிச்ச ஐட்டம் அது.
View attachment 468
View attachment 469
இதுதான் அந்த கறிபாப். உள்ளே கோழி, முட்டைலாம் இருக்கும். போட்டோ புடிச்சு ஹவுஸ் ஓனருக்கு உடனே அனுப்பி வெறுப்பேத்தியாச்சு. டீ டைம்முக்கு குடிக்க வாங்கிட்டோம்.
Boon Lay Stationல இருந்து ட்ரேன் எடுத்து, லிட்டில் இந்தியா ஸ்டேஷன் போகனும். அங்கத்தான் பட்ஜெட் ஹோட்டல் புக் பண்ணிருந்தேன் நான். புதுசா வந்த ட்ரேன் லைன்லாம் எனக்கு சரியா தெரியல. கொஞ்சம் குழப்பமா இருந்தது. சோ பழைய முறைலயே நான் போனேன். Outram Park ஸ்டேசன்ல இறங்கி கொஞ்ச தூரம் உள்ளயே நடந்து இன்னொரு ட்ரேன் லைன் மாறனும். சிங்கப்பூர்ல மொஸ்ட்லி நடடா ராஜா நடடாத்தான்! இங்க வரனும்னு நெனைக்கறவங்க நல்லா ஃபிட்டாகிட்டு வாங்க. என்னை மாதிரி மூச்சு வாங்கிடாதீங்க!!!
லிட்டில் இந்தியா ஸ்டேஷன்ல இறங்கி வெளியேறி Belilios Laneக்கு நடந்து போகனும். அங்கத்தான் எங்களோட ஹோட்டல் இருந்தது. ஹோட்டல் பேரு Dash Living Rochor. 2 நைட் 3 டேஸ் புக் பண்ணேன். சின்ன ரூம்தான். ஆனா மூனு பேரு படுத்துக்க கம்பர்டபிளா இருந்தது.
View attachment 470
View attachment 471
View attachment 472
இந்த ஹோட்டல்ல எல்லாமே ஆட்டோமேட்டட். செல்ஃப் செக் இன். டேப்ளட் ஒன்னு இருக்கு! எங்கயோ உக்காந்துட்டு நமக்கு கைட் பண்றாங்க! ஈசியா இருக்கு. ரூம்குள்ள போனதும் இவங்கள விட்டுட்டு நான் போய் டீ அண்ட் காபி வாங்கிட்டு வந்தேன். டீ டைம் முடிச்சிட்டு கிளம்பலாம்னா, பாப்பாவுக்கு ஸ்லிப்பர் புட்டுக்கிச்சு! அம்மாவுக்கும் ஷூ கால கடிக்கிது. சரின்னு ஸ்லிப்பர் வாங்க போனோம் லிட்டில் இந்தியால இருக்கற கடை வரிசைல. இது எதிர்பாராத செலவாகிடுச்சு.

Author: VanishaAdmin
Article Title: Day 1--10/12/2024
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.