It Ends With Us--with spoiler

  • This is the official new home of Vanisha Novels, previously hosted at vanishanovels.com.

VanishaAdmin

Moderator
Staff member
Jul 31, 2024
592
-2,583
93
OTT--Netflix

வணக்கம் டியர்ஸ்,

View attachment 526

மலேசியா டாப் 10ல இருந்தது இந்தப் படம். சரி அப்படி என்னத்தான் இருக்குதுன்னு பார்க்க ஆரம்பிச்சேன். படத்தோட நாயகி பேரழகிலாம் இல்ல. ஆனா ஒரு கரிஸ்மா இருக்கு. மனசுல பச்சக்குன்னு ஒட்டிக்கிற பாவங்கள் இருக்கு.

கதை, நாயகி அப்பாவோட இறப்புல இருந்து ஆரம்பிக்குது. ஃப்யூனரல்ல அப்பா கிட்ட பிடிச்ச அஞ்சு விஷயத்த பத்தி பேச சொல்வாங்க. இவ முயற்சி பண்ணிப் பார்த்துட்டு, ஒன்னுமே பேசாம போய்டுவா! அன்னைக்குத்தான் ஒருத்தன பெரிய பில்டிங் மொட்டை மாடில பார்ப்பா. அவ அங்க உக்காந்து அழ வந்திருப்பா. அவனோ கோபத்த தணிக்க வந்திருப்பான். ரெண்டு பேர்க்குள்ளயும் ஓர் ஈர்ப்பு ஆரம்பிக்குது அங்க.

இவ ஒரு பூக்கடை திறப்பா. அதுல வேலைப் பார்க்க ஒருத்தி வரா. அவளோட ப்ரதர்தான் இந்த ஹீரோ. அவன் ஒரு நீயூரோ சர்ஜன். பிறகு அடிக்கடி சந்திக்கறாங்க. ஈர்ப்பு, லவ்வா மாறுது. நடு நடுவுல இவளோட பழைய காதலனோட காட்சி வேற வருது. இவ காலேஜ் படிக்கறப்ப. அம்மா தொரத்தி விட்டுட்டான்னு ஒரு பாழடஞ்ச வீட்டுல இருப்பான் இவளோட பழைய காதலன். நாயகியோட எதிர் வீடுதான் அது. அவனுக்கு சாப்பாடு கொண்டு போய் குடுப்பா. அவன் கூட நட்பா பழகுவா. அவன யாருமே சீண்ட மாட்டாங்க! குளிக்காம நாத்தமா இருக்கான், ஹோம்லெஸ் அப்படி இப்படின்னு. இவ வீட்டுல அவனுக்குக் குளிக்க இடம் குடுப்பா. அப்பாவோட துணிலாம் குடுப்பா. நட்பு அதுக்கும் மேல போகுது.

இன் பிட்வீன் அவளோட அப்பாவ பத்தியும் வருது. அப்பன்காரன் இவ அம்மாவ அடிக்கடி போட்டு அடிப்பான். அப்யூஸ் பண்ணுவான். இவ அதெல்லாம் பார்த்துத்தான் வளருறா. அந்த டைம்ல இவளுக்கும், அந்த ஹோம்லஸ் பையனுக்கும் உறவு இருக்குன்னு தெரிஞ்சு அவன போட்டு அடிச்சு, ஆம்புலன்ஸ்ல ஏத்திடறான் இவ அப்பா. அதோட அவங்க காதல் சேப்டர் முடிஞ்சிடுது.

அந்த சர்ஜனோடவும், இவ அம்மாவோடவும் ஒரு ரெஸ்டாரெண்டுக்கு சாப்பிட போறா இவ. அங்கத்தான் மீண்டும் பழைய காதலன பார்க்கறா! ரெண்டு பேரும் நான் இப்படி இருக்கேன், நீ எப்படி இருக்கேன்னு பேசிக்கறாங்க.

சர்ஜனுக்கு இவ மேல லவ் கூடிப் போய் கல்யாணம் செய்ய கேக்கறான். இவளும் ஒத்துக்கறா. ஆனா இவன் கிட்ட பழைய காதல பத்தி சொல்லித்தான் கல்யாணம் செய்யறா. கல்யாணம் முடிஞ்சு இவ மேல சந்தேகம் வருது சர்ஜனுக்கு. ரெண்டு மூனு தடவை அடிச்சிடறான். ஆனா அது ஆக்சிடெண்ட்டலா நடந்ததுன்னு இவள நம்ப வைக்கறான். அம்மா வாழ்க்கைல நடந்தது, தன் வாழ்க்கைலயும் தொடருதுன்னு ரொம்ப பயந்து போற. அவன விட்டுட்டு வந்திடறா. அப்போத்தான் தெரியுது மாசமா இருக்கான்னு. அந்த டைம்ல பழைய காதலன்தான் அடைக்கலம் தரான்.

மறுபடி எப்படி அவ லைஃப்ப கட்டுக்குள்ள கொண்டு வரான்றதுதான் கதை. குழந்தைய சுமக்கறா. புருஷன், இனி இப்படி நடக்காது. என் கூட வந்திடுன்னு கூப்பிடறான். ஆனா போகல இவ. அவன வெறுத்து ஒதுக்கவும் இல்ல. அவனுக்கும் கிளை கதை இருக்கு.

எனக்குப் புடிச்ச சில வரிகள் இதுல,

பழைய காதலன் அவ இந்நாள் நிலை தெரிஞ்சு சொல்வான். 'மறுபடி நீ காதல்ல விழறதா இருந்தா, என் கிட்ட காதல்ல விழு'ன்னு! அவ்ளோ டச்சிங்கா இருக்கும்.

குழந்தைப் பொறக்கறப்ப புருஷன் கூடவே இருந்து சப்போர்ட் பண்ணுவான். குழந்தைய கைல வச்சிக்கிட்டு அவண்ட்ட டைவர்ஸ் குடுன்னு கேப்பா. அவன் இல்ல, அது மட்டும் வேணா! வந்திடுங்க ரெண்டு பேரும் என் கூடன்னு சொல்வான். அதுக்கு அவ கேப்பா,

"நாளைக்கு நம்ம பொண்ண ஒருத்தன் படில இருந்து தள்ளி விட்டு, அது ஆக்சிடெண்டுனு சொன்னா! நீ என்ன செய்வ? அவள அபியூஸ் பண்ணிட்டு மன்னிச்சிடுன்னு வந்து நின்னா நீ என்ன செய்வன்னு?"

"அவன விட்டுட்டு வந்திடுன்னு சொல்வேன்" அப்படின்னு குற்ற உணர்ச்சிப் பொங்க பதில் சொல்வான் அந்தப் புருஷன்.

அவன் போனதும், குழந்தைய அணைச்சிக்கிட்டு அவ சொல்வா.

"It ends with us" அப்படின்னு!!!

குடும்ப வன்முறை என்கிற வட்டத்தை விட்டு வெளியானத அழகா சொல்ற திரைப்படம்.

கடைசில பழைய காதலனுக்கும், இவளுக்கும் ஃப்யூச்சர் இருக்கலாம்ங்கற மாதிரி எதிர்ப்பார்ப்போட முடிச்சிருப்பாங்க.

இது Colleen Hooverருடைய புத்தகத்த தழுவி வந்த படம்.

கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்.

பி.கு..காதல் காட்சிகள் அங்கிங்க நிறய இருக்கு. ஆனா அப்படி ரொம்ப ஓவரா இல்ல.
 

Author: VanishaAdmin
Article Title: It Ends With Us--with spoiler
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.