அத்தியாயம் 11
சுள்ளுன்னு அடிக்குது வெயிலு
தோகை விரிச்சாடுது என் மயிலு!!!
சில மாதங்கள் ஓடி இருந்ததில் இளாவுக்கும் பரிட்சை முடிவுகள் வெளி வந்திருந்தன.
“ஜோ! ரெண்டு பி(B), மத்ததெல்லாம் ஏ(A) வாங்கிருக்கேன்! ஏவ பார்த்து எங்கப்பாவுக்கு ஒரே சந்தோஷம். பி ஏன் வந்ததுன்னு எங்கம்மாவுக்கு ஒரே கவலை!” எனச் சொல்லிச் சிரித்தான் இளா.
“காங்கிராட்ஸ்டா இளா!!! உனக்கு எப்படி ஃபீல் ஆகுது? ஆர் யூ ஹேப்பி?” எனக் கேட்டான் சரவணன்.
“சரா! நான் அவரேஜ் ஸ்டூடண்ட்தான்! இந்தப் பரீட்சைதான் அடுத்து என்னோட எதிர்காலத்த நிர்ணயிக்கும்னு உசுர குடுத்துப் படிச்சிருக்கேன்! கிடைச்ச ரிசால்ட்ல எனக்குப் பூரண திருப்தி! நான் மெடிக்கல் செய்யனும்னு அம்மாவுக்கு ரொம்ப ஆசை! அவங்க சைட் ரிலேடிவ்ஸ் நெறைய பேர் டாக்டராகி நெனப்போட சுத்துறாங்களாம். அது என்னமோடா! எங்க ஊர்ல டாக்டராகிட்டா என்னமோ ரெண்டு கொம்பு முளைச்சிட்ட மாதிரி பந்தா பண்ணுவாங்க போ” எனச் சலித்துக் கொண்டான் இளா.
“எங்க ஊர்லயும் அப்படித்தான்டா ஜோ”
“எனக்கு பந்தா பண்ணறதுக்கு இஷ்டம் இல்ல! ஆனாலும் டாக்டராகனும்னு ஆசை இருக்குடா”
“அம்மாவுக்காகவாடா இளா?”
“அடேய்!!! நான் என்ன ராக்கி பாயா? அம்மாவுக்காக தங்கத் சுரங்கத்த என் கட்டுக்குள்ள எடுத்துக்க!!! பெத்தவங்களுக்காக எல்லாம் செய்யலாம்டா! அதுக்குன்னு எதிர்காலத்த விட்டுக் குடுக்க முடியுமா? நான் செய்யப் போற வேலை எனக்குப் புடிக்கனும்! நான் கட்டிக்கப் போற பொண்ண எனக்குப் புடிக்கனும்! இதுலலாம் அம்மா சொல்றாங்க, அப்பா சொல்றாங்கன்னு நான் காம்ப்ரமைஸ் பண்ணிக்க மாட்டேன்!”
அவனது பேச்சில் சரவணனுக்குக் கிளியின் நினைவு வந்தது. அம்மா சொன்னதுக்காகத் தம்பியைக் காக்கவும், முன்னேற்றவும் அவள் படும் பிரம்ம பிரயத்தனங்கள் கண் முன் வந்தது. அவரவர்க்கு அவரவர் நியாயம் என எண்ணிக் கொண்டான் இவன்.
“சேவை செய்ய நீ டாக்டராகனும்னு நெனைக்கறத நெனைச்சு எனக்கு பெருமையா இருக்கு ஜோ”
“சேவை!!!! உன் மூஞ்சு!!! போடாங்! கொஞ்ச நாள் கஷ்டப்பட்டு படிச்சு, வேலைப் பார்த்தா, அதுக்குப் பிறகு கிளினிக் வச்சு செட்டிலாகிடலாம்டா! ஆள் போட்டு கிளினிக்க பார்த்துக்கிட்டு, அப்பப்போ வந்து எட்டிப் பார்த்துட்டு போனா போதும்! வந்துட்டான் சேவை எனக்குத் தேவைன்னு” என அவன் நக்கலடிக்க,
“வெளங்கிடும்டா இளா” என இவன் சிரித்தான்.
“அத விடு! இன்னிக்கு எங்கம்மா என் ரிசால்ட் கிடைச்சத கொண்டாட விருந்து தராங்க! நீ கண்டிப்பா வரனும்”
“அதெல்லாம் வேணாம்டா!” எனத் தயங்கினான் இவன்.
“டேய் வாடா! இத்தனை நாள் நானும் வீட்டுக்குக் கூப்பிடறேன்! வரேன், வரேன்னு பீலா விட்டுட்டுத் திரியற! இன்னும் ஓன் வீக்ல நான் வேலைய விட்டுட்டு படிக்க இடம் தேடற வேலைல பிசி ஆகிடுவேன்! சோ, ஒழுங்கா வீட்டுக்கு வா” என வற்புறுத்தினான் இளா.
அவர்களை விட்டு சற்றுத் தள்ளி நின்று ‘வேப்’ புகைத்துக் கொண்டிருந்த ஷாமினி,
“டேய் இளவரசா!!! என்னைலாம் உன் வூட்டுக்கு கூப்புட மாட்டியா?” எனக் கேட்டாள்.
“கோக்கோய்க்கு கொழுப்ப பார்த்தியா?” எனச் சரவணனிடம் முணுமுணுத்த இளா,
“வாங்க மேடம்! உங்க பாதம் பட என் வீடு பாக்கியம் பண்ணிருக்கனும்” என இவளிடம் சத்தமாகச் சொன்னான்.
“நான் என்ன உங்கம்மாவுக்கு மருமகளா??? என் பாதம் பட்டதும் உங்க வீடு பாக்கியம் அடைய!!! பரதேசி மாதிரி பேசாம, எத்தனை மணிக்கு டின்னர்னு மட்டும் சொல்லு! நாங்க ரெண்டு பேரும் வரோம்” என்றாள் அவள்.
“ஹ்க்கும்! நீ மட்டும் எங்கம்மாவுக்கு மருமக ஆகிட்டன்னா, படக்கு படக்குன்னு பேசற அந்த நாக்க வெட்டி எங்கம்மா பங்காங்(மலாயில் வறுப்பது எனப் பொருள்படும்) பண்ணிடுவாங்க!” என வாய்க்குள்ளேயே முணுமுணுத்தான்.
“என்ன மொனமொனங்கற?”
“எட்டு மணிக்கு டின்னர் மேடம்! நீங்க கடை அடைச்சிட்டு எத்தனை மணிக்கு வந்தாலும் ஓகே மேடம்! உங்களுக்காக சாப்பாடு கண்டிப்பா எடுத்து வச்சிருப்பேன் மேடம்” என அத்தனை மேடம் போட்டான் இளா.
“யாரு சமையல்?”
“கேட்டரிங்ல சொல்லிருக்கோம்”
“அப்போ சரி! பாண்டியா! கடை அடைச்சதும், கிளம்பி நில்லு! நான் சீக்கிரமா போய் கிளம்பிட்டு வந்து உன்னை ஏத்திக்கறேன்! டேய் இளவரசா, உன் அட்ரஸ பாண்டிய மன்னனுக்கு அனுப்பி விட்டிரு” எனச் சொல்லியபடியே கடையினுள் போய் விட்டாள்.
“சரியான அராத்து! எவன் இவ கிட்ட மாட்டிக்கிட்டு படாதபாடு படப் போறான்னோ தெரில போ”
“இப்போத்தான் உங்க வீட்டு மருமகனு சொன்ன! அப்போ அந்த அதிர்ஷ்டக்காரன் நீதான்டா”
பெரிய கும்பிடாகப் போட்ட இளா,
“ஆள விட்றா சாமி!” எனச் சொல்லியபடியே உள்ளே நுழைந்தான்.
அதன் பிறகு இருவருக்கும் வேலை சரியாக இருந்தது.
சரவணனும் இந்த இடத்துக்கு வேலைக்கு வந்து ஏழு மாதங்கள் போல ஓடி விட்டிருந்தன. இது போல ஒரு காபிதியாம் நடத்துவதற்கான நெளிவு சுழிவுகளை நன்றாகக் கற்றுத் தேர்ந்திருந்தான். அங்கு சமைக்கப்படும் உணவு வகைகளை எல்லாம் எப்படி செய்வது எனக் கற்று அதை எழுதியும் வைத்திருந்தான். ஒரு மெனுவுக்கு இவ்வளவு ஐட்டங்கள் போடும் போது, அதற்கான விலையை எப்படி நிர்ணயிப்பது என எல்லாம் புரிந்து கொண்டிருந்தான்.
கடை அடைத்ததும் ஷட்டரை மூடியவன், ஓடிப் போய் குளித்து விட்டு வந்தான். மற்றுமொரு டெஸ்டில் நன்றாக செய்ததற்காக ஷாமினி வாங்கித் தந்திருந்த நீல நிற ஷர்ட்டோடு, நீல ஜீன்ஸ் அணிந்து கொண்டான்.
அந்த ஷர்ட் வாங்கிக் கொடுத்த போது நடந்த சம்பாஷனைகள் நினைவு வந்து இவனுக்குப் புன்னகையைக் கொடுத்தது.
“அடிக்கடி இப்படிலாம் கிப்ட் வாங்கிக் குடுக்காதீங்க மேடம்”
“ஏன்?”
“டீயூசன் சொல்லித் தரதுக்கு ஏற்கனவே காசு வேற தரீங்க! அதுல இந்த கிப்ட்லாம் வேற எதுக்கு? ரொம்ப கில்ட்டியா ஃபீலாகுது! என்னமோ ஓன் வேயா நானே எல்லா நன்மையையும் அடையற மாதிரி”
“அடங்குடா பாண்டியா!!! தம்பிக்கு வாங்கினப்போ, உனக்கும் ஒன்னு வாங்கனேன்! சும்மா குடுத்தா நீ பிகு பண்ணுவியேன்னுதான், டெஸ்ட் மார்க்க சாக்கு வச்சி தந்தேன்! அதுக்கு போய் என் கிட்டயே ஓவரா படம் ஓட்டுற! பிச்சிப்புடுவேன் பிச்சி! பயம் விட்டுப் போச்சில்ல என் மேல!” என அவள் முறைக்க, பட்டெனச் சட்டையை வாங்கிக் கொண்டான்.
அதை வெளியே அணிந்துப் போக இன்றுதான் வேலை வந்திருந்தது. தலையை ஸ்டைலாக வாரி விட்டவன், முகத்தில் கொஞ்சமாக பவுடரை ஒற்றிக் கொண்டான். கையில் கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டான். ஒருத்தர் வீட்டுக்கு விருந்துக்குப் போகும் போது வெறும் கையையா ஆட்டிக் கொண்டு போக முடியும்! கிளியிடம் கேட்டு எதாவது வாங்கிப் போகலாம் என முடிவெடுத்தவன், கடையைப் பின்பக்கமாகப் பூட்டி அலாரத்தை ஆன் செய்து விட்டு முன் பக்கம் வந்து நின்றான்.
அவனைக் காக்க வைக்காமல் பத்து நிமிடத்தில் வந்து விட்டாள் ஷாமினி. குஷியாக அவளது காரில் ஏறி அமர்ந்து கொண்டான் சரவணன்.
“இந்த சட்டை உனக்கு ரொம்ப நல்லா இருக்கு பாண்டியா”
“தேங்க்ஸ் மேடம்”
இன்றுதான் அவளை சல்வாரில் பார்க்கிறான் இவனும். எப்பொழுதும் கல்லூரிக்குப் போட்டுச் செல்லும் மாடர்ன் உடைகளிலேயே காபிதியாமுக்கு வேலைக்கு வருவாள் ஷாமினி. குட்டை, கட்டை, கை இல்லாத சட்டை என செக்சியாகத்தான் அவளைப் பார்த்திருக்கிறான். இந்த சல்வார் கூட கையில்லாமல், உடம்பை இறுக்கிப் பிடித்தபடிதான் இருந்தது. ஆனாலும் அவளுக்குப் பாந்தமாக இருந்தது.
‘நீங்க இந்த சல்வார்ல ரொம்ப, ரொம்ப அழகா இருக்கீங்க மேடம்’ என நினைத்துக் கொண்டானே தவிர, வெளியே சொல்லவில்லை.
ஒரு சூப்பர்மார்க்கேட்டில் காரை நிறுத்தினாள் ஷாமினி.
“வா” என அழைத்தபடி உள்ளே நுழைந்தாள்.
வைன் மற்றும் சில வெளிநாட்டு பிஸ்கட்டுகள் வைத்து அழகாய் கட்டி இருந்த ஒரு ஹேம்பரை வாங்கினாள் ஷாமினி. அவள் பணம் கட்ட, ஹேம்ப்பரை இவன் தூக்கிக் கொண்டான். அதை காரின் பின் புறம் வைத்து விட்டு, முன்னே அவள் அருகே வந்து அமர்ந்தவன், தனது வாலட்டில் இருந்து பணம் எடுத்து அவளிடம் நீட்டினான்.
“என்ன?”
“பாதி பணம் நானும் தரேன் மேடம்”
“அந்த ஹெம்ப்பர் விலை என்னன்னு தெரியுமா?”
“நான் பார்க்கலையே”
“நானூறு வெள்ளி!”
‘கிட்டத்தட்ட ஏழாயிரம் ரூபாய்’ எனக் கணக்குப் போட்டது இவன் மூளை.
“இந்த இளா நம்ம கிட்ட நார்மலா பழகறானே, அவன் சாதாரண ஆள்னு நெனைச்சிடாதே! நல்ல பசையுள்ள பார்ட்டி அவங்க! அவங்க வீட்டுக்குப் போகிறப்போ, நாமளும் கொஞ்சம் கெத்தோட நடந்துக்கனும்! இதெல்லாம் வாங்காம போனா, அவனோட அம்மா உன்னை வீட்டுக்குள்ள விட்டாலும் ஒரு மாதிரி கேவலமாத்தான் பார்ப்பாங்க! அதான் அவன் உன்னைக் கூப்பிடவும், நானும் வாலண்டியரா கூட வரேன்! உனக்கு கிடைக்கற சம்பளமே குறைவுதான்! அதுல எவ்ளோ கட்டு செட்டா காசு சேர்க்கறன்னு எனக்கும் தெரியும்! சோ பாதி காச குடுக்கறேன்னு என்னை வெறியேத்தாம, மூடிட்டு வா! புரியுதா?”
“எனக்காகத்தான் வரீங்களா மேடம்?”
“வேற எதுக்கு? என் நாக்க பங்காங்(வறுப்பது) பண்ண போற என் மாமியார பார்க்க வரேன்னு நெனைச்சியா?” என இவள் கேட்க, இவனுக்கு அப்படி ஒரு சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.
இளா பேசிய அனைத்தையும் கேட்டிருக்கிறாள் எனத் தெரிந்ததும் இவனால் சிரிப்பை அடக்கிக் கொள்ளவே முடியவில்லை. சிரித்து முடித்தவன், பெரிய பணக்காரர்களின் வீட்டில் தான் குறுகிப் போய் ஒரு மூலையில் நிற்கக் கூடாது என எண்ணி வந்திருப்பவளை வாஞ்சையாகப் பார்த்தான்.
“தேங்க்ஸ் கிளி”
“ஒரு நாள் இல்லைனா ஒரு நாள், என்னைக் கிளின்னு கூப்புடற அந்த வாயக் கிழிக்கப் போறேன் பாரு” என மிரட்டியவள், இளாவின் வீட்டின் முன்னே காரை பார்க் செய்தாள்.
வண்ண விளக்குகளால் வீடே ஜெக ஜோதியாக இருந்தது. இவன் ஹேம்பரைத் தூக்கிக் கொள்ள, இருவரும் உள்ளே நுழைந்தார்கள். தோட்டத்தில் மேசை நாற்காலி, ஷாமியானாவெல்லாம் போடப்பட்டு களைக் கட்டிக் கொண்டிருந்தது விருந்து. பாட்டுச் சத்தம் அதிர, உணவு வாசனை மூக்கைத் துளைத்தது.
இவர்களைப் பார்த்ததும் ஓடி வந்தான் இளா.
“வாடா ஜோ! வாங்க மேடம்” என வரவேற்றான்.
அவன் அம்மாவிடம், அப்பாவிடமும் இவர்களை அறிமுகப்படுத்தினான் அவன். இளாவின் அப்பா, நின்று நான்கு வார்த்தைப் பேச, அவனது அம்மாவோ சரவணன் பக்கமே திரும்பாமல் இவளிடம் மட்டும் வாங்க என்பதோடு நிறுத்திக் கொண்டார்.
பரிசுப் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மேசையில் ஹேம்ப்பரை வைத்து விட்டு, இவர்கள் இருவரும் சாப்பிடப் போனார்கள்.
“பாண்டியா!!”
“சொல்லுங்க மேடம்”
“என் மாமியா கெழவிய பார்த்தியா? நாலு வார்த்தை சிரிச்சுப் பேசனா வாய் சுழுக்கிக்குமா அதுக்கு?” எனக் கேள்விக் கேட்டவளைப் புன்னகையுடன் பார்த்தான் இவன்.
“மாமியா இல்லாத வீடா பார்த்து வாக்கப் பட்டுப் போங்க மேடம்! நம்ம இளா அம்மா மாதிரி உங்களுக்கு மாமியா வந்தா, சண்டைப் போட்டே நீங்க ஓஞ்சிப் போய்டுவீங்க”
“அப்படினா நான் பாண்டியனின் ராஜ்ஜியத்துக்குத்தான் வாக்கப் பட்டு வரனும்!” என இவள் கிண்டலடிக்க,
“அப்போ அந்த ராஜ்ஜியம் கண்டிப்பா பூஜ்ஜியமா ஆகிடும் மேடம்! விட்டுருங்க” என்றவனை முறைத்தவளின் கண்களில் சிரிப்பிருந்தது.
பஃபே முறையில் உணவை அடுக்கி வைத்திருக்க, வேண்டியதைப் போட்டுக் கொண்டு மேசையில் அமர்ந்தார்கள் இவர்கள் இருவரும். மற்ற நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த இளா, இவர்களுக்குக் குளிர்பானம் கொண்டு வந்து வைத்தான்.

Author: VanishaAdmin
Article Title: Jagam Nee--EPI 11
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.