அத்தியாயம் 14
ரயில் வண்டி போடுது சத்தம்
அணைச்சுக் குடுடி ஒரு முத்தம்!!!
அவ்வளவு கூட்டம் அந்த வீட்டில். நிற்க இடமில்லாமல் இடித்துப் பிடித்துக் கொண்டு அலை மோதியது மக்கள் வெள்ளம். வீட்டு முன்புறம் பெரிதாக டெண்ட் போடப்பட்டிருந்தது. அங்கிருந்த நாற்காலிகளில் பலர் அமர்ந்திருந்தார்கள். போலிஸ்காரர்களும் அங்கு குவிக்கப்பட்டிருந்தார்கள்.
வீட்டு ஹாலில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது தனசேகரின் உடல். ஆடிய ஆட்டமென்ன, தேடிய செல்வமென்ன எனும் பாடலுக்குப் பொருத்தமாய் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியிருந்தவர், சத்தமில்லாமல் படுத்திருந்தார். அவர் மனைவி தலை மட்டில் அமர்ந்து ஓலமிட, அவரின் பக்கவாட்டில், பார்வை தந்தையின் முகத்திலேயே நிலைக்குத்தி நிற்க, அழக் கூடத் தெம்பில்லாமல் அமர்ந்திருந்தாள் ஷாமினி. அவளது மடியில் சின்னக் குழந்தை போல கேவியபடி புதைந்திருந்தான் நிவின். இப்பொழுதுதான் எஸ்.பி.எம்(உயர்தர பரிட்சை) பரிட்சை ரிசல்ட் வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது அவனுக்கு.
“அப்பா! அப்பா” எனத் தேம்பிக் கொண்டே இருந்த தம்பியின் தலையை தன்னையறியாமலேயே கோதிக் கொடுத்தாள் தமக்கை.
ஆறடி நிலம்தான் கடைசியில் கூட வரும் எனத் தெரிந்தும், மனிதன் என்னவெல்லாம் செய்து தீர்க்கிறான்! ஒரு சிலருக்கு அந்த ஆறடி கூட இல்லை. வெறும் சொம்புதான்! அதைக் கூட ஆற்று நீரில் கரைத்து விடுகிறார்களே! சொத்து வேண்டும், ஆள் அம்பு வேண்டும், அதிகாரம் வேண்டும், ஆளுமை வேண்டும் எனப் பல வேண்டாதவைகளை செய்து இப்பொழுது உயிரற்ற உடலாய் கிடக்கும் தந்தையைப் பார்க்கும் போது நெஞ்சு குலுங்கியது! அவரை விட்டு ஒதுங்கிப் போக நினைத்தாலும், அவர் இல்லாமல் போய் விட வேண்டும் என நினைக்கவில்லையே! பிள்ளை மனம் ஊமையாய் அழுதது. அவர் தனக்கு செய்த துரோகம் கூட அந்த நொடியில் மறந்து போனது ஷாமினிக்கு!
‘அப்பா! அப்பா! எழுந்து வந்திடுங்கப்பா’ என உள்ளம் ஓலமிட்டது.
வெளியே சாங்கியங்கள் செய்ய எல்லாம் ரெடியாகி விட்டது என செய்தி வர, அவரது உடல் வைக்கப்பட்டிருந்த சவப் பெட்டி, வெளியே தூக்கிச் செல்லப்பட்டது! அவரது இரண்டாவது மனைவியையும் அவருக்குப் பிறந்த மகனையும் சொந்தக்கார பெண்கள் வெளியே அழைத்துப் போக, இவளை யாரோ பிடித்துத் தூக்கினார்கள். இவள் சட்டெனத் திரும்பிப் பார்க்க, அவளது அப்பாவிடம் வேலை செய்பவன், இவளை ஆழ்ந்து பார்த்தான். அவனது பார்வை இவளுக்குக் குளிர் பரப்ப, அவன் கையோ இவள் இடுப்பை அழுத்திப் பிடித்தது. சட்டென அவன் கையை தள்ளி விட்டவள், நெஞ்சம் தடதடக்க தம்பியைப் பிடித்துக் கொண்டு வெளியே போனாள்.
தந்தை கொடுத்த பாதுகாப்பு வலை அவர் போனதுமே அறுப்பட்டுப் போனதை உணர்ந்து கொண்டாள் ஷாமினி! அவரது எதிரிகளால் மட்டும் அல்ல, அவரோடு உள்ளவர்களாலும் தனக்கும் தம்பிக்கும் இனி ஆபத்து நேரலாம் எனச் சட்டென விளங்கிப் போனது!
‘எங்கள இப்படி ஒரு நிலைல வச்சிட்டுப் போய்ட்டீங்களே அப்பா!’ என உள்ளுக்குள் கதறினாள் மகள்.
தனசேகரின் மரணம் மர்மமாகவே இருந்தது. அவரது எதிரிகள் சுட்டு விட்டதாக சிலர் சொல்ல, போலிஸ்தான் ரகசிய என்கவுண்ட்டர் செய்து விட்டதாக சிலர் சொல்ல, என்ன நடந்திருக்கும் என யாருக்குமே தெரியவில்லை. நண்பர்களுடன் சாப்பிட போன இடத்தில் தூரத்தில் இருந்து இவரை சுட்டு வீழ்த்தியிருந்தார்கள்.
அவரது இரண்டாவது மனைவியின் மகன்தான் கடைசி மகன், அவன்தான் கொள்ளி வைக்க வேண்டும் எனப் பேச்சு வந்தது. அவளது அப்பா கூடவே வலது கையாக செயல்பட்ட பெரியவர் ஒருவர் முன் வந்து,
“அவருக்கு எதாச்சும் ஆச்சினா நிதினுதான் கொள்ளிப் போடனும்னு என் கிட்ட சொல்லிருக்காரு! அந்தப் பையனே எல்லாம் செய்யட்டும்” எனக் கணீர் குரலில் சொல்ல, மற்ற அனைவரும் அமைதியாகிப் போனார்கள்.
அக்காவின் முகத்தைப் பார்த்தான் நிதின்.
“போ” என அவள் கண்ணீருக்கு இடையே சொல்ல, அவனுக்கு ஒரு வேட்டி கொடுக்கப்பட்டது.
பிள்ளைகளாக இவர்களும், அந்த இரண்டாவது மனைவியின் மகனும் சேர்ந்து சாங்கியங்கள் செய்ய, மனைவியாக அந்தப் பெண்ணுக்கும் சாங்கியங்கள் செய்யப்பட்டன. கண்ணீர் வழிய தனது தகப்பனுக்கு வாய்க்கரிசி போட்டாள் ஷாமினி!
அவரது கேங்கில் இருக்கும் ஆட்கள் ஏற்பாடு செய்திருந்த உருமி மேளக் கலைஞர்கள் அடித்துத் தூள் கிளப்ப, பட்டாசு வெடி வெடிக்க, கோலாகலமாக தனசேகர் தனது இறுதி யாத்திரையை ஆரம்பித்தார். தந்தையின் உடல் தூக்கப்பட்டு வேனில் ஏற்றப்பட, தம்பியைக் கட்டிக் கொண்டு கதறினாள் ஷாமினி.
நிதினும் வேனில் ஏற்றிக் கொள்ளப்பட, இவளை முன்பு தொட்டு எழுப்பியவன் வந்து கை பிடித்து அழைத்தான்.
“வா! சுடுகாட்டுக்குப் போகலாம்”
“தம்பி! நான் கூட்டிட்டு வரேன்பா! நீ முன்னாடி போய் ஆக வேண்டியத பாரு” என இவள் அப்பாவின் வலது கை அவனிடம் சொல்லி விட்டு, ஷாமினியை மட்டும் தனது காரில் ஏற்றிக் கொண்டார்.
அழுது கொண்டே வந்தவளிடம்,
“பாப்பா! இது அழறதுக்கான நேரமில்ல! உன் கிட்ட நான் பேசனும்! கண்ண தொடைச்சிக்கோ” என்றார்.
இவள் அவரை அமைதியாக நோக்கினாள். பின் கரகரத்தக் குரலில்,
“அவன் பேச்சும், பார்வையும், உரிமையான செயலும் எனக்கு சரியாப்படல அங்கிள்” என்றாள்.
மெல்லியப் புன்னகை அவரிடம்.
“நீ புத்திசாலின்னு உங்கப்பா அடிக்கடி என் கிட்ட சொல்லிப் பெருமை படுவாரு பாப்பா! ஆனா அவரு புத்தி மட்டும் புல் மேயப் போய்டுச்சே!” என வருத்தப்பட்டார்.
பின் கடகடவெனத் தனக்குத் தெரிந்ததை ஒப்புவித்தார்.
“அந்த பையன் பேரு ராம்குமார்! உங்க சித்தி பக்கம் சொந்தம்! உங்கப்பாவ தாஜா பண்ணி, எள்ளுன்னா எண்ணெய்யா நின்னு அப்படியே ஒட்டிக்கிட்டான். அவனுக்கும் உங்கப்பாவோட சம்சாரத்துக்கும் வந்து..” எனத் தயங்கியவர்,
“அதெல்லாம் உனக்கு வேணா விடு! விஷயம் உங்கப்பாவுக்குத் தெரிஞ்சிருச்சு! அதான் சத்தமில்லாம இவனே போட்டுத் தள்ளிட்டானோன்னு எனக்கு ஒரு சந்தேகம் பாப்பா! அவன் கண்ணு உன் மேல இருக்குன்னு உங்கப்பாவுக்கும் தெரியும்! படிச்ச பையன், அதோட நல்லவனா வேற இருக்கான்னு உனக்கு கட்டி வச்சிடலாம்னு அவருக்கும் ஆசைத்தான், இந்தப் பலான மேட்டர் தெரியற வரைக்கும்! சொத்தெல்லாம் வேற அவர் போதையா இருந்தப்போ எழுதி வாங்கிட்டாங்களோன்னு டவுட்டா இருக்கு. அந்தப் பையன் நடந்துக்கற தெனாவெட்டா பார்த்தா அப்படித்தான் தோணுது! ரௌடியா வெளிய திரிஞ்ச உங்கப்பாவ, அதையும் இதையும் காட்டி மயக்கி பூனையாத்தான் வீட்டுல வச்சிருந்தா உன் சித்திக்காரி! ஆனாலும் உன் விஷயத்துல அவரு எப்பவும் கெட்டிதான். உனக்குன்னு காபிதியாம் கடை, நீ இப்போ இருக்கற வீடு, இப்படி அசையா சொத்தத்தான் அவரால எழுதி வைக்க முடிஞ்சது. என்னாலயும் இந்த ராம்குமார எதிர்த்து ஒன்னும் செய்ய முடியாது பாப்பா! எனக்கும் குடும்பம் குட்டின்னு இருக்கு!” எனப் பெருமூச்செறிந்தவர்,
“சீக்கிரம் தம்பிய கூட்டிட்டு வெளிநாடு கிளம்பிடு!” என முடித்தார்.
“இவனுக்கு பயந்து ஓடிப் போக சொல்றீங்களா அங்கிள்?”
“யம்மா! புரியாம பேசாதே! அப்பேற்பட்ட உங்கப்பாவையே போட்டுத் தள்ளிட்டாங்க! போலிஸ் இதெல்லாம் கண்டுக்கவே மாட்டாங்க! ஒரு ரௌடி ஒழிஞ்சான்னு அவங்களுக்கு சந்தோஷம்தான்! உனக்கு ஒன்னுன்னாலும் அவங்க வர மாட்டாங்க! காசு உள்ள பக்கம்தான் சட்டம் பேசும் பாப்பா! உசுரு இருக்கற வரைதான் துள்ள முடியும்! உன் தம்பிய போட்டுத் தள்ளிட்டு, உன்னைப் புடிச்சிட்டுப் போய் குடும்பம் நடத்திடுவான்! பொம்பள விஷயத்துல அவன் ரொம்ப மோசம் பாப்பா!”
அப்பா இருந்தும் நிம்மதியில்லை, இறந்தும் நிம்மதியில்லை என்பதில் நொந்து போனாள் பெண்.
“எதையும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதே பாப்பா! விசாலாம் படிப்புக்காக ஏற்கனவே எடுத்துட்டன்னு தெரியும்! சீக்கிரம் கிளம்பிடு!”
அமைதியாக யோசிக்க ஆரம்பித்தாள் இவள்.
“அங்கிள்! கேஷ்னு இப்போ என் கிட்ட எதுவும் இல்ல! எல்லாத்தையும் பாண்டி…” எனச் சொல்ல வந்தவள், பின் மாற்றி,
“கேஷ்லாம் செலவா போச்சி! அசையாத சொத்த என்னால அவசரமா விக்க முடியாது! உங்களுக்கு பவர் எழுதி தரேன்! கடைய நீங்க நடத்துங்க! வீட்டை மட்டும் வாங்கிகிட்டு கொஞ்சம் பணம் குடுங்க அங்கிள்” என மன்றாடும் குரலில் கேட்டாள் பெண்.
கடைசியில் பணத்துக்கு மற்றவர்களிடம் கெஞ்ச வைத்து விட்டாரே இந்த அப்பா என மனம் துடித்தது ஷாமினிக்கு. இருவரின் படிப்பு செலவையும் தான் செய்வதாக ஒற்றைக் காலில் நின்றவர், இப்பொழுது உயிரோடு இல்லை! எதிர்காலம் மிரட்டியது இவளை.
அவள் வசிக்கும் கொண்டோமினியத்துக்கு கரேக்டான அமவுண்ட் கொடுக்கும் அளவுக்கு பணம் இருந்ததுதான் இவரிடம்! பாசம் என்பது வேறு பணம் என்பது வேறல்லவா! இப்படியான சமயத்தில்தானே அடிமாட்டு விலைக்கு வாங்க முடியும் என எண்ணியவர், இவ்வளவுதான் கொடுக்க முடியும் எனப் பேசி அவளது சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டார். இவளுக்கும் புரிந்திருந்ததுதான் அவரது எண்ணம்! ஆனால் குறுகிய காலத்தில், வேறு எங்கு போய் வீட்டை விற்பாள்!!! சுற்றி உள்ள மனிதர்களை நினைத்து மனது கசந்து போனது.
“என்னோட ப்ரேண்ட் நீங்க மேடம்! உங்களுக்குக் குடுக்காம வேற யாருக்குக் குடுப்பேன்!” எனும் குரல் மனதில் வந்து போக, மெலிதாகப் புன்னகைத்துக் கொண்டாள் ஷாமினி.
தந்தையின் உடல் தகனம் செய்யப்பட்டு மற்ற காரியங்கள் யாவும் முடியும் வரை காத்திருந்தாள் பெண். நெருங்கி, நெருங்கி வந்த ராம்குமாரை சமாளிப்பது வேறு பிரம்மப்பரயத்தனமாக இருந்தது. சோகமாய் இருப்பது போலவே ஒரு பிம்பத்தைக் காட்டி அவர்கள் தந்தையின் வீட்டிலேயே தங்கிக் கொண்டாள். ரகசியமாக டிக்கேட் போட்டு, துணிகளை வீட்டு வேலைக்காரியை வைத்து பேக் செய்து, வீடு விற்று வந்த சொற்ப பணத்தை பேங்க் டிராப்ட்டாக மாற்றி, கருமாதி முடியும் வரை காத்திருந்தாள்.
காரியங்களை முடித்து விட்டு, மொட்டைப் போட்டு வந்த தம்பியை கட்டிக் கொண்டு அப்படி ஓர் அழுகை அழுதாள் ஷாமினி. நாட்டை விட்டுப் போகத்தான் நினைத்தாள். ஆனால் இப்படி ஓடிப் போக நினைக்கவில்லை. மனம் ரணமாய் வலித்தது.
அந்த ராம்குமார் இவளை ஒட்டி உரசிப் பேசுவது, இவளது சித்திகாரியின் குரோதத்தை வேறு வளர்த்து விட்டது! பார்வையாலே எரிப்பது போய், வெளிப்படையாக வார்த்தைகளால் குத்திக் கிழிக்க ஆரம்பித்தாள் அவள். பேசு, பேசு, இன்னும் கொஞ்ச நாள்தானே பேசுவதெல்லாம் பேசு என அமைதியாகவே இருந்தாள் ஷாமினி! முன்பிருந்த ஷாமினியாக இருந்தாள் ஆடித் தீர்த்திருப்பாள். இப்பொழுது உள்ளவள், காரியம் பெரிதா, வீரியம் பெரிதா என எண்ணி அடக்கிக் கொண்டாள்.
கையில் இருந்த பணம் தம்பி ஒருவன் படிப்பதற்கு மட்டுமே கட்டி வரும்! அது கூட முழு படிப்பு முடிக்கும் வரை போதாது எனப் புரிந்தது. மனதில் பல கணக்குகளைப் போட்டாள் பெண். வார்சாவ்(Warsaw--போலந்தின் தலை நகரம்) போய் தன் ஒன்று விட்ட மாமா வீட்டில் இருந்து கொண்டே இருவரும் படிப்பதாகத்தான் திட்டம். தந்தை இறந்தது தெரிந்து என்ன ஏதுவென அவர்கள் போன் செய்து விசாரிக்காமல் போக, இவளுக்குப் புரிந்து போனது, தந்தையின் பணத்துக்காகத்தான் இவர்களும் தன்னுடன் இவ்வளவு பாசமாக நடித்திருக்கிறார்கள் என!
இனி அவர்களை நம்பிப் போக முடியாது! ஆகவேத்தான் தம்பியை மட்டும் கல்லூரி ஹாஸ்டலிலே விட்டு விட்டுத் தான் மட்டும் கொஞ்சம் செலவு குறைவாக இருக்கக் கூடிய லுப்லின் நகரத்துக்குப் போய் விடலாம் என முடிவெடுத்தாள். ஆனாலும் அங்கு வேலைப் பார்க்க பெர்மிட், போலிஷ் பாஷை எல்லாம் இவளை அரட்டியது. போலந்தில்தான் படிக்கப் போகிறோம் எனத் தெரிந்த தினத்தில் இருந்து கொஞ்சம் அந்த மொழி கற்றிருந்தாள்தான். அதெல்லாம் அவர்களின் தலைநகரில்தான் எடுபடும். அங்கு கொஞ்சம் ஆங்கிலமும் பேசுவார்கள், அதனால் சமாளித்து விடலாம் என நினைத்தாள். இப்பொழுது கொஞ்சம் புறநகருக்கு வேலைத் தேடிப் போவதால், கண்டிப்பாக மொழி பிரச்சனையாக இருக்கும் எனத் தெரிய, தவிக்க ஆரம்பித்தாள் ஷாமினி.
வேறு வழியில்லாமல் தன்மானத்தை விட்டு அந்த மாமாவுக்குப் போன் செய்து கெஞ்சினாள்.
“எனக்கு நீங்க எந்த செலவும் செய்ய வேணா மாமா! தம்பிக்கு ஹாஸ்டல் பார்த்து குடுக்க, எனக்கு வர்க் பெர்மிட் எடுத்து குடுக்க மட்டும் ஹெல்ப் பண்ணுங்க! உங்க மேல பாசத்தைப் பொழிஞ்ச எங்கம்மாவுக்காக இதை மட்டும் செய்யுங்க மாமா! சத்தியமா சொல்றேன், வேற எதுக்காகவும் உங்க கிட்ட கையேந்தி நிக்க மாட்டேன்! எங்க வழிய நாங்க பார்த்துப்போம் மாமா! ப்ளிஸ் மாமா” எனக் கேட்டவள் அழுதே விட்டாள்.
நெஞ்சில் கொஞ்சம் ஈரம் மீதிமிருக்க, சரியென ஒத்துக் கொண்டார் அவர். அதன் பிறகே, தைரியமாக மற்ற வேலைகளைப் பார்த்தாள் இவள். ராம்குமாரிடம் போய், வீட்டில் எடுக்க வேண்டிய பொருட்கள் கொஞ்சம் இருக்கிறது என நேராய் பேச, அவனும் ஒதுங்கிப் போனவள் தானாக வந்து பேசி விட்டதில் புன்னகையுடனே அனுப்பி வைத்தான். கையில் ஒன்றும் இல்லாதவள் எங்கு போய் விடுவாள், எனும் ஏத்தம். தம்பிக்கு இவளைப் போல எந்தத் தடையும் இல்லாததால், அவனை ஏற்கனவே ஏர்போர்ட்டுக்கு அனுப்பி வைத்து விட்டாள். வேலைக்காரி இவர்களது லக்கேஜை அங்கே நிதினிடம் சேர்த்திருந்தாள்.
இவள் பின்னாடியே ராம்குமார் வைத்த ஆட்கள் வர, ஒரு மாலில் காரை நிறுத்தி உள்ளே போனாள் பெண். படம் பார்க்க டிக்கட் எடுத்தவள், தியேட்டர் உள்ளே நுழைந்து இன்னொரு பக்கமாக வெளியேறி டாக்சி எடுத்து விமான நிலையம் அடைந்தாள். எங்கே ராம்குமார் தேடி வந்து விடுவானோ எனப் பயந்தபடியே விமான அறிவிப்புக்குக் காத்திருந்தார்கள் அக்காவும் தங்கையும்!
விமான அறிவிப்பு வர, கண்களில் நீருடன் அனாதையாக தாய் நாட்டை விட்டு வெளியேறிப் போனார்கள் ஷாமினியும் நிதினும்.
தம்பியை ஹாஸ்டலில் சேர்த்தவள், மாமாவின் உதவியால் லுப்லினில் இப்பொழுது வேலைப் பார்க்கும் இடத்தில் வேலைக்குச் சேர்ந்தாள். தனது கனவுகளைத் தூக்கிக் கிடப்பில் போட்டவள், தம்பிக்காக உழைக்க ஆரம்பித்தாள். காலையில் ஒரு வேலை, இரவில் ஒரு வேலை என அயராத உழைப்பு! அந்த மக்களோடு ஒன்றிப் போக வேண்டும் என்பதற்காக தன்னையும் மாற்றிக் கொண்டாள். ஏற்கனவே இறுக்கமானவள், இன்னுமே உள்ளுக்குள் இறுகிப் போனாள்.
இத்தனை வருடங்கள் ஓடியும் கூட பழைய நினைவுகள் இன்னும் உள்ளத்தைக் குத்திக் கிழிக்க கண்களில் வழிந்த நீருடன் உறங்கிப் போனாள் ஷாமினி.
இந்த இறுகிப் போன இரும்பை இளக்க அவன் வருவானா????

Author: VanishaAdmin
Article Title: Jagam Nee--EPI 14
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.