அத்தியாயம் 15
கடலை போட வேணுமே போனு
உன் பேச்செல்லாம் இனிக்கற தேனு!!!
“கேஸ்ப்பர் முன்னாடி வேணும்னா அப்படி இப்படி இருந்திருக்கலாம்! இப்போத்தான் ஒழுங்கா இருக்கார்ல, ஏன் மரியா திரும்பிக் கூட பார்க்க மாட்டற?” என பியரை கிளாசில் நிரப்பிக் கொண்டிருந்தவளைக் கேட்டாள் ஷாமினி.
“மினி! எனக்குப் புடிக்கல”
“ஏன்? ஏன் புடிக்கல? உன் மகன அன்பா பார்த்துக்கறாரு! அவனுக்கும் கேஸ்ப்பர புடிக்குது! அப்புறமும் ஏன் இந்தக் கண்ணாமூச்சி?”
மரியாவுக்கு பத்து வயதில் ஒரு மகன் இருந்தான். இவளுக்கும் இவள் கணவனுக்கும் விவாகரத்து ஆகியிருந்தது. ஜீவனாம்சம் வந்தாலும், மகனின் படிப்பு செலவுக்கே அந்தப் பணம் சரியாக இருந்தது. பகலெல்லாம் மகனைக் கிளப்பி பள்ளி அனுப்பி வைத்து, பேக்கரி ஒன்றில் வேலைப் பார்ப்பவள், இரவில் இந்த பாரில் வேலைச் செய்கிறாள். இவள் வேலைப் பார்க்கும் நேரத்தில் மகனை இவளது தாய் பார்த்துக் கொள்வார்.
அடிக்கடி ஷாமினியோடு மரியாவைப் பார்த்துப் பழகி இருந்த கேஸ்ப்பருக்கு அவள் மேல் ஈர்ப்பு வந்திருந்தது. அவளது மகனையும் அவருக்குப் பிடித்துப் போனது! நேரிடையாக தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தும் மரியா காதலுக்கோ, திருமணத்துக்கோ ஒத்துக் கொள்ளவில்லை.
“லைஃப்ல எந்த வித பிக்கலோ பிடுங்களோ இல்லாம நிம்மதியா இருக்கேன் நான்! எனக்காகவும் மகனுக்காகவும் சம்பாதிக்கறேன்! பிடிச்சத வாங்கி, இல்லைனா சமைச்சி சாப்பிடறேன்! ஏன் லேட்டு, எங்க போன, யார் கிட்ட பேசன இப்படிலாம் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லாம அமைதியா போகுது வாழ்க்கை! மறுபடியும் என்னை ஏன்டி அந்த புதைக் குழில தள்ளப் பார்க்கற! இப்படியே இருந்திடறேனே!!” என உதட்டைச் சுளித்து, மூக்கைச் சுருக்கிப் பேச, ஷாமினிக்கு சிரிப்பு வந்து விட்டது.
“நீ தனிமை வேணும்னு நெனைக்கற! எனக்குத் தனிமை கொடுமையா இருக்கு! என் மொழில என் கூட யாராச்சும் பேச மாட்டாங்களான்னு ஏக்கமா இருக்கு! சாப்டியா, தூங்கனயா, குளிச்சியா இப்படிலாம் கேட்டு யாராச்சும் டார்ச்சர் பண்ண மாட்டாங்களான்னு இருக்கு! என் பக்கத்துல யாராச்சும் படுத்துக்க மாட்டாங்களான்னு இருக்கு” எனக் குரலில் ஏக்கம் தொணிக்கச் சொன்னாள் ஷாமினி.
“உன் முன்னாடி உக்காந்து உன்னையே முறைச்சுப் பார்த்துட்டு இருக்கான் பாரு ஒருத்தன், கூப்டினா கண்டிப்பா இன்னிக்கு உன் பக்கத்துல வந்து படுத்துப்பான்” எனச் சொன்னாள் மரியா.
அவள் முதுகில் ஒரு அடிப் போட்ட ஷாமினி,
“படுத்துக்கன்னா அந்த படுத்துக்க இல்லடி பிசாசே!!! நீ தனியா இல்லை! உன் கூட நான் இருக்கேன் துணையான்னு சொல்ற மாதிரி படுத்துக்கற ஆள். அவன் விடறது குறட்டையா இருந்தா கூட, எனக்கு சங்கீதமா கேக்கற மாதிரி என் பக்கத்துல படுத்துக்க ஓர் ஆள்! நான் தூக்கம் வராம தவிச்சா கூட அவனோட மூச்சு சத்தம் தாலாட்டா மாறி என்னைத் தூங்க வைக்கற மாதிரி பக்கத்துல படுத்துக்க ஓர் ஆள்!!” எனக் கண்களில் கனவு மின்னச் சொன்னவளின் முதுகில் இப்போது மரியா ஓர் அடி போட்டாள்.
“டீ லூசே!! ஆள் வேணும்னு புலம்பனா மட்டும் போதுமா??? அதுக்கான முயற்சி எதையாச்சும் எடுக்கறயா நீ? எவன் டேட் கூப்ட்டாலும் தட்டிக் கழிக்கற!! ஆர்வமா ஒரு பார்வைப் பார்த்தாலும் என் கிட்ட நெருங்காதேன்னு சொல்ற மாதிரி உன் உடல் மொழி மாறிப் போய்டுது! அப்புறம் எப்படி பக்கத்துல படுத்துக்க ஆள் வரும்! சரியான இம்சைடி நீ”
“விடு! விடு! உடனே அட்வைஸ ஆரம்பிக்காதே!”
“விட்டுட்டேன்! இன்னிக்கு ஷிப்ட் முடிஞ்சதும் வீட்டுக்கு வரியா?”
“ஏன்?”
“என் மகன் உன்னைப் பார்க்கனும்னு சொன்னான்!”
“அதுக்குன்னு அவன லேட் நைட் வரைக்கும் முழிக்க வச்சிருப்பியா நீ?”
“பாட்டி மாதிரி பேசாதே! நாளைக்கு ஸ்கூல் லீவ்தான் அவனுக்கு! முழிச்சிக்கிட்டு கேம் விளையாடிட்டுத்தான் இருப்பான்! அவனும் எங்கம்மாவும் சேர்ந்து பிட்சா செய்யறாங்களாம்! கண்டிப்பா உன்னைக் கூட்டிட்டு வரனும்னு மேசேஜ் போட்டிருக்கான்! ஓவரா பிகு பண்ணாம வா”
“சரி, வரேன்” என்றவளுக்கு அதற்கு மேல் நின்று பேச நேரமில்லாமல் போனது.
அவர்களது ஷிப்ட் முடிந்து அவரவர் பைக்கில் மரியாவின் வீட்டுக்குக் கிளம்பினார்கள். மரியாவின் வீடு ஒரு அபார்ட்மெண்டில் இருந்தது. பழைய கட்டிடம் அது! ஆனாலும் நன்றாக மேய்ண்ட்டேய்ன் செய்திருந்தார்கள். வீட்டின் உள்ளே நுழைந்தவளை ஓடி வந்து கட்டிக் கொண்டான், மரியாவின் மகன் லூகஸ். இருவரும் அடித்துப் பிடித்துக் கொஞ்சி குலாவி முடிக்கவும், மரியாவின் அம்மா பிட்சாவை சூடு செய்து எடுத்து வரவும் சரியாக இருந்தது. பேசி சிரித்தபடி அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டாள் ஷாமினி. ரத்த உறவு மட்டும்தான் சொந்தமாக முடியும் என யார் சொன்னது! இங்கே ஜாதி, மதம், நிறம், நாடு என வேறாகி இருந்தவர்கள் கூட அன்பெனும் மரத்தில் வேராகி இருந்தனர்.
மணி விடிகாலை மூன்றுக்கும் மேலாகி இருக்க, கிளம்ப முற்பட்டாள் இவள். அங்கேயே தங்கிக் கொள்ளும்படி அவர்கள் சொன்னாலும், மறுத்து விட்டுக் கிளம்பினாள் ஷாமினி. அவளது கட்டிலில் படுத்தால்தான் ஏதோ தூங்கினேன் எனப் பேர் பண்ண முடியும் அவளால்!
பைக்கை கிளப்பி சாலையில் பயணிக்க, அவளைத் தொடர்ந்து இன்னொரு பைக் வந்தது. சில நாட்களாக பாருக்கு வேலைக்குப் போகும் போதும், வரும் போதும் இந்த பைக் பின் தொடர்வது போல இருக்க, பயம் அப்பிக் கொண்டது ஷாமினிக்கு.
‘யாரா இருக்கும்! எதுக்கு ஃபோலோ பண்றாங்க! கொள்ளை அடிக்கற அளவுக்கு நம்ம கிட்ட ஒன்னும் இல்லையே! விடு! கிட்ட நெருங்கனா என்ன செய்தின்னு கேட்டுடலாம்!’ எனத் தன்னையேத் தேற்றிக் கொண்டவள், பைக்கை நிறுத்திப் பூட்டி விட்டு, ஹோட்டலின் உள்ளே நுழைந்தாள்.
இவள் அறையை நோக்கிப் போக, ரிஷப்சன் பையன் கூவி அழைத்தான்.
“மினி! உனக்கு பார்சல் வந்திருக்கு”
“எனக்கா?”
“ஆமா!”
அவனிடத்துக்குப் போய் அந்த பார்சலை வாங்கிக் கொண்டாள் ஷாமினி.
தனதறைக்குப் போனவள், குளித்து விட்டு வந்து அந்த பார்சலைத் திறந்தாள். உள்ளே சின்னதாய் ஒரு கேக்! ஹேப்பி பேர்த்டே என அழகாய் எழுதி இருந்தது அதன் மேலே!
கண்கள் தழும்பிப் போய் விட்டது ஷாமினிக்கு! எப்பொழுதும் பிறந்தநாள் அன்று சரியாக பனிரெண்டு மணிக்கு போன் செய்து விஷ் செய்து விடுவான் நிதின். இப்பொழுதெல்லாம் குழந்தை குட்டி என ஆகி விட அவனது வாழ்த்தும் தாமதமாகத்தான் வருகிறது! தோழி என இருக்கும் மரியா கூட இவ்வளவு நேரம் அவளுடன் பேசி சிரித்திருக்க, ஆனால் இவளது பிறந்தநாளை மறந்து விட்டிருந்தாள். ஒரு வாழ்த்துக்காக ஏங்கிக் கிடக்க வேண்டி வரும் என்பதெல்லாம் இவள் நினைத்தே பார்த்திராத ஒன்று! சின்ன வயதில் இந்த நாள் என்ன வேலை இருந்தாலும், கண்டிப்பாக இவளைப் பார்க்க வந்து விடுவார் தனசேகர்! இவளது அம்மாவும் ஷாமினியின் பிறந்த நாளை தடபுடல் படுத்தி விடுவார்!
அடுத்த மாதம் என் பிறந்தநாள், அடுத்த வாரம் என் பிறந்தநாள், நாளைக்கு என் பிறந்தநாள் என ஆர்ப்பாட்டம் செய்த குட்டி ஷாமினியை நினைத்து மனது ஏங்கியது இந்தப் பெரிய ஷாமினிக்கு.
‘குழந்தையாவே இருந்துட்டா குதூகலம் வாழ்க்கையில நிறைஞ்சி இருக்கும் போல! குமரியாகிட்டா குதூகலத்துக்கு குடுப்பிணை இல்லாம போய்டுது!’ என நினைத்துக் கொண்டவள், அந்த கேக் பெட்டியைத் திருப்பிப் பார்த்தாள் யார் அனுப்பியது என.
பெயர், அட்ரஸ் ஒன்றுமில்லை.
‘கேஸ்ப்பரா இருக்குமோ!!! ஹ்க்கும்! அவருக்கு அவரோட பிறந்த தேதியே ஞாபகம் இருக்குமோ என்னவோ!’ என அந்த எண்ணத்தைத் தள்ளி வைத்தவள், மெழுகுவர்த்தி ஏற்றி,
“ஹேப்பி பேர்த்டே டூ மீ! ஹேப்பி பேர்த்டே டூ மீ! ஹேப்பி பேர்த்டே டூ மீ ஷாமினி! ஹேப்பி பேர்த்டே டூ மீ” எனப் பாடி, மெழுகுவர்த்தியை ஊதி, கேக் வெட்டித் தனியாகவே கொண்டாடிக் கொண்டாள்.
“யாரு குடுத்த கேக்கா இருந்தாலும், கேக்கு கேக்குத்தான்! வெட்டுவோம், சாப்புடுவோம்!” எனச் சொல்லிக் கொண்டவள், ஒரு ஸ்லைஸ் வெட்டி சாப்பிட்டாள்.
இனிப்பாகத் தொண்டையில் இறங்கியது ரெட் வெல்வேட் கேக்கின் சுவை. இன்னொரு ஸ்லைஸ் வெட்டி டப்பர்வெரில் போட்டுத் தனக்காக மூடி வைத்தவள், மீதி கேக்கை ரிஷப்சனில் அமர்ந்திருந்தவனிடம் கொண்டு போய் கொடுத்தாள்.
அதன் பிறகு படுத்தவளுக்கு, என்னென்னவோ ஞாபகங்கள். தூக்கம் வராமல் புரண்டுப் புரண்டுப் படுத்தவள், அதற்குள் அலாரம் அடிக்க கண் எரிச்சலோடு எழுந்து வேலைகளைக் கவனிக்கப் போனாள்.
காலை உணவு இவர்களது கிச்சனிலேயே தயாரிக்கப்படும். ஆனால் பேஸ்ட்ரி ஐட்டங்கள் மட்டும் இவர்கள் ஒப்பந்தம் போட்டிருந்த பேக்கரியில் இருந்து அனுப்பி வைக்கப்படும்! அதை வாங்கி சரிப் பார்த்து டைனிங் ஹாலில் அடுக்கி வைத்தவள், வேலைக்கு வந்திருந்தவர்களுக்கு யாருக்கு என்ன வேலை எனப் பிரித்துக் கொடுத்தாள். பெட் அண்ட் ப்ரேக்பஸ்ட் எனும் பெயருக்கு ஏற்ப, இங்கே காலை உணவு தடபுடல் படும்! முட்டை, ஹேம், சீஸ், ஹோட்டாக், சாலட், பேஸ்ட்ட்ரி வகைகள் என வரிசையாக தட்டில் அடுக்கி ஒவ்வொரு அறைக்கும் கொண்டு போய் சர்வ் செய்வார்கள். சிலர் கீழேயே இறங்கி வது டைனிங் ஹாலில் சாப்பிட்டுக் கொள்வார்கள். காலை உணவு எப்படி வேண்டும் என அறை எடுக்கும் போதே கஸ்டமர்கள் பாரத்தில் எழுதிக் கொடுத்திருக்க, அது போல இவர்கள் பார்த்துச் செய்து விடுவார்கள்.
அதன் பிறகே ‘டூ நோட் டிஸ்டர்ப்’ எனப் போடப் பட்டிருக்கும் அறைகளைத் தவிர்த்து மற்ற அறைகளை சுத்தம் செய்து, டவல் எல்லாம் மாற்றி வைத்து, படுக்கை உறைகளையும் மாற்றி விட்டு வருவார்கள். இதெல்லாம் ஒழுங்காக செய்திருக்கிறார்களா, தண்ணீர் பாட்டில் காலியாகி இருந்தால் புதிது வைத்திருக்கிறார்களா என எல்லாவற்றையும் மேற்பார்வைப் பார்ப்பது ஷாமினியின் வேலை.
ப்ளூபெரி மஃபின் ஒன்று எடுத்து சாப்பிட்டுக் கொண்டே, காபியை அவசரமாக அருந்தியவள், அன்றைய தினம் ஆள் பற்றாக்குறையாக இருக்க, இவளும் சேர்ந்து வேலைகளைப் பார்த்தாள். மதியம் போல ஹோட்டலுக்கு வந்த கேஸ்ப்பர்,
“ஹாய் பியூட்டி!!! இன்னைக்கு வேலை எப்படி போச்சு?” எனக் கேட்டார்.
“எப்பவும் போலத்தான் கேஸ்ப்!” எனப் புன்னகைத்தாள் ஷாமினி.
“இன்னிக்கு உன்னோட பிறந்தநாள்னு மரியா சொன்னா! ஹேப்பி பேர்த்டே! நைட் டின்னர் போகலாமா?”
“தேங்க் யூ கேஸ்ப்! இல்லல்ல! இன்னிக்கு எனக்கு வேற ப்ராக்ராம் இருக்கு! இன்னொரு நாள் பார்க்கலாம்”
அவள் அருகே குனிந்து கன்னத்தில் முத்தமிட்ட கேஸ்ப்பர்,
“மே காட் ப்ளஸ் யூ க்யூட்டீ!” எனச் சொல்லிப் புன்னகைத்தார்.
கேஸ்ப்பருக்கு சொந்த வீடு இருந்தது! ஆகவே இங்கே தங்கி எல்லாம் பார்த்துக் கொள்வது ஷாமினிதான். அவ்வப்பொழுது ஹோட்டலுக்கு வந்து, கணக்கு வழக்குகளைப் பார்த்து, குறை நிறை அறிந்து, எப்படி அதை நிவர்த்திக்கலாம் என இவளுடனும் மற்றவர்களுடனும் சேர்ந்து பேசி அதற்கானதை செய்து விட்டுப் போவார். வாழ்க்கையை ரிலேக்ஷாக எடுத்துக் கொள்ள டாக்டர்கள் பரிந்துரைத்திருக்க, இந்த ஹோட்டலை கூட விற்று விடலாம் எனும் எண்ணத்தில் இருந்தவரை, தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி அந்த எண்ணத்தைத் தள்ளிப் போட வைத்திருந்தாள் ஷாமினி.
என்றாவது ஒரு நாள் இதை விற்று விடுவார் கேஸ்ப்பர் எனத் தெரியும்தான். அவரிடம் இதை வாங்கிக் கொள்ளலாம் என மனமெல்லாம் ஆசை இருந்தது! ஆனாலும் அவ்வளவு பணத்துக்கு எங்கே போவாள்! அந்த எண்ணத்தை மனதிலேயே புதைத்துக் கொண்டவள், வருங்காலத்தைப் பற்றி நினைக்க வேண்டாம், இன்றைய தினத்தை இயல்பாக வாழ்ந்து விடுவோம் என மனதைத் தேற்றிக் கொண்டிருந்தாள்.
வேலை நேரத்தில் தம்பியும் அவன் குடும்பமும் அழைத்து வாழ்த்துச் சொன்னார்கள். த்தை, த்தை என வீடியோ காலில் கையை ஆட்டிய மருமகனைப் பார்த்ததில் அவ்வளவு மகிழ்ச்சி இவளுக்கு! அதோடு மரியாவும் அவளது மகனும் அழைத்து வாழ்த்தினார்கள்.
மாலை, வேலை நேரம் முடிந்ததும் குளித்துக் கிளம்பி விட்டாள் ஷாமினி. இன்று பார் வேலைக்கு விடுமுறை எடுத்திருந்தவள், பைக்கில் பயணப்பட்டாள். நேற்று போல இன்னொரு பைக் இவளைப் பின் தொடர்வது போல இருக்க, சைட் மிரர் வழி நன்றாகப் பார்த்தாள். முழுதாக ஜேக்கேட், ஹெல்மேட் என உடல் மறைத்திருக்க, யாரெனக் கண்டுக் கொள்ள முடியவில்லை இவளால்.
மெல்ல இவள் வேகத்தைக் குறைக்க அந்த பைக் இவளைத் தாண்டி சென்று விட்டது!
‘பிரம்மடி உனக்கு!’ என நினைத்து சிரித்துக் கொண்டவள், லுப்லினின் திறந்த வெளி மியூசியத்துக்கு சென்றாள். பைக்கை பார்க் செய்து விட்டு, உள்ளே நுழைந்தவளுக்கு அந்தக் காலத்து லுப்லினுள் நுழைந்து விட்டது போல இருந்தது. பழைய ஸ்டைல் வீடுகள், அதன் உள்ளே அந்தக் காலத்து தளவாடப் பொருட்கள் எனக் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன. அவளுக்கு மிகவும் பிடித்த இடமிது! அடிக்கடி வந்து போவாள்!
வீட்டுனுள்ளேயே இருந்த தறி, அவர்கள் துணி நெய்யும் வேலைப் பார்த்திருக்கலாம் என உணர்த்த, எப்பொழுதும் போல ஒவ்வொன்றையும் ஆச்சரியமாகப் பார்த்தாள். டைம் மெஷின் ஏறி அந்தக் காலக் கட்டத்துக்கே போய் விட்டது போல, பார், மருத்துவமனை, ஆபிஸ் எல்லாம் எப்படி இருந்திருக்கும் என அங்கே காட்சிப் படுத்தி இருந்தார்கள்.
அங்கங்கே குதிரைகள், கோழி, வாத்து, செம்மறி ஆடு என நடந்து போக, இவளும் அதன் பின்னே நடந்து போனாள். அவ்வளவு பெரிதாக இருந்த அவ்விடத்தைச் சுற்றிக் களைத்துப் போனவள், பேக்கில் பேக் செய்து எடுத்து வந்திருந்த சாண்ட்விச்சை சாப்பிட்டு விட்டுக் கிளம்பினாள்.
அதன் பிறகு மல்ட்டிமேடியா ஃபவுண்டேன் (Multimedia Fountain) எனுமிடத்துக்கு பைக்கை விட்டாள் ஷாமினி. இரவு நேரம் அங்கிருக்கும் பெஞ்சில் அமர்ந்து வண்ண விளக்குகள் தண்ணீர் மேல் விழ, அது பீய்ச்சி அடிப்பதை பார்ப்பது அவளுக்கு மிகப் பிடித்தமான ஒன்று! காலை முதல் விடிகாலை வரை உழைப்பவள், நேரம் கிடைக்கும் போது இவ்விடத்துக்கு வந்து அமர்ந்து விடுவாள். பேக்கிரவுண்டில் இசை முழங்க, நீர் டான்ஸ ஆடுவது போல இருக்கும் இந்த ஃபவுண்டனைக் காணக் அவ்வளவு ரம்மியமாக இருக்கும். புன்னகையுடன் அமர்ந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகே ஓர் உருவம் அமரும் அரவம் கேட்டது. இவள் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. ஆனால் முகத்தில் மெலிதாகப் புன்னகை விரிந்தது.
தொண்டையைக் கணைத்த அவ்வுருவம்,
“மேடம்! வேலை வேணும்!” எனக் கேட்க, மலர்ந்த முகத்துடன் திரும்பிப் பார்த்தாள் ஷாமினி.

Author: VanishaAdmin
Article Title: Jagam Nee--EPI 15
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.