அத்தியாயம் 16
பொண்ணுங்க அடிப்பாங்க கும்மி
என் புள்ளைக்கு நீயே மம்மி!!!
“என் பாண்டியாவ எங்கடா தொலைச்ச?”
அவளது கேள்விக்குப் புன்னகையை மட்டும் கொடுத்தவனின் கை, சமையலறையில் கரண்டியுடன் போராடிக் கொண்டிருந்தது.
நீண்ட நெடிய பத்து வருடங்கள்.
“நாம ஒரு பத்து வருஷம் கேப் எடுத்துக்கலாம்! நான் போலண்ட் போய் செட்டிலாகி, தம்பிய படிக்க வச்சி எல்லாம் முடிக்க ஒரு பத்து வருஷமாகும். பத்தாவது வருஷம் நீ என் கிட்ட வேலைக்கு வந்திடனும்! சரியா?”
அவள் கேட்டுக் கொண்டது போலவே சரியாகப் பத்து வருடங்கள் சென்று அவளைத் தேடி வந்திருந்தான் சரவணப்பாண்டியன். வெளியே சொல்லாவிட்டாலும் அவளுள்ளும் ஓர் எதிர்ப்பார்ப்பு இருக்கத்தான் செய்தது! வருவான், வருவான் என உள்ளுணர்வு உணர்த்திக் கொண்டே இருந்தது. தம்பி வருந்தி அழைத்தும் கூட போலந்து நாட்டை விட்டுப் போகாமல் இவனுக்காகவே ஷாமினி காத்திருந்தாள். பைத்தியக்காரத்தனம் என மூளை காறித் துப்பினாலும், மனது ஆசையாகவே அந்த பைத்தியக்காரத்தனத்தைச் செய்தது.
இந்திய சாப்பாடு சாப்பிட்டே பல வருடங்கள் ஆகி விட்டது என இவள் சொன்னதைக் கேட்டதும், அவளுக்காக சமைக்க ஆரம்பித்திருந்தான் சரவணன். பத்து வருட கேப் என்பதும் அதன் இடைவெளியில் அறவே பேசியது இல்லை என்பதும் ஒரு மாயை என்பது போல, விட்ட இடத்தில் இருந்து எந்த வித தயக்கமும் இல்லாமல் மீண்டும் தொடர்ந்திருந்தது இவர்களின் உறவு!
ஒரு வாரத்திற்கு முன்பு வேலை வேண்டும் எனக் கேட்டவனைப் புன்னகையுடன் திரும்பிப் பார்த்தவள்,
“வந்துட்டியா பாண்டியா!!!” எனக் கண்கள் மின்னக் கேட்டாள்.
தலை லேசாக ஆமாமென ஆடியது இவனுக்கு.
“கேக் வச்சது நீதானே?”
மீண்டும் ஒரு தலையாட்டல்.
“பைக்ல பின்னாடி வந்தது நீதானே?”
அதற்கும் ஒரு தலையாட்டல்.
“சரி! இப்போ சொல்லு! எங்க என்னோட பாண்டியன்?” எனக் கேட்டாள் ஷாமினி.
அவன் விழித்துப் பார்க்க,
“நீ பாண்டியா இல்ல! அவனுக்குக் கிள்ளி எடுக்க சதை இருக்காது! ஆனா நீ மாச்சோவா(macho) இருக்க!! அவனுக்கு மீசை மட்டும்தான் இருக்கும்! உனக்கு மீசையோட ரொம்ப அழகா இந்த குட்டித் தாடியும் இருக்கு! அவன் மாநிறம்! ஆனா உனக்கு கலர் கொஞ்சம் கூடி இருக்கு! அவனோட குரல் ரொம்ப இனிமையா, சாந்தமா இருக்கும்! உன்னோட குரல் செக்ஷியா, கொஞ்சம் ஆளுமையா இருக்கு! அதனாலத்தான் கேக்கறேன், என் பாண்டியா எங்க?” எனக் கேட்டாள்.
அவள் முகத்தைப் பார்த்து லேசாய் முறுவலித்தான் சரவணப்பாண்டியன்!
“பாண்டியன், பாண்டியர் ஆகிட்டான் மேடம்”
“ஓஹோ!!! அவன்னு சொல்லாதே!!! அவர்னு சொல்லுன்னு சொல்றியா?” என இவள் நக்கலாகக் கேட்க,
“உங்களுக்கு மட்டும் நான் என்னைக்குமே பாண்டியாதான் மேடம்! எப்பவுமே!!!” என்றவனின் குரல் கரகரத்திருந்தது.
“அந்த பயம் இருக்கட்டும்!” என்றவளின் குரலும் தளுதளுத்திருந்தது.
இருவரின் பார்வையும் தண்ணீர் காட்டிய சாகசத்தில் நிலைப் பெற்றிருந்தது. மேல் நோக்கிப் பாய்ச்சி, பியானோவின் கட்டைகளைப் போல மேலேறி கீழிறங்கி அது காட்டிய விளையாட்டை அமைதியாகப் பார்த்திருந்தனர் இருவரும்.
மெல்லியக் குரலில்,
“உனக்கு வேலைப் போட்டுக் குடுக்கற அளவுக்கு நான் முன்னேறி வரல பாண்டியா!!! நீ கிளம்பிப் போய்டு” என்றாள்.
“மாட்டேன்!”
“நானே இன்னொருத்தனோட ஹோட்டல்ல எடுபுடியா இருக்கேன்! அங்க நீ எனக்கு எடுபுடியா இருக்கப் போறியா? கிளம்பிப் போ”
“முடியாது மேடம்”
“என் வாழ்க்கை என் கையில்ங்கற மாதிரி பெருசா என்னேன்னமோ பேசனேன் அப்போ! ஆனா என் வாழ்க்கை என் கையில இருந்தாலும் அதுல விதிங்கற வில்லன் வந்து சதி செய்வான்றதுலாம் பட்டுத்தான் தெரிஞ்சுக்கிட்டேன் பாண்டியா! இப்போ நான் ஒரு செல்லாக்காசு! உனக்கு யூஸ் ஆக மாட்டேன்”
பட்டென எழுந்து கொண்டான் சரவணன்.
“செல்லாக்காசுன்னு சிலர் சொல்றததான், அண்டிக் பீஸ், கலக்டிபள் பீஸ்னு தேடிப் பிடிச்சு, அவ்ளோ செலவு செஞ்சு வாங்கி பொக்கிஷமா பாதுகாக்கறாங்க மேடம்! நீங்க செல்லாக்காசாவே இருந்தா கூட என்னைப் பொறுத்த வரை அபூர்வமான காசுதான்” என்றவனைக் கண்களில் திரண்ட கண்ணீருடன் நிமிர்ந்து பார்த்தாள் பெண்.
சட்டென எழுந்து கொண்டவள், ஒன்றும் பேசாமல் பைக்கை நோக்கிப் போக, இவனும் அவளைப் பின் தொடர்ந்தான். பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பியவள், கண்ணாடி வழி பின்னால் பார்க்க, சரவணன் நடந்து வந்து கொண்டிருந்தான். பைக்கை திருப்பியவள் அவன் அருகே போய்,
“உன் பைக் எங்க?” எனக் கேட்டாள்.
“வாடகைக்கு எடுத்தேன் மேடம்! கைல காசு குறைவா இருக்கவும் திருப்பிக் குடுத்துட்டேன்” என்றான் சரவணன்.
“எங்க தங்கிருக்க நீ?”
“ஒரு பட்ஜேட் ஹோட்டல்ல இருக்கேன்! இனிமே அங்கயும் தங்க முடியாது போல” எனப் பாவமாகச் சொல்ல, அவனை முறைத்துப் பார்த்தாள் ஷாமினி.
“லூசாடா நீ? கைல காசு இல்லாம, எந்த தைரியத்துல என்னைத் தேடி வந்த? நான் இங்கத்தான் இருக்கேன்னு எப்படி தெரியும்?” எனப் படபடத்தாள்.
“நிதின் சொன்னான்”
“சாப்டியா?”
“இல்ல!”
“பைத்தியம், பைத்தியம்! ஏறி உட்காரு”
அவன் பின்னால் அமர்ந்து கொள்ள, இவள் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு பைக்கை செலுத்தினாள் ஷாமினி. அங்கே இறங்கி அவனை உள்ளே அழைத்துக் கொண்டு போன போது கூடத் திட்டிக் கொண்டே இருந்தாள்.
“நான் ஒரு லூசு கூப்பிட்டேன்னு, கரேக்டா பத்து வருஷமானதும் கிளம்பி வந்துடுவியா?”
“வந்துடுவேன்!”
“இத்தனை வருஷம் என்னடா பண்ண? நான் குடுத்த பணத்த வச்சி ஒரு பொட்டிக் கடை வச்சிருந்தா கூட வீடு வாசல்னு இருந்திருக்கலாம்ல! இப்படி பிச்சைக்காரன் மாதிரி வேலைக் குடுன்னு வந்து நிக்கற?” எனக் கடிந்து கொண்டாள்.
தனது அறையைத் திறந்து அவனை உள்ளே விட்டு கதவடைத்தவள்,
“தத்தி! தத்தி” எனக் கோபத்தை எல்லாம் அவனை அடிப்பதில் காட்டினாள்.
அவனது நெஞ்சளவு இருந்தவள், கொடுத்த அடிகளை எல்லாம் அமைதியாக வாங்கிக் கொண்டான் சரவணப்பாண்டியன். அடித்து ஓய்ந்தவள்,
“இம்சைடா நீ” எனக் கத்தி விட்டு, வெளியேறிப் போனாள்.
இவனோ புன்னகையுடன் அந்த அறையை நோட்டமிட்டான்!
திரும்பி வந்தவளின் கையில் உணவுத் தட்டு இருந்தது.
“இந்தா சாப்பிடு முதல்ல” என நீட்டினாள்.
அவளை ஆழ்ந்து பார்த்தவன்,
“உங்களுக்கு மேடம்?” எனக் கேட்டான்.
“நான் சாப்பிட்டேன்”
தட்டில் இருந்த சாண்ட்விச்சை எடுத்து அவளிடம், ஒன்றை நீட்டியவன்,
“ஹேப்பி பேர்த்டே கிளி” என்றான்.
அவனை முறைக்க முயன்றவளுக்குப் புன்னகை வந்து தொலைத்தது! ஒரு வாழ்த்துக்காக ஏங்கியவளுக்கு, மிட்நைட்டில் கேக் கொடுத்து, இப்பொழுது நேரில் நின்று வாழ்த்துபவனைப் பார்த்து கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியவில்லை.
அவன் கொடுத்ததை வாங்கிக் கொண்டவள் கட்டிலில் அமர, அவள் காலடியில் அமர்ந்து கொண்டான் இவன். அவன் சாப்பிடும் வரை அமைதியாக இருந்தாள் ஷாமினி. அதன் பிறகே,
“எப்படி இருக்கா செம்பாக்குட்டி?” எனக் கேட்டாள்.
முகம் மலர்ந்து விட்டது இவனுக்கு.
“ரொம்ப நல்லா இருக்கா! படிச்சு முடிச்சிட்டா! கேம்பஸ் இண்டெர்வியூல செலெக்ட் ஆகி இப்போ வேலைப் பார்க்க ஆரம்பிச்சிருக்கா!”
“அவ்ளோ பெரிய பொண்ணாகிட்டாளா?”
“பின்ன!!! இருபதாச்சே வயசு!”
“உன் பொண்டாட்டி, புள்ளைங்க எல்லாம் எப்படி இருக்காங்க?”
“தெரியல மேடம்”
“என்னடா இப்படி சொல்ற?”
“இல்லாத பொண்டாட்டி எப்படி இருக்கான்னு கேட்டா, எப்படி பதில் சொல்றது! அவ வாழ்க்கைல முதல்ல வரட்டும்! அப்புறம் புள்ளைங்க எப்படி இருக்குன்னு சொல்றேன்”
“அங்கிள் வயசாகிடுச்சுடா உனக்கு! இன்னும் ஏன் கல்யாணம் பண்ணிக்கல?”
“போங்க மேடம்! வாய்க்கும் வயித்துக்குமே இங்க சரியா இருக்கு! இந்த லட்சணத்துல நான் எங்கிருந்து இன்னொரு குடும்பத்த உருவாக்கி அவங்களுக்கு சாப்பாடு போட?”
அமைதியாக அவன் முகத்தையே வெறித்திருந்தாள் ஷாமினி.
“ரெண்டு வருஷம் ஒன்னும் முடியாம கிடந்தேன் மேடம்! நீங்க குடுத்த காசுலத்தான் செம்பாவ பார்த்து, எனக்கு வைத்தியம் பார்த்துன்னு பொழப்பு ஓடுச்சு!” என்றவனைக் கண் கலங்கப் பார்த்தாள் ஷாமினி.
“சாரிடா பாண்டியா!!! ரொம்ப சாரி”
“விடுங்க மேடம்”
கண்களில் நிறைந்த நீரை அவனிடம் காட்டாமல், வேறு புறம் திரும்பிக் கொண்டாள் ஷாமினி. அவளது முதுகையே வெறித்தவனின் கண்களும், முகமும் மிருதுவாகிப் போனது! சமாதானம் செய்ய அவளது முதுகைத் தொடப் போனவன், சட்டெனக் கையை மடக்கிக் கொண்டான்.
மனம் கனக்க அவளையே இவன் பார்த்திருக்க, சற்று நேரத்தில் சமாளித்துக் கொண்டாள் ஷாமினி.
“கேஸ்ப்பர் கிட்ட சொல்லி உனக்கு வேலைக் குடுக்க சொல்றேன்! பர்மிட் மத்த சமாச்சாரம்லாம் அவர் பார்த்துப்பாரு! கேஸ்ப்பர்தான் இந்த பெட் அண்ட் ப்ரேக்ஃபஸ்ட் ஓனர்”
சரியெனத் தலையாட்டினான் அவன்.
“தங்க உனக்கு வேற இடம் நான் பார்க்கற வரைக்கும், இந்த ரூம்ல என் கூடவே தங்கிக்கறியா?”
அதற்கும் சரியெனத் தலையாட்டினான்.
“என் கூட வா” என அழைத்துப் போனவள், ஸ்டோர் ரூமில் இருக்கும் ஒற்றை ஆள் படுக்கக் கூடிய மெத்தை ஒன்று, தலையணை மற்றும் பெட் ஷீட் எல்லாம் அவனோடு சேர்ந்து எடுத்துக் கொண்டு வந்தாள்.
அந்தக் குட்டி அறை, அவனுக்கான மெத்தையைக் கீழே போட்டதும் இன்னும் குட்டியாகிப் போனது!
பெட் சைட் லைட்டைப் போட்டு விட்டு, அறையின் விளக்கணைத்துப் படுத்து விட்டாள் ஷாமினி. இவனும் தனதிடத்தில் படுத்துக் கொண்டான்.
“மேடம்”
“ஹ்ம்ம்”
“ஹேப்பி பேர்த்டே”
“எத்தனை தடவைடா சொல்வ?”
“பத்து வருஷ கேப் இருக்குல்ல! அட் லீஸ்ட் பத்து தடவையாச்சும் சொல்வேன்”
“இம்சைப் பண்ணாம தூங்கு! பத்து வயசு வரைக்கும்தான் எங்கம்மா கூட தூங்கிருக்கேன்! அதுக்கப்பறம் தனிதான் எப்பவும்! இப்போ நீ இங்க இந்த ரூம்ல படுத்திருக்கறது எனக்கு அன்கம்பிர்டபளா இருக்கு! நொய் நொய்ன்னு பேசன, எதையாச்சும் தூக்கி மண்டைல அடிச்சிடுவேன்! கம்முன்னு தூங்கு” என அவள் எரிச்சல் பட, புன்னகையை அடக்கிக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டான்.
சற்று நேரத்தில் நிம்மதியாகத் தூங்கியும் போனான் சரவணப்பாண்டியன். இவளோ விடிய விடிய அவன் முகத்தையே பார்த்தபடி படுத்திருந்தாள். இன்னும் கூட நம்ம முடியவில்லை அவளால், பாண்டியன் தன்னோடு, தன் பக்கத்தில், தன் அறையில்!!! மனதில் என்னவோ போட்டுப் பிசைந்தது!
நெடு நெடு வளர்த்தியில் ஒல்லியாய், பிரிந்து போனவன், இப்பொழுது திடகாத்திரமான ஆண் மகனாய் மீண்டும் அவளிடமே வந்திருக்க, இவளுக்கு மனதை எதுவோ கௌவிப் பிடித்தது! மூச்சு விடக் கூட சிரமமாக இருக்க, சத்தமில்லாமல் எழுந்து அமர்ந்து கொண்டாள். கீழே இறங்கி தரையில் அமர்ந்து, கண்ணெடுக்காமல் அவனையேப் பார்த்திருந்தாள்.
மருத்துவமனை கட்டிலில் ரத்தக் காயங்களுடன், உடைந்து போன கால் தொட்டிலில் தொங்க, தலையில் ரத்தத் திட்டுத் தெரியும் கட்டுடன் படுத்துக் கிடந்த பாண்டியன் நினைவலைகளில் வந்து போனான். அன்று வலித்தது போல, இன்றும் கூட நெஞ்செல்லாம் இறுக்கிப் பிடித்தது போல வலித்தது ஷாமினிக்கு! கை கொண்டு நெஞ்சை நீவி விட்டவள், சத்தம் செய்யாமல் கண்ணீர் விட்டாள்.
“நீ காலைப் பிடிச்சுக் கெஞ்சனென்னுதான் கொன்னு வீச சொன்னவன கொண்டு வந்து ஆஸ்பித்திரில படுக்கப் போட்டிருக்கேன் பாப்பா! ஆள் வச்சி அவன் நாட்டுக்கே அனுப்பி விட்டுடறேன்! இந்த தேவையில்லாத நட்புல்லாம் உனக்கு வேணா கண்ணு! அப்பாவோட பொழப்பு புலி வால புடிச்ச கதைதான். அதுக்கு உன் புருஷனா இன்னொரு புலிதான் வந்து என் இடத்துல உக்காரனும்! இவன்லாம் எலிடாம்மா! நட்பு, செருப்புன்னு இவன் கிட்ட மனச விட்டுருவியோன்னு பயமா இருக்கு எனக்கு! அப்படி மனச விட்டா என்னாகும்னுதான் சாம்பிள் காட்டத்தான் அடிச்சுப் படுக்க வச்சிருக்கேன்! நீ என் பொண்ணுடா செல்லம்! உன் கால் சுண்டு விரல் நகத்துக்குக்கு கூட என்னால ஆபத்து விளைவிக்க முடியாது! பெத்த பாசம்டா! ஆனா இவன என்னால என்ன வேணா பண்ண முடியும்! புரிஞ்சுக்கோடா கண்ணு!” எனச் சிரித்தபடியே மிரட்டிய தந்தை கண் முன் வந்து போனார்.
“ப்பா! ப்ளீஸ் பா! இவன பத்திரமா அவன் ஊருக்கு அனுப்பி வச்சிடுங்கப்பா! அவன் மேல எந்த தப்புமே இல்ல! நல்லவன்பா அவன்” என்றவளின் கண்ணீரை சற்று நேரம் பார்த்திருந்தவர்,
“அனுப்பிடறேன்! நீ வீட்டுக்குப் போ கண்ணு” என்றார்.
அவனை நெருங்கி முகம் வருடி, தலை கோதி,
“எல்லாம் நல்லாயிடும் பாண்டியா!” எனச் சொல்ல சொல்லி உள்ளம் உந்தி தள்ளியது!
மனதைக் கல்லாக்கிக் கொண்டு அவன் உருவத்தைத் தூரத்திலிருந்தே கண்ணில் சிறைப் பிடித்து இதயத்தில் நிரப்பிக் கொண்டு கண் கலங்க கிளம்பி விட்டாள் பெண்! அதுதான் பாண்டியனை கிளி பார்த்த கடைசி நாள்.
இப்பொழுது அவனைப் பார்த்தபடியே களைப்பில் தரையில் சரிந்து தூங்கிப் போனவளுக்கு, தூங்குவது போல பாசாங்கு செய்து கொண்டிருந்த சரவணன் மெல்ல எழுந்தமர்ந்து போர்த்தி விட்டான்! அதன் பிறகு அவன் தூங்காமல் மெல்லிய விளக்கொளியில் அவள் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
“எது சொன்னாலும் சிரிச்சே மழுப்பு நீ! பாண்டியா எங்க, எங்க, எங்க?” என அவனை வம்பிழுத்துக் கொண்டிருந்தவளின் முன்னே உணவு தட்டை நீட்டினான் சரவணன். சாதம், சாம்பர், அப்பளம், ஊறுகாய் என இருக்க, ஆசையாய் தட்டை வாங்கிக் கொண்டாள் இவள்.
கேஸ்ப்பர் ஃபார்மாலிட்டிகளை முடித்து இவனை தனது ஹோட்டலிலேயே வேலைக்குச் சேர்த்திருந்தார். பெல்பாயாக வேலைப் பார்த்தாலும், மற்ற எல்லா வேலைகளையும் கூட சூழ்நிலைக்கு ஏற்ப செய்ய வேண்டும் இவன். சூப்பர்வைசரான ஷாமினிதான் இவனுக்கு வேலைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள்.
அவள் சாப்பிடுவதை ஆசையாகப் பார்த்துக் கொண்டிருந்தான் சரவணன்.
“செம்மயா இருக்குடா பாண்டியா! பத்து வருஷத்துக்கு முன்ன செஞ்சத விட இப்போ ரொம்ப இம்ப்ரூவாகிட்ட! உன் வைப் ரொம்ப குடுத்து வச்சவடா!!” என்றவளைப் புன்னகையுடன் பார்த்திருந்தான் இவன்.
இன்னும் அவளது அறையில்தான் தங்கிக் கொள்கிறான்! பேச்சு, சிரிப்பு, நக்கல், நையாண்டி, மிரட்டல், அரட்டல் எனப் போனது பொழுது!
“நீயும் நானும்
வெகு நேரம் மனம் விட்டு
பேசி சிரித்தாலும் பிரியும்
பொழுதில் சில நொடிகள்
மௌனம் கொள்வது ஏன் தோழி
புரிதலில் காதல்
இல்லையடி பிரிதலே
காதல் சொல்லுமடி” எனச் சிநேகன் எழுதியது போல, பத்து வருட பிரிவு நட்புக்குள் காதலை நுழைத்திருக்குமா????

Author: VanishaAdmin
Article Title: Jagam Nee--EPI 16
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.