அத்தியாயம் 22
தம்தன தம்தன தனதன தாளம்
எப்போடி கேக்கும் கெட்டி மேளம்!!!
‘இந்த மேடம் ஏன் இவ்ளோ நெர்வஸா இருக்காங்க? என்னாச்சின்னு தெரியலையே! அவ்ளோ பணத்த வேற எதுக்கு எனக்குப் போட்டு விட்டிருக்காங்க! அவங்க முகமும் ரொம்ப கலவரமா இருந்ததே! அவங்க நடவடிக்கையைப் பார்த்தா என்னமோ பெருசா நடக்கப் போகிற மாதிரி இருக்கே! கடவுளே! மேடத்துக்கு எந்த பிரச்சனையும் வராம பார்த்துக்கப்பா!’ என நினைத்தபடியே தனது உடைமைகளைப் பேக் செய்து கொண்டிருந்தான் சரவணப்பாண்டியன்.
கழுத்து வேறு அவள் ஒட்டி மூக்குரசி போனதில் குறுகுறுத்தபடியே இருந்தது. இதமாய் தனது கழுத்தை வருடி விட்டுக் கொண்டான். அவள் சொன்ன,
“பாண்டிய மன்னா! உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் நான்” எனும் வார்த்தைகள் ஏனோ மனதை என்னவோ செய்தது.
அதோடு அவள் பார்த்த பார்வை, என்றும் இல்லாமல் இன்று அந்த பார்வையின் வீச்சு அவனைக் கலங்கடித்தது!
“என்ன இருந்தது அந்த கண்ணுல!!! ஒரு மாதிரியா ஏக்கமா என்னைப் பார்த்த மாதிரி இருந்ததே!! இல்ல இல்ல! இருக்காது அப்படிலாம்” என முணுமுணுத்துக் கொண்டே அவசரமாக துணிகளை அடுக்கினான்.
வேலையில் இவன் மும்முரமாய் இருக்க, திடீரென படபடவென சத்தம் கேட்டது.
“யாரு? யாருங்க அங்க?” எனக் கேட்டபடியே இவன் சத்தம் வந்த பின் புற கதவை நோக்கிப் போக, கதவு இடித்துத் தள்ளப்பட்டது.
பயம் நெஞ்சைக் கவ்வ திக்பிரமைப் பிடித்து நின்றான் சரவணப்பாண்டியன். கதவு உடைக்கப்பட்டதால் அலாரம் சத்தம் பீம்பீம் என முழங்க, திமுதிமுவென உள்ளே நுழைந்தார்கள் சிலர்.
“அடிச்சு இழுத்துட்டுப் போங்கடா அவன” என ஒருத்தன் முழங்க, இன்னொருத்தன் கேஷ் ரிஜூஸ்டரை அடித்து நொறுக்கி பணத்தை அள்ளிப் பாக்கேட்டில் போட்டான்.
“டேய் என்னடா பண்ணறீங்க?” எனக் கத்திய சரவணனுக்கு சரமாரியாக குத்துகளும் எத்துகளும் கிடைத்தன.
இவன் எதிர்த்து தாக்க முனைய, பின் புறமிருந்து ஒருத்தன் காலை தடுக்கி விட்டு இவனைக் கீழே விழ வைத்தான்.
மூன்று பல்க்கான மனிதர்கள் சேர்ந்து அடித்ததில் நிலைக் குலைந்து போனான் சரவணன். கீழே கிடந்தவன் வயிற்றிலும், முதுகிலும் விடாமல் பலம் கொண்ட மட்டும் எத்தினார்கள். அதில் சரவணனது ஒரு ஷூ கழன்று விழுந்தது.
“விடுங்கடா என்னை!” என இவன் தீனமாய் முனக, வாயில் ஒரு எத்து கிடைத்தது.
“அவனயும் அவன் பேக்கையும் தூக்குங்கடா! முதலாளி கொடவுனுக்கு கொண்டு வர சொன்னாரு! சீக்கிரம்! சர்க்காரு(போலிஸ்) வரதுக்குள்ள கிளம்பனும்”
வந்த சில நிமிடங்களில் வேலையை முடித்துக் கொண்டு, இவனை வேனில் அள்ளிப் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டார்கள்.
அவர்கள் அடித்த அடியில் மயங்கி இருந்தான் சரவணப்பாண்டியன். மயங்கும் முன் அவன் கண் முன்னே வந்து போனது செம்பாவின் முகமும் ஷாமினியின் முகமும்.
பல நிமிடங்களா பல யுகங்களா எனத் தெரியாமல் இவனுக்கு மயக்கம் தெளிந்த போது, அவன் முன்னே நின்றிருந்தார் தனசேகர்.
“முதலாளி” என முனகினான் இவன்.
வாயில் இருந்து உதிரம் கசிந்தது. கீழே கிடந்தவனின் ஒரு பக்க முகத்தில் ஸ்லீப்பர் அணிந்திருந்த காலை வைத்து அழுத்தியவர்,
“முதலாளியா மட்டும் நினைச்சிருந்தா இவ்ளோ ஆகியிருக்காதேடா! என்னை மாமனாராக்க பார்க்கறியே!! நியாயமா? ஏற்கனவே எச்சரிக்கை பண்ணியிருந்தேன்தானே, அறுத்து விட்டுருவேன்னு! நீ அடங்கி இருந்திருக்கனுமா இல்லையா? பாரு இப்போ அடக்கம் பண்ணற நிலைல நிக்கற” என நக்கலாகச் சொன்னவர், சற்று முன்னேறி அவனது காலை பலம் கொண்ட மட்டும் மிதித்தார்.
“அம்மா!!!!!!” என அலறினான் சரவணப்பாண்டியன்.
அவன் அலறல் அந்த கொடவுன் முழுக்க எதிரொலித்தது.
அப்பொழுதும் ஆத்திரம் தாங்காமல் மாறி மாறி அவன் காலை எத்தினார். கத்தக் கூட தெம்பில்லாமல் மறுபடி மயங்கிப் போனான் இவன். யாருக்கும் மனதால் கூட தீங்கு நினைத்திராதவன், மென்மையான குணமும், மெலிதான உடல்வாகும் கொண்டவன். பலர் சேர்ந்து காட்டிய காட்டில் வலுவிழந்து உணர்விழந்து கிடந்தான்.
மேலே தண்ணீர் ஊற்றப்பட லேசாய் உணர்வு வந்தது இவனுக்கு.
“நாலு அடி அடிச்சா ஒத்தை அடி திருப்பி அடிக்கக் கூட தெம்பில்லாத பொ…..நாய், உனக்கு இந்த தனசேகர் மக கேக்குதா?” எனும் வார்த்தைகள் இவன் காதில் வந்து விழுந்தன.
கெட்டக் கெட்ட வார்த்தைகளால் அவனைத் திட்டித் தீர்ந்தார் தனசேகர்.
ஏன் அடிக்கிறார்கள், தான் செய்த தப்பு என்ன என்பது கூடப் புரியாமல், கேட்க திராணி கூட இல்லாமல் வீழ்ந்து கிடந்தான் சரவணப்பாண்டியன்.
“இந்த பரதேசிய கொன்னு கொளுத்திப் போடுங்கடா!”
எமன் கண் எதிரே வந்து நிற்க, அவன் வாழ்ந்த வாழ்க்கை நிழற்படமாக கண் முன்னே ஓடியது இவனுக்கு! அம்மா, அப்பா, அக்கா, தங்கை, இளா என வரிசையாக முகங்கள் வர கடைசியாக வந்து நின்றது ஷாமினியின் முகம்.
“கிளி!”
மெல்லியக் குரலில் முனகினான்.
மீண்டும் சரமாரியாக விழுந்தது அடி. யாருடைய போனோ,
“கண்ணான கண்ணே
கண்ணானே கண்ணே
என் மீது சாய வா” என இசைப்பதைக் கேட்டபடியே நினைவு தப்பியது இவனுக்கு.
மறுபடி கண் விழித்த போது, மருத்துவமனையில் கிடந்தான். உயிர் போயிருப்பதே மேல் என்பது போல உடலெங்கும் அப்படி வலித்தது.
அவன் விழித்ததைப் பார்த்து, பக்கத்தில் நின்றிருந்தவன் யாருக்கோ போன் செய்தான். முக்கால் மணி நேரத்தில் அவன் அருகே வந்து நின்றிருந்தார் தனசேகர்.
“உனக்கு உசிரு கெட்டிடா! என் மக போன் போட்டு உன்னைக் காப்பாத்திட்டா!”
இவனைக் கொல்ல முனைந்த நேரம்தான் ஷாமினி தகப்பனுக்கு அழைத்துக் கதறி இருந்தாள். அவரைப் பார்க்க வர அவள் முனைய, ஓர் இடம் சொல்லி அங்கே காத்திருக்கச் சொன்னார் அவர்.
“டேய்! அடிக்கறத நிப்பாட்டுங்கடா! இந்த நாய நமக்கு தெரிஞ்ச ஹாஸ்பிட்டல்ல கொண்டு சேர்த்து விடுங்க!”
அதன் பிறகே மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது சரவணனுக்கு. சிகிச்சை முடித்து மயக்கத்தில் இருந்தவனைத்தான் தகப்பனுடன் தூரமாய் நின்றுப் பார்த்து விட்டுப் போயிருந்தாள் ஷாமினி.
“ட்ராவல் பண்ண ஓகேன்னு டாக்டர் சொன்னதும், உன்னை வீல் சேருல போட்டு உன் நாட்டுக்கே அனுப்பிடறேன்! அங்க போய் ஒழுங்கா வால சுருட்டிக்கிட்டு இருக்கனும்! என் மகள எந்த முறைலயாச்சும் நீ காண்டேக்ட் பண்ணன்னு தெரிஞ்சது, உன் மொத்தக் குடும்பத்தையே நசுக்கிப் போட்டுருவேன் பார்த்துக்கோ! அதோட, இனி இந்த நாட்டுக்குள்ள மறுபடி நுழைய முடியும்னு கனவுல கூட நினைக்காதே! காபிதியாம் சிசிடிவி ஃபுட்டேஜ எல்லாம் அழிச்சிட்டேன்! போலிஸ் கிட்ட என் ஸ்டாஃப் சரவணன காணோம்னு மட்டும்தான் சொல்லிருக்கேன்! நீ ஃப்ளைட் ஏறின கையோட, நீதான் ஆள் கூட்டிட்டு வந்து ரோபரி மாதிரி செட் அப் பண்ணிட்டு, கடை காச திருடிட்டு ஓடிட்டன்னு கம்ப்ளேண்ட் பண்ண போறேன்! உன்னை ப்ளேக்லிஸ்ட் பண்ணிடுவாங்கடா இங்க! இனி ஜென்மத்துக்கும் மலேசிய மண்ணுல கால வைக்க முடியாது நீ” எனச் சொல்லி இடி இடியென சிரித்தார்.
“ஏன் இதெல்லாம்?” என மெல்லியக் குரலில், வெறுப்புப் பொங்க கேட்டான் சரவணப்பாண்டியன்.
“என் பொண்ணு மனசுல இடம் பிடிக்கவும் ஒரு தராதரம் வேணும்டா நாயே! நீ எல்லாம் அவ கால் தூசுக்கு வர மாட்ட! என்னை அண்டிப் பொழைக்க வந்த அன்னக்காவடி, என் மக மனச கெடுத்து வைக்கற அளவுக்கு தீயா வேலைப் பார்த்திருக்கல்ல!” என்றவர் பளீரென ஓர் அறை வைத்தார் அவனுக்கு.
“சார்! வேணாம்” என ஓடி வந்தார் டாக்டர்.
அவரை முறைத்த தனசேகர்,
“இருய்யா டாக்டரு! ரெண்டு வார்த்தைப் பேசிட்டுப் போய்டறேன்” எனச் சொன்னார்.
“என் ஆளு உன்னை ப்ளைட் ஏத்தி விடற வரைக்கும் கூட இருப்பான்! திரும்பிப் பார்க்காம இந்த நாட்ட விட்டுக் கிளம்பிடனும்! இனி உன் கனவுல கூட ஷாமினின்ற பேரு வரக் கூடாது! என் மக போட்ட உயிர் பிச்சையை சூதனமா தக்க வச்சிக்க! வர்ட்டா” எனத் தெனாவெட்டாகச் சொன்னவர், கிளம்பி விட்டார்.
“என் பொண்ணு மனசுல இடம் பிடிக்கவும் ஒரு தராதரம் வேணும்டா நாயே!” எனும் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவன் காதில் எதிரொலித்தன.
“என்னை, இந்த பாண்டியாவ காதலிக்கறியா கிளி?” என முனகியவனுக்கு கண்களில் கண்ணீர் உடைப்பெடுத்தது.
அங்கிருந்த வரை, மருந்தின் உபாயத்தால் தூங்கிய நேரம் தவிர, அவன் தங்கி இருந்த மருத்துவமனை அறையின் கதவையே வெறிக்க வெறிக்கப் பார்த்தபடி இருந்தான் இவன். அவள் வருவாளா, ஒரே ஒரு முறை, கடைசியாகவாவது என்னைப் பார்க்க வருவாளா என ஏங்கிப் போய் அந்த கதவையே பார்த்திருந்தான். அந்த நொடியில் கூட அவன் நெஞ்சில் காதல் என்பது இல்லை! என்னைக் காதலிக்கிறார்களா மேடம் எனும் ஆச்சரியமும், அந்த காதலை அவள் கண்களில் கண்டு விடும் ஆர்வமும் மட்டுமே இருந்தது.
நடக்க முடியாமல் கிடந்தவனின் கையில் தொலைப்பேசியும் இல்லை. அதோடு அவனைக் கண்காணிக்க என ஒருத்தன் எப்பொழுதும் கூடவே இருக்க, இளாவைக் கூட இவனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. காயங்கள் ஆறியும் ஆறாமலும் ஓய்ந்து கிடந்தவனை வீல் சேரில் வைத்து நாடு கடத்தி விட்டார்கள். உடல் வலியோடு, பாரமேறிய மனதின் வலியும் சேர்ந்து கொள்ள, தன் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நாட்டை விட்டு, தாய் நாட்டை நோக்கிப் பயணித்தான் சரவணப்பாண்டியன்.
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கிணங்க நாடு விட்டு நாடு, பல எதிர்ப்பார்ப்புகளுடன் சம்பாதிக்கப் போனவன், பரதேசியாய் சென்னை விமான நிலையம் வந்து இறங்கினான். உடுத்திக் கொள்ள கூட மாற்றுடை இல்லாமல் பிச்சைக்காரனைப் போல வந்திறங்கினான். கூட வந்த சக பயணி பாவம் பார்த்து வீல் சேரை நகர்த்தி வந்து பார்மாலிட்டிகளை முடிக்க உதவி செய்து வெளியே கொண்டு வந்தார் இவனை.
“தம்பி! உன்னைக் கூப்ட யாராச்சும் வராங்களா?” எனப் பரிதாபப்பட்டுக் கேட்டார் அவர்.
நடக்க முடியாத நிலை, முட்டிக் கொண்டு வந்த அவசரத் தேவை, உதவ யாரும் இல்லாத சூழ்நிலை, பேங்கில் ஷாமினி போட்டிருந்த பணம் இருந்தாலும் தற்போது கையில் பத்து பைசா இல்லாத கொடுமை என அழுது விட்டான் அவர் முன்னிலையில். இது போன்ற நிலைமை தனது எதிரிக்குக் கூட வரக் கூடாது என மனம் துடித்தது.
“சார்! தயவு பண்ணி என்னை பேங்குக்கு கூட்டிட்டுப் போறீங்களா?” எனக் கேட்டுக் கையெடுத்துக் கும்பிட்டான் சரவணன்.
அதன் பிறகு அவன் அனுபவித்த கஷ்ட நஷ்டமெல்லாம் எழுத்தில் கூட வடிக்க முடியாத அளவுக்கு துன்பமானவை! வங்கியில் கேஷாக கொஞ்சம் பணம் எடுத்து, தானே கொஞ்சம் நடுத்தரமான தனியார் மருத்துவமனையில் போய் சேர்ந்து கொண்டான். சுவரிருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்!
பணத்தைக் கையாளும் போது பெண்ணவளின் முகம் இவன் அகத்தில் மின்னி மறைந்தது. அங்கிருந்த அட்டெண்டரை அணுகி விலை மலிவான ஒரு போனும் சிம் கார்டும் வாங்கிக் கொண்டான். போன் வந்ததும் முதல் வேலையாக தங்கையின் பள்ளியை கூகுள் செய்து, அதிலிருந்த போன் நம்பரை டயல் செய்து ஹாஸ்டல் எண் வாங்கி சேவ் செய்து கொண்டான்.
சில வாரங்கள் இவன் அழைக்காமல் போக, பதறி பரிதவித்தபடிதான் இருந்தாள் சின்னவள். தன் நிலைப் பற்றி சொல்லாமல் ஏதேதோ சொல்லி அவளைச் சமாளித்தான் சரவணன். கிளியின் நம்பரோ, இளாவின் நம்பரோ எதுவும் அவனிடம் இல்லை! முக்கியமானவர்களின் எண்களை மனனம் செய்து வைத்துக் கொள்ளாமல் அலைப்பேசியை மட்டும் நம்பியதற்கு கிடைத்தப் பரிசு இது! அதன் பிறகே ஓய்ந்து போய் படுத்துக் கொண்டான்.
ஊன்றுகோல் வைத்து எழுந்து நடமாடவே ஆறு மாதங்களுக்கும் மேலானது இவனுக்கு! மருத்துவமனையில் இருந்து வெளியேறி, ஒண்டுக் குடித்தனம் ஒன்றில் பாத்ரூம் வசதியுடன் ஒரு வீடெடுத்துக் கொண்டான். ஷாமினி கொடுத்த பணத்தைப் பார்த்துப் பார்த்துச் செலவு செய்தான்.
“என் பொண்ணு மனசுல இடம் பிடிக்கவும் ஒரு தராதரம் வேணும்டா நாயே!” எனும் கர்ஜனை தினம் அவனை மென்று தின்றது.
இரவில் படுக்கும் நேரம் கிளியுடன் பழகியத் தருணங்களை மனதில் ஓட்டிப் பார்ப்பான்! அவளது பார்வையிலோ, பழகும் விதத்திலோ காதல் இருந்ததா என அலசி ஆராய்வான். கூடவே இருந்த பொழுது கூட அவளை இவ்வளவு நினைத்ததில்லை இவன். இப்பொழுது கண் விழித்திருக்கும் நேரமெல்லாம் அவள் எண்ணம்தான். தோழி எனச் சொல்லி தோள் சாய்ந்தாளே, அங்கே காதல் தென்பட்டதா? தான் உண்ணும் உணவைப் பிடிங்கி சாப்பிட்டாளே, அங்கே காதல் தெரிந்ததா? பரீட்சை முடிவுக்காக வாங்கித் தந்தேன் எனச் சொல்லி கடிகாரம் பரிசு தந்தாளே, அங்கே காதல் வெளிப்பட்டதா? இளா வீட்டுக்கு இவனுக்காக வந்தாளே, அங்கே காதல் ஒளிந்திருந்ததா? கேம் விளையாடி தோற்ற போது அவனைக் கீழே தள்ளிவிட்டு அவன் மேல் அமர்ந்து சண்டைப் பிடித்தாளே, அங்கே காதல் விரவிக் கிடந்ததா?
யோசிக்க யோசிக்க, இது எல்லாமே காதலின் வெளிப்பாடுதான் எனப் புரிந்தது இப்பொழுது! புரிந்த விஷயம் அப்படியே புல்லரிக்க வைத்தது. உடலெல்லாம் சிலிர்த்து அடங்கியது! ஷாமினி எனும் அற்புதமான பெண்ணால் காதலிக்கப்படுவது என்பது வரமல்லவா! அந்த வரம் பெற்றவன் நானா என அகமகிழ்ந்து போனான். அவள் ஆகாய வெண்ணிலா! அவளை வரமாய் தனது வாழ்க்கைக்குள் கொண்டு வர இவனொரு குளமாகவாவது இருக்க வேண்டாமா!! வேண்டாமெனத் தோன்றியது இவனுக்கு! அவள் தந்தை சொன்னது போல இப்பொழுது வேண்டுமானால் அவளை தனதாக்கிக் கொள்ளும் அளவுக்கு அவனுக்கு தராதரம் இல்லாமல் இருக்கலாம்! ஆனால் இனி குளமாய் இல்லாமல் கடலாய் பரந்து விரிந்து அந்த வெண்ணிலவைத் தனக்குள் தாங்கிக் கொள்ள தனது தராதரத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்தான்.
அதன் பிறகு அசுர உழைப்புத்தான். ஊன்றுகோலை வைத்து நடந்தபடியே கடை திறக்க இடம் தேடுவது, அதற்கான ரிசர்ச் செய்வது, தேவையான பொருட்கள் தரமாக, விலை மலிவாக எங்கே கிடைக்கும் என அலசி ஆராய்வது, கவர்மெண்ட் அப்ரூவல் வாங்குவது என அலையாய் அலைந்தான். அதே நேரம் கால் சரியாக பிசியோதெரப்பியும் சென்றான். ஒரு ரூபாய் செலவளித்தால் கூட கணக்கெழுதி வைத்தான். சொந்த நாட்டுக்குப் போய் ஒன்றுமில்லாமல் சோர்ந்து போய் நிற்கக் கூடாது இவன் என அந்த நேரத்தில் கூட யோசித்து தனக்காய் எல்லாம் செய்தவளை நினைத்துக் கண்கள் கசிந்தன இவனுக்கு.
“கிளி! நீ சொன்னது போல பத்து வருஷம் கழிச்சு உன்னைத் தேடி வருவேன் கிளி! என் கிட்ட உள்ளத எல்லாம் உன் காலடியிலே போட்டு, அப்படியே உன் கிட்ட சரணடைஞ்சிடுவேன்! என்னை மறந்துடாதே கிளி! இந்த பாண்டியாவ மறந்துடாதே கிளி! பாண்டியனின் ராஜ்ஜியத்துக்கு நீ வேணும் கிளி!” என அடிக்கடி முணுமுணுத்துக் கொள்வான்.
அவள் இவன் மேல் காதல் கொண்டாள்! இவனோ அவள் காதல் கொண்டதை அறிந்து அவள் மேல் பைத்தியமானான். ஏற்கனவே உள்ளே இருந்த அன்பு அவள் மேல் ஆராதனையாய் மாறியது! பரிவு பக்தியாய் மாறியது! நட்பு நேசமாய் மாறியது! அனுதினமும் அவளையே நினைத்து உருகி நின்றான். ஷாமினி அவன் ஜகமாகினாள், அவன் அகமாகினாள், அவனின் அனைத்துமாகினாள்!
அவளது நலம் அறிந்தே ஆக வேண்டும் என மனம் சண்டித்தனம் செய்ய அவளது சோசியல் மீடியா எல்லாம் போய் அலசிப் பார்த்தான். எதுவுமே ஆக்டீவாக இல்லை. இளாவையும் தேடினான். அவனும் ஆக்டிவாக இல்லை! தான் முன்னேறி ஒரு நிலைக்கு வரும் வரை தன்னை யாரும் தேடாமல் இருப்பதும் நல்லதுதான் என இவனும் எல்லாவற்றையும் டீ ஆக்டிவேட் செய்து விட்டு வேலையில் கவனமாகிப் போனான்.
பல சமயங்களில் அவள் நினைவுகள் கொடுக்கும் அழுத்தத்தைத் தாங்க முடியாது நெஞ்சை அடைக்கும்! என்ன செய்கிறாள், எப்படி இருக்கிறாள், தன்னை நினைக்கிறாளா, மறந்து விட்டாளா என பலதும் நினைத்து உடலும் மனமும் சோர்ந்து போகும்! அப்பொழுதெல்லாம் எங்கிருந்தாலும் கையில் கிடைத்த தாட்களில் அவளை எண்ணி இரு வரி கவிதையைக் கிறுக்கி வைப்பான்! மனம் லேசாகிப் போனது போல இருக்கும். பின் இதுவே வாடிக்கையாகிப் போனது.
சின்னதாய் ஆரம்பித்த அவனது முதல் மினிஸ் காபிதியாம் லாபம் காட்டும் வரை காத்திருந்தான் சரவணப்பாண்டியன். அதன் பிறகே ஆள் ஏற்பாடு செய்து அவளைப் பற்றி அறிய முற்பட்டான். அவனுக்கு கிடைத்த செய்தியில் நிலைக் குலைந்து போனான் சரவணன். தனசேகர் இறந்து போனதில் இவனுக்கு எந்த வருத்தமும் இல்லை! ஆனால் ஓடி ஒளிந்து தன் கிளி நாட்டை விட்டு ஓடியதை நினைத்து துடித்துப் போனான். ஓடிப் போய் அவளைத் தன் கையில் தாங்கிக் கொள்ள வேண்டும் எனும் துடிப்பை அடக்கி வைத்தான்.
“பத்து வருஷ கணக்குல இன்னும் ஏழு வருஷம் இருக்கு!” என மனதைத் தேற்றிக் கொண்டவன், இன்னும் ராட்சசனாய் உழைத்தான்.
எல்லாவற்றையும் இழந்து நிற்கும் கிளியைத் தன் ராஜ்ஜியத்தின் ராணியாய் மாற்ற வேண்டி அசுரத்தனமாய் உழைத்தான். அவ்வப்பொழுது அவளை பற்றி அறிந்து கொள்வதையும் நிறுத்தவில்லை. அவள் பாதுகாப்பாய் இருக்கிறாள் என்பதே அவனுக்கு பலத்தைக் கொடுத்தது.
இளாவின் நம்பரையும், நிதினின் நம்பரையும் அதே டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் கண்டுப் பிடித்தான். இளாவுக்கு மட்டும் அழைத்துப் பேசினான்.
“ஹலோ!!”
“ஹலோ ஜோ!!! டேய் பரதேசி! எங்கடா இருக்க நீ! திடீர்னு காணாப் போய்ட்டு இத்தனை வருஷம் கழிச்சு வந்திருக்க! உசுரோட இருக்கியா இல்லை உன் ஆவி பேசுதா?”
அவன் ஹலோ சொன்னதை வைத்தே தன்னைக் கண்டு கொண்டவனை நினைத்து முகத்தில் புன்னகை வந்தது.
“இளா! ஐ மிஸ் யூடா”
“செருப்பால அடிப்பேன் ராஸ்கல்!”
சத்தமாய் சிரித்தான் இவன்.
இருவரும் பழயதையும் தற்பொழுது தங்களின் நிலையையும் பேசித் தீர்த்தார்கள்.
“டாக்டர் படிப்பு ஈசி இல்லடா ஜோ! ஒரு செமஸ்டர் பெயில் ஆகிட்டேன்னு அம்மா தாறுமாறாப் பேசிட்டாங்க! எனக்கே கூட அவ்ளோ செலவு பண்ணி படிக்க வந்து இப்படியாகிடுச்சேன்னு கில்ட்டியாகிடுச்சு! சோசியல் மீடியால இருந்து விலகி படிப்புல கவனமாகிட்டேன்! இப்போ படிச்சிட்டே இண்டெர்ன்ஷிப் வேற செய்யறேன்! சாப்பிடக் கூட நேரமில்லடா!” எனப் பகிர்ந்து கொண்டான்.
அதன் பிறகு இருவரும் நட்பை விடாமல் பற்றிக் கொண்டார்கள்.
நிதின் திருமணம் செய்தது, குழந்தை பிறந்தது என எல்லாமே சரவணனுக்குத் தெரியும்! தன்னவள் இன்னும் தனிமரமாய் அந்த நாட்டிலேயே காலம் தள்ள, வருடங்கள் சீக்கிரம் ஓடாதா என ஏங்கினான் இவன்.
இவன் போட்ட அசுர உழைப்பும், வித்தியாசமான பெயரில் புதிதாய் இருந்த மெனுவும் மக்களின் மத்தியில் பாப்புலராக, அதன் பின் பின்னடைவே இல்லை இவனுக்கு! சென்னை, தன் சொந்த ஊரான மதுரை, கோவை, மூணாரு என பல இடங்களில் மினிஸ் காபிதியாமை திறந்தான் சரவணப்பாண்டியன்.
பணம் புரண்டாலும் மனம் புரளவில்லை இவன். துடிக்கும் இதயம் கிளி, கிளி என்றுதான் துடித்தது இவனுக்கு. இங்கே கிளம்பி வருவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, நிதினை தொடர்பு கொண்டு எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டான். அவனது ஆதரவுடன்தான் அவன் அக்காவை தன்னவளாக்கிக் கொள்ள வந்திருந்தான் சரவணன்.
கடந்த பத்து வருடங்களில் நடந்ததை எல்லாம் தன் முன்னே அமர்ந்திருந்த ஷாமினியிடம் பகிர்ந்து கொண்டான் சரவணப்பாண்டியன்.
“எப்போ நீங்க குடுத்த கெடு முடியும்னு வேய்ட் பண்ணிட்டே இருந்தேன் மேடம்! தோ வந்துட்டேன்! உங்க பாண்டியாவா வந்துட்டேன்! என்னை ஏத்துக்கோங்க மேடம்! நான் பாண்டியர்னு தெரிஞ்சா நீங்க என் கூட பழக தயக்கம் காட்டுவீங்கன்னுதான் பாண்டியனாவே என்னைக் காட்டிக்கிட்டேன்! அது தப்பா மேடம்? உங்களோட காதல நட்பாத்தானே அனுபவிச்சிருக்கேன்! அதை காதலாகவே அனுபவிக்கனும்னு எனக்கு ஆசையா இருந்தது மேடம்! என் இளமை முழுதும் உங்கள மட்டுமே நெனைச்சி வாழ்ந்தேன் மேடம்! அங்கிட்டு இங்கிட்டு என் பார்வையைத் திருப்பனது இல்ல! உங்களோட ஆசைப் பார்வை, அன்பான வருடல், பாசமானத் தலைக் கோதல், காதலா ஒரு உரசல் இதை போல ஆயிரம் விஷயங்களை உங்க கூட அனுபவிக்கனும்னு என் மனசும் உடலும் தவிக்குது மேடம்! அதுக்காக உண்மையை மறைச்சது தப்பா மேடம்? சுயநலமா யோசிச்சிட்டனோ? உங்களோட அறிவுக் கெட்ட பாண்டியாத்தானே நானு! என்னை மன்னிக்க மாட்டீங்களா மேடம்? எனக்கு உயிர் பிச்சைப் போட்டீங்கன்னு உங்கப்பா சொன்னாரு! இப்போ எனக்கு வாழ்க்கைப் பிச்சைப் போடுங்க மேடம்!” என்றவனை கண் கலங்க இழுத்து அணைத்துக் கொண்டாள் ஷாமினி.

Author: VanishaAdmin
Article Title: Jagam Nee--EPI 22
Source URL: Vanisha Novel-https://vanishanovel.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.